Followers

Thursday, October 13, 2011


                   படம் முடிய ராத்திரி 9:30 மணி ஆகிடுச்சு . தியேட்டரை விட்டு வெளிய வந்த நாங்க நாலு பேரும் இங்கயே எங்கையாவது சாப்பிட்டு போய்டுறது முடிவு பண்ணினோம் ஏன்னென்றால் இனிமே ஹாஸ்டல் மெஸ்க்கு போனா ஒன்னும் கிடைக்காது தெரியும். சரி எங்கே சாப்பிடுறதுன்னு டிஸ்கசன் வந்த போது ஒரு குறிப்பிட்ட புரோட்டா கடைல புரோட்டா சாப்பிடலாம்ன்னு இருந்த நாலு பேருல ரெண்டு பேரு அவுங்கலாவே ஏக மனதா முடிவு பண்ணி கூட்டிட்டு போய்ட்டானுங்க. புரோட்டா கடைக்கு போனதுக்கு அப்புறம்தான் எனக்கு தெரிஞ்சது அது சுத்தம், சுகாதாரத்துல ISO 9001 , ISI  சர்டிபிகேட் எல்லாம் வாங்கின கடைன்னு. கடையை பார்த்த உடனே எனக்கு லைட்டா கண்ணா கட்டுச்சு , அதுலயும் அங்க புரோட்டா மாஸ்டரையும் , சப்ளையரையும் பார்த்த உடனே இருந்த கொஞ்சம் நஞ்சம நம்பிக்கையும் அடியோட குழி தோண்டி புதைக்க வேண்டியதா போச்சு. டேய் மாமு இந்த கடைலதான் புரோட்டா சாப்பிடனுமா? வேற கடைக்கு போலாம்டா அப்படின்னு சொன்னதுக்கு , அதெல்லாம் முடியாது இதே கடைலதான் புரோட்டா சாப்பிடணும் என்னோட பிரிண்ட்ஸ் ரெண்டு பேரும் ரெண்டு கால்ல நிக்குரானுங்க ( ரெண்டு பேரும் ஒத்த கால்ல நிக்குரானுங்க, ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு கால், மொத்தம் ரெண்டு கால்). டேய் மாப்ளே இந்த கடை கொஞ்சம் நல்ல இல்லடா அப்படின்னதுக்கு , ஏன்டா நீயெல்லாம் 5 ஸ்டார் ஹோட்டலதான் சாப்பிடுவியோ அப்படின்னு சோஷலிசம் பேச ஆரம்பிசுடானுங்க. இதுல கூட இருந்த இன்னொரு நண்பன் வேற " மச்சான் இந்த ஹோட்டல் புரோட்டா சாப்பிட்டா  லிவர்க்கு நல்லதுடா" அப்படினான் . "போச்சுடா இது வேறையா ?" அப்புறம்?  அப்படினேன் , " டேய் மாமு அது மட்டும் இல்லடா இந்த ஹோட்டல் புரோட்டவுக்கு தனி டேஸ்ட் இருக்குடா" அப்படினான் . அப்படி என்னடா தனி டேஸ்ட்டுன்னு கேட்டதுக்கு "இந்த கடை புரோட்டா மாஸ்டர் சும்மா சாதாரணமா புரோட்டா பிசைய மாட்டருடா , சும்மா புரோட்டா மாவை வேர்வை சிந்தி பிசைவாறு பாரு,  அப்படி ஒரு டேஸ்ட் , அப்படி ஒரு Soft  . வாய்ல போட்ட உடனே கரைந்திடும் " அப்படினான் . அப்பவே எனக்கு குமட்டிகிட்டு வந்துடுச்சு. இருந்தாலும் இனிமே சொன்ன இவனுங்க கேக்கவா போறானுங்க ? விதி விட்ட வழி அப்படின்னு உள்ள போயாச்சு.
                மதியமே ஹாஸ்டல இருந்து கிளம்பியாதாலும் , சாயங்காலம் எதுவும் சாப்பிடாதளையும் பயங்கர பசி. வேற என்ன பண்ண? அந்த கடை ISI புரோட்டாவையே ரெண்டுக்கு , நாலா சாப்பிட வேண்டியதா போச்சு. சாப்பிட்டு எல்லாம் முடிச்சுட்டு பைக் எடுத்துகிட்டு ஹாஸ்டல் வந்து சேர ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு . புரோட்டா சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆனதால புரோட்டா தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுச்சு. என்னடா அதான் ஏற்கனவே புரோட்டா மாஸ்டர் புரோட்டாவை வேர்வை சிந்தி பிசைஞ்சுடானே அப்புறம் எதுக்கு வயுறு தனிய பிசையுதுன்னு யோசிச்சுகிட்டே ரூம்ல படுத்து தூங்கியாச்சு.
