Followers

Monday, May 16, 2011தமிழ் வழி கல்வி அவசியமா ? (பாகம் -1) படிக்க இங்கே சொடுக்கவும் 

 Note : இந்த பதிவு நீளமா  இருக்குன்னு படிக்காம போயடாதிங்க . கொஞ்சம் நீளம்தான் தவிர , கண்டிப்பா சுவாரசியம் குறையாம எழுதி இருக்கேன் . இந்த கருத்துகளும் ரொம்ப அவசியம் ஆதலாம் முடிந்தவரை படித்து முடிங்க . . 

     இப்படி என்ன நண்பன் செய்த கலாட்டாக்கள் இல்லாம , என்னுடைய இன்ஜினியரிங் வகுப்பு தோழர்கள் சிலருக்கும் ஆங்கிலம் நிறையவே தடுமாற்றம் . 
             தோழன் ஒருவன் இப்படிதான் வகுப்பில் அடுத்த வரிசையில் இருந்த ஆந்திர மாணவனை பார்த்து “ you call me? “  ,  “you call me? “ அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தான் .அந்த ஆந்திர மாணவனுக்கு ஒண்ணுமே புரியல what? What? அப்படின்னு கேட்டுட்டு விட்டுட்டான். இதை கவனிசுகிட்டு இருந்த   நான்  “என்னடா இப்போ எதுக்கு அவன உன்னை கூப்பிட சொல்லுரேன்னு கேட்டா  , அதுகுக்கு அவன் சொல்லுறான் , “ நான் எங்கட அவன கூப்பிட சொன்னேன்? அவன்தான்  என்னை கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு அதான் அவன்கிட்ட என்னை கூப்பிடியான்னு கேட்டேன்னு “ சொன்னான் .“டேய் அதுக்கு அப்படியாட கேப்பாங்க ? “Did you Call me? “ அப்படின்னு கேக்கணும் ன்னு சொன்னேன் . “ஓ அப்படியா ?“ அப்படினான் .
        இதே மாதிரி  கம்ப்யூட்டர் லேப்ல இருந்து முடிச்சுட்டு போறதுக்கு மேடம் கிட்ட போய் “ Madam  , I Finish , I go Madam “ அப்படின்கிறான் . அதாவது நான் முடிச்சுட்டேன் மேடம் , நான் போகலாமன்னு அனுமதி கேட்க்கதான் அப்படி கேட்டுயிருக்கான் . இத கேட்ட மேடம் என்னடா இவன் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம நான் போறேன்னு சொல்லுரான்னு காண்டாகுது .“ I have Finished madam , Shall I go ? “  அப்படின்னு கூட கேட்க்க தெரியல .

          இன்னொரு நண்பனுக்கு  சொன்ன நம்ப மாட்டிங்க , அவனுக்கு ஆங்கிலத்துல “ WHO , WHAT , WHERE , WHOM , WHEN , HOW , “ இதுக்கு எல்லாம் சரியான அர்த்தமும் தெரியாது , வித்தியாசமும் தெரியாது . அதுவும் இன்ஜினியரிங் படிக்கிற போது . அப்புறம் எப்படிடா பரீட்சைல கேள்விக்கு பதில் எழுதுறே? ன்னு கேட்ட , எல்லாம் ஒரு குத்து மதிப்பாதான்ன்னு சொல்லுறான் . அதாவது அந்த “WHO  , WHAT , WHERE”  க்கு அப்புறம் வர்ற வாக்கியங்கள வச்சு ஓர் அளவுக்கு புரிஞ்சும் புரியாமையும் பதில் எழுதுறது .
         இது எல்லாம் கேக்குறதுக்கு மொக்கையாகவும் , சிலது காமெடி ஆகவும் இருக்கலாம் , ஆனால் இதுக்குள்ள இருக்க நுணுக்கமான விஷியம் என்னன்னு புரிஞ்சுக்கணும் .இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் , இவங்க எல்லாரும் தமிழ் வழி கல்வி (Tamil Medium) ல , ஒண்ணாவதுல இருந்து பன்னிரெண்டாவது வரைக்கும் படிச்சுட்டு வந்தவங்க . குறைஞ்சது பாதிக்கு மேலயாவது தமிழ் வழி கல்வில படிச்சு இருப்பாங்க .இது ஒண்ணும் சாதாரணம எடுத்துக்க கூடிய விஷியம் கிடையாது . ஒருவன் தனது அடிப்படை கல்வியையே தமிழ் மொழில படிச்சுட்டு , திடீர்னு ஒரு நாள் இன்ஜினியரிங் வந்து சேர்ந்துவிட்ட உடனே அவன் இன்ஜினியரிங் படிச்சு பாஸ் பண்ணிவிட முடியாது . என்னென்றால் அவன் சின்ன வயசுல இருந்து படித்த அடிப்படை பாடங்கள் அனைத்துமே தமிழில் .உதாரணத்துக்கு , தமிழ் வழி கல்வியில் படிக்கும் ஒரு மாணவன் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் அனைத்தும் தமிழில் இருக்கும் , எப்படி? இப்போ கணிதத்தில் , கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் , சமன்பாடு , அப்படின்னு
இயற்பியல் எப்படி ? மூன்றாம் விதி , இயக்கம் , அப்படின்னு ,
வேதியியலில் எப்படி ?  மூலக்கூறு , குடுவை , அப்படின்னு
ஆனா இதே ஆங்கில வழியில் படிக்கும் போது  எப்படி இருக்கும்? Addition , subtraction , multiplication , division , equation , third law , friction ,  precipitation ,  conjunction , conditions , describe , solid , dilute, vapor, organic , inorganic , atom , neutron   etc . .    
இப்படிதான்  இன்ஜினியரிங்ளையும் இருக்கும். கொய்யால இதெல்லாம் சும்மா ஒரு உதாரணம் தான் , ஆனா அங்க போய் பார்த்தாதான் தெரியும் இது போல ஒண்ணு,  ரெண்டு வார்த்தைகள் இல்ல , ஆயிரகணக்கான வார்த்தைகள் எல்லாம் புதுசா கொட்டி கிடக்கும்.இது இன்ஜினியரிங்ல மட்டும் இல்ல , மருத்துவம் , அறிவியல் படிப்புகளிலும் அப்படிதான் .
தமிழ் வழியில் zoology படித்த ஒருவன் , படிச்சதெல்லாம் , நுண்ணுயிர் , நாளங்கள் , நூறயீரல், நரம்பு , ரத்தம் , அப்படின்னு தான் படிச்சு இருப்பான்
ஆனா மருத்துவம் படிக்க போன அங்க எல்லாம் ஆங்கிலத்துல இருக்கும் . lunges , vein , nerves , digestive system , micro, syndrome, etc . இப்படி . 

         இதெல்லாம் முழுக்க முழுக்க தமிழ் வழி கல்வியில் படிச்சுட்டு வந்த ஒருத்தனுக்கு எப்படி புரியும்? ஒரு ஈர  வெங்கையமும் புரியாது.
கண்ணை கட்டி காட்டுல வுட்ட மாதிரி இல்ல ,
கண்ணையும் கட்டி , கால்ல ரெண்டு கல்லையும் கட்டி , கடல்ல  தள்ளி வுட்ட மாதிரி இருக்கும் .

    ஒரு மண்ணும் புரியாது , மந்திரிச்சு வுட்ட கோழி மாதிரியே இருப்பாங்க . முதல்ல ஆங்கில  வார்த்தைகள் என்னனு தெரிஞ்சுக்கணும் , அப்புறம் அந்த வார்தைக்களுக்கு என்ன அர்த்தம்ன்னு புரியன்னும் , அப்புறமா பாடத்த படிக்கணும் , விடிஞ்சுடும்  . . . அதுக்குள்ள நாலு வருசாம் இல்ல , எட்டு வருஷம் ஆகிடும் . . .   அதுக்குள்ளே அவங்க படுற கஷ்டம், மன உளைச்சல் , அவமானங்கள் இருக்கே, பாவம் வெளியவும் சொல்ல முடியாம , உளவியல் ரீதிய ரொம்ப கஷ்ட்ட படுவாங்க .
        எனக்கு  இவ்வளவு எப்படி தெரியும்ன்னா , நான் 1997 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் சேர்ந்தேன் அப்போது என்னோட வகுப்பில் தமிழ் வழி (Tamil Medium ) ல படிச்சுட்டு வந்தவங்க மொத்தம் 22  பேர் . அவங்க படுற கஷ்டம் எல்லாம் கண்ணு முன்னாடி பார்த்து இருக்கேன் , சில பேர் படிப்ப தொடர  முடியால் பாதிலையே விட்டுகூட போய் இருக்காங்க .ஏனென்றால்  , படிக்க முடியல , நிறைய பாடங்களில் பெயில் , அதிக படியான அரியர்ஸ் . ஒரு செமஸ்டர்ல பெயில் ஆனா அடுத்த செமஸ்டர் வந்துடும் அந்த பாடங்களையும் படிக்கணும் . பெயில் ஆனா பாடங்களையும் படிக்கணும் , ஒன்னும் முடியாது . சதுரங்கதுல பாம்பு போல தூரத்தும் . .  . தலைக்கு மேல வெள்ளம் ,  ஜான் போன என்ன ? முலம் போனா என்னக்கிற கணக்குதான் .
          எனக்கு தெரிஞ்ச ஒரு நண்பன் எல்லாம் இன்ஜினியரிங் கடைசி வருசத்துல விட்டுட்டு போய்ட்டான் , அவனால முடியல ஏக பட்ட அரியர்ஸ் . பார்க்கவே பாவமா இருந்தது . எத்தன மன உளைச்சல் , அவமானம் , நாலு வருஷம் கால விரையம் , பணம் விரையம் . எதிர்காலமே கேள்வி குறி ஆகிடுது .
    
           இதுக்கெல்லாம் அதிமேதாவிகள் சாதாரணம சொல்லிடுவாங்க , முயற்சி செயாதால் முடியாதது இல்ல , முயற்சி திருவினை ஆக்கும் ,
முயற்சி செய்து படித்து இருந்தால் படித்து இருக்கலாம்ன்னு .
ஒழுங்கா படிக்கணும் , சும்மா சினிமா , ஆட்டம் பாட்டம்ன்னு , ஊரை சுற்றி விட்டு படிக்காம போய் இருப்பன்ன்னு அதான் பெயில் ஆகி இருப்பான்ன்னு  சொல்லுற அதிமேதாவிங்க எல்லாம் அப்படியே ஷேர் ஆட்டோ புடிச்சு , இல்ல அடுத்த ட்ரெயின் புடிச்சு வாங்க உங்க எல்லாரையும் சைனிஸ் மொழி இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்த்து விடுறேன் , எங்கே சினிமா , ஆட்டம், பாட்டம் , ஊரை சுத்தாம , நாலு வருசத்துல நல்ல  முயற்சி செய்தது படிச்சு பாஸ் பண்ணி காட்டுங்க பார்க்கலாம் . கொய்யால வந்துராதிங்க இந்த பக்கம் சொம்ப தூக்கிகிட்டு  . . . கொண்டேய்புடுவேன்.

தொடரும் . . .

வருத்தம் மற்றும் கோவங்களுடன்,

ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com
|7 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்வியல் எதார்த்தத்தை மிக அழகாகப் பக்குவமாகச் சொல்லியிருக்கீங்க நண்பா..


இந்த நிலை மாற தங்களின் மேலான ஆலோசனைகளையும்,
நடைமுறைச் சிக்கல்களையும் சொன்னால் இன்னும் நல்லா இருக்கும்.

இது போன்ற கூத்துக்களை நாளும் நாளும் எல்லா இடங்களிலும் பார்க்கமுடிகிறது.


தங்களின் இரு கட்டுரைகளையும் படித்தேன்..

தொடர்ந்து எழுதுங்க நண்பா.

முனைவர்.இரா.குணசீலன் said...

மொழியின் எல்லை தான் சிந்தனையின் எல்லை!!

தாய்மொழியிலேயே தெளிவில்லாத ஒருவனால் வேறு எந்த மொழியையும் முழுமையாகக் கற்றுக்கொள்ளமுடியாது.

எனது கருத்து நண்பா.

முனைவர்.இரா.குணசீலன் said...

தங்கள் வருத்தங்களும் கோபங்களும் நியாயமானவை நண்பா..

எனக்கும் இதே வருத்தம் தான்..

அரசின் இயலாமையை நொந்துகொள்ளும் அதே சூழலில் நமது இயலாமையையும் என்னால் மறுக்கமுடியவில்லை நண்பா.

எனது வலையில் தங்களைப் போன்று கல்வி தொடர்பான நிறைய வருத்தங்களைத் தெரிவித்துள்ளேன் நண்பா..

Lakshmi said...

ராஜேஷ் கட்டுரை மிக அருமை. படிக்க காமெடியாக இருந்தாலும் அ ந்த மா
ண்வர்களின் நிலை பரிதாபதுக்குரியதுதானே. இதற்கு என்னதான் தீர்வு.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@முனைவர்.இரா.குணசீலன் said...///

வருகைக்கு நன்றி குணசீலன் . .
மனசுக்குள்ள ரொம்ப நாள் வருத்த பட்ட விஷியம் , நம்பளோட கல்வி முறையே முதல்ல சரி இல்ல . அதான் மனசுல பட்டத்த பகிர்ந்துகிட்டேன் . .
தொடர்ந்தது வாருங்கள் குணசீலன் . .
இன்னும் நிறைய விஷியம் அடுத்த பாகம் - 3 யில் பதிவு செய்யுறேன் .

நன்றி . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Lakshmi said...

ராஜேஷ் கட்டுரை மிக அருமை. படிக்க காமெடியாக இருந்தாலும் அ ந்த மா
ண்வர்களின் நிலை பரிதாபதுக்குரியதுதானே. இதற்கு என்னதான் தீர்வு. ////

அம்மா வந்துடிங்களா? வாங்க வாங்க . .
கண்டிப்பா அம்மா நீங்க சொன்ன மாதிரி அந்த மாணவர்கள் நிலைமைதான் பரிதாபம் .
இதற்க்கு தீர்வு எனபது அவ்வுளவு சுலபம் அல்ல , இருந்தாலும் எல்லாரும் கலந்து ஆலோசிச்சு தான் முடிவு எடுக்கணும் , எனக்கான யோசனைகளை , அடுத்த தொடர் பதிவுல கண்டிப்பா சொல்லுறேன் . . .
நன்றி அம்மா

விக்கி உலகம் said...

you call me மாப்ள...........நானும் இப்படித்தான்யா இருந்தேன்.........!

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters