என்னை தொடர் பதிவுக்கு அழைத்த philosophy பிரபாகரன்னுக்கு நன்றிகளுடன் . . . .
இந்த படத்தா பத்தி நெறைய பேருக்கு தெரியாது . பேசாமலே எடுக்கப்பட்ட பேசும் படம் . ஆமா இந்த படத்துல ஒரு வசனம் கூட கிடையாது , படம் முழுவதும் எல்லாரும் முக பாவனைகளாளையே பட்டைய கிளப்புவாங்க . நிறைய காட்சிகள் காமெடி கலாட்டாக்கள் & நடிப்பிளையும் பின்னி எடுப்பாங்க . ஆன என்ன புரிஞ்சுக்கதான் கொஞ்சம் அறிவு வேண்டும் . இந்த படம் 1988 ல் கன்னடத்தில் புஷ்பக் என்ற பெயரில் எடுத்த படம் பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டது . ஒரு வசனம் கூட பேசாத படத்தா என்ன மொழில எடுத்த என்ன ? அப்படி டப் செய்ய என்ன இருந்ததுன்னு தெரியல . படத்தோட பெயர மாற்றியத சொல்லுறாங்களோ என்னவோ . என்னோட கமல் பட வரிசையில் இது ஒரு மறக்க முடியாத படம் . கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய படம் ( தமிழில் தான் பார்ப்பேன்னு அடம் புடிக்காம , எந்த மொழில வேன்னும்னாலும் பாருங்க கண்டிப்பா புரியும் ஹி ஹி ஹி .. )
இயக்கம் : சங்கீதம் சீனிவாசராவ் .
எனக்கு புடிச்ச காட்சி (எ.பி.கா ) : கமல் ஸ்டார் ஹோட்டல்ல தாங்கும் போது , வழக்கமான ட்ரெயின் சத்தம் இல்லாம தூக்கம் வராம அவரோட வீட்டுக்கு போய் ட்ரெயின் சத்தத ரெகார்ட் செய்துட்டு வந்து அத போட்டு கேட்டுகிட்டே தூங்குறது , செம காமெடி .
கமலுக்கு தேசிய விருதை வாங்கி குடுத்த படம் . பாலு மகேந்திராவின் எதார்த்தமான படம் . கமலும் , ஸ்ரீதேவியும் போட்டி போட்டுகிட்டு நடிச்சு இருப்பாங்க. இளையராஜாவின் இதமான தாலாட்டில் இசை . படம் முழுவதும் தன்னோட அமைதியான நடிப்பாலும் , படத்தின் கடைசி காட்சிகளில் தன்னோட் உச்ச கட்ட நடிப்பையும் குடுத்து தேசிய விருதை தட்டிக்கிட்டு போய் இருப்பார் கமல் .
இயக்கம் : பாலு மகேந்திரா
எ.பி.கா : ஸ்ரீதேவி ஆபீஸ் பைல் ல தவறுதலா ink கொட்டுனதுக்கு , கமல் கோபப்படுவதும் , கிளைமாக்ஸ் கட்சியும் . .
சும்மாவே ஆடுவாரு கமல் . இதுல கால்ல சலங்கையா வேற கட்டிட்டா சொல்லாவா வேண்டும்? சும்மா ருட்ருத்தாண்டவமே ஆடி இருப்பாரு .நெறைய பேருக்கு தெரியாத விஷயம் இது தமிழ் படம் இல்ல , தெலுங்கு படம் . தமிழில் டப் பண்ணினாங்க . ஆனா பாக்குறதுக்கு தமிழ் படம் மாதிரியே இருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் தெரியாது. கமலுக்கு பாரத நாட்டியமும் முறையா தெரியும்கிறதா நிருபிச்சா படம் .
இயக்கம் : கே. விஸ்வநாத்
எ.பி.கா : ஜெயப்ரதா நாட்டிய விழாவுக்கான அழைப்பிதழை கமல் கிட்ட குடுத்து பார்க்க சொல்லுறது , அந்த அழைப்பிதழில் கமலோட பெயரை பார்த்து ஆச்சிரியபடுவது.
கமல் அசுர ரூபம் எடுத்து மிரட்டிய படம் . இரட்டை வேடம் கமலுக்கு . மனநிலை பாதிக்க பட்டவரா கமல் கதாபாத்திரம் மிரட்சியை ஏற்படுத்தும் . அவர் பேசும் வசனங்கள் சூப்பர் . கொடூர கொலை செய்யுற காட்சிய மென்மை ஆக்குவதற்காக அதை கிராபிக்ஸ் மூலம் கார்ட்டூன் ஆகா காட்டி வன்முறைய குறைச்சு இருப்பாரு . உண்மையில் வித்தியாசமான படம் . மீண்டும் ஒரு தேசிய விருது .
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா
எ.பி.கா : இரண்டு கமலும் ஜெயிலில் சந்திக்கும் காட்சி
இதமாய் கிராமத்தில் ஆரம்பிக்கும் கதை , ஒரு அப்பாவி எப்படியெல்லாம் ஏமாற்றபடுகிறான், அவன் வாழ்கையில் எப்படி எல்லாம் புயல் வீசுகிறது என்பதை நெஞ்சை உலுக்க கட்சிகளை விரியும் கதை . கமலின் நடிப்பு பிரமாதம் . ஒரு தந்தையின் உச்சகட்ட வேதனையை அப்படியே நமக்கு உணர வைப்பார் கமல் . படம் முடியும் போது கண்டிப்பாக நம் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கும் .
இயக்கம் : சந்தானபாரதி
எ.பி.கா : கமலின் மகளை மீட்டுவந்து பிறகு மகள் இரவில் உறக்கத்தில் உளறுவதை கேட்டு ஒரு தந்தையாக கமல் அழும் காட்சி கண்டிப்பாக மனசை ஏதோ செய்யும் .
பிரமாண்டத்தின் பிரமாண்டம் , இந்த படத்தோட trailer காகவே நான் பல நாள் காத்து இருந்தேன் . காரணம் கமலே ஒரு பிரமாண்டம் இதில் ஷங்கர் , A . R ரஹ்மான் எல்லாம் சேர்ந்தா சொல்லவா வேண்டும்? இதிலும் கமலுக்கு இரட்டை வேடம் , அந்த வயசான கமல் கதாபாத்திரத பற்றி சொல்லியே ஆகா வேண்டும் . முதல் முதலா அந்த வயசான கதாபாத்திரத்துக்கு மேக் அப்க்கு வெளிநாட்டு மேக் அப் மேன் வச்சு போட்டு கமல் வீட்டுக்கு போனப்போ கமல் குடுபத்தாளையே கண்டு புடிக்க முடியலன்னு ஒரு சுவாரசியமான செய்தி உண்டு .ஒவ்வொரு நாளும் மேக் அப்புகாகவே பல மணி நேரம் செலவிட்டார்கள் .இந்த படத்தா பற்றி சொல்லனும்ன நெறைய சொல்லலாம் . பாடல்கள் , கிராபிக்ஸ் , நடிப்புன்னு கமல் ரவுண்டு கட்டி அடிச்சா மெகா ஹிட் திரைபடம் .
இயக்கம் : ஷங்கர்
எ.பி.கா : வயசான கமல் வரும் எல்லா காட்சிகளும் எனக்கு பிடிக்கும் . இளமையான கமல் அடிக்கும் கூத்துக்களும் சுவாரசியம் .
நமக்கு புரியாத ஒரு உணர்வை நமக்கு உணர்த்தி இருப்பார் கமல் . இதுலயும் கொஞ்சம் மனநிலை பாதிக்கபட்ட கதாபாத்திரம் , பரிசுத்தமான அன்புக்கு எங்கும் கதாபாத்திரம் . இளையராஜாவும் , கேமரா மேனும் நம்மை கட்டி போடுவாங்க படம் பார்க்கும் போது . அந்த கண்மணி அன்போட காதலன் பாடல் இன்றைக்கு கேட்டாலும் சலிக்காத வித்தியாசமான பாடல் . அந்த குகை கட்சிகள் எடுப்பதிற்காக இதுவரை யாரும் போகாத மலை பகுதிக்கு எல்லாம் போய் எடுத்ததாக கூற படிக்கிறது . கமல் மீண்டும் தன்னை நிருபித்த நெஞ்சை தொடும் ஒரு படம் .
இயக்கம் : சந்தான பாரதி
எ.பி.கா : கமல் அவரோட தேவதை அபிராமியோடு இருக்கும் அதனை கட்சிகளும் மனதை கொள்ளை கொள்ளும் கவிதை .
நான் சின்ன பையன இருக்கும் போது இத்தனை fantasy யா ஒரு படம் பார்த்தது இல்லை . இந்த படத்தில் வரும் அத்தனை கட்சிகளும் எனக்கு அத்துபடி .என்னை பலமுறை பார்க்க வைத்த படம் . கமல் இதில் மூன்று விதியாசமான வேல்டம் .இன்னம் ஆச்சிரியமாய் இருக்கும் விஷயம்" கமல் எப்படி சார் குள்ளமானார் ? " அப்போது அதனை கிராபிக்ஸ் கூட இல்லாத கால கட்டம் . மிகவும் திறமையாக எல்லா காட்சிகளும் எடுத்து இருப்பார்கள் . பாடல்கள் செம ஹிட் , அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடல் இன்னைக்கு கேட்டாலும் என்னை ஆட வைக்கும் . மனோரம்மாவும் . ஜனகராஜ் , கமல் கூட்டணி அடிக்கும் லூட்டி இன்னைக்கு பார்த்தாலும் சிரிக்க வைக்கும் . காதல் , காமெடி , சோகம் , சண்டைன்னு சும்மா கலந்து கட்டி அடிச்சு இருப்பாரு கமல் . இளையராஜவ சொல்லவே வேண்டாம் அவரும் கைகோர்த்து நம்பள ஒரு வழி ஆக்கிய படம்.
ஆச்சரியம் : சுவாரசியமான ஆச்சரியம் . இந்த விஷயம் நெறைய பேருக்கு தெரியாது . கமலின் குள்ளமான கதாபாத்திரத்துக்கு அவர் எத்தனை மெனக்கெட்டு இருப்பாரு என்று . கமல் என்னதான் காலை குள்ளம் ஆக்கினல்லும் உடம்பையும் குள்ளமாக காட்டுவதற்கு குள்ளமான கை வைச்ச கோட் , உடைகளை அணிந்து இருப்பார் பார்பதற்கு குள்ளம தெரியும் . குள்ளம இருபவர்களுக்கு கண்டிப்பா பல்லும் சின்னதா இருக்கும் அதனால் , குள்ள கமல் அவரோட பல்லையும் சின்னதா ஆக்கி இருப்பார் சிரிக்கும் போது கவனித்து பாருங்கள் தெரியும் , இது கமலின் மேக் அப் ரகசிகளில் இருந்து .அதுதான் கமல் . இத்தனை உழைப்பா ? கண்டிப்பாக ஆச்சரியம் .
இயக்கம் : சங்கீதம் சீனிவாசராவ்
எ.பி.கா : வேற என்னத்த சொல்ல? குள்ள கமல் ரூபிணிய கல்யாணம் பண்ணிக்க போறோம்ன்னு நினைச்சு ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு போய் ஏமாறும் அந்த காட்சி எத்தனை முறை பார்த்தாலும் கண்கள் குளமாக்கும்
இந்த படத்த பற்றி என்னனு சொல்ல ? ஒவ்வொரு காட்சியும் அத்தனை அர்த்தங்கள் கொண்டது . மாதவன் வாங்கும் ஒவ்வொரு பதில் அடியும் ஒவ்வொரு பாடம் . மனுஷன் இப்படி எப்படி எல்லாம் யோசிக்க முடியுமா? . மனிதனுக்குள் இத்தனை உண்டா ? கமல் வாழ்ந்து இருப்பார். விபத்துக்கு முன் அந்த வீரமான நடிப்பும் , விபத்துக்கு பின் அந்த சோகமான நடிப்பும் , வசனங்களில் அந்தனை கூர்மை . நெறைய பேருக்கு இது ஒரு நல்ல படம்ன்னு புரியரதுக்கே ரொம்ப நாள் ஆச்சு . என்னை யோசிக்க வைத்த படம் . கமல் படம்
ஆச்சரியம் : அந்த விபத்து நடந்த அப்புறம் கமல் உடம்பில் நெறைய பாதிப்பு . ஒரு கால் குட்டை ஆகிடும் .கண்களின் திறனும் குறைந்து போவதால் கண் கண்ணாடி அணிந்து இருப்பார் . அது மிகவும் அதிக power உள்ள சோடா புட்டி கண்ணாடி . சாதரணம கொஞ்சம் பவர் இருக்க கண்ணாடிய போட்டாலே நமக்கு எல்லாம் தலைவலிக்கும் , சரியா பார்க்க முடியாது . ஆனா கமல் எப்படி அவ்வுளவு பவர் உள்ள கண்ணாடிய போட்டுகிறு அந்தனை கட்சிகள் நடிச்சு இருப்பாரு ?
விடை : எத்தனை பவர் உள்ள கண்ணாடிய போட்டு இருக்காரோ , அத்தனை பவர் குறைவா இருக்க காண்டக்ட் லென்ஸ் அணிந்து நடிச்சு இருப்பார் . அதாவது உதரணத்துக்கு அந்த கண்ணாடி பவர் +4 என்றால் , -4 பவர் உள்ள காண்டக்ட் லென்ஸ் போட்டுகிட்ட அப்போ பவர் சமம் ஆகும் , அதனால கண்களால் சாதரணம பார்ப்பது போல் பார்க்கலாம் . இது கமல் செய்த புத்திசாலித்தனம் . HATS OFF கமல்ஜி .
இயக்கம் : சுந்தர் . சி
எ.பி.கா : கமலின் கூர்மையான வாசனைகள் பேசும் அத்தனை காட்சிகளும் , கிளைமாக்ஸ் காட்சியும்
கமல், மணிரத்னம் , இளையராஜா , P .C ஸ்ரீராம் இதுக்கு மேல என்ன சொல்ல? பொதுவா மணிரத்னத்துக்கு வசனங்களில் நம்பிக்கை இல்லாதவர் , தொனதொனணு வசனம் பேசுவதால் காட்சியை விவரிக்க முடியாது , காட்சி அமைப்பு , எதார்த்தமான நடிப்பினாளையே கதையை சொல்ல முடியும் , மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று சொல்பவர் மணி . இது போதாத ? கமலுக்கு? அமைதியான நடிப்பு , ஆவேசம் , உடல் மொழி , கண்களால் ஆயிரம் அர்த்தங்கள் அப்படின்னு சும்மா புகுந்து விளையாடி இருப்பாரு கமல் . கூட கச்சேரிக்கு இளையராஜா வேற . படம் ஆரம்பிச்சு முடியுரவரைக்கு இந்த ஜாம்பாவான்கள் நம்மை அந்த கதைக்குளையே கட்டி போட்டு இருப்பார்கள் . சின்ன வயசில் ஒரு நல்ல படம் வந்து இருக்கு அதை கண்டிப்பா நாம்ப பார்க்கணும் ன்னு சொல்லி என்னையும் , அம்மாவையும் தியேட்டர்க்கு கூட்டிட்டு போய் காட்டினர் என்ன அப்பா , பசுமையான நினைவுகள் . ஆஸ்கார் தன்னை அலங்கரித்து கொள்ள தவறிய படம். ஆஸ்கார்க்கு நேர்ந்த அவமானம் அது , தேசிய விருது வந்து தன்னை பெருமை படுத்தி கொண்டது இந்த படத்துக்கு.
இயக்கம் : மணிரத்னம்
எ.பி.கா : மொத்த படமுமே என்னை கொள்ளைகொண்டதுதான் குறிப்பிட்டு ஒரு காட்சிய சொல்ல முடியாது .
விருதுகள் :
வருட வருடம் விருது தேர்வு செய்யும் முன்பு , " சார் 1st கமலுக்கு ஒரு விருது எடுத்து வைங்க "அப்படின்னு தேர்வு குழு முடிவு செய்யுற அளவுக்கு கமல் விருது வாங்கி இருக்காரு . எல்லா விருதையும் பட்டியல் இட்டால் இந்த பாத்து பத்தாது அதனால் தேசிய விருதுகள் மட்டும் . நன்றி விக்கிபீடியா :
கமல் அவதாரங்கள் :

டிஸ்கி : இதுவரை நீங்கள் பார்த்திறதா கமல்பாடல்
என்ஜாய்
இதன் தொடர் பதிவு எழுத விசா வை அன்புடன் அழைக்கிறேன் ,
http://writervisa.blogspot.com/
![]() |
Its KAMAL HASSAN |
ராக்ஸ் ..........
For fun chat, blog, forum, videos, games, live FM kindly visit our website:
32 comments:
தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி நண்பா...
சூப்பரா எழுதியிருக்கீங்க...
படங்கள் பற்றி மட்டும் சொல்லாமல் விருதுகள், அறிய புகைப்படங்கள், ஓவியம், கேட்காத பாடல்ன்னு தூள் கிளப்பிட்டீங்க... வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் மச்சி... கலக்கி இருக்கிங்க..!!
மிக நல்ல தொகுப்பு! நல்லாயிருக்கு!
அசத்தல் விமர்சனம். அதிக சிரத்தை எடுத்திருப்பது நன்றாகத் தெரிகிறது. உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.
எனக்கு பிடித்தது மகா நதி,
அபூர்வ சகோதரர்கள்,நாயகன்,அன்பே சிவம்
சூப்பர் பதிவுய்யா... நல்ல செலக்சன்ஸ்..... ரொம்ப ஒர்க் பண்ணி போட்டிருங்க்கீங்க, வாழ்த்துக்கள்!
பதிவு போட்டா, ஒரு வார்த்த சொல்லுறது இல்லையா?
கமல் படங்கள்ன உடனே நாயகனத்தான் தேடுனேன், கரெக்டா பர்ஸ்ட் பிளேஸ் கொடுத்துட்டீங்க, இல்லே, கொன்னே போட்டிருப்பேன்!
பேசும் படம் எனக்கு ரொம்பப் புடிக்கும் அதப் பத்தி எழுதுனதுக்கு நன்றி, அத மொதத் தடவ பாத்துட்டு ஒரு வாரத்துக்கு நெனச்சு நெனச்சு சிரிச்சுக்கிட்டு இருந்தேன்!
panni sir welcome
////குணா
எ.பி.கா : கமல் அவரோட தேவதை அபிராமியோடு இருக்கும் அதனை கட்சிகளும் மனதை கொள்ளை கொள்ளும் கவிதை .////
அந்த ஹீரோயினப் பத்தி ஒண்ணும் சொல்லலையா? நெஜமாவே தேவதை மாதிரி இருக்கும்..!
/////♔ℜockzs ℜajesℌ♔™ said...
panni sir welcome////
இவ்வளவு சூப்பரா ஒரு மேட்டரப் போட்டுப்புட்டு ஏன்யா சொல்லல? தொலச்சிபுடுவேன் தொலச்சி!
///@பன்னிக்குட்டி ராம்சாமி said ..
பதிவு போட்டா, ஒரு வார்த்த சொல்லுறது இல்லையா?////
அடிபிச்சு புடுவேன் பிச்சு , பதிவு போட்ட வெற்றிலை பாக்கு வச்சு சொல்லனுமா?
இது நம்ப ப்ளாக் அப்போ அப்போ வந்து போய்கிட்டே இருக்க வேண்டியதுதானே ?
///@பன்னிக்குட்டி ராம்சாமி :
இவ்வளவு சூப்பரா ஒரு மேட்டரப் போட்டுப்புட்டு ஏன்யா சொல்லல? தொலச்சிபுடுவேன் தொலச்சி!////
அவ்வ்வ்வ் இன்னிமே ஒவ்வொரு பதிவுக்கும் பன்னி குட்டி செல்லத்துக்கு ஸ்பெஷல் அழைப்பு கண்டிப்பா . .
///3 .அபூர்வ சகோதரர்கள்
////
இந்தப் படம் அப்போப் பாத்த எபக்ட் இருக்கே.. பாடல்கள், காமெடி, காதல்.. அப்பப்பா.. சான்சே இல்ல!
/////♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@பன்னிக்குட்டி ராம்சாமி :
இவ்வளவு சூப்பரா ஒரு மேட்டரப் போட்டுப்புட்டு ஏன்யா சொல்லல? தொலச்சிபுடுவேன் தொலச்சி!////
அவ்வ்வ்வ் இன்னிமே ஒவ்வொரு பதிவுக்கும் பன்னி குட்டி செல்லத்துக்கு ஸ்பெஷல் அழைப்பு கண்டிப்பா . .////
இது நல்ல புள்ளைக்கு அழகு....!
////3 .அபூர்வ சகோதரர்கள்
இளையராஜவ சொல்லவே வேண்டாம் அவரும் கைகோர்த்து நம்பள ஒரு வழி ஆக்கிய படம். ////
குறிப்பா கிளைமாக்ஸ் சீன்ல, குள்ள கமல் ஒவ்வொன்னா ஒப்படைப்பாரே அப்போ வரும் பிண்ணணி இசை... அற்புதம்.. !
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...
சூப்பர் பதிவுய்யா... நல்ல செலக்சன்ஸ்..... ரொம்ப ஒர்க் பண்ணி போட்டிருங்க்கீங்க, வாழ்த்துக்கள்!///
ஆமா கொஞ்சம் HTML எல்லாம் வொர்க் பண்ணிதான் போட்டு இருக்கேன் , அதை விட கமல் படத்த செலக்ட் பன்னுரதுக்குல்லத்தான் போதும் போதும்ன்னு ஆகிடுச்சு . கமல் மாதிரியே இதுலயும் வித்தியாசத்த காட்டனும்க்குரதுகாக , நெறைய மெனகெட வேண்டி இருந்துச்சு . . . ஆனா நான் சொல்ல வந்ததுல கால் வாசி தான் சொல்லி இருக்கேன் . .
////2. அன்பே சிவம்////
எக்செப்சனல் மூவி!
கமலோட அம்மா எப்பவும் ஒன்னு சொல்லுவாங்களாம் , நீ என்ன வேலை வேன்னும்னாலும் செய் , ஏன் கக்கூசு கூட கழுவு தப்பு இல்ல ஆனா அதுல நீதான் பெஸ்ட்டா இருக்கனும்ன்னு , கக்கூசு கழுவன அவன கூபிடுங்கடா அப்படின்னு சொல்லனும்ன்னு , சொல்லுவாங்களாம் , அதுதான் கமலை ஒவ்வொரு படத்துலயும் இவ்வளவு உழைப்பை கொட்ட வைத்ததாக சொல்லி இருப்பாரு ஒரு பேட்டில . அது மாதிரி நானும் கொஞ்சம் பெஸ்ட்டா குடுக்க முயற்சி செய்து இருக்கேன் . அதுக்கான நேரமும் எடுத்துகிட்டேன் . இனி சொல்ல வேண்டியது நண்பர்கள் ஆகிய நீங்கதான் ............
கமல் இளையராஜா கூட்டணிய என்னனு சொல்லுறது பன்னி சார் . ஐயோ சும்மா மனசா புழிஞ்சு எடுத்துடுவாங்க . . .
////@பன்னிக்குட்டி ராம்சாமி said...
கமல் படங்கள்ன உடனே நாயகனத்தான் தேடுனேன், கரெக்டா பர்ஸ்ட் பிளேஸ் கொடுத்துட்டீங்க, இல்லே, கொன்னே போட்டிருப்பேன்!///
கமல் படம் பெஸ்ட் 10 , 100 எது வச்சாலும் , நாயகன் 1st எடத்த தவிர வேற எங்க சார் உக்காரும்?
தென்பாண்டி சீமையிலே , தேரோடும் வீதியிலே இந்த பாட்டுக்காகவே படாத 100 தடவ பார்க்கலாம் . . .
///@TERROR-PANDIYAN(VAS) said...
வாழ்த்துகள் மச்சி... கலக்கி இருக்கிங்க..!!///
thank you so much machi . . .
thanks for coming .. .
///@எஸ்.கே said...
மிக நல்ல தொகுப்பு! நல்லாயிருக்கு!///
thank you S.K
you are coming regularly to my blog
thank you so much machi . ..
////@ பாரத்... பாரதி... said...
அசத்தல் விமர்சனம். அதிக சிரத்தை எடுத்திருப்பது நன்றாகத் தெரிகிறது. உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள்.///
நன்றி பாரதி . .
நான் எழுதுற எல்ல பதிவுக்கும் நெறைய மென கெட்டுத்தான் எழுதுறேன் . எல்லாத்தையும் பெஸ்ட்டா குடுக்கணும் அப்படின்குரதுதான் என்னோட இந்த உழைப்பு . இனி வரும் பதிவுலையும் இன்னும் நெறைய எதிர் பார்க்கலாம் . .
வாழ்த்துக்கும் வரவுக்கும் மீண்டும் எனது நன்றி . . .
தமிழ்மணத்துல இணைக்கலியா?
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...
தமிழ்மணத்துல இணைக்கலியா?///
ஹி ஹி ஹி எப்படின்னு தெரியல ...........
நல்ல செலக்ஷன்ஸ்...
வாழ்த்துக்கள் ராஜேஷ்!! நல்லதொரு கலெக்சன்!!
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_04.html
நன்றி
////அருண் பிரசாத் said...
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_04.html
நன்றி /////
நன்றி நன்றி நன்றி ......
Thala eppavume rockzs .... :)
Yuresh
Post a Comment