                     மறுநாள் காலைல எழுந்துரிச்சா சும்மா வயுறு கடமுட கடமுடன்னு கலக்குது. உடனே அடிச்சு புடிச்சு பக்கெட்டை எடுத்துகிட்டு டாய்லெட்டுக்கு ஓடினா , எனக்கு முன்னாடி என் நண்பன் ஓடிகிட்டு இருக்கான், டேய் எங்கேடா ஓடுற அப்படின்னு பின்னாடியே நானும் ஓடி அவன் பக்கத்து டாய்லெட்க்குள்ள புகுந்தா , கொஞ்ச நேரத்துல பக்கத்து டாய்லெட்க்கு உள்ள இருந்து ஒரு சத்தம் , " மச்சான் டேய் பிரேக் புடிக்கலடா !!!!!!!!. . . பேதி ஆகுதுடா "  அப்படின்னு.  "டேய் ஆமாடா மாமு இங்கயும் பிரேக் புடிக்கலடா"  - இது நான். நாங்க ரெண்டு பேரும் பேசுறத கேட்ட பக்கத்துல டாய்லெட்டுல இருந்த இன்னொருத்தன் "டேய் இது என்ன கிரிக்கெட் மேட்ச்சாடா ? ரன்னிங் கமெண்ட்ரி குடுக்குரிங்கா ? பேசாம இருங்கடா " அப்படினான். அதுக்கு என்ன நண்பன் "ஆமா உனக்கு நார்மல் டெலிவரிகிற தலகனத்துல பேசாதடா , மவனே நீயும் நேத்து எங்க கூட ISO 9001 புரோட்டா சாப்பிட்டு இருக்குன்னும்டீ அப்போ தெரிஞ்சு இருக்கும் " அப்படினான். இப்படி ஒரு முறை ரெண்டு முறை அல்ல நாலு அஞ்சு முறை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி , சில முறை ஒன்னாவே கூட பாக்கெட்டை தூக்கிட்டு ஓட வேண்டியதா போச்சு. அப்புறம் எங்க ஓட? நடக்க கூட முடியாம ரெண்டு பேரும் " பப்பறப்பேன்னு "ரூம்க்குள்ள மல்லாக்க படுத்து கிடக்க , இவ்வளவு சீரியஸ் கலாட்ட நடந்துகிட்டு இருக்கு அப்பத்தான் ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு சாவகாசமா மத்த ரெண்டு பேரும் அதான் முதல்நாள் ராத்திரி இதே புரோட்டா கடைலதான் புரோட்டா சாப்பிடுனும்ன்னு ஒத்த காலுல நின்னு எங்களை பாழுங்கிணற்றில் தள்ளின படுபாவிங்க வந்தானுங்க. " என்னடா மாப்ளே என்ன ஆச்சு "  அப்படின்னு அக்கறைய விசாரிச்சானுங்க, " என்ன நோன்னுங்கடா? நான் அப்பவே சொன்னேன் இல்ல அந்த ஹோட்டல் வேண்டாம்டான்னு , இப்ப பாரு எங்க ரெண்டு போரையும் , பெருகுடல் , சிறுகுடல் , கல்லீரல் , கணையம் வரைக்கும் வெளிய வந்துடுச்சு பேதி ஆகி " அப்படினேன் கடுப்பாகி . நான் கடுப்புல இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டு அவனுங்க இன்னொருதன்கிட்ட போய் " என்ன மச்சான் அவ்வுளவு மோசமாவா பேதி ஆகுது? " ன்னு கேக்க . " போங்கடா டேய் போங்க, டாய்லெட்டுல எனக்கு பேதி ஆகுற ஸ்பீடுல" PSLV" ராக்கெட் மாதிரி நான் நாலு அடி மேல போறேனா பாத்துகோங்க அந்த அளவுக்கு மோசமா போகுதுடா டேய்"  அப்படினான் பாருங்க , அவ்வுளவு வேதனையுளையும் எனக்கு சிரிப்பு முட்டிக்கிட்டு வந்துடுச்சு ஹி ஹி ஹி . . .

          ஆனா அவனுங்க என்ன சொன்னனுங்க தெரியுமா? , " மச்சான் கண்டிப்பா இந்த பேதி நேத்து ராத்திரி சாப்பிட புரோட்டாவால இருக்காதுடா , நேத்து பார்த்த படத்தாலதான்னு  இருக்கும்டான்னு அடிச்சு சொன்னனுங்க, என்னென்றால் நாங்க பார்த்த படம்  ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் T. ராஜேந்தரின் , மோனிஷா என் மொனோலிச" , அப்படின்னு சீரியஸ் டிஸ்கஸ்சன்னு வேற. "என்ன கொடுமை சார் இதெல்லாம்? ". .

            ஆனா இதை எல்லாம் கேட்ட அவங்க ரெண்டு பேரும் சும்மா இல்ல , " Don't Worry மச்சி . . இதுக்கு எங்க கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு கவலை படாதிங்கடா, நான் சொல்லுற மாதிரி செய்யுங்க பேதி டக்குன்னு நின்னுடும்" ன்னு சொல்லிட்டு . "டேய் ஏதாவது சிவப்பு துணி இருக்காடா?" அப்படின்னு கேட்டான் . " அங்க பாருடா ஒரு பழைய சிவப்பு துண்டு இருக்கும்" ன்னு சொன்னேன். உடனே ஓடி போய் அதை எடுத்து ரெண்டா கிழிச்சு என் கைல ஒண்ணும் , என் பிரெண்ட் கைல ஒண்ணும் குடுத்தான்.  "இதை வச்சுக்கிட்டு என்னடா பண்ணுறது" அப்படின்னு நாங்க ரெண்டு பேரும் கேட்டோம் . "மச்சான் நெக்ஸ்ட் டைம்  டாய்லெட்க்கு இந்த சிவப்பு துணிய எடுத்துட்டு போங்க ,  பேதி ஆகும் போது கரெக்டா இந்த சிவப்பு துணிய ஆட்டி காட்டுங்கடா உடனே பேதி டக்குன்னு நின்னுடும்"  அப்படினான். நாங்க ரெண்டு பேரும் நிஜமாவே குழம்பி போயிட்டோம். " டேய் என்னாடா சொல்லுற? ஒண்ணுமே புரியல?????? "அப்படின்னு கேட்டதுக்கு அவுனுங்க ரெண்டு பேரும் சொல்லுரான்னுங்க " டேய் மாப்ளே என்னடா இது கூடவா புரியல உங்களுக்கு ? , ரொம்ப சிம்பிள்டா , சிவப்பு கொடிய காட்டின அவ்வளவு நீள ட்ரெயின்யே நிக்குது!!! , இந்த சுண்டக்கா பேதி நிக்காதா ????? ஹி ஹி ஹி ஹி . . " அப்படின்னுனானுங்க


        உடனே எனக்கு வந்தது பாருங்க கோவம், மறுபடியும் பேதியோட சேர்த்து  , அதுக்கு மேல அவனுங்க கிட்ட ஒரு வார்த்தை , ஒரு வார்த்தை பேசலையே நான் , பாக்கெட்டை எடுத்துகிட்டு கோவமா கிளம்பிட்டேன் அடுத்த ரவுண்டுக்கு . . . .


அன்புடன் ,
ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

17 comments:

விக்கியுலகம் said...

மாப்ள நிக்காம போகுது பேதி அல்ல சிரிப்பு ஹிஹி!

Ramani said...

பேதி நின்னுச்சோ இல்லையோ இதை படிச்சதும்
வந்த சிரிப்பு நிக்கலை
இப்ப நானும் சிவப்பு துணியத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்
த.ம 3

Lakshmi said...

ராஜா சிவப்புத்துணி பார்த்தும்கூட சிரிப்பு நிக்கவே மாட்டேங்க்தே.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@விக்கியுலகம் said...

மாப்ள நிக்காம போகுது பேதி அல்ல சிரிப்பு ஹிஹி! ///

ஹி ஹி ஹி மாப்ளே பார்த்து உனக்கும் அப்புறம் சிவப்பு கொடி ஆட்ட வேண்டியாதா போக போகுது . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Ramani said...

பேதி நின்னுச்சோ இல்லையோ இதை படிச்சதும்
வந்த சிரிப்பு நிக்கலை
இப்ப நானும் சிவப்பு துணியத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்
த.ம 3 ///

சார் உங்களுக்குமா? எதுக்கும் ஒரு நல்ல டாக்டர் பாருங்க ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//@Lakshmi said...

ராஜா சிவப்புத்துணி பார்த்தும்கூட சிரிப்பு நிக்கவே மாட்டேங்க்தே.///

அம்மா சிவப்பு துணிய பார்த்த மட்டும் போதாது , ரயில்வே ஸ்டேஷன்ல ஆட்டுற மாதிரி ஒரு குச்சில கட்டி ஆட்டனும் ஹி ஹி ஹி

அம்பலத்தார் said...

ஜாலியான பேதிதான்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//@அம்பலத்தார் said...

ஜாலியான பேதிதான் ///

ஜாலி மத்தவங்களுக்கு , பேதி எங்களுக்கு சார் . . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கு ஒரே வழிதான் இருக்கு, போய் மறுபடியும் அதே பரோட்டாவா சாப்புடனும்........ கம்ப்ளீட்டா கிளியர் ஆகிடும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

செகப்பு கொடிக்கே இப்படின்னா, அப்போ செகப்பு அண்டர்வேர் போட்டவன் கெதி?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//@பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுக்கு ஒரே வழிதான் இருக்கு, போய் மறுபடியும் அதே பரோட்டாவா சாப்புடனும்........ கம்ப்ளீட்டா கிளியர் ஆகிடும்.....///

சரி வா நாம ரெண்டு பேரும் அதே கடைக்கு போய் ரெண்டு செட் புரோட்டா சாப்பிட்டு வரலாம்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ பன்னிக்குட்டி ராம்சாமி said...

செகப்பு கொடிக்கே இப்படின்னா, அப்போ செகப்பு அண்டர்வேர் போட்டவன் கெதி? ///

அதெல்லாம் ரயில்வே கேட் போட்ட மாதிரி தான் ஒண்ணும் வெளிய வராதுன்னு நினைக்கிறேன் ஹி ஹி ஹி ஹி . . .

வைரை சதிஷ் said...

super

haa...haa...

RAMVI said...

ராஜேஷ் முதல் பேராவை படிக்கும் போதே எனக்கு வயத்தை கலக்கிடுத்து.

முழுவதும் படிச்சவுடன்,சிரிப்பை நிறுத்த முடியவில்லை...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//@வைரை சதிஷ் said...

super

haa...haa...///

Thanks sathish . .

keep coming and enjoy the posts

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//@RAMVI said...

ராஜேஷ் முதல் பேராவை படிக்கும் போதே எனக்கு வயத்தை கலக்கிடுத்து.

முழுவதும் படிச்சவுடன்,சிரிப்பை நிறுத்த முடியவில்லை...///

மேடம் ஹி ஹி ஹி ,
நன்றி , எப்படியோ நீங்க எல்லாம் சிரிச்சா சரி

jeru said...

எப்படி தா இது மாதிரி எல்லாம் யோசிகிரிங்கனு தெரியலையே ஐயோ ஐயோ....ஹிஹி....ராஜேஷ் நீங்க கலக்குங்க....oops காமெடில சொன்ன ஹி ஹி....

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters