Followers

Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts
Thursday, October 13, 2011 17 comments


                   படம் முடிய ராத்திரி 9:30 மணி ஆகிடுச்சு . தியேட்டரை விட்டு வெளிய வந்த நாங்க நாலு பேரும் இங்கயே எங்கையாவது சாப்பிட்டு போய்டுறது முடிவு பண்ணினோம் ஏன்னென்றால் இனிமே ஹாஸ்டல் மெஸ்க்கு போனா ஒன்னும் கிடைக்காது தெரியும். சரி எங்கே சாப்பிடுறதுன்னு டிஸ்கசன் வந்த போது ஒரு குறிப்பிட்ட புரோட்டா கடைல புரோட்டா சாப்பிடலாம்ன்னு இருந்த நாலு பேருல ரெண்டு பேரு அவுங்கலாவே ஏக மனதா முடிவு பண்ணி கூட்டிட்டு போய்ட்டானுங்க. புரோட்டா கடைக்கு போனதுக்கு அப்புறம்தான் எனக்கு தெரிஞ்சது அது சுத்தம், சுகாதாரத்துல ISO 9001 , ISI  சர்டிபிகேட் எல்லாம் வாங்கின கடைன்னு. கடையை பார்த்த உடனே எனக்கு லைட்டா கண்ணா கட்டுச்சு , அதுலயும் அங்க புரோட்டா மாஸ்டரையும் , சப்ளையரையும் பார்த்த உடனே இருந்த கொஞ்சம் நஞ்சம நம்பிக்கையும் அடியோட குழி தோண்டி புதைக்க வேண்டியதா போச்சு. டேய் மாமு இந்த கடைலதான் புரோட்டா சாப்பிடனுமா? வேற கடைக்கு போலாம்டா அப்படின்னு சொன்னதுக்கு , அதெல்லாம் முடியாது இதே கடைலதான் புரோட்டா சாப்பிடணும் என்னோட பிரிண்ட்ஸ் ரெண்டு பேரும் ரெண்டு கால்ல நிக்குரானுங்க ( ரெண்டு பேரும் ஒத்த கால்ல நிக்குரானுங்க, ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு கால், மொத்தம் ரெண்டு கால்). டேய் மாப்ளே இந்த கடை கொஞ்சம் நல்ல இல்லடா அப்படின்னதுக்கு , ஏன்டா நீயெல்லாம் 5 ஸ்டார் ஹோட்டலதான் சாப்பிடுவியோ அப்படின்னு சோஷலிசம் பேச ஆரம்பிசுடானுங்க. இதுல கூட இருந்த இன்னொரு நண்பன் வேற " மச்சான் இந்த ஹோட்டல் புரோட்டா சாப்பிட்டா  லிவர்க்கு நல்லதுடா" அப்படினான் . "போச்சுடா இது வேறையா ?" அப்புறம்?  அப்படினேன் , " டேய் மாமு அது மட்டும் இல்லடா இந்த ஹோட்டல் புரோட்டவுக்கு தனி டேஸ்ட் இருக்குடா" அப்படினான் . அப்படி என்னடா தனி டேஸ்ட்டுன்னு கேட்டதுக்கு "இந்த கடை புரோட்டா மாஸ்டர் சும்மா சாதாரணமா புரோட்டா பிசைய மாட்டருடா , சும்மா புரோட்டா மாவை வேர்வை சிந்தி பிசைவாறு பாரு,  அப்படி ஒரு டேஸ்ட் , அப்படி ஒரு Soft  . வாய்ல போட்ட உடனே கரைந்திடும் " அப்படினான் . அப்பவே எனக்கு குமட்டிகிட்டு வந்துடுச்சு. இருந்தாலும் இனிமே சொன்ன இவனுங்க கேக்கவா போறானுங்க ? விதி விட்ட வழி அப்படின்னு உள்ள போயாச்சு.
                மதியமே ஹாஸ்டல இருந்து கிளம்பியாதாலும் , சாயங்காலம் எதுவும் சாப்பிடாதளையும் பயங்கர பசி. வேற என்ன பண்ண? அந்த கடை ISI புரோட்டாவையே ரெண்டுக்கு , நாலா சாப்பிட வேண்டியதா போச்சு. சாப்பிட்டு எல்லாம் முடிச்சுட்டு பைக் எடுத்துகிட்டு ஹாஸ்டல் வந்து சேர ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு . புரோட்டா சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆனதால புரோட்டா தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுச்சு. என்னடா அதான் ஏற்கனவே புரோட்டா மாஸ்டர் புரோட்டாவை வேர்வை சிந்தி பிசைஞ்சுடானே அப்புறம் எதுக்கு வயுறு தனிய பிசையுதுன்னு யோசிச்சுகிட்டே ரூம்ல படுத்து தூங்கியாச்சு.
                     மறுநாள் காலைல எழுந்துரிச்சா சும்மா வயுறு கடமுட கடமுடன்னு கலக்குது. உடனே அடிச்சு புடிச்சு பக்கெட்டை எடுத்துகிட்டு டாய்லெட்டுக்கு ஓடினா , எனக்கு முன்னாடி என் நண்பன் ஓடிகிட்டு இருக்கான், டேய் எங்கேடா ஓடுற அப்படின்னு பின்னாடியே நானும் ஓடி அவன் பக்கத்து டாய்லெட்க்குள்ள புகுந்தா , கொஞ்ச நேரத்துல பக்கத்து டாய்லெட்க்கு உள்ள இருந்து ஒரு சத்தம் , " மச்சான் டேய் பிரேக் புடிக்கலடா !!!!!!!!. . . பேதி ஆகுதுடா "  அப்படின்னு.  "டேய் ஆமாடா மாமு இங்கயும் பிரேக் புடிக்கலடா"  - இது நான். நாங்க ரெண்டு பேரும் பேசுறத கேட்ட பக்கத்துல டாய்லெட்டுல இருந்த இன்னொருத்தன் "டேய் இது என்ன கிரிக்கெட் மேட்ச்சாடா ? ரன்னிங் கமெண்ட்ரி குடுக்குரிங்கா ? பேசாம இருங்கடா " அப்படினான். அதுக்கு என்ன நண்பன் "ஆமா உனக்கு நார்மல் டெலிவரிகிற தலகனத்துல பேசாதடா , மவனே நீயும் நேத்து எங்க கூட ISO 9001 புரோட்டா சாப்பிட்டு இருக்குன்னும்டீ அப்போ தெரிஞ்சு இருக்கும் " அப்படினான். இப்படி ஒரு முறை ரெண்டு முறை அல்ல நாலு அஞ்சு முறை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி , சில முறை ஒன்னாவே கூட பாக்கெட்டை தூக்கிட்டு ஓட வேண்டியதா போச்சு. அப்புறம் எங்க ஓட? நடக்க கூட முடியாம ரெண்டு பேரும் " பப்பறப்பேன்னு "ரூம்க்குள்ள மல்லாக்க படுத்து கிடக்க , இவ்வளவு சீரியஸ் கலாட்ட நடந்துகிட்டு இருக்கு அப்பத்தான் ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு சாவகாசமா மத்த ரெண்டு பேரும் அதான் முதல்நாள் ராத்திரி இதே புரோட்டா கடைலதான் புரோட்டா சாப்பிடுனும்ன்னு ஒத்த காலுல நின்னு எங்களை பாழுங்கிணற்றில் தள்ளின படுபாவிங்க வந்தானுங்க. " என்னடா மாப்ளே என்ன ஆச்சு "  அப்படின்னு அக்கறைய விசாரிச்சானுங்க, " என்ன நோன்னுங்கடா? நான் அப்பவே சொன்னேன் இல்ல அந்த ஹோட்டல் வேண்டாம்டான்னு , இப்ப பாரு எங்க ரெண்டு போரையும் , பெருகுடல் , சிறுகுடல் , கல்லீரல் , கணையம் வரைக்கும் வெளிய வந்துடுச்சு பேதி ஆகி " அப்படினேன் கடுப்பாகி . நான் கடுப்புல இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டு அவனுங்க இன்னொருதன்கிட்ட போய் " என்ன மச்சான் அவ்வுளவு மோசமாவா பேதி ஆகுது? " ன்னு கேக்க . " போங்கடா டேய் போங்க, டாய்லெட்டுல எனக்கு பேதி ஆகுற ஸ்பீடுல" PSLV" ராக்கெட் மாதிரி நான் நாலு அடி மேல போறேனா பாத்துகோங்க அந்த அளவுக்கு மோசமா போகுதுடா டேய்"  அப்படினான் பாருங்க , அவ்வுளவு வேதனையுளையும் எனக்கு சிரிப்பு முட்டிக்கிட்டு வந்துடுச்சு ஹி ஹி ஹி . . .

          ஆனா அவனுங்க என்ன சொன்னனுங்க தெரியுமா? , " மச்சான் கண்டிப்பா இந்த பேதி நேத்து ராத்திரி சாப்பிட புரோட்டாவால இருக்காதுடா , நேத்து பார்த்த படத்தாலதான்னு  இருக்கும்டான்னு அடிச்சு சொன்னனுங்க, என்னென்றால் நாங்க பார்த்த படம்  ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் T. ராஜேந்தரின் , மோனிஷா என் மொனோலிச" , அப்படின்னு சீரியஸ் டிஸ்கஸ்சன்னு வேற. "என்ன கொடுமை சார் இதெல்லாம்? ". .

            ஆனா இதை எல்லாம் கேட்ட அவங்க ரெண்டு பேரும் சும்மா இல்ல , " Don't Worry மச்சி . . இதுக்கு எங்க கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு கவலை படாதிங்கடா, நான் சொல்லுற மாதிரி செய்யுங்க பேதி டக்குன்னு நின்னுடும்" ன்னு சொல்லிட்டு . "டேய் ஏதாவது சிவப்பு துணி இருக்காடா?" அப்படின்னு கேட்டான் . " அங்க பாருடா ஒரு பழைய சிவப்பு துண்டு இருக்கும்" ன்னு சொன்னேன். உடனே ஓடி போய் அதை எடுத்து ரெண்டா கிழிச்சு என் கைல ஒண்ணும் , என் பிரெண்ட் கைல ஒண்ணும் குடுத்தான்.  "இதை வச்சுக்கிட்டு என்னடா பண்ணுறது" அப்படின்னு நாங்க ரெண்டு பேரும் கேட்டோம் . "மச்சான் நெக்ஸ்ட் டைம்  டாய்லெட்க்கு இந்த சிவப்பு துணிய எடுத்துட்டு போங்க ,  பேதி ஆகும் போது கரெக்டா இந்த சிவப்பு துணிய ஆட்டி காட்டுங்கடா உடனே பேதி டக்குன்னு நின்னுடும்"  அப்படினான். நாங்க ரெண்டு பேரும் நிஜமாவே குழம்பி போயிட்டோம். " டேய் என்னாடா சொல்லுற? ஒண்ணுமே புரியல?????? "அப்படின்னு கேட்டதுக்கு அவுனுங்க ரெண்டு பேரும் சொல்லுரான்னுங்க " டேய் மாப்ளே என்னடா இது கூடவா புரியல உங்களுக்கு ? , ரொம்ப சிம்பிள்டா , சிவப்பு கொடிய காட்டின அவ்வளவு நீள ட்ரெயின்யே நிக்குது!!! , இந்த சுண்டக்கா பேதி நிக்காதா ????? ஹி ஹி ஹி ஹி . . " அப்படின்னுனானுங்க


        உடனே எனக்கு வந்தது பாருங்க கோவம், மறுபடியும் பேதியோட சேர்த்து  , அதுக்கு மேல அவனுங்க கிட்ட ஒரு வார்த்தை , ஒரு வார்த்தை பேசலையே நான் , பாக்கெட்டை எடுத்துகிட்டு கோவமா கிளம்பிட்டேன் அடுத்த ரவுண்டுக்கு . . . .


அன்புடன் ,
ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Friday, September 23, 2011 25 comments

Sorry , கொஞ்சம் Busy ah இருந்துட்டேன்
         
             ப்ளாக் எழுதி சரியா இரண்டு மாதங்களுக்கு மேல ஆகிடுச்சு . கடைசியா ஜூலை 18 ம் தேதி ப்ளாக் எழுதியது. அதுக்கு அப்புறம் ப்ளாக் எதுவும் எழுதவும் இல்ல , வெளியிடவும் இல்ல . இதுனால உலகம் சுத்துறதோ , இல்ல சூரியன் உதிகிறதோ , இல்ல காக்கா கத்துறதோ எதுவும் நின்னுடல . எல்லாம் வழக்கம் போலதான் நடக்குது . ராக்ஸ் ப்ளாக் எழுதலைன்னு யாரும் வருத்தப்படவும் இல்லை , சந்தோஷ பாடவும் இல்லை .

                நான் ப்ளாக் எழுதாதற்கு ஏகப்பட்ட காரணங்கள் . அதுல முக்கியாமான காரணம் நான் இப்போ ரொம்ப ப்ரீயா இருக்குரதுதான் , ரொம்ப வேடிக்கையா இருக்குது இல்ல ? அதாவது இப்போ நான் இரண்டு வருட சவுதி பணிக்கு பின் விடுமுறையில் இந்தியா வந்து இருக்கேன் . அதாவது வேலைக்கு போகாம வெட்டியா இருக்கேன் அதனாலதான் ப்ளாக் எழுத முடியல , நேரமும் இல்ல . என்ன கொடுமை  இது?  நான் பிஸியா வேலைல இருந்த போது அப்போ அப்போ ப்ளாக் எழுதினேன் , ஆனா பாருங்க இப்போ வேலைல இல்லாம விடுமுறைல ரொம்ப ப்ரீயா வெட்டியா இருக்கேன் ஆனா இப்போ ப்ளாக் எழுத முடியல . இதுக்கு என்ன காரணம்னா , நான் சவுதில வேலைல இருக்கும் போது அப்போ எட்டு மணி நேர வேலைதான் , மத்த நேரம் எல்லாம் பக்கத்துல யாரும் இல்ல , வேற வேலை எதுவும் இல்ல . எப்பவும் இணைய தளம் தான் ஒரே  துணை . வேற வழி இல்ல அதனால எப்பவும் ஆன்லைன்ல இருக்க முடிஞ்சது , ப்ளாக் எழுத முடிஞ்சது . ஆனா இப்போ இந்தியா வந்த பிறகு நிலைமை அப்படி இல்ல , அப்பா , அம்மா , சொந்தங்கள் , பள்ளி , கல்லூரி நண்பர்கள் அப்படின்னு நிறைய பேர் சுத்தி இருக்காங்க. அதனால அவங்களோட நேரம் செலவிடவே நேரம் இல்ல . அப்புறம் சொந்த வேலைகள் , என்னுடைய கல்யாணத்துக்கான வேலைகள்ன்னு ரொம்பவே பிஸி . அதுவும் இல்லாம இரண்டு வருடங்கள் இந்தியால இல்லாததுனால நிறைய விட்டு போன சொந்த வேலைகள் செய்ய வேண்டி இருக்கு.  அதனால ஆன்லைன் வரதுக்கோ , ப்ளாக் எழுதுறதுக்கோ கண்டிப்பா நேரம் இல்ல. ஒரு நாளைக்கு ஆன்லைன் வரதுக்கு அதிகபட்சம் இரவு துங்க போற நேரதுக்கு முன்னாடி ஒரு அரை மணி நேரம் தான் கிடைக்குது . அதுலயும் மெயில் பார்க்கவும் மத்த விஷியங்களை பார்க்கவுமே நேரம் சரியா இருக்கு . அதனால இதுதான் என்னுடைய உண்மையான வாழ்க்கை முறை , சவுதில இருந்த போது இருந்தது போல எப்பவும் இணையதளத்துல இருக்க முடியாது.

                       ஆனா நான் சவுதில இருந்த போது இரண்டு வருடங்களில் அறிமுகமான இணையதள நண்பர்கள் ரொம்பவே கோவிச்சுகிறாங்க , வருத்த படுறாங்க . ராஜேஷ் முன்ன மாதிரி இல்ல , ரொம்ப மாறிட்டான் . ஆன்லைன் வர்றது  இல்ல , சாட் பண்ணுறது இல்ல , கண்டுக்கிறது இல்ல , ஏன் இந்தியா வந்து ஒரு போன் கூட பண்ணலன்னு . அவங்க எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே ஒன்னுதான் இந்த ராஜேஷ்  எப்பவும் மாற மாட்டன் எப்பவும் ஒரே மாதிரி தான் . ஆனா என் நண்பர்கள்ன்னு சொல்லிக்கிற நீங்கதான் நிலைமைய புரிஞ்சுக்கணும் .

               சரி இப்போ மேட்டர்க்கு வரேன் , நான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ப்ளாக் எழுதிகிட்டு இருந்தவரை  ஹிட் கவுன்ட் கம்மியா இருந்தது , தமிழ்மணம் Traffic Rank 1050 க்கு மேல இருந்தது . ஆனா நான் எழுதாம இருந்த இந்த ரெண்டு மாதத்தில் என்னோட வலைப்பூவின் ஹிட் கவுன்ட் அதிகமாகிடுச்சு , தமிழ்மணம் Traffic Rank : 786 க்கு வந்துடுச்சு . தினமும் குறைஞ்சது ரெண்டு பேராவது வந்து என்னோடைய பதிவுகளை படிச்சுட்டு போறாங்க. என்ன இதெல்லாம்? தொடர்ந்தது எழுதும் போது அவ்வுலவா யாரும் வரல , ஆனா எழுதாத போது நிறைய பேரு வந்துட்டு போறாங்க , இந்த மனுசங்கள புரிஞ்சுக்கவே முடியலையே  கடவுலே . . .


            சரி  இவ்வளவு இடைவிடாது சொந்த அலுவல்களுக்கு இடையிலும் நான் நிறைய எழுத ஆசை படுகிறேன் , மனதில் நிறைய விஷியம் ஓடி கொண்டேதான் இருக்கிறது எழுதுறதுக்கு . ராக்ஸ் மறுபடியும்எழுத வந்துட்டான் , எல்லாரும் தொடர்ந்து படிங்க . என்ஜாய் பண்ணுங்க . கண்டிப்பா வயுறு வலிக்க  சிரிக்கவும் , சிந்திக்கவும் தயாராகுங்கள் . . .

நான் இனி எழுத இருக்கும் அதிரடி பதிவுகளின் தலைப்புக்கள்   பின் வருமாறு :

1. ரகசிய கேமராக்களும் , மனித  சுதந்திரமும்   . . .
2. என் நண்பன் விட்ட ரேஸ் . . .
3. கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்கள் . . .
4. மச்சான் பிரேக் புடிக்கல!!!!! . . .
5. நான் பாட்டு பாடவா ? . . .
6.  * நிபந்தன்னைக்குட்பட்டது (* conditions apply)




I Am Back . . 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Thursday, June 2, 2011 46 comments

                          
                               காலைல குளிக்கும் போது , அதுவும் அவசரமா ஆபீஸ்க்கு கிளம்புறதுகாக குளிக்கும் போது இருக்கிற  மிக பெரிய பிரச்சனைகள்ள ஒன்று , சோப்பு கை நழுவிபோய்டுறது , அதுவும் அவசர அவசரமா சோப்பு போடும் போதுதான் இந்த சோப்பு நம்ப கிட்ட சடு குடு விளையாடும் . எவ்வளவுதான் இறுக்கி புடிச்சு , கவனமா குளிச்சாலும் , நாம ஏரியா ஏரியாவா உடம்புல சோப்பு போடும் போது சோப்பு , நாம பிக் அப் பண்ண நினைக்குற பிகர் நழுவி போற மாதிரி லபக்குன்னு நழுறது சகஜம் தான்  . இருந்தாலும்  மனம் தளராம ,  நாம்பளும் உடனே சோப்பு தரைல விழாம புடிக்க, இந்தியன் கிரிக்கெட் டீம் பில்டர் கணக்கா குட்டிகரணம் அடிச்சு லாவகம புடிக்க பார்த்தாலும் , சோப்பு எப்படியும் பெண்டரி தொட்டு சோப்பு முனை மழுங்காம விடாது . அதுக்கு அப்புறம் அரை மனசோட அந்த சோப்புபை ஒரு பேருக்கு  தண்ணில  காட்டிட்டு வழக்கம் போல சோப்பு போடா ஆரம்பிபோம் . இருந்தாலும் மனசு கஷ்டமா இருக்கும் கீழ விழுந்த சோப்பை போடுரமேன்னு ( சுத்தத்தை  பத்தி கவலை பாடுரவனுக்கு கண்டிப்பா கஷ்டமா இருக்கு. இருக்குமில்ல? .... என்னது இல்லையா? சரி  விடுங்க அப்போ நீங்க ... ரைட்டு ரைட்டு அது எதுக்கு இப்போ )
   
                ஆனா பாருங்க , நாம உடம்புக்கு சோப்பு போடும் போது நழுவுனா கூட பரவா இல்ல , இந்த அழகான முகத்தை மேலும் அழகு படுத்த கண்ணை மூடிகிட்டு சோப்பு போடும்போது கை நழுவி போகும் பாருங்க , அப்போ வரும் கோவம் , அப்படியே பாத் ரூம் சுவர அடிச்சு உடைசுடலாமன்னு தோணும் , ஆனா பாருங்க அதுல ஒரு சிக்கல் இருக்கு , அப்படி அடிச்சா , உடையுறது பாத் ரூம் சுவரா இருக்காது , நம்ப கையாதான் இருக்கும் . அதனால மனச தேத்திக்கிட்டு சோப்பு தேட ஆரம்பிப்போம் .
       
             முதல் முயற்சியா கண்ணா மூடிகிட்டே அப்படியே கீழ குனிஞ்சு தரைய தடவ ஆரம்பிப்போம் ஆனா கண்டிப்பா சோப்பு கிடைக்காது , அது எப்படி கிடைக்கும்? பகல்லயே நமக்கு பசு மாடு தெரியாது , இதுல இருட்டுல எங்க எருமை மாடு தெரிய போகுது ? . கண்ண திறந்துகிட்டு வண்டி ஓட்டுனாலே கீழ வாரி விழுறவாங்க நாம . இதுல எங்க கண்ணா மூடிகிட்டு சோப்பை கண்டு புடிக்குறது?  தரைக்கு சாணி போட்டு மொளுக்குற மாதிரி , தடவுனதுதான் மிச்சம்.

                 இப்போ ரெண்டாவது முயற்சியாக ,லைட்டா கண்ண திறந்தா , திறந்தவுடனே எப்படிதான் தெரியல , சோப்பு நுரை கண்ணுக்குள்ள கபால்ன்னு  போய் அங்க கண்ணீர்,  டேம் கட்டி நிக்கும் . அப்புறம் ஓர கண்ணால கண்ணு எரிச்சலோடையே சோப்பு தேடி மீதி ஏரியாவை போட்டு முடிப்போம் . அட அட அட என்னையா இது? குளிக்குறது சர்கஸ் பண்ணுறதை விட கஷ்டமா இருக்கு . இருந்தாலும் இந்த கூத்து எல்லாம் பாத் ரூம் குள்ள நடக்குரதுனால நாம தப்பிச்சோம் . ஆனா இதையெல்லாம் மத்தவங்க கண்ணு கொண்டு பார்த்தாங்க அவ்வுளவுதான் நாம பண்ணுற காமெடில மானம் மானாவாரிய போகும் .

     ஆனா  இந்த உலக மகா சோப்பு நழுவுற பிரச்சனைய நம்ப பிரபல பதிவர்கள் எப்படி சமாளிகிறாங்க? இல்ல அவங்களும் சோப்பு நழுவ விடுறான்களான்னு BBC (Tamil) REPORTER ஸ்பெஷல் இன்டர்வியூ எடுத்து இருக்காரு , அவங்க என சொல்லுரங்கன்னு பாக்கலாம் .

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : நான் குளிகுறேன்னு யாரு சொன்ன உங்க கிட்ட? எனக்கு ஊர் ஊரா சுத்துறதுக்கும் , அத நான் சேலம் போன்னேன் , சிங்கப்பூர் போன்னேன் , கொடைகானல் போன்னேன்னு போட்டோ புடிச்சு ப்ளாக்குக்கிர
 பேர்ல போடுரதுக்குமே டைம் இல்ல இதுல எங்க குளிக்குறது?

BBC REPORTER : அப்போ சார் எந்த ஊருக்கு போனாலும் குளிக்குறது இல்ல?

சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : யோவ் அறிவு இருக்கா  உனக்கு? நான் அங்க போன்னேன் , இங்க போன்னேன் , ஹோட்டல்க்கு சாப்பிட போன்னேன் அப்படின்னு போட்டோ புடிச்சு போடுறேன்ன இல்லையா என்னோட ப்ளாக்ல?

BBC REPORTER :
ஆமா சார் அத தான்  பார்த்துட்டு ஊரு சிரிப்பா சிரிக்குதே . . .


சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : அப்போ நான் குளிச்சு இருந்த அதையும் போட்டோ புடிச்சு போட்டு இருக்க மாட்டேன்? , இதெல்லாம் நீ யோசிக்க மாட்ட? வந்துட்டான் தூக்கிகிட்டு , மைக்க, கேள்வி கேக்குறதுக்கு , போயா போ நான் உன்னையும் கூட்டிட்டு போய் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கி குடுக்க சொல்லுறதுக்கு முன்னாடி போய்டு , இல்ல அப்புறம் நீதான் பில் குடுக்க வேண்டி வரும் .சொல்லிட்டேன் ஆமா .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

பட்டா பட்டி : நான் பட்டா பட்டி ட்ரவுசர் போடா ஆரம்பிச்ச காலத்துல இருந்தே குளிக்குறது இல்ல சார் அப்புறம் எங்க சோப்பு எல்லாம் போட்டுக்கிட்டு ஹி ஹி ஹி 

BBC REPORTER : சார் நீங்க எப்போ இருந்து பட்டா பட்டி ட்ரவுசர் போட ஆரம்பிசுங்க?

பட்டா பட்டி : நான பிறந்ததுல இருந்தே பட்டா பட்டி ட்ரவுசர் தான் போடுறேன்


BBC REPORTER : அட பாவி அப்போ நீ பொறந்ததுல இருந்தே குளிக்குறது இல்லன்கிரததான் அப்படி சொன்னியா ?

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

மங்குனி அமைச்சர் : யோவ் எனக்கு ஆடு வெட்டதான் தெரியும் , இந்த  சோப்பு போடுறத பத்தி எல்லாம் தெரியாது .நான் எனக்கும் சோப்பு போட்டதும் கிடையாது , வேற யாருக்கும் சோப்பு போட்டதும் கிடையாது .

BBC REPORTER : அப்போ சோப்பு போடாமதான் குளிக்குகிறின்களா நீங்க ?

மங்குனி அமைச்சர் : யோவ் நான் குளிக்குறேன்னு சொன்னேன உன்கிட்ட? எப்பவாவது மழை பெய்யும் போது நனையுறதொட சரி . குளிச்ச எனக்கு ஜல்ப்பு புடிசுக்கும் .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

கோகுலத்தில் சூரியன் வெங்கட் : சாரி சார்  , இந்த கேள்வி MODERATION க்கு போயிட்டு வந்தாதான் என்னால பத்தி சொல்ல முடியும் .

BBC REPORTER :  சார் இதுக்கெல்லாமா MODERATION ? என்ன கொடுமை இது ? 


வெங்கட் :  சார் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எல்லாமே MODERATION ல தான் போகுது சார்


BBC REPORTER :  எல்லாமேனா?


வெங்கட் :  எல்லாமேனா எல்லாமேதான் அதுக்கு மேல சொல்ல முடியாது ( அப்புறம் யாரு வீட்டுக்கு போய் அடிவாங்குறது அவ்வ்வ்வ்வ்வ்வ் ) 

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?


சி.பி.செந்தில்குமார் : ஹி ஹி ஹி , சார் குளிக்குறது புடிக்கும் ஆனா குளிக்குறது நானா இருக்க கூடாது 

 BBC REPORTER : அப்படினா ? என்ன சார் சொல்லவரிங்க?

சி.பி.செந்தில்குமார் : ஹி ஹி ஹி எனக்கு தியேட்டர்ல நடிகைகள் சினிமால குளிக்கிறதை  கலை கண்ணோட பார்க்குறதுக்குதான் புடிக்கும் , மத்தபடி எனக்கு குளிக்கிறதுன்னா அலர்ஜி சார் ஹி ஹி ஹி . . .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

விக்கிஉலகம் (விக்கி) : சார் இங்க வியட்நாம்ல யாரும் குளிக்கிறது இல்ல தெரியமா உங்களுக்கு? குளிக்கிறது எல்லாம் வேஸ்ட் ஆப் டைம் சார்  

BBC REPORTER : குளிக்கிறது வேஸ்ட் ஆப் டைம் னா வேற என்ன பண்ணுவிங்கா? 

விக்கிஉலகம் (விக்கி) : குளிச்சு டைம் வேஸ்ட் பண்ணுறத விட , அந்த நேரத்துல நாலு ப்ளாக் போஸ்ட் பண்ணலாம் இல்ல? நானெல்லாம் ஒரு லட்சிய பாதைல போய்கிட்டு இருக்கேன் தெரியுமா உங்களுக்கு?  


-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

பன்னிகுட்டி  :  அடங்கொன்னியா குளிக்குறதுக்கு சோப்பு எல்லாம் போடணுமா? 

BBC REPORTER : ஆமா சார் , அப்போ இது தெரியாத உங்களுக்கு? அப்போ குளிக்குரதுக்கு நீங்க என்னத்த use பண்ணுரிங்கா?

பன்னிகுட்டி  :  i use only  செங்கல் . அப்புறம் குளம் குட்டைய பக்குறபோ அப்படியே ஜாலியா குப்புற படுக்குரதொட சரி


-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


BBC REPORTER : மேடம்  இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி             சமாளிக்குரிங்க?

இந்திரா  :  ( போச்சுட ஏற்கனவே நாம சொந்தமா வாங்குற பல்பு பத்தாதுன்னு இப்போ BBC ல இருந்து வேற வந்துட்டாங்களா ? ) சார் உங்களுக்கு ஒன்னு தெரியுமா? குளிக்குரதுல பல விதம இருக்கு , அதுல நான் குளிக்குற விதத்துல சோப்பு நழுவுரதுக்கு வாய்ப்பே இல்ல .


BBC REPORTER : என்னது குளிக்குரதுல பல விதம் இருக்கா ? அது என்ன என்ன விதம் மேடம் ?

இந்திரா  :  அப்படி கேளுங்க சொல்லுறேன் ,  அருவி குளியல் , காக்கா குளியல் , முலிகை குளியல் , சூரிய குளியல் , பம்பு செட் குளியல் , ஆடம்பர குளியல் , அவசர குளியல் , MODERN குளியல்  இப்படி நிறைய இருக்கு . .
 
BBC REPORTER : ஓ இதுல இவ்வளவு இருக்க ? அப்போ நீங்க எந்த விதமான குளியல் மேடம் பின்பற்றுறிங்கா ? 


இந்திரா  :   என்னோட சாய்ஸ்  எப்பவுமே MODERN குளியல்தான் .


BBC REPORTER : கேக்குறேனேன்னு தப்ப நினைச்சுகாதிங்க மேடம் , அது என்ன MODERN குளியல் ? 

இந்திரா  :  அட என்ன சார் BBC ல இருந்து வந்து இருக்கேன்னு சொல்லுரிங்க MODERN குளியல் தெரியாதுன்னு சொல்லுரிங்க ? 
அது  ஒன்னும் இல்ல சார் ரொம்ப சிம்பிள் , ஆபீஸ்கோ , இல்ல வெளியவோ கிளம்புறதுக்கு  முன்னாடி , left ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ்  , right ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ்ஸ் அவ்வுளவுதான் . 


BBC REPORTER : புஷ்ஷ்ஷ்சா ? அப்படினா ?

இந்திரா  :  என்ன சார் நீங்க சுத்த வெவரம் கிட்ட ஆள இருக்கீங்க , அப்படின வெளிய கிளம்புறதுக்கு முன்னாடி , perfume  bottle , இல்ல சென்ட்  பாட்டில் எடுத்து  left  ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ்ஸ் , right  ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ் . . . . அவ்வுளவுதான் குளியல் முடிஞ்சது . . .

BBC REPORTER : இதுதான் உங்க புஷ்ஷ்ஷ்சா ? சரியா போச்சு . . .
ஆள விடுங்காடா டேய் . . . .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

ஆகா சோப்பு நழுவாம இருக்க ஒரே தீர்வு : குளிக்காம இருக்குரதுதானா ? 


இது தெரியாம இந்த ராக்ஸ் பலவருசமா, பல சோப்பு தவற விட்டுடானே . . . அட ச்சா


என்னடா குளிக்குறத பத்தி பதிவு போட்டுட்டு குளிக்குற மாதிரி படம் ஏதும் போடலைஎன்னு வருதப்படுறவங்களுகாக கீழே பார்க்கவும் . . .








ஆனந்த குளியல் . . . .

Always , 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com



Friday, April 1, 2011 14 comments

யாரும் இதை படிக்காதிர்கள்  , அதிர்ச்சி தாங்க முடியாது . . .
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
தயவு செய்து இளகிய மனசு இருக்கவங்க யாரும் தொடர்ந்து படிக்க வேண்டாம்  . . . 
V
V
V
V
V
V
V
V
V
இதோட நிறுத்திட்டு அப்படியே கிளம்பிடுங்க ப்ளீஸ் . . .
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V


            ஒன்னும்  இல்ல ,  நாயர் கடை வழக்கமா போடுற ஓட்ட வடைல ஓட்ட பெருசா ஆகிடுச்சாம் ஹி ஹி ஹி  . . . அதான் மேட்டர் .... 


இதுக்கே அதிர்ச்சி  ஆனா எப்புடி ? கீழ பாருங்க  பய புள்ள எப்படி அதிர்ச்சி ஆகுதுன்னு  . . .
அட ச்சா,  வடை போச்சே  . . .  ஹி ஹி



ஏப்ரல் பூல் ........... ஹி ஹி ஹி

எப்பூடி ? ? ?


மூஞ்ச பாரு என்ன பதிவு போட்டாலும் படிக்க வந்த இப்படிதான் இருக்கும் உங்க மூஞ்சி . . 

ஊருக்குள்ள ஏதாவது பிரச்சன உடனே சொம்ப தூக்கிட்டு வந்துடுவிங்களே . .
ஏப்ரல் பூல் டே அதுவுமா . . . ஹி ஹி ஹி . ..


கெளம்புங்க கெளம்புங்க காத்து வரட்டும்  . . .  ஹி ஹி ஹி


சரி  வந்ததும் வந்திங்க உங்கள பாக்கவும் பாவமா இருக்கு . . .


கீழ இருக்க படங்கள பார்த்து சிரிச்சுட்டு போங்க . . .





"வெறும் பீர் ர கைல குடுத்துட்டு அதையும் ரவா  அடிக்குறேன்னு என்ன சீன் பாரு இந்த பையனுக்கு ? எல்லாம் தலை எழுத்து , உன்ன நம்பி வந்தேன் பாரு என்ன சொல்லணும் . . "




"நல்ல வேல நெஞ்சுக்கு  குறி வச்சாரு மகாராசன் . . . .  ஜட்டி  போடாதா நேரத்துல . .. "





Just Do It  . . நாங்கெல்லாம் சொல்லுறத செய்வோம் இல்ல . . .




கூல் ல் ல் ல் ல் . .          ஏப்ரல் பூல் ல் ல் ல் ல் ....

ஹி ஹி ஹி  . . .



nothing serious , just fun . . .

ராக்ஸ் . . .



Monday, March 14, 2011 53 comments


முடியல ...........

முடியல ..............

கண்ணா கட்டுது ....

ஏன் இப்படி ?

நானெல்லாம் பதிவு படிக்குறதே பெரிய விஷயம் ( படிக்க தெரிஞ்சாதானே. .  )
அதுலயும் படிச்சுட்டு பதிவு புரியுறது அதை விட பெரிய கஷ்டம் ( எல்லாம் புரியுறத இருந்த எலாங் கிளாஸ் maths  எ எப்பவோ பாஸ் பண்ணி முன்னுக்கு வந்து இருப்பேன் ..)

இதுல நல்ல பதிவு கண்ணுல பட்டு , அதை படிக்குறதுக்கு நேரம் கிடைச்சு ,
அதையும் படிச்சுட்டு , அட நல்ல இருக்கே , சூப்பர்ஆ  எழுதி இருக்காங்களே அப்படின்னு நினைச்சு ஆபீஸ்ல இருக்குற தேவை இல்லாத ஆணிய  புடுங்குற வேலையே எல்லாம் விட்டுட்டு ,  அவசரத்துல ஆசையா கமெண்ட் போஸ்ட் பண்ணிட்டு,  நம்ப கமெண்ட் எ பாக்கலாம்ன்னு ஆசையா பார்த்த ... அங்க நம்ப கமெண்டும் வராது ஒரு மண்ணும் வராது ...

கொய்யா ....

அப்போ Author  அதாங்க அந்த பதிவர்கிட்ட இருந்து ஒரு செய்தி வரும் பாருங்க



   Your comment will be visible after approval. 



அப்போ மனசுக்குள்ள வரும் பாருங்க ஒரு இனம் புரியாத சந்தோசம் ....


அட அட அட ....

ஆறு மாசாம இருக்கிற  அத்தன வேலை வெட்டியும் வுட்டுபுட்டு,  ஒரு  புள்ள பின்னாடியே சுத்தி,  காஞ்சு,  தேஞ்சு,  கருவாட ( already  நாம அப்படிதான் இருப்போம் . இருந்தாலும் வெயில்ல சுத்துனதுல கலர் கொஞ்சம் கூடி போய் இருக்கு , என்ன கலர் கூடி போய்டும ? கருப்பு கலர் தான் வேற என்ன ஹி ஹி ... ) போய் ,     கடைசியா அந்த புள்ளைகிட்ட ஒத்தை ரோசாவா தூக்கிட்டு போய்
ஐ  லவ் ஊஊஊ ..... ( அட ச்சா இந்த கரும்மம் மட்டும் நமக்கு கரெக்ட் ஆ சொல்ல வரமாட்டிங்குது ....  For  Reference click on  : http://rockzsrajesh.blogspot.com/2011/02/blog-post.html  )

சொன்னா ..
ரோசாவாயும்  வாங்கி வச்சுக்கிட்டு அந்த புள்ள கூல் ஆ , " நீ போயிட்டு அடுத்த வருஷமா வா ன்னு"  சொன்னா எப்புடி இருக்கும் ?

ஒன்னு ஓகே நா , ஓகே ன்னு சொல்லு ,

இல்லனா. . .

" செல்லாது செல்லாது , உன் மூஞ்சிக்கு என்னை  மாதிரி லோக்கல் பிகர் எல்லாம் செட் ஆகாது நீ வேற எதாவது இன்டர்நேஷனல் பிகர் ட்ரை பண்ணுன்னு சொல்லன்னும் , அதை விட்டுபுட்டு , அது என்ன அடுத்த வருஷம் வர சொல்லுறது ? சின்ன புள்ள தனமா ?
அடுத்த வருஷம் எல்லாம் நாங்க ரொம்ப பிஸி தெரியுமில்ல ?

கமெண்ட் போடுறது அவ்வுளவு  பெரிய குத்தமா ? கமெண்ட் போடுறது என்ன பிகர் கிட்ட  ஐ லவ் யு  சொல்லுற மாதிரி விஷியமா ?
நாங்க என்ன உங்க சொத்தைய எழுதி கேக்க போறோம் ?
இல்ல நாங்க உங்களுக்கு குடுத்த 50  ரூபாய் யா திருப்பி கேட்டு புப்ளிகுட்டி பண்ணிட போறோம ?
just  உங்க பதிவ படிச்சுட்டு ஏதோ எங்க கருத பின்னூட்டமா போடா போறோம் .
அதுக்கு எதுக்கு கமெண்ட் moderation ?

ஏதோ சென்சிடிவான பதிவு போட்டு இருக்கீங்க மத்தாவங்க  மனசு புண் படிதிடாம இருக்க கமெண்ட்ஸ் moderation  வைக்குறதுல ஒரு அர்த்தம் இருக்கு அதை விட்டுபுட்டு சாதாரண பதிவுக்கு எல்லாம் எதுக்கைய Moderation ? 
i ) நாம  போடுற  பின்னோட்டம் அவங்க எப்போ படிப்பாங்கன்னு தெரியாது ,
ii ) எப்போ approve  பண்ணுவாங்கன்னு தெரியாது ,
iii )  எப்போ publish  ஆகும்ன்னும் தெரியாது . எல்லாம் ஆண்டவனுக்கும் , Author குமே வெளிச்சம் ..

Moderation  வைக்க தெரிஞ்ச அவங்க , approve  பண்ணி publish  ஆனதுக்கு அப்புறம் , மதிப்பிற்குரிய நண்பரே (வேலை வெட்டி விட்டுட்டு என்னக்கு கமெண்ட் போட்ட fool ) , உங்க பின்னூட்டத்துக்கு நான் அனுமதி வழங்கி விட்டேன் , உங்க பின்னோட்டம் வெளியாகிவிட்டது , அப்படின்னு , கண்டிப்பா நம்பள வெற்றிலை பாக்கு  வச்சு அழைக்க போறது இல்ல ..


கொய்யா .. போங்கைய இனிமே கமெண்ட் moderation  இருக்க ப்ளாக் க்கு நான் கமெண்ட்ஸ் போடுரதுல்லன்னு சபதம் எடுக்குறேன் ....

டிஸ்க்கி :
Comments  Moderation  வைத்து இருக்கும் பதிவர்களின் மனப்பான்மை (அதுவும் பெருமையுடன் ) :
1 )  தேவை இல்ல நீ கமெண்ட் போட்டுதான் நான் பிரபல பதிவர் ஆகணும்ன்னு இல்ல
2 ) நீ கமெண்ட்ஸ் போட்டுதான் என்னோட வீட்டுல அரிசி உலை கொதிகன்னும்ன்னு இல்ல ..
3 ) வேண்னும்னா நீயும் கமெண்ட் Moderation  வச்சுக்கோ , யாரு வேண்டாம் னா ?

ரைட்டு இல்லன்னு யாரும் சொல்லல , ஆனா நான் கேக்குறது ஒன்னே ஒண்ணுதான் , நட்புடன் பின்னோட்டம் போடும் போது அது உடனே பின்னூட்டத்துல வெளியாகலேன்னா , பின்னோட்டம் போடுறவங்க கண்டிப்பா எமாற்றம் அடைவாங்க , மத்தவங்க அடைவாங்களோ  இல்லையோ , நான் அடைகிறேன்  ....

ஏமாற்றங்களுடன் ,
ராக்ஸ் ...

For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com



Monday, February 14, 2011 35 comments

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............

ஐயோ ஐயோ இங்கிலீஷ் ஐ ,  படி எழுதுன்னு ரெண்டாங் கிளாஸ் படிக்குமோதே சொன்னாங்காங்க ஆனா
 பாருங்க நான்தான் ஏமாந்து விட்டுட்டேன் , இப்ப பாருங்க வருஷம் வருஷம் feb 14
வருது , காதலர் தினம் வருது. இன்னும் உருப்படியா  ஐ லவ் யு  கூட சொல்ல வர மாட்டேங்குது .
கொய்யா .......... அடுத்த வருசத்துக்குள்ள நான் ஒழுங்கா ஐ லவ் யு சொல்ல,  அதுவும் இங்கிலிபெசுல சொல்ல கத்துகிட்டு போற வர பிகர் கிட்ட எல்லாம் சொல்லி எல்லா பிகர்சையும் பின்னாடி வர வைக்கல , எனக்கு கமெண்ட் போடாத பன்னிகுட்டி , terror , மங்குனி , போலீசு , எஸ் .கே , பட்டா பட்டி , அருண் பிரசாத் , நாகராஜசோழன் MA , வெறும் பய ,செல்வா , கே.ஆர்.பி.செந்தில் , ஹரிஸ், ஜில்தண்ணி - யோகேஷ் , விசா இன்னும் இங்க விட்டு போன பேரு எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்குறேன் , ஆனா என்ன சொல்லுறது ன்னு தெரியல . . . பிகர்ஸ் பிக் அப்  பண்ணிட்டு வந்து ஐ டாக் டு யு ..............

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............ 

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............

ஐ லவ் ஊஊஊஊஊ ஊ ............

After 1  year ..............
2012  Feb  14

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ் ..........
                                       



ஆல் பிகர்ஸ் follow  me .........................

இனிய காதலர் தின வாழ்த்துக்கள் ............

ராக்ஸ் ..............

always  ராக்ஸ் .....................

For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Sunday, October 17, 2010 24 comments

ஜோக்ஸ்.....
ஹாய் friends , இந்த டைம் ஜோக்ஸ் சொல்ல வந்து இருக்குறேன் . கண்டிப்பா நீங்க எல்லாம் ரசிப்பிங்ககுற நம்பிக்கைல நல்ல ஜோக்ஸ்சுடன் ராஜேஷ் .....
1 ) ஒருத்தன் காலங்காத்தால டாக்டர் கிட்ட போய் " டாக்டர் , டாக்டர் நான் நேத்து நைட் பயங்கரமான கனவு கண்டேன் டாக்டர் " அப்படினான். டாக்டர் கடுப்பாயட்டாறு. சரி இருந்தாலும் அதெல்லாம் வரவங்க கிட்ட காட்ட முடியாது இல்ல . அதனால முகத்த சாந்தமா வச்சுக்கிட்டு  டாக்டர் சொன்னாரு " நீங்க ஒன்னும் டென்ஷன் ஆகாம,  அப்படி என்னதான் பயங்கரமான கனவு கண்டிங்கன்னு சொல்லுங்க " அப்படினாரு . அதுக்கு அவன் சொன்னான் " டாக்டர் நைட் நான் தூங்கும் போது ஒரு பெரிய பன்னு(Bun)  அதாவது பெரிய பிரட் சாப்பிடுற மாதிரி கனவு கண்டேன் டாக்டர் " அப்படினான் . அதுக்கு டாக்டர் ஊச்ஸ்ஸஷப்பா ...... இப்பவே கண்ணே கட்டுதேன்னு வடிவேலு ஸ்டைலேல நினைச்சுகிட்டு அதையும் வெளிய காட்டிக்காம சொன்னாரு " பிரட் சாப்பிட்ட ஒடம்புக்கு நல்லதுதான் இதுக்கு போய் ஏன் டென்ஷன் ஆகுரிங்க ? பீஸ் 100 ருபீஸ் குடுத்துட்டு நிமதிய கிளம்புங்கன்னு  சொன்னாரு டாக்டர் . அதுக்கு அவன் சொன்னான் " டாக்டர் அது இல்ல டாக்டர் நைட் தூங்கும் போது பெரிய பிரட் சாபிடுற மாதிரி கனவு கண்டேனா , விடிஞ்சு காலைல எழுந்துரிச்சு பார்த்த தலைக்கு வச்சு படுத்து இருந்த தலகாணிய காணாம் டாக்டர் !!!!!!!! "  அப்படினான் .

*************************************************************************************************
சிரிங்க சிரிங்க சிரிசுகிடே இருங்க ....மீண்டும் உங்கள வேற நல்ல ஜோக்ஸ் கூட சந்திக்கும் வரை..............
சிரிப்புடன் ,
ராக்ஸ். . ..

For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

1 comments


நானும் இன்டர்நெட்டும் ...........
அது ஒரு கனா காலம் , ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் join பண்ணுற சமயம் , ஸ்கூல் ல நான் 1st குரூப் , அதாங்க maths , physics , chemistry & biology இருக்குமே . இந்த அறிவாளி பசங்க எல்லாம் படிபங்கலே அந்த குரூப் . அதுக்காக நான் அறிவாளியனு நீங்க அறிவாளிதனாமா கேள்வி கேக்கபடாது . சரி விஷியத்துக்கு வருவோம் 1st குரூப்னாலே கம்ப்யூட்டர் அறிவெல்லாம் அவ்வுளவா கிடையாது . அதாவது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்குற ஸ்கூல் பசங்களுக்குத்தான் அதெல்லாம் தெரியும் . அதுவும் அப்போ black &white monitor வேற , MS dos ல தான் ப்ரோக்ராம் எல்லாம் பண்ணுவாங்க அந்த பக்கம் போனாலே ஒண்ணும் புரியாது. கம்ப்யூட்டர்ல சன் டிவி தெரியாதன்னு அப்பாவியா கேட்ட காலம் அது . எப்படியோ ஸ்கூல் முடிஞ்சு இன்ஜினியரிங் join பண்ண போறேன் . இன்ஜினியரிங் ல கண்டிப்பா கம்ப்யூட்டர் படிச்சு சாகனும் அடடா இல்ல இல்ல படிச்சாகணும்ன்னு தெரிஞ்சு போச்சு . அப்போதான் கம்ப்யூட்டர் பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன் . அப்போதான் இன்டர்நெட் அப்படிங்குற ஒன்னு இந்தியாக்கு அறிமுகம் ஆகுற சமயம் . எனக்கு ஒரே ஆர்வம் இன்டர்நெட் பத்தி தெரிஞ்சுக்க . காலேஜ் join பண்ணினேன் 1st இயர்ல. நான் படிச்சா கோயம்புத்தூர்ல இன்டர்நெட் ப்ரொவ்சிங் சென்டர் எல்லாம் வர ஆரம்பிச்ச சமயம் அது . அட அட அட என்ன ஒரு அழகு போங்க . செமைய இருக்கும் . ஒரு புது அனுபவம் அது . அது வரைக்கும் நமக்கு தெரிஞ்சது எல்லாம் சினிமா தியேட்டர் , பார்க் , கோவில் , பீச் , ஹோட்டல் எல்லாம் தான் . இந்த ப்ரொவ்சிங் சென்டரும் , இண்டர்நெட்டும் ஏதோ ஒரு புது உலகத்துக்கு போற மாதுரி இருந்துச்சு . அப்போ என்னோட ப்ரிண்ட்ஸ் கூட discuss பண்ணதுல கொஞ்ச விஷயம் கிடைச்சது . இன்டர்நெட் ல என்ன பண்ணலாம்னு . ஏதோ ஈமெயில் அனுபலாம்ன்னு சொன்னங்க . சரின்னு நானும் போனேன் இன்டர்நெட் ப்ரொவ்சிங் செண்டர்க்கு . போன cabin cabin ஆ இருக்கு . அங்க ப்ரொவ்சிங் சென்டர் owner நம்ப சிரிச்ச முகத்தோட வரவேர்த்தார் . இன்டர்நெட் பாக்கணும்ன்னு சொன்னேன் . 1hr க்கு Rs 100 அப்படிநாரு . என்னக்கு தூக்கி வாரி போட்டுச்சு அன்னைக்குனு பாத்து என்ன பாக்கெட் ல இருந்தது வெறும் 60 ரூபாய் தான் , ஐயயோ இன்டர்நெட் பாத்து முடிச்சுட்டு பணம் பத்துலேன்னா , ஹோட்டல் ல சாப்பிட்டு காசு குடுக்கலேன்னா மாவட்ட சொல்லுற மாதிரி இங்கயும் எதாவது சிஸ்டம் வச்சு இருப்பங்களோ ன்னு என்னக்கு பயம் வேற . உள்ள வரைக்கும் வந்தாச்சு இன்னிமே திரும்பி போன அது நம்ப பரம்பரைக்கு வேற அவமான போய்டும் . என்ன பண்ண ? சரி அப்போ அரை மணி நேரம் தருவிங்களன்னு கேட்டேன் , மருதா முருகன் புண்ணியத்துல அவரும் தருவோம்ன்னு சொன்னாரு , அப்பாடி trouser தப்புச்சதுடன்னு நானும் உள்ள போய் உக்காந்ததும் தான் என்னக்கு தெரிஞ்சது , அங்க என்ன பண்ணுறதுன்னு என்னக்கு தெரியலன்னு . சரி கூச்ச படமா அவர கூபிட்டு கேட்டேன் இன்டர்நெட் எப்படி பாக்குறதுன்னு அவரு என்னமோ பிறக்கும் போதே கைல லேப்டாப் ப்பும் , laptop with 2mps broadband wireless connection  னோட பொறந்த மாதிரி என்ன ஒரு லுக் விட்டுட்டு இன்டர்நெட்க்கு புதுசான்னு கேட்டாரு , நானும் நாலு cabin குள்ள நடக்குற விஷயம் வெளிய நாலு பேருக்கு தெரியாதுங்கிற தும்பிக்கைல அட ச்சா நம்பிக்கைல ஆமானு உண்மைய ஒத்துகிட்டேன். அவரும் பெரிய மனசு பண்ணி என்ன பண்ணனும்ன்னு சொல்லி குடுத்தாரு . அப்போ எல்லாம் hotmail தான் . அவரும் எது ஏதோ details கேட்டாரு நானும் வெக்கபடாம சொன்னேன் , கடைசில எனக்கு ஈமெயில் id ஒன்னு create பண்ணாத சொல்லி ஒரு ஈமெயில் id யும் password டும் குடுத்தாரு அதுக்குள்ள அரை மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சுன்னு சொல்லி ஏதோ பெரிய மனசு பண்ணி 50 ரூபாய் மட்டும் போதும்ன்னு சொல்லிடாரு. password எல்லாம் நமக்கு மட்டுமே தெரிஞ்சு இருக்கணும் கூட தெரியல அப்போ . இதுதான் எனது முதல் முதல் ஈமெயில் உருவான வரலாறு ...... [ இப்போ அந்த ஈமெயில் id நினைவு இல்ல :-( ...... ]
இன்னும் இன்டர்நெட் அனுபவங்கள் தொடரும் ............
அன்புடன்,
ராக்ஸ் ....
For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Related Posts Plugin for WordPress, Blogger...

My Promoters