Followers

Showing posts with label கல்லூரி கலாட்டா. Show all posts
Showing posts with label கல்லூரி கலாட்டா. Show all posts
Thursday, October 13, 2011 17 comments


                   படம் முடிய ராத்திரி 9:30 மணி ஆகிடுச்சு . தியேட்டரை விட்டு வெளிய வந்த நாங்க நாலு பேரும் இங்கயே எங்கையாவது சாப்பிட்டு போய்டுறது முடிவு பண்ணினோம் ஏன்னென்றால் இனிமே ஹாஸ்டல் மெஸ்க்கு போனா ஒன்னும் கிடைக்காது தெரியும். சரி எங்கே சாப்பிடுறதுன்னு டிஸ்கசன் வந்த போது ஒரு குறிப்பிட்ட புரோட்டா கடைல புரோட்டா சாப்பிடலாம்ன்னு இருந்த நாலு பேருல ரெண்டு பேரு அவுங்கலாவே ஏக மனதா முடிவு பண்ணி கூட்டிட்டு போய்ட்டானுங்க. புரோட்டா கடைக்கு போனதுக்கு அப்புறம்தான் எனக்கு தெரிஞ்சது அது சுத்தம், சுகாதாரத்துல ISO 9001 , ISI  சர்டிபிகேட் எல்லாம் வாங்கின கடைன்னு. கடையை பார்த்த உடனே எனக்கு லைட்டா கண்ணா கட்டுச்சு , அதுலயும் அங்க புரோட்டா மாஸ்டரையும் , சப்ளையரையும் பார்த்த உடனே இருந்த கொஞ்சம் நஞ்சம நம்பிக்கையும் அடியோட குழி தோண்டி புதைக்க வேண்டியதா போச்சு. டேய் மாமு இந்த கடைலதான் புரோட்டா சாப்பிடனுமா? வேற கடைக்கு போலாம்டா அப்படின்னு சொன்னதுக்கு , அதெல்லாம் முடியாது இதே கடைலதான் புரோட்டா சாப்பிடணும் என்னோட பிரிண்ட்ஸ் ரெண்டு பேரும் ரெண்டு கால்ல நிக்குரானுங்க ( ரெண்டு பேரும் ஒத்த கால்ல நிக்குரானுங்க, ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு கால், மொத்தம் ரெண்டு கால்). டேய் மாப்ளே இந்த கடை கொஞ்சம் நல்ல இல்லடா அப்படின்னதுக்கு , ஏன்டா நீயெல்லாம் 5 ஸ்டார் ஹோட்டலதான் சாப்பிடுவியோ அப்படின்னு சோஷலிசம் பேச ஆரம்பிசுடானுங்க. இதுல கூட இருந்த இன்னொரு நண்பன் வேற " மச்சான் இந்த ஹோட்டல் புரோட்டா சாப்பிட்டா  லிவர்க்கு நல்லதுடா" அப்படினான் . "போச்சுடா இது வேறையா ?" அப்புறம்?  அப்படினேன் , " டேய் மாமு அது மட்டும் இல்லடா இந்த ஹோட்டல் புரோட்டவுக்கு தனி டேஸ்ட் இருக்குடா" அப்படினான் . அப்படி என்னடா தனி டேஸ்ட்டுன்னு கேட்டதுக்கு "இந்த கடை புரோட்டா மாஸ்டர் சும்மா சாதாரணமா புரோட்டா பிசைய மாட்டருடா , சும்மா புரோட்டா மாவை வேர்வை சிந்தி பிசைவாறு பாரு,  அப்படி ஒரு டேஸ்ட் , அப்படி ஒரு Soft  . வாய்ல போட்ட உடனே கரைந்திடும் " அப்படினான் . அப்பவே எனக்கு குமட்டிகிட்டு வந்துடுச்சு. இருந்தாலும் இனிமே சொன்ன இவனுங்க கேக்கவா போறானுங்க ? விதி விட்ட வழி அப்படின்னு உள்ள போயாச்சு.
                மதியமே ஹாஸ்டல இருந்து கிளம்பியாதாலும் , சாயங்காலம் எதுவும் சாப்பிடாதளையும் பயங்கர பசி. வேற என்ன பண்ண? அந்த கடை ISI புரோட்டாவையே ரெண்டுக்கு , நாலா சாப்பிட வேண்டியதா போச்சு. சாப்பிட்டு எல்லாம் முடிச்சுட்டு பைக் எடுத்துகிட்டு ஹாஸ்டல் வந்து சேர ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு . புரோட்டா சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆனதால புரோட்டா தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுச்சு. என்னடா அதான் ஏற்கனவே புரோட்டா மாஸ்டர் புரோட்டாவை வேர்வை சிந்தி பிசைஞ்சுடானே அப்புறம் எதுக்கு வயுறு தனிய பிசையுதுன்னு யோசிச்சுகிட்டே ரூம்ல படுத்து தூங்கியாச்சு.
                     மறுநாள் காலைல எழுந்துரிச்சா சும்மா வயுறு கடமுட கடமுடன்னு கலக்குது. உடனே அடிச்சு புடிச்சு பக்கெட்டை எடுத்துகிட்டு டாய்லெட்டுக்கு ஓடினா , எனக்கு முன்னாடி என் நண்பன் ஓடிகிட்டு இருக்கான், டேய் எங்கேடா ஓடுற அப்படின்னு பின்னாடியே நானும் ஓடி அவன் பக்கத்து டாய்லெட்க்குள்ள புகுந்தா , கொஞ்ச நேரத்துல பக்கத்து டாய்லெட்க்கு உள்ள இருந்து ஒரு சத்தம் , " மச்சான் டேய் பிரேக் புடிக்கலடா !!!!!!!!. . . பேதி ஆகுதுடா "  அப்படின்னு.  "டேய் ஆமாடா மாமு இங்கயும் பிரேக் புடிக்கலடா"  - இது நான். நாங்க ரெண்டு பேரும் பேசுறத கேட்ட பக்கத்துல டாய்லெட்டுல இருந்த இன்னொருத்தன் "டேய் இது என்ன கிரிக்கெட் மேட்ச்சாடா ? ரன்னிங் கமெண்ட்ரி குடுக்குரிங்கா ? பேசாம இருங்கடா " அப்படினான். அதுக்கு என்ன நண்பன் "ஆமா உனக்கு நார்மல் டெலிவரிகிற தலகனத்துல பேசாதடா , மவனே நீயும் நேத்து எங்க கூட ISO 9001 புரோட்டா சாப்பிட்டு இருக்குன்னும்டீ அப்போ தெரிஞ்சு இருக்கும் " அப்படினான். இப்படி ஒரு முறை ரெண்டு முறை அல்ல நாலு அஞ்சு முறை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி , சில முறை ஒன்னாவே கூட பாக்கெட்டை தூக்கிட்டு ஓட வேண்டியதா போச்சு. அப்புறம் எங்க ஓட? நடக்க கூட முடியாம ரெண்டு பேரும் " பப்பறப்பேன்னு "ரூம்க்குள்ள மல்லாக்க படுத்து கிடக்க , இவ்வளவு சீரியஸ் கலாட்ட நடந்துகிட்டு இருக்கு அப்பத்தான் ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு சாவகாசமா மத்த ரெண்டு பேரும் அதான் முதல்நாள் ராத்திரி இதே புரோட்டா கடைலதான் புரோட்டா சாப்பிடுனும்ன்னு ஒத்த காலுல நின்னு எங்களை பாழுங்கிணற்றில் தள்ளின படுபாவிங்க வந்தானுங்க. " என்னடா மாப்ளே என்ன ஆச்சு "  அப்படின்னு அக்கறைய விசாரிச்சானுங்க, " என்ன நோன்னுங்கடா? நான் அப்பவே சொன்னேன் இல்ல அந்த ஹோட்டல் வேண்டாம்டான்னு , இப்ப பாரு எங்க ரெண்டு போரையும் , பெருகுடல் , சிறுகுடல் , கல்லீரல் , கணையம் வரைக்கும் வெளிய வந்துடுச்சு பேதி ஆகி " அப்படினேன் கடுப்பாகி . நான் கடுப்புல இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டு அவனுங்க இன்னொருதன்கிட்ட போய் " என்ன மச்சான் அவ்வுளவு மோசமாவா பேதி ஆகுது? " ன்னு கேக்க . " போங்கடா டேய் போங்க, டாய்லெட்டுல எனக்கு பேதி ஆகுற ஸ்பீடுல" PSLV" ராக்கெட் மாதிரி நான் நாலு அடி மேல போறேனா பாத்துகோங்க அந்த அளவுக்கு மோசமா போகுதுடா டேய்"  அப்படினான் பாருங்க , அவ்வுளவு வேதனையுளையும் எனக்கு சிரிப்பு முட்டிக்கிட்டு வந்துடுச்சு ஹி ஹி ஹி . . .

          ஆனா அவனுங்க என்ன சொன்னனுங்க தெரியுமா? , " மச்சான் கண்டிப்பா இந்த பேதி நேத்து ராத்திரி சாப்பிட புரோட்டாவால இருக்காதுடா , நேத்து பார்த்த படத்தாலதான்னு  இருக்கும்டான்னு அடிச்சு சொன்னனுங்க, என்னென்றால் நாங்க பார்த்த படம்  ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் T. ராஜேந்தரின் , மோனிஷா என் மொனோலிச" , அப்படின்னு சீரியஸ் டிஸ்கஸ்சன்னு வேற. "என்ன கொடுமை சார் இதெல்லாம்? ". .

            ஆனா இதை எல்லாம் கேட்ட அவங்க ரெண்டு பேரும் சும்மா இல்ல , " Don't Worry மச்சி . . இதுக்கு எங்க கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு கவலை படாதிங்கடா, நான் சொல்லுற மாதிரி செய்யுங்க பேதி டக்குன்னு நின்னுடும்" ன்னு சொல்லிட்டு . "டேய் ஏதாவது சிவப்பு துணி இருக்காடா?" அப்படின்னு கேட்டான் . " அங்க பாருடா ஒரு பழைய சிவப்பு துண்டு இருக்கும்" ன்னு சொன்னேன். உடனே ஓடி போய் அதை எடுத்து ரெண்டா கிழிச்சு என் கைல ஒண்ணும் , என் பிரெண்ட் கைல ஒண்ணும் குடுத்தான்.  "இதை வச்சுக்கிட்டு என்னடா பண்ணுறது" அப்படின்னு நாங்க ரெண்டு பேரும் கேட்டோம் . "மச்சான் நெக்ஸ்ட் டைம்  டாய்லெட்க்கு இந்த சிவப்பு துணிய எடுத்துட்டு போங்க ,  பேதி ஆகும் போது கரெக்டா இந்த சிவப்பு துணிய ஆட்டி காட்டுங்கடா உடனே பேதி டக்குன்னு நின்னுடும்"  அப்படினான். நாங்க ரெண்டு பேரும் நிஜமாவே குழம்பி போயிட்டோம். " டேய் என்னாடா சொல்லுற? ஒண்ணுமே புரியல?????? "அப்படின்னு கேட்டதுக்கு அவுனுங்க ரெண்டு பேரும் சொல்லுரான்னுங்க " டேய் மாப்ளே என்னடா இது கூடவா புரியல உங்களுக்கு ? , ரொம்ப சிம்பிள்டா , சிவப்பு கொடிய காட்டின அவ்வளவு நீள ட்ரெயின்யே நிக்குது!!! , இந்த சுண்டக்கா பேதி நிக்காதா ????? ஹி ஹி ஹி ஹி . . " அப்படின்னுனானுங்க


        உடனே எனக்கு வந்தது பாருங்க கோவம், மறுபடியும் பேதியோட சேர்த்து  , அதுக்கு மேல அவனுங்க கிட்ட ஒரு வார்த்தை , ஒரு வார்த்தை பேசலையே நான் , பாக்கெட்டை எடுத்துகிட்டு கோவமா கிளம்பிட்டேன் அடுத்த ரவுண்டுக்கு . . . .


அன்புடன் ,
ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Tuesday, June 14, 2011 14 comments

தம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . .

            சுமார் 13 வருடங்களுக்கு முன்னாள் ஒரு அழகிய சனிகிழமை காலை வேளையில் ஒரு மனிதருள் மாணிக்கம் ரொம்பவும் பீல்ல்ல் ( feeeeel ) பண்ணி சொன்ன வார்த்தைகள் தான் இது , தம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . .  இந்த வார்த்தைகளின் வீரியத்தையும் , தொடர்ச்சியையும் கண்டிப்பாக படிக்க போறீங்க ஆனா இப்போ இல்ல , தொடர்ந்து மனம் தளராம படிங்க அப்புறம  தெரியும் உங்களுக்குஏன் இதை என் தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வைக்க வேண்டிய வார்த்தைகள் என்று . 

சரி இப்போ அந்த தஞ்சாவூர் கல் வெட்டுல பதிச்சு வைக்க வேண்டிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பாப்போம் .

               அப்போ நான் இன்ஜினியரிங் காலேஜ் 2 வது வருடத்தில் அடி எடுத்து வைத்தேன் . இரண்டாவது வருடத்தின் முதல் நாள் கல்லூரி வகுப்பு . அப்போதான் நாங்க உண்மையிலையே எங்கள் துறை குள்ள போறோம் . அதுக்கு முன்னாடி முதல் வருடம் இன்ஜினியரிங் என்பது பொதுவான பொறியியல் பாடங்களை கொண்ட வருடம் , எல்லா  துறை மாணவர்களுக்கும் ஒரே விதமான பாடங்கள் தான் அதுவும் அடிப்படையான பொறியியல் பாடங்களும் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் மாதிரியான பாடங்கள் தான் , கிட்டத்தட்ட 12ம் கிளாஸ் மாதிரி தான் வச்சுக்குங்களேன் . அதனால பாட புத்தகங்களும் ஒரே மாதிரிதான் , அதனால காலேஜ் சேரும் போதே எல்லாருக்கும் பிரிண்ட் அடிச்சு வச்சு இருக்க புக்ஸ்சை  கைல கொடுத்துடுவாங்க  , நாம அதுல இருக்குறத சமத்தா  பரீட்சைக்கு தேவையானதை கட் பண்ணி பிட்டு ரெடி பண்ணி , பரீட்சைக்கு தயாராக வேண்டியதுதான்.  அட ச்ச  உண்மைய உளறிட்டேனே.  படிச்சு பரிட்சைக்கு தயாராக வேண்டியதுதான் . ஹி ஹி

            ஆனா பாருங்க இரண்டாவது வருஷத்துல இருந்து இந்த பப்பு எல்லாம் வேகாது . அல்வா மாதிரி  புத்தகமா எல்லாம் அச்சு அடிச்சு குடுக்க மாட்டங்க . அங்கதான் ஆண்டவன் வைக்குறான் ஆப்பு . இன்ஜினியரிங் ஜாயின் பன்னுரோம்ன்னு பெருமையா பணத்த கட்டி ஆர்டர் பண்ண ஆப்பு எல்லாம் அப்போ இருந்துதான் ஒவ்வொன்ன டெலிவரி ஆகும் . அதுல முதல் ஆப்பு என்னன்னா பாட புத்தகம் எல்லாம் குடுக்க மாட்டாங்களாம் , சிலபஸ் அதாங்க பாட திட்டம் என்னகிரத்தை மட்டும் கையுல குடுதுடவாங்க அத வச்சுக்கிட்டு நாமளாதான் புத்தங்கள தேடி பிடிச்சு பாடத்தையும் , தலைப்பையும் கண்டு புடிச்சு படிசுக்கணும் . இது எல்லாம் நடக்குற கதையா ? பரிட்சைல புக்ஸ்சை கைல குடுத்து எழுத சொன்னாலும் " இன்னைக்கு என்ன எக்ஸாம் டா  மாமு " ன்னு அப்பாவிய கேக்குற ஆளுங்க நாங்க .  நிற்க


                   இரண்டாவது வருடம் முதல்  நாள் காலேஜ் . கிளாஸ் ல அறிமுக படலம் எல்லாம் ஆரம்பிசுச்சு . யாரு யாரு என்ன பாடம் எடுக்க போறாங்க, அவங்க பேரு என்ன , அப்புறம் எங்க ஒவ்வொருத்தர் பேருன்னு   ஒவ்வொரு ப்ரொபசரா வந்து மொக்கை போட ஆரம்பிச்சாங்க. காலைல ஆரம்பிச்ச இந்த மொக்கை மதியம் உணவு இடைவேளை முடிஞ்சும் வெற்றிகரமா போய்கிட்டு இருந்துச்சு . அடேங்கப்பா   சாமி !!!!!! ஆள விடுங்கபா முடியல அப்பிடிங்கரவரைக்கும் தெளிய வச்சு தெளிய வச்சு அடிச்சுகிட்டு இருந்தாங்க .
ஒரு வழியா கடைசி  பீரியட் வந்துடுச்சு . அப்போதான் ஒரு ப்ரொபசர் கிளாஸ் குள்ள வந்தாரு , நாங்க எல்லாம் மனசளவுல அப்பாடி  ஒரு வழிய கடைசி பீரியட் ஆகிடுச்சு இது முடிந்தா கிளம்பிடலாம் , இன்னைக்கு ஹாஸ்டல் மெஸ்ல டீ கூட பஜ்ஜி குடுபாங்களா இல்ல சமோசா குடுபாங்களான்னு கடுமையான யோசனைல உக்காந்து இருக்கோம் . அவர் என்னடானா வந்ததும் என்னபா பாடத்தை ஆரம்பிக்கிலாமா அப்படினாறு, ஐயோ அம்மாடி அப்படின்னு எங்களுக்கு தூக்கி வாரி போட்டுச்சு , கடைசி பீரியட் மணி 4:10  க்கு வந்து பாடத்தை ஆரம்பிகிலாமன்னு முதல் நாளே கேக்குராறேன்னு,  "சார்ர்ர்ர் " அப்படின்னு இழுக்க , " ஹ ஹ ஹ ன்னு அவர் சிரிச்சுட்டு புரியுதுபா புரியுது என்னடா வந்த முதல் நாளே பாடம் எடுக்குறேன்னு சொல்லுறேன்னு பயந்துடீன்களா ? சரி சரி வேண்டாம் , இன்னைக்கு அறிமுகத்தோட நிறுத்திகலாம்"  அப்படினாறு,  அப்பத்தான் எங்களுக்கு உசுரே வந்துச்சு . ஒரு வழியா அறிமுக படலம் எல்லாம் முடிஞ்சு , அவர் சொன்னாரு , " நான் உங்களுக்கு இந்த செமஸ்டர்  Engineering Surveying  , subject எடுக்கபோறேன் . அதுக்கு என்ன புக்ஸ் வாங்கணும் , எந்த ஆர்தர் ( Author ) வாங்கனும்ன்னு சொல்லுறேன் நோட் பண்ணிகோங்கனாரு" , அதை போர்டுளையும் எழுதி போட்டாரு , சரி நானும் இவரு ரொம்ப நல்லவரா இருகாறேன்னு எதுக்கும் நோட் பண்ணிக்குவோம்ன்னு பெரிய மனசு பண்ணி நோட் எடுத்து நோட் பண்ணிகிட்டேன் , 



                ஆனா பாருங்க , கடைசி பீரியட்கிரதுனாளையும் , ஹாஸ்டல் மெஸ்ல போய் பஜ்ஜி சாப்பிடுற அவசரதளையும் இருந்ததுனால ஆர்தர் பெயர நோட் பண்ணும போது ஒரு சின்ன தப்பு நடந்து போச்சுங்க . சார் சொன்ன ஆர்தர் பெயர்  Punmia , நான் நோட் பண்ணது  Punima . ரொம்ப சின்ன தப்புதான் m க்கு அப்புறம் போடா வேண்டிய  i யை , m க்கு முன்னாடி போட்டுட்டேன் .
இது ஒரு தப்பாங்கா ? 

சரி  அத விடுங்க , நான் அடுத்த நாளே வீட்டுக்கு போன் போட்டு அப்பா நான் இன்ஜினியரிங் புக்ஸ் வாங்கணும் ஒரு ஐயாயிரம் ருபாய் அனுப்புங்கன்னு  சொல்லிட்டேன் .ஏன்னா? நான் எதுலயும் கரெக்ட்டா இருக்க ஆளு . பணம் வந்தாதானே செலவு பண்ண முடியும் , நம்ப வேலை நமக்கு முக்கியம் இல்லையா ? வீட்டுல பணம் வாங்குரதுக்கு இது ஒரு சாக்கு . சரின்னு அப்பாவும் பையன் கேக்குரானேன்னு உடனே பணத்த அனுப்பிட்டாரு , அப்புறம் என்ன? ஒரே கொண்டாட்டம் தான் அந்த வாரம் புக்ஸ் வாங்குறதுக்கு வந்த பணத்த வச்சு  பட்டையா கிளப்பியாச்சு. கடைசில கைல மிஞ்சினது 500 ரூபாய் தான் , சரி மிஞ்சுன பணதுளையும் புக்ஸ் வாங்கலைன்ன மனசாட்சி ஒத்துக்காது , நாங்கெல்லாம் மனசாட்சி படி வாழுறவங்கா  ஹி ஹி ஹி . அதனால புக்ஸ் வாங்க முடிவு பண்ணியாச்சு . ஆனா எங்க வாங்குறது? எந்த கடைல இன்ஜினியரிங் புக்ஸ் கிடைக்கும்? எதுவும் தெரியாது . ஆனா முதல் வருஷம் முழுசும் நம்பள வச்சு ராக்கிங்கிற பேருல கும்மி அடிச்சா சீனியர்ஸ் எதுக்கு இருக்காங்க . அவங்ககிட்ட போய் கேட்டேன் " அண்ணே இன்ஜினியரிங் புக்ஸ் எங்கே கிடைக்கும் ? "  
"டேய் நேரா பஸ் புடிச்சு கோயம்புத்தூர் போ , அங்க சேரன் புக் ஸ்டோர்ன்னு ஒன்னு இருக்கும் அங்க போய் கேளு. நீ என்ன புக் , என்ன ஆர்தர் கேட்டாலும் கிடைக்கும் அங்க கிடைக்காத இன்ஜினியரிங் புக்ஸ்யே இல்ல , அவ்வுளவு பெரிய புக் ஸ்டோர் டா " அப்படினாங்க . ஓகே ரைட்டு , சீனியர்ஸ் கோடு போட்ட நாங்க ரோடு போட்டுடுவோம் இல்ல . 
சரின்னு அந்த சனி கிழமை காலைல குளிச்சுட்டு (நம்புங்க) பஸ் புடிச்சு கிளம்பிட்டேன் புக் வாங்க . கூட நான் கிளாஸ் ல நோட் பண்ணி வச்சு இருந்த ஆர்தர் பேரு இருக்க பேப்பர் கைல எடுத்துகிட்டாச்சு . நேரா புக் ஸ்டோர் க்கு போயாச்சு , கூட்டம் அம்முது . இருந்தாலும் நாம்ப விடுவோமா? உள்ள போய் அங்க இருந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட ரொம்ப ஸ்டைல் ஆ (அது ஏன்னு தெரியல பொண்ணுங்களை பார்த்தாலே நமக்கு ஸ்டைல் தன்னால வந்துடுது . . ) " surveying புக் வேண்டும் " அப்படினேன்
"என்ன ஆர்தர் சார் " இது அந்த பொண்ணு , உடனே கைல இருந்த பேப்பர் எடுத்து பார்த்தேன் அதுல நான் தெளிவ நோட் பண்ணி வச்சு இருந்தேன் ஆர்தர் பேரு : Punima . இதை எப்படி படிபிங்கா?  " புனிமா " ஆமா அப்படிதான் . இருக்கிற கூட்டத்துல , நானும் சத்தம சொன்னேன் , " புனிமா " அப்படின்னு , அந்த பொண்ணு ஒரு மாதிரி பார்த்துட்டு உள்ள போச்சு . போயிட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு வந்து " சார் அந்த ஆர்தர் இல்ல , வேனும்ன surveying  வேற ஆர்தர் இருக்கு தரவான்னு கேட்டது . நான் உடனே அதெல்லாம் முடியாது எங்க ப்ரொபசர் அந்த ஆர்தர் தான் சொல்லி இருக்காரு , நீ போய் இன்னொரு முறை நல்ல பார்த்து எடுத்துட்டு வாமா ன்னு சொன்னேன் , அந்த பொண்ணு முறைசுக்கிட்டே மறுபடியும் உள்ள போச்சு . கொஞ்சம் நேரம் கழிச்சு திரும்ப வந்து " சார் இல்ல சார் " அப்படின்னுச்சு . எனக்கு வந்தது பாருங்க கோவம் , என்ன மா நீ கடைக்கு புதுசா?  ? கோயம்புத்தூர்லையே இதுதான் பெரிய புக் ஸ்டோர் அப்படின்னு சொன்னாங்க , இங்க கிடைக்காத இன்ஜினியரிங் புக்கே கிடையாதுன்னு சொன்னாங்க , நீ என்னடான ஒரு surveying புக் இல்லன்னு சொல்லுறேன்னு சத்தம் போட்டேன் (இன்ஜினியரிங் படிக்குரேணாம்) . இதெல்லாம் கொஞ்சம் நேரம் கவனிசுகிட்டு இருந்த கடை ஓனர் அந்த பொன்னை கூப்பிட்டு " என்ன மா என்ன பிரச்னை ன்னு கேட்டு இருக்காரு , அந்த  பொண்ணும் விஷியத்தை சொல்லி இருக்கு  . உடனே அந்த கடை ஓனர் என்னை கூப்பிட்டாரு . கூப்பிட்டு சொன்னாரு, 
" தம்பி , நான் இந்த புக்ஸ் ஸ்டோர் கடந்த இருபது வருசமா நடத்திகிட்டு இருக்கேன் .ஆனா தம்பி , " என் 20 வருஷம் அனுபவத்துல முனியம்மான்னு ஒரு ஆர்தர் கேள்வி பட்டதே இல்ல தம்பி " அப்படினாறு ( நான் புனிமா ன்னு சொன்னது அந்த பொண்ணு காதுல முனிமான்னு கேட்டு இருக்கு , அத அந்த பொண்ணு ஓனர் கிட்ட சொல்லும் போது அது இன்னும் மாறி முனியம்மா ஆகிடுச்சு , ஐயோ ஐயோ இதெல்லாம் எங்க போய் சொல்ல ? " ) 
ஆத்தாடி , என்னது முனியம்மா வா ? "  ஆஹா எங்கயோ தப்பு நடந்து போச்சுட கை புள்ளை ஓடு டா ஓடு , பின்னங்கால் புடனில அடிக்க ஓடிடு ன்னு , மனசு குல்லையே நினைச்சுகிட்டு ,ஆனா முகத்துல எந்த கெத்தும் குறையாம , சரி சார் நான் அப்புறம் வரேன்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம ஒரே நடையும்  ஓட்டமும் தான் . அவமான பட்டாண்ட ஆட்டோகாரன்ன்னு எஸ்கேப் ஆகி , நேரா ஹாஸ்டல்க்கு போய் நம்ப பிரிண்ட்ஸ் கேட்டேன் ஒண்ணுமே தெரியாத மாதிரி " மச்சி நம்ப ப்ரொபசர் சொன்னாரே surveying க்கு ஒரு ஆர்தர் , அது என்ன பேரு ? " அப்படின்னு கேட்டேன் " அது புன்மியா ( Punmia ) டா மச்சி , அப்படினானுங்க . "spelling  என்னடா ?"  இது நானு , P u n m i a  டா " இது அவன் . 
" ஆஹா நாம்பதான் தப்பா  எழுதிட்டோமா? "   ரைட்டு மேட்டரய் அப்படியே அம்முகிடுவோம் இல்லனா இந்த பசங்க இதை தெரிஞ்சுகிட்ட நோட்டீஸ் போர்டுல அடிச்சு ஒட்டாம விடாமாட்டன்னுங்க , அப்புறம் மீதி இருக்க மூணு வருசமும் நம்பள முனியம்மா ன்னு பட்ட பேரு வச்சு கூப்பிட்டாலும் கூப்பிடுவானுங்கன்னு ,  அப்படியே கம்பெனி ரகசியத்தை அம்முகிட்டேன் . எப்பூடிஈஈஈஈ . .  நாங்க எல்லாம் எவ்வளவு பெரிய ராஜா தந்திரி !!!.
சரி இந்த வரலாற்று சிரிப்பு மிக்க நிகழ்வை இதுவரைக்கும் யாருகிட்டயும் சொல்லாம பாதுகாத்துட்டு  வரேன் , நீங்களும் யாருகிட்டயும் சொல்லிடாதிங்கா  ப்ளீஸ்ஸ் ஸ் ஸ் ஸ் . . . . . ஓகே வா ? 


Always , 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Tuesday, November 9, 2010 6 comments

காதல் இந்த வார்த்தைய கேட்டாலே  மனசுக்குள் மத்தாப்பூ பூக்கும் , ஆனா இந்த காதலை  நம்ப பசங்க எப்படி எல்லாம் சொதப்புறங்க இல்ல?. அதுவும் இந்த காதலை   சொல்லுற  சொதபல்ஸ் இருக்கே அதுக்கு தனியா  ஒரு புக் எழுதலங்க.
                   என்னோட நண்பன் ஒருத்தன் இப்படிதான் காதலை  சொல்ல போனான் ஒரு பொண்ணுகிட்ட  , போய் காதலை   சொல்லுவான் ன்னு பார்த்த இவன்பாட்டுக்கு அவனோட வாழ்கை வரலாற சொல்ல ஆரம்பிச்சுட்டான் பாவம் அந்த பொண்ணு இவனோட ராமாயணத்தா  கேக்க முடியாம , சொல்லாம கொல்லாம எஸ்கேப் ஆகிடுச்சு  . இது தெரியாம இவன் மண்ணை பார்த்து சொல்ல ஆரம்பிச்சவன் அவனோட வரலாற அந்த பொண்ணு போனதுகூட தெரியாம ஒரு மணி நேரமா மரத்துக்கிட சொல்லிட்டு  வந்து இருக்கான்.
                      இன்னொரு நண்பன் காதலை  சொல்லிட்டு வாட ன்னு  வீரத்த ஏத்தி அனுப்பி வச்சா   இவன்பட்டுக்கு அதே  வீரத்தோடையே போய் கட்ட பொம்மன்  மாதிரி வசனம் பேசிட்டு வந்து இருக்கான்.  பாவம் அந்த புள்ள, பச்சை மண்ணு , இவன பேசுன வீர வசனத்த  கேட்டு  பயந்து போய் ஒரு வாரம் காயச்சல படுத்துடுச்சு.
                        இது இப்படி இருக்க நான் காலேஜ் படிக்கும் போது ஒரு வெவரமான பொண்ணு , என்னோட நண்பன் ஒருத்தன் போய் செம ரொமாண்டிக் மூட் ல அந்த பொண்ணுகிட்ட காதலா சொல்லி இருக்கான் , அந்த பொண்ணு உடனே ரொம்ப வெக்க பட்டுக்கிட்டு நீங்க முதல்ல இருக்க அரியர் பேப்பர் எல்லாம் கிளியர் பண்ணுங்க அப்பதான் உங்க காதல ஏத்துக்குவேன்னு  தெளிவா சொல்லிடுச்சு , இத கேட்ட உடனே எனக்கு வந்துச்சு பாருங்க கோவம் , நேர அந்த பொண்ணுகிட்ட போய் " ஏய்  என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு ? ஒண்ணு புடிச்சு இருந்த புடிச்சு இருக்குனு சொல்லு , இல்ல புடிக்கலைய புடிக்கலன்னு சொல்லு , அத விட்டுபுட்டு அதென்ன அரியர்ஸ் எல்லாம் பாஸ்  பண்ண சொல்லி இருக்கா? " அப்படின்னு கேட்டதுக்கு அந்த பொண்ணு அதுக்கும் வெக்க பட்டுகிட்டே என்கிட்ட  சொல்லுச்சு " எல்லாம் அவர் மேல இருக்க நம்பிக்கைனாலதான்னு" . அதுக்குள்ள அவரா? நம்பிக்கையா? அப்படின்னு எனக்கு தூக்கி வாரி போட்டுச்சு . எந்த நம்பிக்கைனால அப்படி சொன்னேன்னு கேட்டதுக்கு , எப்படியும் அவர் அரியர் பேப்பர் எல்லாம் பாஸ் பண்ண மாட்டருன்கிற நம்பிக்கைதான்னு அதே வெக்கத்தோட சொல்லிட்டு  போகுதுன பாத்துகோங்களேன். எவ்வளவு நம்பிக்கை என்ன நண்பன் மேலன்னு என்னக்கு கண்ணுல தண்ணி வச்சுடுச்சு. முடியலட சாமி பொண்ணுங்க நம்பள அநியாத்துக்கு புரிஞ்சு வச்சு இருக்காங்க.
                ஆனா இந்த பொண்ணுங்கள மட்டும் நம்பவே கூடாது பாஸ் , கடைசி நிமிசத்துல எப்படிதான் எஸ்கேப் ஆவங்கனே தெரியாது , கரெக்ட்ட எஸ்கேப் ஆகிடுவாங்க . இப்படி தான் என்னோட சீனியர் ஒருத்தர் எங்க செட் பொண்ணுகிட்ட  லவ்வ  சொல்லுறேன் ன்னு தனிய லேப்க்கு கூட்டிட்டு போயிட்டாரு , கரெக்டா,  வாங்கி வச்சு இருந்த பூங்கொத்த எடுத்து i love wwooooooooo ன்னு அடச்சா,  i  love  you  ன்னு சொல்ல போற நேரத்துல கம்ப்யூட்டர் சயின்ஸ் மேடம் வராத அந்த புள்ள பாத்துட்டு சைக்கிள் கேப்ல எஸ்கேப் ஆகிடுச்சு , நம்ப சீனியர் அண்ணே பூங்கொத்த எடுத்து  டைமிங்க  ரய்மிங்க i love you  சொல்லும்போது கம்ப்யூட்டர் மேடம் கதவ திறந்துட்டு முன்னாடி நிக்குது .  அப்போ சீனியர் முகத்த  பார்கன்னுமே ஐயோ ஐயோ . ஆனா  அந்த மேடம் கொஞ்சம் கூட சலனம் இல்லாம " கம் டு மை ரூம்"  ன்னு சொல்லிட்டு போய்டுச்சு , அந்த மேடம் ரூம் க்கு போயிட்டு ஒரு ஒரு மணி நேரம் கழிச்சு சீனியர் பேய் அடிச்சா மாதிரி வெளிய வந்தாரு , என்னணே என்ன ஆச்சுன்னு கேட்டதுக்கு ஒரு மணி நேரம் செம ரெய்டு மச்சி , லவ்வ சொல்லுறவன் இப்படி பப்ளிக்வா சொல்லுவா? தனிய வந்து சொல்ல கூடாது ன்னு மேடம் காண்டகிடங்கடன்னு, இத கேட்டு நாங்க பேய் அடிச்சா மாதிரி ஆகிட்டோம் , சரி விடுங்கண்ணே நீங்க ஜூனியர்ற கரெக்ட் பண்ணலாம்ன்னு பாத்திங்க ஆன உங்க கேரக்டர்க்கு  , உங்கள கரெக்ட் பண்ண ஒரு சீனியர் மேடம் இருகாங்ககுறது இப்பதான் தெரியுது . சரி என்ஜாய் பண்ணுங்கண்ணேன்னு சமாதனா படுத்தி அனுப்புறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு .
                   இப்போ இன்னொரு பையன் எங்களோட ஜூனியர் பையன் , அவன் போய் ஒரு சீனியர் வட நாட்டு பொண்ணுக்கிட்ட  லவ்வ சொல்லுறேன்னு தமிழ்ல கவிதை சொல்லி பொலம்ப , அந்த பொண்ணுக்கு தமிழ் தெரியாது, இவனுக்கு இங்கிலீஷ் அவசரத்துக்கு கூட வராது , அந்த பொண்ணு இவன் ஜூனியர் பையன் ஏதோ பசிலதான் பொலம்புரன்னு நினைச்சுக்கிட்டு காலேஜ் காண்டீன்னுக்கு கூட்டிட்டு போய் டீ யும் பன்னும் வாங்கி கொடுத்து சாப்பிட வச்சு அனுப்பி இருக்கு .
              அட இத விடுங்க என்னை எடுத்துகோங்க , நானெல்லாம் லவ்வ சொல்ல நைட் பூர 45 தடவ ரிகர்சல் பாத்துட்டு போனல்லும் , அந்த பொண்ணுங்க முன்னாடி போய் நின்னதும் அது எப்படி தான்ன்னு தெரியல அப்படியே இன்ஜினியரிங் மாத்ஸ்  எக்ஸாம் பேப்பர் கைல வாங்குன மாதிரியே இருக்கும் , மண்டைல ஒன்னும் ஓடாது . நாக்கு கோளாறும் , கை வேர்த்து போகும் , பேண்ட்டுக்குள்ள கால் மட்டும் தனியா டான்ஸ் ஆடும் ஆன வெளிய தெரியாது .   நீ போட்டு இருக்க சுடிதார் நல்ல இருக்கு , காலைல என்ன சாப்பிட்ட ? , இன்னைக்கு மெஸ் ல சாப்பாடு நல்லவே இல்ல தெரியுமா? அப்படின்னு சம்பந்தம் சம்பந்தமே இல்லாம ஒளரிட்டு வருவேன் . அதெல்லாம் ஒரு காலம் .
                         இந்த காதல்ல  நடக்குற சொதபல் , கலாட்டாவா எத்தனையோ சினிமால பார்த்து இருக்கோம் . ஆன இதையே ரெண்டு புதிய இயக்குனர்கள் குறும்படம எடுத்து இருக்காங்க , சினிமாவுக்கு நாம்ப தர முக்கியத்துவத்த , குறும்படங்களுக்கு ஏனோ நாம தருவது  இல்ல , அதனால நல்ல புதிய இயக்குனர்களுக்கு அங்கீகாரமும் , புகழும் கிடைப்பதில்லை . அதனால இங்க ரெண்டு குறும்படங்கள இங்க உங்க பார்வைக்கு வைக்குறேன் , இதுக்கு முன்னாலையே இத நீங்க பார்த்து இருக்கலாம் இருந்தாலும் எனக்கு புடிச்சு இருக்கிறதுனால இங்க இணைத்து இருக்கிறேன் , பார்க்காதவர்கள் பார்த்து என்ஜாய் பண்ணுங்க . 

1. காதலில் சொதப்புவது   எப்படி?







2 . துரு




காதலுடன் ,
ராக்ஸ் ..........
For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com  

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters