Followers

Thursday, January 26, 2012 9 comments

ஹாய் பசங்களா . . .நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . .
என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே ஒண்ணுதான் நான் எங்கயும் போகல இங்க தான் இருக்கேன் ஆனா கொஞ்சம் பிஸியா இருக்கேன் நிறைய சொந்த விஷியன்களா,  அதனால யாரும் கவலை படவேண்டாம் . வரேன் வரேன் வந்துகிட்டே இருக்கேன் . . 

நான் நிலா மாதிரி , கொஞ்சம் நாள் இல்லனா உடனே நான் வர மாட்டேன் என்று அர்த்தம் இல்ல. புல் ஆ ரீசார்ஜ் பண்ணிட்டு புல் வெளிச்சத்தோட பொவர்ணமி நிலா போல வெளிச்சத்தோட வந்துடுறேன் ஒகே ?

இழப்பதற்கு ஒன்றும் இல்லை , கொடுபதற்க்கு நிறைய இருக்கு அன்பும் பாசமும் . 


சோ எல்லாருக்கும் ஊஊம்ம்ம்மாஅ ...... 


என்றென்றும் பாசத்துடன் , 

ராக்ஸ் . . . Tuesday, October 18, 2011 48 comments


            சரியா இன்று ( 18-Oct-2011)  பதிவுலகில் வெற்றிகரமாக ( !! ??? )இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து  வைக்கிறேன் .  போன வருடம் இதே நாள்  ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்தது இன்றோடு ஒரு வருடம் முடிந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் அப்படி ஒன்றும் பெரிசா எழுதி சாதிக்கவில்லை என்றுதான் நினைக்கிறன் . ஆனால் நான் என்னுடைய முதல் பதிவில் சொன்னது போல யாருடைய மனதையும் புண்ப்படுத்தாமல் இதுவரை எழுதி வந்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன் , இனிமேலும் அப்படியே. என்னை அறியாமல் அப்படி யாரையேனும் புண்படுத்தி இருந்தால் கனிவாக மன்னித்து விடுங்கள். என்னை இது வரை ஆதரிதவர்களுக்கும் , அங்கிகரித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

               இந்த இனிமையான தருணத்தில் , என்னை முதல் முதலாய் என்னை அங்கிகரித்தவர்களைம் , ஆதரித்தவர்களையும்  நினைவு கூறவும் , நன்றி சொல்லவும் கடமைப்பட்டு இருக்கிறேன் . ஏனென்றால் எப்பவுமே முதலில் கிடைப்பதற்கு ஒரு தனி சிறப்பு உண்டு , முதல் காதல் , மழலையின் முதல்  பேச்சு , முதல் முத்தம் போன்று .

1) என்னையும் ஒரு ஆளாய்  மதித்து இவனும் ஏதாவது எழுதுவான், எதுக்கும் follow பண்ணுவோம் என்று join செய்த முதல் follower நண்பர்  சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கு நன்றி .

2) மிக பிரபல பதிவர் ஆனாலும் எந்த வித தாக்கமும் இல்லாமல் , அக்கறையுடன் எனது முதல் பதிவுக்கு மதிப்பளித்து பின்னூட்டம் இட்டு வாழ்த்திய நல்ல உள்ளங்கள்   பனித்துளி சங்கர் அவர்களுக்கும் , தமிழ்த்தோட்டம் அவர்களுக்கும் நன்றிகள் .

3) நான் பதிவு எழுத ஆரம்பித்த இரண்டாவது மாதத்திலையே அட இவனும் என்னமோ எழுதுறான் எல்லாரும் கொஞ்சம் வந்து பாருங்க என்று என்னை முதல் முதலில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அருமை நண்பர் அருண் பிரசாத் அவர்களுக்கு நன்றி

4) நான் புதிய பதிவர் ஆனாலும் என் மேல் நம்பிக்கை வைத்து என்னையும் முதல் தொடர்ப்பதிவு ❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅
எழுத அழைத்த நண்பர் Philosophy பிரபாகரன்  க்கு நன்றி


           அது  மட்டும் அல்லாது என்னை இரண்டாவது முறை வலைச்சரத்தில் ஆறுமுகப்படுத்தி,  பெருமைப்படுத்திய லக்ஷ்மி அம்மா அவர்களுக்கும் எனது நன்றிகள் .
இந்த ஒரு வருடத்தில் மொத்தமே 33 பதிவுகள்தான் எழுதி இருக்கிறேன் . இது ஒரு பிரபல பதிவர் ஒரு மாதத்தில் எழுத்தும் எண்ணிக்கை. என்னவோ என்னால் அவ்வுளவுதான் எழுத முடிந்தது . என்னை பொருத்தவரை எண்ணிக்கையை விட நல்ல தரமான பதிவுகளை இடுவதுலையே உடன்பாடு. ஒவ்வொரு பதிவு எழுத்தும் போதும் கண்டிப்பாக இந்த பதிவு கண்டிப்பாக சிரிக்க வைக்க வேண்டும் அல்லது சிந்திக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பேன் . இந்த வருடத்தில் ஏதோ கொஞ்சம் சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு பதிவுகளை எழுதி இருக்கிறேன் . நண்பர்களை நிறைய சிரிக்கவும் வைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன் . 

             நான் எழுதிய பதிவுகளிலையே குளிக்கும் போது சோப்பு நழுவாம குளிப்பது எப்படி ?  என்கிற பதிவுதான் இதுவரை அதிக அளவில் பெரும்பாலானவர்களால் படித்து வயுறு வலிக்க சிரிக்க வைத்த பதிவு . செம ஹிட் . நானே எதிர் பார்க்கவில்லை. இந்த பதிவு என் இவ்வளவு ஹிட் ஆகியது என்று நான் யோசித்து பார்த்த போது எனக்கு காரணம் கிடைத்தது அது ஒண்ணும் இல்லைங்க நான் பதிவு எழுத சரியான கருவும் யோசனைகளும் எங்கு கிடைக்கும் என்று கேட்டால் சிரிப்பீர்கள் . நிஜமாவே நான் தினமும் ஷவரில் குளிக்கும் போது தான் பதிவுக்கான யோசனையும் , கருவும் கிடைக்கிறது . ஹி ஹி . .

              இதே போல் நல்ல தரமான சிரிக்கவும் , சிந்திக்கவும் வைக்கும் பதிவுகளை தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். அதற்க்கு நண்பர்களாகிய உங்களின் ஆதரவும் , உக்கமும் கண்டிப்பாக தேவை. கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் . நன்றி நன்றி நன்றி

இந்த பதிவை என்னை அங்கிகரித்த , ஆதரிக்கும் நல்ல உள்ளங்களுக்கு சமர்பிக்கிறேன் .

மனமார்ந்த நன்றிகளுடன் ,

ராக்ஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters