Followers

Wednesday, May 25, 2011 11 commentsபோ என்று சொன்னால் ,போவதற்கு 
நான் பூவை சுற்றி வரும் தேனீ இல்லை , 
தேன் எடுத்தவுடன் போவதற்கு , 
நான் பூ கொண்ட வாசம் , 
வாசம் போனால் பூ வாடி விடும் , 
பூ வாடினால் வாசம் போய் விடும் , 
நீ இருக்கும் வரை நான் . . . 
உன்  அருகில் . .
என்றென்றும் உன் நினைவில் ,
பூ கொண்ட வாசமாய் . . .என்றென்றும் காதலுடன்  .  . .
ராக்ஸ் . . .

Monday, May 23, 2011 16 comments

உன் விழிகள் பேசும் வார்த்தைகள் புரிந்த எனக்கு ,
உன் இதழ்கள் பேசும் வார்த்தைகள் புரியவில்லை அன்பே ,
தக்காளி.......... இங்கிலீஷ்லையே பேசிக்கொல்லுறாயா . . . .

இன்றைய கால கட்டத்துல நல்ல பிகர் மட்டும் இல்ல , எல்லா பொண்ணுங்களும் இங்கிலீஷ்ல தான் பேசுதுங்க . . .
அதனால இதுல இருந்து என்ன தெரியுதுன்ன ஒரு பிகர் கரெக்ட் பண்ணனும்னா  கூட இங்கிலீஷ் அத்தியாவசியபடுது.
இது ஒரு நகைசுவைக்காக எழுதுனது என்றாலும், இதில் உள்ள வலி என்னவோ உண்மைதான் .
தற்போது இந்தியாவில் அரசு பள்ளிகளின் ஆங்கிலம் கற்பிக்கும் முறையும் , நிலைமையும் , இங்கு கீழே இருக்கும் வீடியோவை பார்த்தால் புரியும் . . .

ஓர் அளவுக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல என்ன நடக்குது. தமிழ் வழியில் படித்துவிட்டு வந்த மாணவர்களின் நிலைமை என்ன என்பதை ஓர் அளவுக்கு எடுத்து சொல்லி இருக்குது சமீபத்துல விஜய் டி.வீ ல ஒளிபரபாகுற கனா காணும் காலங்கள் ( ஒரு கல்லூரியின் கதை ) இங்கு கீழே இருக்க வீடியோவை பாருங்கள் . .
அதில் அந்த பேராசிரியர் சொல்லுவது அத்தனையும் உண்மை . இன்ன்றைய கால கட்டத்துல உயர் கல்வி பெரும்பாலும் ஆங்கிலதிலையே இருபதினால் ஆங்கிலம் அறிவு எனபது அவசியம் ஆகிறது .

இந்த ஆங்கில மொழி பிரச்னை எனபது தமிழ் வழி கல்வி கற்றவகளுக்கு மட்டும் அல்ல , மலையாள வழி கல்வி , தெலுங்கு வழி கல்வி என்று அவர் அவர் மாநில மொழிகளில் படித்த அனைவருக்கும் இருக்கிற பிரச்சனைதான். 
சரி இதுக்கு எல்லாம் என்னதான் தீர்வு? 
முதல்ல உலகத்துல இருக்க எல்லாரையும் தமிழ் படிக்க வைக்கலாம் , அமெரிக்க அதிபர் முதல் ஆப்பரிக்க அண்ணாச்சி வரை எல்லாரும் தமிழ் தான் .அப்புறம் உயர் கல்வி அனைத்தையும் தமிழ்வழி(Tamil Medium ) கல்வியா மாத்திடலாம். அப்போ இனிமே  உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் எல்லாரும் தமிழில் தான் பேச வேண்டும் , உலகத்தில் உள்ள எல்ல பல்கலைக்கழகங்களும் , கல்லூரிகளிலும் எல்ல பாடமும் தமிழில் கற்பிக்க வேண்டும்  . உலகத்தில் உள்ள எல்ல புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் கம்ப்யூட்டர் முதல் இன்டர்நெட் வரை அனைத்தும் தமிழில் . முக்கியமான ஒன்று எல்லா பிகர்சும் இனிமே தமிழில் தான் கதைக்க வேண்டும் .

எப்புடிஈஈஈ  ? ? ? 

இப்படி ஓவர் நைட் ல எல்லாம் மாறிடுச்சுனா , நம்ப தமிழ் வழி கல்வியில் படிச்சுட்டு வர்ற மாணவர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது .  
கொய்யால இதெல்லாம் நடக்குற காரியமா ?
நமது அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக மேடையில் செந்தமிழில் உணர்ச்சி பொங்க  பேசிவிட்டு தங்கள் வீட்டு பிள்ளைகளை மட்டும் விவராமாக ஆங்கில வழி , மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்க வைத்து பின்னாளில் பன்னாட்டு வணிகமும் , தொழிலும் செய்யும் திறமைசாலிகளாக மாற்றட்டும் , நம் அப்பாவி மக்கள் மட்டும் தமிழ் வழி கல்வி கற்று நொந்தது நூலாகட்டும் . 
நகைசுவைக்கு எல்லாம் அப்பாற்பட்டு நான் என்ன சொல்ல வரேன் என்றால் .
அரசாங்கமும் வழக்கமான கல்வி முறைய மாற்ற வேண்டும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டு வர வேண்டும் ,
தமிழகத்தில் எல்லாருக்கும் ஆங்கில அறிவு முறையாக வரவேண்டும் , எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்
அதுக்காக யாரையும் தமிழ் படிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை , மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் , தமிழனாய் பிறந்த அனைவரும் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் முறையாக தமிழை கற்றால் தமிழ் தானாக வளரும் , தமிழ் அழிந்து விடும் என்ற அச்சம் கொஞ்சம் கூட வேண்டாம் . 
அன்றே திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழன் . பல நாடுகளில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்கிய அதிசியங்களும் உண்டு  . உதாரணத்துக்கு சிங்கபூரில் தமிழ் மொழி ஒரு ஆட்சி மொழி .
தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தும் பெற்றாகி விட்டது .
தமிழ் என்றும் அழியாது , அதை தமிழன் அழியவும் விட மாட்டன் .
அதனால் குழந்தைகளை ஆங்கிலம் படிக்க வையுங்க , ஆங்கில வழியில் படிக்க வையுங்கள் . வேண்டுமென்றால் ஒரு தமிழ் பாடம் மட்டும் அல்லாது மேலும் ஒரு தமிழ் பாடத்தை அதிகமாக பாடத்திட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள். மற்ற எல்லாத்தியும் ஆங்கிலத்தில் படிக்க வையுங்கள் . 
ஆங்கிலம் மட்டும் அல்ல , நமது தேசிய மொழியான ஹிந்தியையும் படிக்க வையுங்கள் . இந்தியன் , இந்தியன் என்று மார் தட்டி கொள்ளும் நமக்கு எத்தனை பேருக்கு ஹிந்தி சரளமாக பேசவும் , எழுதவும் தெரியும்?
ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அதிகமா தேவைப்படும் மொழி ஹிந்தி , இந்தியன் ஆகிய நாம் ஹிந்தி கற்று கொள்வது ஒன்றும் கொலை குற்றம் அல்ல .
நான் ஹிந்தி கற்று கொள்ளாமல் போய் விட்டேனே என்று இன்று வரை வருத்தபடுகிறேன் . 
இங்கு அரபு நாட்டில் , அவசரத்துக்கு டாக்ஸி பிடித்தேன் அது ஒரு பாகிஸ்தானி டிரைவர் . ஓர் இடத்துக்கு போக எனக்கு தெரிஞ்ச தாதாக்க புதக்க ஹிந்தில நான் சொல்லி எவ்வளவு என்று கேட்ட அவன் “ பந்த்ரா  ரியால் என்கிறான் , நான் சொல்கிறேன் “ நஹி நஹி , பச்சீஸ் ரியால் என்று , அவன் “முஷ்கில் நஹி பாய் , பந்த்ரா ரியால் பஸ்  அப்படிகிறான் . நான் முடியவே முடியாது என்கிறேன் . என்ன கொடுமை அந்த டிரைவர் தலைல அடிச்சுகிட்டு ஏற சொன்னான் .
அதன் தமிழ் அர்த்தம இதுதான் . அவன் 15  ரியாலுக்கு போலாம் என்கிறான் , நான் இல்ல இல்ல , 25 ரியால் என்றால்தான் வருவேன் என்கிறேன் . என்ன ஒரு அதிபுத்திசாளிதனம் , என்ன கொடுமை இதெல்லாம்? நமக்கு தெரிந்த ஹிந்தி அவ்வுளவுதான் .  
அந்த பாகிஸ்தானி டிரைவர் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி , 
“ இந்தியன் உனக்கு உன் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி தெரியாதா? “  
நாக்கை புடிங்கிகிலாம் போல் இருந்தது . . .
நான் தமிழன் , ஹிந்தி எதிர்ப்பு , அதெல்லாம் உள்ளூர் அரசியல் ஆனால் மத்த நாட்டுக்காரனுக்கு நான் ஒரு இந்தியன் எனக்கு ஹிந்தி தெரியவில்லை . எவ்வளவு பெரிய அவமானம்?
நிறைய மொழிகளை நாம் படிபதினால் நாம் ஒன்றும் தாழ்ந்து போய் விட போவதில்லை 

“ கண்டதை தின்பவன் குண்டன் ஆவான் “

என்று ஒரு பழமொழி கேள்வி பட்டு இருப்பீர்கள் . ஆனால் அதன் சரியான பழமொழி ஏன் தமிழ் ஆசிரியர் சொல்லி இருக்கிறார் .

“ கண்டதை படிப்பவன் பண்டிதன் ஆவான் “ 

சாபிடுரதுலையே எப்பவும் நமது சிந்தனை இருக்கு அதனால்தான் பழமொழி கூட அப்படி மருவி விட்டது .
அதனால் சின்ன குழந்தையிலையே முடிந்த வரை எல்லாத்தியும் படிக்க வையுங்கள் ,
குழந்தை மனதும் , மூளையும் எந்த கவலையும் இல்லாமல் அதிக புத்துணர்ச்சியோடு காலியாக இருக்கும் அதில் அப்பவே நல்ல விஷியங்களையும் , மொழிகளையும் நிரபினால்தான் உண்டு , இல்லையென்றால் வளர்ந்த பின் எதையும் புதிதாக நிரப்ப முடியாது .
பசுமரத்தில்  ஆணி நன்றாக பதியும் . .

ஆதங்கங்களுடன் , 

ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.comMonday, May 16, 2011 7 commentsதமிழ் வழி கல்வி அவசியமா ? (பாகம் -1) படிக்க இங்கே சொடுக்கவும் 

 Note : இந்த பதிவு நீளமா  இருக்குன்னு படிக்காம போயடாதிங்க . கொஞ்சம் நீளம்தான் தவிர , கண்டிப்பா சுவாரசியம் குறையாம எழுதி இருக்கேன் . இந்த கருத்துகளும் ரொம்ப அவசியம் ஆதலாம் முடிந்தவரை படித்து முடிங்க . . 

     இப்படி என்ன நண்பன் செய்த கலாட்டாக்கள் இல்லாம , என்னுடைய இன்ஜினியரிங் வகுப்பு தோழர்கள் சிலருக்கும் ஆங்கிலம் நிறையவே தடுமாற்றம் . 
             தோழன் ஒருவன் இப்படிதான் வகுப்பில் அடுத்த வரிசையில் இருந்த ஆந்திர மாணவனை பார்த்து “ you call me? “  ,  “you call me? “ அப்படின்னு கேட்டுகிட்டே இருந்தான் .அந்த ஆந்திர மாணவனுக்கு ஒண்ணுமே புரியல what? What? அப்படின்னு கேட்டுட்டு விட்டுட்டான். இதை கவனிசுகிட்டு இருந்த   நான்  “என்னடா இப்போ எதுக்கு அவன உன்னை கூப்பிட சொல்லுரேன்னு கேட்டா  , அதுகுக்கு அவன் சொல்லுறான் , “ நான் எங்கட அவன கூப்பிட சொன்னேன்? அவன்தான்  என்னை கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு அதான் அவன்கிட்ட என்னை கூப்பிடியான்னு கேட்டேன்னு “ சொன்னான் .“டேய் அதுக்கு அப்படியாட கேப்பாங்க ? “Did you Call me? “ அப்படின்னு கேக்கணும் ன்னு சொன்னேன் . “ஓ அப்படியா ?“ அப்படினான் .
        இதே மாதிரி  கம்ப்யூட்டர் லேப்ல இருந்து முடிச்சுட்டு போறதுக்கு மேடம் கிட்ட போய் “ Madam  , I Finish , I go Madam “ அப்படின்கிறான் . அதாவது நான் முடிச்சுட்டேன் மேடம் , நான் போகலாமன்னு அனுமதி கேட்க்கதான் அப்படி கேட்டுயிருக்கான் . இத கேட்ட மேடம் என்னடா இவன் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம நான் போறேன்னு சொல்லுரான்னு காண்டாகுது .“ I have Finished madam , Shall I go ? “  அப்படின்னு கூட கேட்க்க தெரியல .

          இன்னொரு நண்பனுக்கு  சொன்ன நம்ப மாட்டிங்க , அவனுக்கு ஆங்கிலத்துல “ WHO , WHAT , WHERE , WHOM , WHEN , HOW , “ இதுக்கு எல்லாம் சரியான அர்த்தமும் தெரியாது , வித்தியாசமும் தெரியாது . அதுவும் இன்ஜினியரிங் படிக்கிற போது . அப்புறம் எப்படிடா பரீட்சைல கேள்விக்கு பதில் எழுதுறே? ன்னு கேட்ட , எல்லாம் ஒரு குத்து மதிப்பாதான்ன்னு சொல்லுறான் . அதாவது அந்த “WHO  , WHAT , WHERE”  க்கு அப்புறம் வர்ற வாக்கியங்கள வச்சு ஓர் அளவுக்கு புரிஞ்சும் புரியாமையும் பதில் எழுதுறது .
         இது எல்லாம் கேக்குறதுக்கு மொக்கையாகவும் , சிலது காமெடி ஆகவும் இருக்கலாம் , ஆனால் இதுக்குள்ள இருக்க நுணுக்கமான விஷியம் என்னன்னு புரிஞ்சுக்கணும் .இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் , இவங்க எல்லாரும் தமிழ் வழி கல்வி (Tamil Medium) ல , ஒண்ணாவதுல இருந்து பன்னிரெண்டாவது வரைக்கும் படிச்சுட்டு வந்தவங்க . குறைஞ்சது பாதிக்கு மேலயாவது தமிழ் வழி கல்வில படிச்சு இருப்பாங்க .இது ஒண்ணும் சாதாரணம எடுத்துக்க கூடிய விஷியம் கிடையாது . ஒருவன் தனது அடிப்படை கல்வியையே தமிழ் மொழில படிச்சுட்டு , திடீர்னு ஒரு நாள் இன்ஜினியரிங் வந்து சேர்ந்துவிட்ட உடனே அவன் இன்ஜினியரிங் படிச்சு பாஸ் பண்ணிவிட முடியாது . என்னென்றால் அவன் சின்ன வயசுல இருந்து படித்த அடிப்படை பாடங்கள் அனைத்துமே தமிழில் .உதாரணத்துக்கு , தமிழ் வழி கல்வியில் படிக்கும் ஒரு மாணவன் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் அனைத்தும் தமிழில் இருக்கும் , எப்படி? இப்போ கணிதத்தில் , கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் , சமன்பாடு , அப்படின்னு
இயற்பியல் எப்படி ? மூன்றாம் விதி , இயக்கம் , அப்படின்னு ,
வேதியியலில் எப்படி ?  மூலக்கூறு , குடுவை , அப்படின்னு
ஆனா இதே ஆங்கில வழியில் படிக்கும் போது  எப்படி இருக்கும்? Addition , subtraction , multiplication , division , equation , third law , friction ,  precipitation ,  conjunction , conditions , describe , solid , dilute, vapor, organic , inorganic , atom , neutron   etc . .    
இப்படிதான்  இன்ஜினியரிங்ளையும் இருக்கும். கொய்யால இதெல்லாம் சும்மா ஒரு உதாரணம் தான் , ஆனா அங்க போய் பார்த்தாதான் தெரியும் இது போல ஒண்ணு,  ரெண்டு வார்த்தைகள் இல்ல , ஆயிரகணக்கான வார்த்தைகள் எல்லாம் புதுசா கொட்டி கிடக்கும்.இது இன்ஜினியரிங்ல மட்டும் இல்ல , மருத்துவம் , அறிவியல் படிப்புகளிலும் அப்படிதான் .
தமிழ் வழியில் zoology படித்த ஒருவன் , படிச்சதெல்லாம் , நுண்ணுயிர் , நாளங்கள் , நூறயீரல், நரம்பு , ரத்தம் , அப்படின்னு தான் படிச்சு இருப்பான்
ஆனா மருத்துவம் படிக்க போன அங்க எல்லாம் ஆங்கிலத்துல இருக்கும் . lunges , vein , nerves , digestive system , micro, syndrome, etc . இப்படி . 

         இதெல்லாம் முழுக்க முழுக்க தமிழ் வழி கல்வியில் படிச்சுட்டு வந்த ஒருத்தனுக்கு எப்படி புரியும்? ஒரு ஈர  வெங்கையமும் புரியாது.
கண்ணை கட்டி காட்டுல வுட்ட மாதிரி இல்ல ,
கண்ணையும் கட்டி , கால்ல ரெண்டு கல்லையும் கட்டி , கடல்ல  தள்ளி வுட்ட மாதிரி இருக்கும் .

    ஒரு மண்ணும் புரியாது , மந்திரிச்சு வுட்ட கோழி மாதிரியே இருப்பாங்க . முதல்ல ஆங்கில  வார்த்தைகள் என்னனு தெரிஞ்சுக்கணும் , அப்புறம் அந்த வார்தைக்களுக்கு என்ன அர்த்தம்ன்னு புரியன்னும் , அப்புறமா பாடத்த படிக்கணும் , விடிஞ்சுடும்  . . . அதுக்குள்ள நாலு வருசாம் இல்ல , எட்டு வருஷம் ஆகிடும் . . .   அதுக்குள்ளே அவங்க படுற கஷ்டம், மன உளைச்சல் , அவமானங்கள் இருக்கே, பாவம் வெளியவும் சொல்ல முடியாம , உளவியல் ரீதிய ரொம்ப கஷ்ட்ட படுவாங்க .
        எனக்கு  இவ்வளவு எப்படி தெரியும்ன்னா , நான் 1997 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் சேர்ந்தேன் அப்போது என்னோட வகுப்பில் தமிழ் வழி (Tamil Medium ) ல படிச்சுட்டு வந்தவங்க மொத்தம் 22  பேர் . அவங்க படுற கஷ்டம் எல்லாம் கண்ணு முன்னாடி பார்த்து இருக்கேன் , சில பேர் படிப்ப தொடர  முடியால் பாதிலையே விட்டுகூட போய் இருக்காங்க .ஏனென்றால்  , படிக்க முடியல , நிறைய பாடங்களில் பெயில் , அதிக படியான அரியர்ஸ் . ஒரு செமஸ்டர்ல பெயில் ஆனா அடுத்த செமஸ்டர் வந்துடும் அந்த பாடங்களையும் படிக்கணும் . பெயில் ஆனா பாடங்களையும் படிக்கணும் , ஒன்னும் முடியாது . சதுரங்கதுல பாம்பு போல தூரத்தும் . .  . தலைக்கு மேல வெள்ளம் ,  ஜான் போன என்ன ? முலம் போனா என்னக்கிற கணக்குதான் .
          எனக்கு தெரிஞ்ச ஒரு நண்பன் எல்லாம் இன்ஜினியரிங் கடைசி வருசத்துல விட்டுட்டு போய்ட்டான் , அவனால முடியல ஏக பட்ட அரியர்ஸ் . பார்க்கவே பாவமா இருந்தது . எத்தன மன உளைச்சல் , அவமானம் , நாலு வருஷம் கால விரையம் , பணம் விரையம் . எதிர்காலமே கேள்வி குறி ஆகிடுது .
    
           இதுக்கெல்லாம் அதிமேதாவிகள் சாதாரணம சொல்லிடுவாங்க , முயற்சி செயாதால் முடியாதது இல்ல , முயற்சி திருவினை ஆக்கும் ,
முயற்சி செய்து படித்து இருந்தால் படித்து இருக்கலாம்ன்னு .
ஒழுங்கா படிக்கணும் , சும்மா சினிமா , ஆட்டம் பாட்டம்ன்னு , ஊரை சுற்றி விட்டு படிக்காம போய் இருப்பன்ன்னு அதான் பெயில் ஆகி இருப்பான்ன்னு  சொல்லுற அதிமேதாவிங்க எல்லாம் அப்படியே ஷேர் ஆட்டோ புடிச்சு , இல்ல அடுத்த ட்ரெயின் புடிச்சு வாங்க உங்க எல்லாரையும் சைனிஸ் மொழி இன்ஜினியரிங் காலேஜ்ல சேர்த்து விடுறேன் , எங்கே சினிமா , ஆட்டம், பாட்டம் , ஊரை சுத்தாம , நாலு வருசத்துல நல்ல  முயற்சி செய்தது படிச்சு பாஸ் பண்ணி காட்டுங்க பார்க்கலாம் . கொய்யால வந்துராதிங்க இந்த பக்கம் சொம்ப தூக்கிகிட்டு  . . . கொண்டேய்புடுவேன்.

தொடரும் . . .

வருத்தம் மற்றும் கோவங்களுடன்,

ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com
|Monday, May 2, 2011 26 comments


     
        தமிழ் நமது தாய் மொழி . . . இனிமையான மொழிகளில் தமிழ் முதல் இடத்தை பிடிக்கிறது நம்மை பொருத்தவரை . நமது கல்வி முறையில் தமிழின் பங்கு என்ன? நாம் அனைவரும் தமிழை முறையாக கற்கிறோம? தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் முறையான தமிழை கண்டிப்பாக கற்க வேண்டிய கடமை  உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று . தமிழை ஒரு தமிழன் கற்க வில்லை என்றால் வேறு யாரு கற்பார்கள்? பிறகு எப்படி மொழி வளரும்? தமிழை முறையாக கற்க வில்லையென்றால் பிறகு எப்படி தமிழை முறையாக பேசுவது ? எப்படி தமிழை வாசிப்பது? எப்படி எழுதுவது ? அதனால் தமிழனாய் பிறந்த எவரும் குறைந்தது தொடக்க கல்வியில் இருந்து , 12 ஆம் வகுப்பு வரையும் கண்டிப்பாக தமிழை ஒரு பாடமாக கற்க வேண்டும் , தமிழ் மொழில் உள்ள பொக்கிஷங்களான திருக்குறள் , ஆத்திசூடி , புறநானூறு , அகநானூறு , சிலப்பதிகாரம் , செய்யுள்கள் , இன்னும் பலவற்றை  படித்தால்தான் வாழ்கை நெறிமுறைகளை கொஞ்சமாவது கற்றுகொள்ள முடியும் . 
        நான் 12 ஆம் வகுப்புவரை தெரிந்தோ தெரியாமலோ தமிழை ஒரு பாடமாகவும் , மற்றதை பாடங்களை ஆங்கில வழி முறையிலும்  படிததினால்தான் என்னால் தமிழ் பேச முடிகிறது , படிக்க முடிகிறது , எழுத முடிகிறது என்பதை விட , என்னால் வாழ்கையில் முடிந்த வரை ஒழுக்கங்களையும் ,வாழ்க்கை நெறி முறைகளுடன் , அஞ்சுவதற்கு ( தவறு செய்வதற்கு )  அஞ்சி , எனக்கு வரும் அநியாயங்களுக்கு நெஞ்சு நிமிர்த்தி வீரமுடன் எதிர் கொண்டு வெற்றி பெற,  தமிழும் , தமிழ் பாடங்களும் , தமிழ் இலக்கியங்கலுதான்  கற்று கொடுத்தன என்று சொன்னால் அது மிகை ஆகாது . . .  

ஆனால் . . . . 
நிற்க.

       நான் இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்லூரி படிக்கும் போது . .  ஒரு இனிய சனிக்கிழமை வார  விடுமுறை அன்று என் நண்பன் கல்லூரி விடுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கோவைக்கு சென்று, நாள் முழுவதும் சினிமா , ஹோட்டல்ன்னு தன்னுடைய ஒரு வார  விடுதி என்னும் சிறை வாழ்கையை  புதுபித்து கொள்ள வந்த பெயில் நாள்தான் அந்த  சனிகிழமை. தன்னுடைய நோக்கங்கள் அனைத்தையும் வெற்றியுடன் முடித்துவிட்டு , மாலை வெற்றி களிப்புடன் பேருந்து ஏற பேருந்து நிலையத்துக்கு வந்து, வாழ்கையில் முன்னுக்கு வரும் அதே உத்வேகத்தோடு இருந்த அதனை கூட்டத்தையும் பின்னுக்கு தள்ளி (ஏனென்றால் அத்தனை  கூட்டம் அம்மும்,  இரண்டு அல்லது மூன்று மணிக்கொரு பேருந்துதான் கல்லூரிக்கு ),  முன்னேறி தன்னுடைய திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி ஜன்னல் ஓர இருக்கை பிடித்து அமர்ந்து விட்டு , தன்னை ஆசுவாச படுத்திவிட்டு பார்த்தால் , பக்கத்தில் இருக்கையில் இவனோடு எங்கள் வகுப்புக்கு பாடம் எடுக்க வரும் எங்கள் துறை பேராசிரியர். இவனுக்கு ஆச்சரியம் + சந்தோசம் . 

   அவரை பார்த்து நண்பன் வணங்க , பதிலுக்கு அவர் “ என்னப்பா இந்த பக்கம் ? எதுவும் முக்கியமான வேலையையாய் வந்தியா? “ அப்படின்னு இவர் கேட்டு இருக்காரு, இவன் மதியம்  அஜ்மீர் பிரியாணி கடைல செஞ்ச பிரியாணி எல்லாம் தீர்ந்தது போக,  குஷ்க்கா வரைக்கும் விட்டு குடுக்காம முக்கு முக்குன்னு  முக்கிய அந்த முக்கியாமான விஷியத்தையா  சொல்ல முடியும்?  “ இல்ல சார் , மாமா வீட்டுக்கு அவசர வேலையா  போயிட்டு இப்பதான் வரேன் அப்படினான் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு. 
இப்போ இவன் பங்குக்கு பேராசிரியர் கிட்ட “ நீங்க எங்க சார் இந்த பக்கம் ன்னு கேட்க்க . 
பேராசிரியர்  “ நான் யுனிவர்சிட்டில எக்ஸாம் பேப்பர் திருத்த போய் இருந்தேன்பா “ என்றார்  . 
நண்பனுக்கோ ஆர்வம் தாங்க முடியல , ஒரு வேலை நாம எழுதுன பரீட்சை பேப்பர் தான் திருத்தி இருபாரோன்னு ஒரு ஆர்வத்துல, “ எந்த சுப்ஜெச்ட் (subject) பேப்பர் சார் திருதுனிங்க?” என்றான் . 
அதற்க்கு அவர் “ அது  confidential    தம்பி “ ன்னு சொல்லி இருக்காரு . அதற்க்கு நம்ப நண்பர் இன்னும் ஆர்வத்தோட “ அது எந்த செமஸ்டர் பேப்பர் சார் “ அப்படின்னு கேட்டான் பாருங்க , பேராசிரியர் முகம் போன போக்க பாக்கணுமே . மனுஷன் அதுக்கு அப்புறம் பேசணுமே .
        நம்ப பையன் அதே ஆர்வத்தோட விடுதிக்கு வந்து சேர்ந்ததுக்கு அப்புறம் நேரா நாங்க குழுமி இருந்த  அறைக்கு வந்து “ மச்சான் , மச்சான் , நான் நம்ப சார்ர பேருந்துல பார்தேன்டா , நம்ப யுனிவர்சிட்டில பரீட்சை பேப்பர் திருத்திட்டு திரும்ப என்கூடதான் பேருந்துல வரும் போது பார்தேன்டா , என்ன சுப்ஜெச்ட் பேப்பர் சார் திருத்துனிங்கன்னு  கேட்டேன் , அதுக்கு அவரு , அது confidential ன்னு சொன்னாருடா . ஆமா அது எந்த செமஸ்டர் பேப்பர்  மச்சி “ ன்னு கேட்டான் பாருங்க எங்களுக்கு வந்தது பாருங்க சிரிப்பு , எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம் .
அப்புறம்தான் நாங்க அதோட அர்த்தம என்னன்னு , “confidential  அப்படின்னா சொல்ல கூடாத விஷியம் , ரகசியம் அப்படின்னு அர்த்தம டான்னு சொன்னோம் . அதுக்கு அவன் “ ஓ அப்படியா ? அதான் சார் அதுக்கு அப்புறம் சார் என் பக்கம் திரும்பவே இல்லையா?  இறங்குரவரைக்கும்? “ அப்படினான் . பாவம் அந்த சார் ,  இவன்தான் அவர கலாய்கிரான்னு நினைச்சு டென்ஷன் ஆகிட்டாரு போல .

     இது போலதான் இன்னொரு முறை இதே நண்பன் மினி ப்ராஜெக்ட் விஷயமாக கோவையில் இருந்து சென்னை போக வேண்டி ,  ரயில் டிக்கெட் புக் செய்த கலாட்டா . .  

        மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும் போது அதே நண்பன் மினி ப்ராஜெக்ட் செய்ய வேண்டி ஒரு சென்னை கம்பெனி க்கு சொல்ல வேண்டி நேர்ந்ததால் , தலைவர் புகைவண்டி முன் பதிவு செய்ய கோவை புகைவண்டி நிலையத்திற்கு சென்று முன்பதிவு செய்து வந்தார் ,
வந்ததோடு இல்லாமல் விடுதியில் எங்களிடம் தம்ப்பட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டான் (வடிவேலு நானும் ஜெயில் க்கு போறேன் , நானும் ஜெயில் க்கு போறேன்கிற கணக்கா ) நான் மெட்ராஸ் போறேன் , நான் மெட்ராஸ் போறேன் , அதுவும் ட்ரெயின் டிக்கெட் ரிசர்வ் செஞ்சு போறேன்னு.. தாங்க முடியல , என்னாடா , என்ன விஷியம் னா ? ரிசர்வ் பண்ண டிக்கெட்டை முகத்துக்கு முன்னாடி ஆட்டி காமிச்சு , ஐயா மெட்ராஸ் போறோம் இல்ல ன்னு எருமை வயசுல பெருமை வேற . கொண்டாட டிக்கெட்டை வாங்கி பார்த்த , கோவையில் இருந்து வெள்ளிகிழமை இரவு சென்னை போகிற சேரன் எக்ஸ்பிரஸ் புக் பண்ணுறதுக்கு பதிலா , அதே வெள்ளி இரவு சென்னையில் இருந்து கோவை வர இருந்த சேரன் எக்ஸ்பிரஸ் ட்ரெயின்னை புக் பண்ணிட்டு வந்துட்டு இவ்வளவு ஆர்பாட்டம் .
தப்பு எங்க நடந்ததுன்ன , முன் பதிவு சீட்டுல , என்னதான் தமிழ் இருந்தாலும் , இங்கிலீஷ் இருக்க முன் பதிவு சீட்ட எடுத்து தலைவர் ஸ்டைலா பூர்த்தி செஞ்சு குடுத்து இருக்காரு , அதுல from போடுற இடத்துல To வ்வும் , To  போட வேண்டிய இடத்துல  From ம்மும் போட்டுட்டாரு .
 From : Coimbatore  , To : Chennai  இப்படி போடுறதுக்கு பதில்  From : Chennai , To : Coimbatore  அப்படின்னு போட்டுட்டாரு .  டிக்கெட் பதிவு செய்கின்றவரும் , இவர் ட்ரெயின் நம்பர்தான் தப்ப போட்டுடாருன்னு அதை திருத்தி டிக்கெட் புக் பண்ணி குடுத்துடாறு . அடுத்த நாள் அடிச்சு புடிச்சு காலையே ஓடி போய் அந்த டிக்கெட்டை ரத்து செய்துட்டு , வேற டிக்கெட் புக் பண்ணிட்டு வந்தது தனி கதை .
     அடுத்த பதிவில் , நான் இங்கு அரபு நாட்டில் பாகிஸ்தானி டாக்ஸி டிரைவரரோடு ஹிந்தியில் டாக்ஸி வாடகைக்கு நடந்த வாக்குவாதம்மும் , நான் வாங்கிய பல்பும் . . . .
அடுத்த பதிவில் . . . .

தொடரும் . . .
தமிழனாய் பெருமையுடன் , 

ராஜேஷ் . . .
 

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters