Followers

Thursday, October 6, 2011

இதுவும் போன பதிவு ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2).  வின் தொடர் பதிவுதான் . 
           இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி பின்னாடி கூட மறைத்து வைக்கப்படுகிறது  ஏனென்றால் அந்த இடம் தான் யாருக்கும் அவ்வுளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் முன்பு சொன்னது போல பெரிய ஷொப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளின் பின்னால் வைக்க சாத்தியங்கள் அதிகம் . அதனால் பெண்கள் இனிமே கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை நிர்வாணம் ஆகாமல் தவிர்க்கவும். 
          இது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில்  கூட பார்த்து இருக்கலாம் . "பில்லா 2007" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும் பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீஸ்சார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும் ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்து கொண்டும், பதிவு செய்தது கொண்டும் இருக்கும். இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக நிர்வாணமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்தது ரசித்து கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்தது கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை. 
         இந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting அப்படியென்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை. 
சரி இந்த வகை தில்லாலங்கடி கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது? 

 Reflecting Glass -சை  கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :


1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுண்ணிப்பாக கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால்  இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது. 
அதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கை பையில் எப்பவும் ஒரு சிறிய முகம் பார்க்கும் வைத்து கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் , உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.  

2. உங்கள் கைப்பையில் எப்பவும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தல் அதில் ஒளி ஊடுருவுகிறதா என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது  முகம் பார்க்கும் கண்ணாடி. 

3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப சிம்பிள்  உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்டு நீங்கள் சந்தேகம்ப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால்  கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியை குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடிகள் பொருத்தி இருப்போம் இல்லையா அதில் நாம் சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா கார்க்குள் என்ன இருக்கிறதென்று அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.

       சரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றி . ஆனால் இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல. 

    சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி  அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம்  எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக  வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை . 
          ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின்  நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது ? 
மேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம்  புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன். 

           எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று  தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சரி இதை எப்படி தவிர்க்கிறது? 

டிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் :

1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.  

3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.




                                                       உங்க WEBCAM ஜாக்கிரதை . . .


          சரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டர்லியோ அல்லது லேப்டாப்லியோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லமால் யாரேனும் ஆன் செய்தது உங்களை பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்யில்  இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும். அதற்க்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு இணைக்க வில்லை ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்க்கு என்ன சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . அப்புறம்  தெரியாத ஒரு தப்பான விஷியத்தை நானே சொல்லி குடுத்தார் போல் ஆகிவிடும். அதனால் விஷியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .

இதில் இருந்து தப்பிக்க : 

1. நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்திருப்பார்களானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் . 
 
2. நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்ஸ்சை மூடி வைக்கலாம் இல்லையா? ஆமா லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கராய்அல்லது ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது .



டிஸ்கி : 
இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.

      இந்த பதிவுகள் அனைத்தும் விழிப்புணர்வுகளுக்காக மட்டுமே எழுதப்பட்டது  அதனால் தயவு செய்தது இதில் உள்ள நல்ல விஷியங்களை மட்டும் எடுத்து கொள்ளவும் . தேவை இல்லாத விஷியங்களை தவிர்த்து விடவும் . ஆகவே இதை படித்த அனைவரும் கவனமாகவும் , ஜாக்கிதையாகவும் நிம்மதியாகவும் வாழ்வோமாக என்று வாழ்த்தி ...



அன்புடன் ,
ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com





24 comments:

பெசொவி said...

An awareness creating post!

I like this post!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பெசொவி said...

An awareness creating post!

I like this post!///

வருகைக்கு நன்றி நண்பரே . .

தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

Unknown said...

நல்லதொருத் தகவல்! தொடரட்டும் உமது அறிவுப்பணி!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ரம்மி said...

நல்லதொருத் தகவல்! தொடரட்டும் உமது அறிவுப்பணி!///

வருகைக்கும் , ஆதரவுக்கும் நன்றி நண்பரே . .

குறையொன்றுமில்லை. said...

ராஜா நல்ல விழிப்புணர்வு பதிவா போடுரே. வழ்த்துக்கள். நிறையபேரை சென்று அடையணும்

வைகை said...

சூப்பர்.... அந்த கண்ணாடி மேட்டர் எனக்கு இப்பதான் தெரியுது... தேங்க்ஸ் தலைவா :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான தகவல்கள் மச்சி, என் கூகிள் பஸ்ல ஷேர் பண்ணிட்டேன்.....!

நாய் நக்ஸ் said...

குட் ...நல்ல பதிவு ...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Lakshmi said...

ராஜா நல்ல விழிப்புணர்வு பதிவா போடுரே. வழ்த்துக்கள். நிறையபேரை சென்று அடையணும் ///

அம்மா நன்றி அம்மா . எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான் . .
மேலும் நல்ல பதிவுகள் எழுத வாழ்த்துங்கள் .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@வைகை said...

சூப்பர்.... அந்த கண்ணாடி மேட்டர் எனக்கு இப்பதான் தெரியுது... தேங்க்ஸ் தலைவா :))///

நன்றி நண்பரே . தெரியாதவங்க தெரிஞ்சுகிரார்கள் என்று கேட்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு . தொடர்ந்து நல்ல பதிவுக்களுக்கு ஆதரவு குடுங்கள்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமையான தகவல்கள் மச்சி, என் கூகிள் பஸ்ல ஷேர் பண்ணிட்டேன்.....!///

ரொம்ப தேங்க்ஸ் பன்னிகுட்டி . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@NAAI-NAKKS said...

குட் ...நல்ல பதிவு ... ///

நன்றி நண்பரே . மீண்டும் வருக . .

TERROR-PANDIYAN(VAS) said...

அதான் எல்லாரும் பாராட்டி இருக்காங்களே நான் வேற தனியா பாராட்டனுமா? அப்பா சாமி எனக்கு நன்றி மீண்டும் வருகன்னு பார்மாலிட்டு பண்ணிடாத... நானும் பஸ்ல ஷேர் பன்ணிடரேன்.. :))

(ஆமாம் மச்சி கொஞ்சம் வேலை அதிகம். இது நீ போன பதிவில் கேட்ட கேள்விக்கு பதில். :) )

கோகுல் said...

தொடர்ந்து விழிப்புணர்வு கொடுக்கரிங்க!
பயனுள்ள அனைவருக்கும் சேர வேண்டிய விஷயங்கள்!
கடந்த பதிவுகளைப்போலவே இதையும் என்னோட twitter,face book'ல் ஷேர் பண்ணிட்டேன்!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//@அதான் எல்லாரும் பாராட்டி இருக்காங்களே நான் வேற தனியா பாராட்டனுமா? அப்பா சாமி எனக்கு நன்றி மீண்டும் வருகன்னு பார்மாலிட்டு பண்ணிடாத... நானும் பஸ்ல ஷேர் பன்ணிடரேன்.. :))

(ஆமாம் மச்சி கொஞ்சம் வேலை அதிகம். இது நீ போன பதிவில் கேட்ட கேள்விக்கு பதில். :) ) ///

ஹ ஹ ஹ . . . கூல் . .

Anonymous said...

இது மெயிலும் கொஞ்ச காலத்துக்கு முதல் வந்துச்சு.

ஃபிட்டிங் ரூமுக்குள் போனால் யாரையாவது கோல் பண்ணிப் பார்க்கச் சொல்லியும் இருந்துச்சு. வெப்கமினால் இரைச்சல் கேட்டும் என்று சொல்லி இருந்தார்கள். எவ்வளவு உண்மையோ தெரியாது.

நீங்கள் சொன்னது போலத் தான் மெமரி கார்டில் இருந்து படம் எடுக்கறாங்க. இப்ப தான் பென்ட்ரைவ் ரொம்ப மலிவாக கிடைக்குதே. இதுக்கென்று ஒரு பென்ட்ரைவ் வச்சு அதில காப்பி பண்ணி பிரிண்ட் போட கொடுக்கலாம்.

அதை விட, படிக்கறவங்க கிட்ட இருக்கற பிரச்சினை. ஹாட் டிஸ்கை படம் காப்பி பண்ண என்று கொடுப்பார்கள். அதில இருக்க தனிப்பட்ட விடயங்களை எவ்வளவு நல்ல நண்பன் என்றாலும் சும்மா தட்டிப் பார்க்க முயல்வார்கள். அதனால் படங்களுக்கு என்று தனியாக ஒரு ஹாட்டிஸ்கை வைச்சிருங்கள்.

தெரிஞ்சவர்கள் என்று லாப்டொப்பை யூஸ்பண்ண கொடுத்தால் சில ()(#($)@#@கள் பேர்சனல் விடயங்களை நோட்டம் விடுவார்கள். உயிரே போகுதுன்னாலும் லாப்டொப்பை பாவிக்க கொடுக்காதீங்க. அப்படி கொடுக்கற தாராள மனசுன்னா, பேர்சனல் விடயங்களை லாப்டொபில் போடாதீங்க.

எங்களுடைய நண்பி ஒருவர் முதல் வருடம் ஒரு முறை வெளியே போனபோது எடுத்த படங்களை அவளது லாப்டொப்பில் இருந்து ஒரு நாய் எடுத்துக்கொண்டது. அப்புறம் பசங்க அவன் லாப்டொப்பை, பென்ட்ரைவை எல்லாம் போமட் பண்ணிவிட்டே விட்டார்கள். கேட்காமல் எடுத்ததாலேயே எல்லாவற்றையும் அழித்து விட்டு வந்தார்கள். இப்படி தெரியாமல் எத்தனை பேர் எங்கள் படங்களை எடுக்கறார்களோ தெரியாது. அதனால் கண்கொத்திப் பாம்பு மாதிரி உங்கள் டாப்டொப்பை யாராவது பாவிக்கும் போது கவனமாக இருங்கள்.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@கோகுல் said...

தொடர்ந்து விழிப்புணர்வு கொடுக்கரிங்க!
பயனுள்ள அனைவருக்கும் சேர வேண்டிய விஷயங்கள்!
கடந்த பதிவுகளைப்போலவே இதையும் என்னோட twitter,face book'ல் ஷேர் பண்ணிட்டேன்! ///

ரொம்ப தேங்க்ஸ் கோகுல் . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@அனாமிகா துவாரகன் said... //
நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை பார்கிறேன் . நல்ல விடயம் எங்கே இருந்தாலும் ஓடி வந்து விடுகிறீர்கள் . சந்தோஷமாய் இருக்கிறது .
நீங்க சொன்னது நூறு சதவிதம் உண்மை . லேப்டாப் எல்லாம் நம்முடைய பர்சனல் பொருள், அதை யாரிடமும் குடுக்க கூடாது . அதே போல் நாமும் அடுத்தவர்கள் லேப்டாப்க்குள் மூக்கை நுழைக்க கூடாது அது நாகரீகம் .

Anonymous said...

ஹி ஹி. எப்போதாவது தட்டிப் பார்ப்பேன். கடைசி பகுதியும் வரும் வரை வெயிட் பண்ணினேன் பின்னூட்டம் போட.

அப்புறம் இந்த வெப் கம் எல்லாம் வேற ஒருவரால் ஓன் பண்ண முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் எதுக்கு அலட்சியமாக இருக்கனும் என்று என்னோட ஸ்பெக்ஸ் வரும் பெட்டியால் கவர் பண்ணுவேன். மேற்புறம் சீத்ரூவாக இருந்தால் கீழ் புறம் கமராவை மறைப்பது போல வைத்துவிடுவேன். அழகாக நிற்கும். ஸ்டிக்கர் ஒட்டினால் அதில இருக்கற கம் ஒட்டிக்க சான்ஸ் இருக்கு.

ஸ்பெக்ஸ் வரும் பெட்டி (அதுவும் லைட்டாக இருக்கும் பெட்டி) என்றால் மாட்டி வைக்க வேண்டியது தான். பாவிக்காத போது லப்டொப்பை மூடி வைத்தால் நல்லது. தூசும் ஸ்டட்டிக்கால் ஒட்டிக்காது.

ஒரே அடியாக அலட்சியமாக இருக்கறவங்களை திட்டாம, அப்படி செய்யப் போறீங்களா, சரி இப்படி செய்யுங்கனு நடுநிலையாக (முக்கியமாக பரபரப்புக்காக எழுதாம) நேர்மையாக எழுதி இருப்பதுக்கு பாராட்டுக்கள்.

அப்ப அவசர அவசரமாக எழுதிட்டு பஸ்ஸுக்குப் போயிட்டேன். சாரி.

thiyagarajan.s said...

உங்கள் பதிவு விழிப்புணர்வை உண்டாக்கும் உங்கள் சமூக உணர்விற்கு எனது பாராட்டுகள்...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@thiyagarajan. said...

உங்கள் பதிவு விழிப்புணர்வை உண்டாக்கும் உங்கள் சமூக உணர்விற்கு எனது பாராட்டுகள்...//

பாராட்டுகளுக்கு நன்றி தியாகராஜன் .

RAMA RAVI (RAMVI) said...

நல்ல விழிப்புணர்வு தரும் தகவல்கள் ராஜேஷ். பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

மாப்ள நல்ல விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி!

Anonymous said...

அன்புள்ள நண்பருக்கு உங்களின் இந்த பதிவு என்னை போன்ற பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தகவலுக்கு மிக்க நன்றி. இன்னும் இதுபோல் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters