Followers

Tuesday, October 18, 2011 48 comments


            சரியா இன்று ( 18-Oct-2011)  பதிவுலகில் வெற்றிகரமாக ( !! ??? )இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து  வைக்கிறேன் .  போன வருடம் இதே நாள்  ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்தது இன்றோடு ஒரு வருடம் முடிந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் அப்படி ஒன்றும் பெரிசா எழுதி சாதிக்கவில்லை என்றுதான் நினைக்கிறன் . ஆனால் நான் என்னுடைய முதல் பதிவில் சொன்னது போல யாருடைய மனதையும் புண்ப்படுத்தாமல் இதுவரை எழுதி வந்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன் , இனிமேலும் அப்படியே. என்னை அறியாமல் அப்படி யாரையேனும் புண்படுத்தி இருந்தால் கனிவாக மன்னித்து விடுங்கள். என்னை இது வரை ஆதரிதவர்களுக்கும் , அங்கிகரித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

               இந்த இனிமையான தருணத்தில் , என்னை முதல் முதலாய் என்னை அங்கிகரித்தவர்களைம் , ஆதரித்தவர்களையும்  நினைவு கூறவும் , நன்றி சொல்லவும் கடமைப்பட்டு இருக்கிறேன் . ஏனென்றால் எப்பவுமே முதலில் கிடைப்பதற்கு ஒரு தனி சிறப்பு உண்டு , முதல் காதல் , மழலையின் முதல்  பேச்சு , முதல் முத்தம் போன்று .

1) என்னையும் ஒரு ஆளாய்  மதித்து இவனும் ஏதாவது எழுதுவான், எதுக்கும் follow பண்ணுவோம் என்று join செய்த முதல் follower நண்பர்  சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கு நன்றி .

2) மிக பிரபல பதிவர் ஆனாலும் எந்த வித தாக்கமும் இல்லாமல் , அக்கறையுடன் எனது முதல் பதிவுக்கு மதிப்பளித்து பின்னூட்டம் இட்டு வாழ்த்திய நல்ல உள்ளங்கள்   பனித்துளி சங்கர் அவர்களுக்கும் , தமிழ்த்தோட்டம் அவர்களுக்கும் நன்றிகள் .

3) நான் பதிவு எழுத ஆரம்பித்த இரண்டாவது மாதத்திலையே அட இவனும் என்னமோ எழுதுறான் எல்லாரும் கொஞ்சம் வந்து பாருங்க என்று என்னை முதல் முதலில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அருமை நண்பர் அருண் பிரசாத் அவர்களுக்கு நன்றி

4) நான் புதிய பதிவர் ஆனாலும் என் மேல் நம்பிக்கை வைத்து என்னையும் முதல் தொடர்ப்பதிவு ❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅
எழுத அழைத்த நண்பர் Philosophy பிரபாகரன்  க்கு நன்றி


           அது  மட்டும் அல்லாது என்னை இரண்டாவது முறை வலைச்சரத்தில் ஆறுமுகப்படுத்தி,  பெருமைப்படுத்திய லக்ஷ்மி அம்மா அவர்களுக்கும் எனது நன்றிகள் .
இந்த ஒரு வருடத்தில் மொத்தமே 33 பதிவுகள்தான் எழுதி இருக்கிறேன் . இது ஒரு பிரபல பதிவர் ஒரு மாதத்தில் எழுத்தும் எண்ணிக்கை. என்னவோ என்னால் அவ்வுளவுதான் எழுத முடிந்தது . என்னை பொருத்தவரை எண்ணிக்கையை விட நல்ல தரமான பதிவுகளை இடுவதுலையே உடன்பாடு. ஒவ்வொரு பதிவு எழுத்தும் போதும் கண்டிப்பாக இந்த பதிவு கண்டிப்பாக சிரிக்க வைக்க வேண்டும் அல்லது சிந்திக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பேன் . இந்த வருடத்தில் ஏதோ கொஞ்சம் சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு பதிவுகளை எழுதி இருக்கிறேன் . நண்பர்களை நிறைய சிரிக்கவும் வைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன் . 

             நான் எழுதிய பதிவுகளிலையே குளிக்கும் போது சோப்பு நழுவாம குளிப்பது எப்படி ?  என்கிற பதிவுதான் இதுவரை அதிக அளவில் பெரும்பாலானவர்களால் படித்து வயுறு வலிக்க சிரிக்க வைத்த பதிவு . செம ஹிட் . நானே எதிர் பார்க்கவில்லை. இந்த பதிவு என் இவ்வளவு ஹிட் ஆகியது என்று நான் யோசித்து பார்த்த போது எனக்கு காரணம் கிடைத்தது அது ஒண்ணும் இல்லைங்க நான் பதிவு எழுத சரியான கருவும் யோசனைகளும் எங்கு கிடைக்கும் என்று கேட்டால் சிரிப்பீர்கள் . நிஜமாவே நான் தினமும் ஷவரில் குளிக்கும் போது தான் பதிவுக்கான யோசனையும் , கருவும் கிடைக்கிறது . ஹி ஹி . .

              இதே போல் நல்ல தரமான சிரிக்கவும் , சிந்திக்கவும் வைக்கும் பதிவுகளை தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். அதற்க்கு நண்பர்களாகிய உங்களின் ஆதரவும் , உக்கமும் கண்டிப்பாக தேவை. கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் . நன்றி நன்றி நன்றி

இந்த பதிவை என்னை அங்கிகரித்த , ஆதரிக்கும் நல்ல உள்ளங்களுக்கு சமர்பிக்கிறேன் .

மனமார்ந்த நன்றிகளுடன் ,

ராக்ஸ்

12 comments

நண்பர்களுக்காக . . .


Good Bye தமிழ்மணம் . . .





மச்சி ஓபன் தி பாட்டில்!!!!!!! . . . .




ராக்ஸ் . . .


Thursday, October 13, 2011 17 comments


                   படம் முடிய ராத்திரி 9:30 மணி ஆகிடுச்சு . தியேட்டரை விட்டு வெளிய வந்த நாங்க நாலு பேரும் இங்கயே எங்கையாவது சாப்பிட்டு போய்டுறது முடிவு பண்ணினோம் ஏன்னென்றால் இனிமே ஹாஸ்டல் மெஸ்க்கு போனா ஒன்னும் கிடைக்காது தெரியும். சரி எங்கே சாப்பிடுறதுன்னு டிஸ்கசன் வந்த போது ஒரு குறிப்பிட்ட புரோட்டா கடைல புரோட்டா சாப்பிடலாம்ன்னு இருந்த நாலு பேருல ரெண்டு பேரு அவுங்கலாவே ஏக மனதா முடிவு பண்ணி கூட்டிட்டு போய்ட்டானுங்க. புரோட்டா கடைக்கு போனதுக்கு அப்புறம்தான் எனக்கு தெரிஞ்சது அது சுத்தம், சுகாதாரத்துல ISO 9001 , ISI  சர்டிபிகேட் எல்லாம் வாங்கின கடைன்னு. கடையை பார்த்த உடனே எனக்கு லைட்டா கண்ணா கட்டுச்சு , அதுலயும் அங்க புரோட்டா மாஸ்டரையும் , சப்ளையரையும் பார்த்த உடனே இருந்த கொஞ்சம் நஞ்சம நம்பிக்கையும் அடியோட குழி தோண்டி புதைக்க வேண்டியதா போச்சு. டேய் மாமு இந்த கடைலதான் புரோட்டா சாப்பிடனுமா? வேற கடைக்கு போலாம்டா அப்படின்னு சொன்னதுக்கு , அதெல்லாம் முடியாது இதே கடைலதான் புரோட்டா சாப்பிடணும் என்னோட பிரிண்ட்ஸ் ரெண்டு பேரும் ரெண்டு கால்ல நிக்குரானுங்க ( ரெண்டு பேரும் ஒத்த கால்ல நிக்குரானுங்க, ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு கால், மொத்தம் ரெண்டு கால்). டேய் மாப்ளே இந்த கடை கொஞ்சம் நல்ல இல்லடா அப்படின்னதுக்கு , ஏன்டா நீயெல்லாம் 5 ஸ்டார் ஹோட்டலதான் சாப்பிடுவியோ அப்படின்னு சோஷலிசம் பேச ஆரம்பிசுடானுங்க. இதுல கூட இருந்த இன்னொரு நண்பன் வேற " மச்சான் இந்த ஹோட்டல் புரோட்டா சாப்பிட்டா  லிவர்க்கு நல்லதுடா" அப்படினான் . "போச்சுடா இது வேறையா ?" அப்புறம்?  அப்படினேன் , " டேய் மாமு அது மட்டும் இல்லடா இந்த ஹோட்டல் புரோட்டவுக்கு தனி டேஸ்ட் இருக்குடா" அப்படினான் . அப்படி என்னடா தனி டேஸ்ட்டுன்னு கேட்டதுக்கு "இந்த கடை புரோட்டா மாஸ்டர் சும்மா சாதாரணமா புரோட்டா பிசைய மாட்டருடா , சும்மா புரோட்டா மாவை வேர்வை சிந்தி பிசைவாறு பாரு,  அப்படி ஒரு டேஸ்ட் , அப்படி ஒரு Soft  . வாய்ல போட்ட உடனே கரைந்திடும் " அப்படினான் . அப்பவே எனக்கு குமட்டிகிட்டு வந்துடுச்சு. இருந்தாலும் இனிமே சொன்ன இவனுங்க கேக்கவா போறானுங்க ? விதி விட்ட வழி அப்படின்னு உள்ள போயாச்சு.
                மதியமே ஹாஸ்டல இருந்து கிளம்பியாதாலும் , சாயங்காலம் எதுவும் சாப்பிடாதளையும் பயங்கர பசி. வேற என்ன பண்ண? அந்த கடை ISI புரோட்டாவையே ரெண்டுக்கு , நாலா சாப்பிட வேண்டியதா போச்சு. சாப்பிட்டு எல்லாம் முடிச்சுட்டு பைக் எடுத்துகிட்டு ஹாஸ்டல் வந்து சேர ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு . புரோட்டா சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆனதால புரோட்டா தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுச்சு. என்னடா அதான் ஏற்கனவே புரோட்டா மாஸ்டர் புரோட்டாவை வேர்வை சிந்தி பிசைஞ்சுடானே அப்புறம் எதுக்கு வயுறு தனிய பிசையுதுன்னு யோசிச்சுகிட்டே ரூம்ல படுத்து தூங்கியாச்சு.
                     மறுநாள் காலைல எழுந்துரிச்சா சும்மா வயுறு கடமுட கடமுடன்னு கலக்குது. உடனே அடிச்சு புடிச்சு பக்கெட்டை எடுத்துகிட்டு டாய்லெட்டுக்கு ஓடினா , எனக்கு முன்னாடி என் நண்பன் ஓடிகிட்டு இருக்கான், டேய் எங்கேடா ஓடுற அப்படின்னு பின்னாடியே நானும் ஓடி அவன் பக்கத்து டாய்லெட்க்குள்ள புகுந்தா , கொஞ்ச நேரத்துல பக்கத்து டாய்லெட்க்கு உள்ள இருந்து ஒரு சத்தம் , " மச்சான் டேய் பிரேக் புடிக்கலடா !!!!!!!!. . . பேதி ஆகுதுடா "  அப்படின்னு.  "டேய் ஆமாடா மாமு இங்கயும் பிரேக் புடிக்கலடா"  - இது நான். நாங்க ரெண்டு பேரும் பேசுறத கேட்ட பக்கத்துல டாய்லெட்டுல இருந்த இன்னொருத்தன் "டேய் இது என்ன கிரிக்கெட் மேட்ச்சாடா ? ரன்னிங் கமெண்ட்ரி குடுக்குரிங்கா ? பேசாம இருங்கடா " அப்படினான். அதுக்கு என்ன நண்பன் "ஆமா உனக்கு நார்மல் டெலிவரிகிற தலகனத்துல பேசாதடா , மவனே நீயும் நேத்து எங்க கூட ISO 9001 புரோட்டா சாப்பிட்டு இருக்குன்னும்டீ அப்போ தெரிஞ்சு இருக்கும் " அப்படினான். இப்படி ஒரு முறை ரெண்டு முறை அல்ல நாலு அஞ்சு முறை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி , சில முறை ஒன்னாவே கூட பாக்கெட்டை தூக்கிட்டு ஓட வேண்டியதா போச்சு. அப்புறம் எங்க ஓட? நடக்க கூட முடியாம ரெண்டு பேரும் " பப்பறப்பேன்னு "ரூம்க்குள்ள மல்லாக்க படுத்து கிடக்க , இவ்வளவு சீரியஸ் கலாட்ட நடந்துகிட்டு இருக்கு அப்பத்தான் ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு சாவகாசமா மத்த ரெண்டு பேரும் அதான் முதல்நாள் ராத்திரி இதே புரோட்டா கடைலதான் புரோட்டா சாப்பிடுனும்ன்னு ஒத்த காலுல நின்னு எங்களை பாழுங்கிணற்றில் தள்ளின படுபாவிங்க வந்தானுங்க. " என்னடா மாப்ளே என்ன ஆச்சு "  அப்படின்னு அக்கறைய விசாரிச்சானுங்க, " என்ன நோன்னுங்கடா? நான் அப்பவே சொன்னேன் இல்ல அந்த ஹோட்டல் வேண்டாம்டான்னு , இப்ப பாரு எங்க ரெண்டு போரையும் , பெருகுடல் , சிறுகுடல் , கல்லீரல் , கணையம் வரைக்கும் வெளிய வந்துடுச்சு பேதி ஆகி " அப்படினேன் கடுப்பாகி . நான் கடுப்புல இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டு அவனுங்க இன்னொருதன்கிட்ட போய் " என்ன மச்சான் அவ்வுளவு மோசமாவா பேதி ஆகுது? " ன்னு கேக்க . " போங்கடா டேய் போங்க, டாய்லெட்டுல எனக்கு பேதி ஆகுற ஸ்பீடுல" PSLV" ராக்கெட் மாதிரி நான் நாலு அடி மேல போறேனா பாத்துகோங்க அந்த அளவுக்கு மோசமா போகுதுடா டேய்"  அப்படினான் பாருங்க , அவ்வுளவு வேதனையுளையும் எனக்கு சிரிப்பு முட்டிக்கிட்டு வந்துடுச்சு ஹி ஹி ஹி . . .

          ஆனா அவனுங்க என்ன சொன்னனுங்க தெரியுமா? , " மச்சான் கண்டிப்பா இந்த பேதி நேத்து ராத்திரி சாப்பிட புரோட்டாவால இருக்காதுடா , நேத்து பார்த்த படத்தாலதான்னு  இருக்கும்டான்னு அடிச்சு சொன்னனுங்க, என்னென்றால் நாங்க பார்த்த படம்  ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் T. ராஜேந்தரின் , மோனிஷா என் மொனோலிச" , அப்படின்னு சீரியஸ் டிஸ்கஸ்சன்னு வேற. "என்ன கொடுமை சார் இதெல்லாம்? ". .

            ஆனா இதை எல்லாம் கேட்ட அவங்க ரெண்டு பேரும் சும்மா இல்ல , " Don't Worry மச்சி . . இதுக்கு எங்க கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு கவலை படாதிங்கடா, நான் சொல்லுற மாதிரி செய்யுங்க பேதி டக்குன்னு நின்னுடும்" ன்னு சொல்லிட்டு . "டேய் ஏதாவது சிவப்பு துணி இருக்காடா?" அப்படின்னு கேட்டான் . " அங்க பாருடா ஒரு பழைய சிவப்பு துண்டு இருக்கும்" ன்னு சொன்னேன். உடனே ஓடி போய் அதை எடுத்து ரெண்டா கிழிச்சு என் கைல ஒண்ணும் , என் பிரெண்ட் கைல ஒண்ணும் குடுத்தான்.  "இதை வச்சுக்கிட்டு என்னடா பண்ணுறது" அப்படின்னு நாங்க ரெண்டு பேரும் கேட்டோம் . "மச்சான் நெக்ஸ்ட் டைம்  டாய்லெட்க்கு இந்த சிவப்பு துணிய எடுத்துட்டு போங்க ,  பேதி ஆகும் போது கரெக்டா இந்த சிவப்பு துணிய ஆட்டி காட்டுங்கடா உடனே பேதி டக்குன்னு நின்னுடும்"  அப்படினான். நாங்க ரெண்டு பேரும் நிஜமாவே குழம்பி போயிட்டோம். " டேய் என்னாடா சொல்லுற? ஒண்ணுமே புரியல?????? "அப்படின்னு கேட்டதுக்கு அவுனுங்க ரெண்டு பேரும் சொல்லுரான்னுங்க " டேய் மாப்ளே என்னடா இது கூடவா புரியல உங்களுக்கு ? , ரொம்ப சிம்பிள்டா , சிவப்பு கொடிய காட்டின அவ்வளவு நீள ட்ரெயின்யே நிக்குது!!! , இந்த சுண்டக்கா பேதி நிக்காதா ????? ஹி ஹி ஹி ஹி . . " அப்படின்னுனானுங்க


        உடனே எனக்கு வந்தது பாருங்க கோவம், மறுபடியும் பேதியோட சேர்த்து  , அதுக்கு மேல அவனுங்க கிட்ட ஒரு வார்த்தை , ஒரு வார்த்தை பேசலையே நான் , பாக்கெட்டை எடுத்துகிட்டு கோவமா கிளம்பிட்டேன் அடுத்த ரவுண்டுக்கு . . . .


அன்புடன் ,
ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Thursday, October 6, 2011 24 comments

இதுவும் போன பதிவு ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2).  வின் தொடர் பதிவுதான் . 
           இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி பின்னாடி கூட மறைத்து வைக்கப்படுகிறது  ஏனென்றால் அந்த இடம் தான் யாருக்கும் அவ்வுளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் முன்பு சொன்னது போல பெரிய ஷொப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளின் பின்னால் வைக்க சாத்தியங்கள் அதிகம் . அதனால் பெண்கள் இனிமே கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை நிர்வாணம் ஆகாமல் தவிர்க்கவும். 
          இது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில்  கூட பார்த்து இருக்கலாம் . "பில்லா 2007" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும் பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீஸ்சார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும் ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்து கொண்டும், பதிவு செய்தது கொண்டும் இருக்கும். இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக நிர்வாணமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்தது ரசித்து கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்தது கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை. 
         இந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting அப்படியென்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை. 
சரி இந்த வகை தில்லாலங்கடி கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது? 

 Reflecting Glass -சை  கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :


1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுண்ணிப்பாக கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால்  இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது. 
அதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கை பையில் எப்பவும் ஒரு சிறிய முகம் பார்க்கும் வைத்து கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் , உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.  

2. உங்கள் கைப்பையில் எப்பவும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தல் அதில் ஒளி ஊடுருவுகிறதா என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது  முகம் பார்க்கும் கண்ணாடி. 

3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப சிம்பிள்  உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்டு நீங்கள் சந்தேகம்ப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால்  கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியை குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடிகள் பொருத்தி இருப்போம் இல்லையா அதில் நாம் சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா கார்க்குள் என்ன இருக்கிறதென்று அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.

       சரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றி . ஆனால் இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல. 

    சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி  அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம்  எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக  வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை . 
          ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின்  நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது ? 
மேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம்  புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன். 

           எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று  தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சரி இதை எப்படி தவிர்க்கிறது? 

டிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் :

1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.  

3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.




                                                       உங்க WEBCAM ஜாக்கிரதை . . .


          சரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டர்லியோ அல்லது லேப்டாப்லியோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லமால் யாரேனும் ஆன் செய்தது உங்களை பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்யில்  இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும். அதற்க்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு இணைக்க வில்லை ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்க்கு என்ன சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . அப்புறம்  தெரியாத ஒரு தப்பான விஷியத்தை நானே சொல்லி குடுத்தார் போல் ஆகிவிடும். அதனால் விஷியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .

இதில் இருந்து தப்பிக்க : 

1. நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்திருப்பார்களானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் . 
 
2. நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்ஸ்சை மூடி வைக்கலாம் இல்லையா? ஆமா லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கராய்அல்லது ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது .



டிஸ்கி : 
இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.

      இந்த பதிவுகள் அனைத்தும் விழிப்புணர்வுகளுக்காக மட்டுமே எழுதப்பட்டது  அதனால் தயவு செய்தது இதில் உள்ள நல்ல விஷியங்களை மட்டும் எடுத்து கொள்ளவும் . தேவை இல்லாத விஷியங்களை தவிர்த்து விடவும் . ஆகவே இதை படித்த அனைவரும் கவனமாகவும் , ஜாக்கிதையாகவும் நிம்மதியாகவும் வாழ்வோமாக என்று வாழ்த்தி ...



அன்புடன் ,
ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com





Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters