Followers

Tuesday, June 14, 2011

தம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . .

            சுமார் 13 வருடங்களுக்கு முன்னாள் ஒரு அழகிய சனிகிழமை காலை வேளையில் ஒரு மனிதருள் மாணிக்கம் ரொம்பவும் பீல்ல்ல் ( feeeeel ) பண்ணி சொன்ன வார்த்தைகள் தான் இது , தம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . .  இந்த வார்த்தைகளின் வீரியத்தையும் , தொடர்ச்சியையும் கண்டிப்பாக படிக்க போறீங்க ஆனா இப்போ இல்ல , தொடர்ந்து மனம் தளராம படிங்க அப்புறம  தெரியும் உங்களுக்குஏன் இதை என் தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வைக்க வேண்டிய வார்த்தைகள் என்று . 

சரி இப்போ அந்த தஞ்சாவூர் கல் வெட்டுல பதிச்சு வைக்க வேண்டிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பாப்போம் .

               அப்போ நான் இன்ஜினியரிங் காலேஜ் 2 வது வருடத்தில் அடி எடுத்து வைத்தேன் . இரண்டாவது வருடத்தின் முதல் நாள் கல்லூரி வகுப்பு . அப்போதான் நாங்க உண்மையிலையே எங்கள் துறை குள்ள போறோம் . அதுக்கு முன்னாடி முதல் வருடம் இன்ஜினியரிங் என்பது பொதுவான பொறியியல் பாடங்களை கொண்ட வருடம் , எல்லா  துறை மாணவர்களுக்கும் ஒரே விதமான பாடங்கள் தான் அதுவும் அடிப்படையான பொறியியல் பாடங்களும் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் மாதிரியான பாடங்கள் தான் , கிட்டத்தட்ட 12ம் கிளாஸ் மாதிரி தான் வச்சுக்குங்களேன் . அதனால பாட புத்தகங்களும் ஒரே மாதிரிதான் , அதனால காலேஜ் சேரும் போதே எல்லாருக்கும் பிரிண்ட் அடிச்சு வச்சு இருக்க புக்ஸ்சை  கைல கொடுத்துடுவாங்க  , நாம அதுல இருக்குறத சமத்தா  பரீட்சைக்கு தேவையானதை கட் பண்ணி பிட்டு ரெடி பண்ணி , பரீட்சைக்கு தயாராக வேண்டியதுதான்.  அட ச்ச  உண்மைய உளறிட்டேனே.  படிச்சு பரிட்சைக்கு தயாராக வேண்டியதுதான் . ஹி ஹி

            ஆனா பாருங்க இரண்டாவது வருஷத்துல இருந்து இந்த பப்பு எல்லாம் வேகாது . அல்வா மாதிரி  புத்தகமா எல்லாம் அச்சு அடிச்சு குடுக்க மாட்டங்க . அங்கதான் ஆண்டவன் வைக்குறான் ஆப்பு . இன்ஜினியரிங் ஜாயின் பன்னுரோம்ன்னு பெருமையா பணத்த கட்டி ஆர்டர் பண்ண ஆப்பு எல்லாம் அப்போ இருந்துதான் ஒவ்வொன்ன டெலிவரி ஆகும் . அதுல முதல் ஆப்பு என்னன்னா பாட புத்தகம் எல்லாம் குடுக்க மாட்டாங்களாம் , சிலபஸ் அதாங்க பாட திட்டம் என்னகிரத்தை மட்டும் கையுல குடுதுடவாங்க அத வச்சுக்கிட்டு நாமளாதான் புத்தங்கள தேடி பிடிச்சு பாடத்தையும் , தலைப்பையும் கண்டு புடிச்சு படிசுக்கணும் . இது எல்லாம் நடக்குற கதையா ? பரிட்சைல புக்ஸ்சை கைல குடுத்து எழுத சொன்னாலும் " இன்னைக்கு என்ன எக்ஸாம் டா  மாமு " ன்னு அப்பாவிய கேக்குற ஆளுங்க நாங்க .  நிற்க


                   இரண்டாவது வருடம் முதல்  நாள் காலேஜ் . கிளாஸ் ல அறிமுக படலம் எல்லாம் ஆரம்பிசுச்சு . யாரு யாரு என்ன பாடம் எடுக்க போறாங்க, அவங்க பேரு என்ன , அப்புறம் எங்க ஒவ்வொருத்தர் பேருன்னு   ஒவ்வொரு ப்ரொபசரா வந்து மொக்கை போட ஆரம்பிச்சாங்க. காலைல ஆரம்பிச்ச இந்த மொக்கை மதியம் உணவு இடைவேளை முடிஞ்சும் வெற்றிகரமா போய்கிட்டு இருந்துச்சு . அடேங்கப்பா   சாமி !!!!!! ஆள விடுங்கபா முடியல அப்பிடிங்கரவரைக்கும் தெளிய வச்சு தெளிய வச்சு அடிச்சுகிட்டு இருந்தாங்க .
ஒரு வழியா கடைசி  பீரியட் வந்துடுச்சு . அப்போதான் ஒரு ப்ரொபசர் கிளாஸ் குள்ள வந்தாரு , நாங்க எல்லாம் மனசளவுல அப்பாடி  ஒரு வழிய கடைசி பீரியட் ஆகிடுச்சு இது முடிந்தா கிளம்பிடலாம் , இன்னைக்கு ஹாஸ்டல் மெஸ்ல டீ கூட பஜ்ஜி குடுபாங்களா இல்ல சமோசா குடுபாங்களான்னு கடுமையான யோசனைல உக்காந்து இருக்கோம் . அவர் என்னடானா வந்ததும் என்னபா பாடத்தை ஆரம்பிக்கிலாமா அப்படினாறு, ஐயோ அம்மாடி அப்படின்னு எங்களுக்கு தூக்கி வாரி போட்டுச்சு , கடைசி பீரியட் மணி 4:10  க்கு வந்து பாடத்தை ஆரம்பிகிலாமன்னு முதல் நாளே கேக்குராறேன்னு,  "சார்ர்ர்ர் " அப்படின்னு இழுக்க , " ஹ ஹ ஹ ன்னு அவர் சிரிச்சுட்டு புரியுதுபா புரியுது என்னடா வந்த முதல் நாளே பாடம் எடுக்குறேன்னு சொல்லுறேன்னு பயந்துடீன்களா ? சரி சரி வேண்டாம் , இன்னைக்கு அறிமுகத்தோட நிறுத்திகலாம்"  அப்படினாறு,  அப்பத்தான் எங்களுக்கு உசுரே வந்துச்சு . ஒரு வழியா அறிமுக படலம் எல்லாம் முடிஞ்சு , அவர் சொன்னாரு , " நான் உங்களுக்கு இந்த செமஸ்டர்  Engineering Surveying  , subject எடுக்கபோறேன் . அதுக்கு என்ன புக்ஸ் வாங்கணும் , எந்த ஆர்தர் ( Author ) வாங்கனும்ன்னு சொல்லுறேன் நோட் பண்ணிகோங்கனாரு" , அதை போர்டுளையும் எழுதி போட்டாரு , சரி நானும் இவரு ரொம்ப நல்லவரா இருகாறேன்னு எதுக்கும் நோட் பண்ணிக்குவோம்ன்னு பெரிய மனசு பண்ணி நோட் எடுத்து நோட் பண்ணிகிட்டேன் , 



                ஆனா பாருங்க , கடைசி பீரியட்கிரதுனாளையும் , ஹாஸ்டல் மெஸ்ல போய் பஜ்ஜி சாப்பிடுற அவசரதளையும் இருந்ததுனால ஆர்தர் பெயர நோட் பண்ணும போது ஒரு சின்ன தப்பு நடந்து போச்சுங்க . சார் சொன்ன ஆர்தர் பெயர்  Punmia , நான் நோட் பண்ணது  Punima . ரொம்ப சின்ன தப்புதான் m க்கு அப்புறம் போடா வேண்டிய  i யை , m க்கு முன்னாடி போட்டுட்டேன் .
இது ஒரு தப்பாங்கா ? 

சரி  அத விடுங்க , நான் அடுத்த நாளே வீட்டுக்கு போன் போட்டு அப்பா நான் இன்ஜினியரிங் புக்ஸ் வாங்கணும் ஒரு ஐயாயிரம் ருபாய் அனுப்புங்கன்னு  சொல்லிட்டேன் .ஏன்னா? நான் எதுலயும் கரெக்ட்டா இருக்க ஆளு . பணம் வந்தாதானே செலவு பண்ண முடியும் , நம்ப வேலை நமக்கு முக்கியம் இல்லையா ? வீட்டுல பணம் வாங்குரதுக்கு இது ஒரு சாக்கு . சரின்னு அப்பாவும் பையன் கேக்குரானேன்னு உடனே பணத்த அனுப்பிட்டாரு , அப்புறம் என்ன? ஒரே கொண்டாட்டம் தான் அந்த வாரம் புக்ஸ் வாங்குறதுக்கு வந்த பணத்த வச்சு  பட்டையா கிளப்பியாச்சு. கடைசில கைல மிஞ்சினது 500 ரூபாய் தான் , சரி மிஞ்சுன பணதுளையும் புக்ஸ் வாங்கலைன்ன மனசாட்சி ஒத்துக்காது , நாங்கெல்லாம் மனசாட்சி படி வாழுறவங்கா  ஹி ஹி ஹி . அதனால புக்ஸ் வாங்க முடிவு பண்ணியாச்சு . ஆனா எங்க வாங்குறது? எந்த கடைல இன்ஜினியரிங் புக்ஸ் கிடைக்கும்? எதுவும் தெரியாது . ஆனா முதல் வருஷம் முழுசும் நம்பள வச்சு ராக்கிங்கிற பேருல கும்மி அடிச்சா சீனியர்ஸ் எதுக்கு இருக்காங்க . அவங்ககிட்ட போய் கேட்டேன் " அண்ணே இன்ஜினியரிங் புக்ஸ் எங்கே கிடைக்கும் ? "  
"டேய் நேரா பஸ் புடிச்சு கோயம்புத்தூர் போ , அங்க சேரன் புக் ஸ்டோர்ன்னு ஒன்னு இருக்கும் அங்க போய் கேளு. நீ என்ன புக் , என்ன ஆர்தர் கேட்டாலும் கிடைக்கும் அங்க கிடைக்காத இன்ஜினியரிங் புக்ஸ்யே இல்ல , அவ்வுளவு பெரிய புக் ஸ்டோர் டா " அப்படினாங்க . ஓகே ரைட்டு , சீனியர்ஸ் கோடு போட்ட நாங்க ரோடு போட்டுடுவோம் இல்ல . 
சரின்னு அந்த சனி கிழமை காலைல குளிச்சுட்டு (நம்புங்க) பஸ் புடிச்சு கிளம்பிட்டேன் புக் வாங்க . கூட நான் கிளாஸ் ல நோட் பண்ணி வச்சு இருந்த ஆர்தர் பேரு இருக்க பேப்பர் கைல எடுத்துகிட்டாச்சு . நேரா புக் ஸ்டோர் க்கு போயாச்சு , கூட்டம் அம்முது . இருந்தாலும் நாம்ப விடுவோமா? உள்ள போய் அங்க இருந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட ரொம்ப ஸ்டைல் ஆ (அது ஏன்னு தெரியல பொண்ணுங்களை பார்த்தாலே நமக்கு ஸ்டைல் தன்னால வந்துடுது . . ) " surveying புக் வேண்டும் " அப்படினேன்
"என்ன ஆர்தர் சார் " இது அந்த பொண்ணு , உடனே கைல இருந்த பேப்பர் எடுத்து பார்த்தேன் அதுல நான் தெளிவ நோட் பண்ணி வச்சு இருந்தேன் ஆர்தர் பேரு : Punima . இதை எப்படி படிபிங்கா?  " புனிமா " ஆமா அப்படிதான் . இருக்கிற கூட்டத்துல , நானும் சத்தம சொன்னேன் , " புனிமா " அப்படின்னு , அந்த பொண்ணு ஒரு மாதிரி பார்த்துட்டு உள்ள போச்சு . போயிட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு வந்து " சார் அந்த ஆர்தர் இல்ல , வேனும்ன surveying  வேற ஆர்தர் இருக்கு தரவான்னு கேட்டது . நான் உடனே அதெல்லாம் முடியாது எங்க ப்ரொபசர் அந்த ஆர்தர் தான் சொல்லி இருக்காரு , நீ போய் இன்னொரு முறை நல்ல பார்த்து எடுத்துட்டு வாமா ன்னு சொன்னேன் , அந்த பொண்ணு முறைசுக்கிட்டே மறுபடியும் உள்ள போச்சு . கொஞ்சம் நேரம் கழிச்சு திரும்ப வந்து " சார் இல்ல சார் " அப்படின்னுச்சு . எனக்கு வந்தது பாருங்க கோவம் , என்ன மா நீ கடைக்கு புதுசா?  ? கோயம்புத்தூர்லையே இதுதான் பெரிய புக் ஸ்டோர் அப்படின்னு சொன்னாங்க , இங்க கிடைக்காத இன்ஜினியரிங் புக்கே கிடையாதுன்னு சொன்னாங்க , நீ என்னடான ஒரு surveying புக் இல்லன்னு சொல்லுறேன்னு சத்தம் போட்டேன் (இன்ஜினியரிங் படிக்குரேணாம்) . இதெல்லாம் கொஞ்சம் நேரம் கவனிசுகிட்டு இருந்த கடை ஓனர் அந்த பொன்னை கூப்பிட்டு " என்ன மா என்ன பிரச்னை ன்னு கேட்டு இருக்காரு , அந்த  பொண்ணும் விஷியத்தை சொல்லி இருக்கு  . உடனே அந்த கடை ஓனர் என்னை கூப்பிட்டாரு . கூப்பிட்டு சொன்னாரு, 
" தம்பி , நான் இந்த புக்ஸ் ஸ்டோர் கடந்த இருபது வருசமா நடத்திகிட்டு இருக்கேன் .ஆனா தம்பி , " என் 20 வருஷம் அனுபவத்துல முனியம்மான்னு ஒரு ஆர்தர் கேள்வி பட்டதே இல்ல தம்பி " அப்படினாறு ( நான் புனிமா ன்னு சொன்னது அந்த பொண்ணு காதுல முனிமான்னு கேட்டு இருக்கு , அத அந்த பொண்ணு ஓனர் கிட்ட சொல்லும் போது அது இன்னும் மாறி முனியம்மா ஆகிடுச்சு , ஐயோ ஐயோ இதெல்லாம் எங்க போய் சொல்ல ? " ) 
ஆத்தாடி , என்னது முனியம்மா வா ? "  ஆஹா எங்கயோ தப்பு நடந்து போச்சுட கை புள்ளை ஓடு டா ஓடு , பின்னங்கால் புடனில அடிக்க ஓடிடு ன்னு , மனசு குல்லையே நினைச்சுகிட்டு ,ஆனா முகத்துல எந்த கெத்தும் குறையாம , சரி சார் நான் அப்புறம் வரேன்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம ஒரே நடையும்  ஓட்டமும் தான் . அவமான பட்டாண்ட ஆட்டோகாரன்ன்னு எஸ்கேப் ஆகி , நேரா ஹாஸ்டல்க்கு போய் நம்ப பிரிண்ட்ஸ் கேட்டேன் ஒண்ணுமே தெரியாத மாதிரி " மச்சி நம்ப ப்ரொபசர் சொன்னாரே surveying க்கு ஒரு ஆர்தர் , அது என்ன பேரு ? " அப்படின்னு கேட்டேன் " அது புன்மியா ( Punmia ) டா மச்சி , அப்படினானுங்க . "spelling  என்னடா ?"  இது நானு , P u n m i a  டா " இது அவன் . 
" ஆஹா நாம்பதான் தப்பா  எழுதிட்டோமா? "   ரைட்டு மேட்டரய் அப்படியே அம்முகிடுவோம் இல்லனா இந்த பசங்க இதை தெரிஞ்சுகிட்ட நோட்டீஸ் போர்டுல அடிச்சு ஒட்டாம விடாமாட்டன்னுங்க , அப்புறம் மீதி இருக்க மூணு வருசமும் நம்பள முனியம்மா ன்னு பட்ட பேரு வச்சு கூப்பிட்டாலும் கூப்பிடுவானுங்கன்னு ,  அப்படியே கம்பெனி ரகசியத்தை அம்முகிட்டேன் . எப்பூடிஈஈஈஈ . .  நாங்க எல்லாம் எவ்வளவு பெரிய ராஜா தந்திரி !!!.
சரி இந்த வரலாற்று சிரிப்பு மிக்க நிகழ்வை இதுவரைக்கும் யாருகிட்டயும் சொல்லாம பாதுகாத்துட்டு  வரேன் , நீங்களும் யாருகிட்டயும் சொல்லிடாதிங்கா  ப்ளீஸ்ஸ் ஸ் ஸ் ஸ் . . . . . ஓகே வா ? 


Always , 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

14 comments:

குறையொன்றுமில்லை. said...

முத ஆளா வந்துட்டோம்ல.இஞ்சினீரிங்
படிப்பை ஒழுங்கா முடிச்சியா இல்லியா. ரெண்டாவது வருஷமே கடைக்காரப்பொண்ணையெல்லாம் முனி
யம்மா ஆகிட்டியே. நல்லா படிச்சே போ.
பாவம் அந்த ஆத்தர் தமிழ் தெரிஞ்சிருந்தா நொந்து போயிருப்பாரு.
தப்பிச்சாரு.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

அம்மா , வாங்கோ வாங்கோ . . ஹி ஹி ஹி
ஏதோ என்னால முடிஞ்சா ஒரு சமுக சேவை தானே அம்மா , ஆனா நான் முனியம்மா ஆக்கினது கடைகாரா பொண்ணுங்களை இல்ல , அந்த கடன்கார ஆர்தரை தான் ஹி ஹி ஹி ஹி , எந்தா தண்டி புக் போட்டு இருக்காரு . ஹி ஹி ஹி
ஆனா எப்படியோ நான் இன்ஜினியரிங் படிச்சு engineer ஆகிட்டேன் . ஆனா அந்த ஆர்தர் முனியம்மா வைத்தான் கடைசி வரைக்கும் கண்டு புடிக்க முடியல ஹி ஹி ஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வா முனிம்மா வா முனிம்மா வா
முனிம்மா வா ஹாய் வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா வா

அடி நீயும் நானும் ஜோடி
சும்ம பீச் பக்கம் வாடி

அதோ வர்றா பொண்ணு
நம்ம ஆயா கடை பன்னு
இளிச்சிடாத நின்னு
அவ கட்டிடுவா டின்னு

தண்ணி கொண்டா சொம்புல
தள்ளி நிக்கும் பொம்பளை
கோபம்வந்தா வம்புல
நான் அடிச்சிடுவேன் கொம்புல

வா முனிம்மா வா வா முனிம்மா வா
வா முனிம்மா வா வா முனிம்மா வா

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
நான் கிணத்துக் கடவு நண்டு

நீயும் நானும் ஃப்ரண்ட்
உங்க வாத்தியாரு மண்டு
நாலும் நாலும் எட்டு
நம்ம பிரிக்க வந்தா வெட்டு
எட்டு ரெண்டு பத்து
நம்ம நண்பர் எல்லாம் முத்து

ராவைய்யரா ரா ராத்திரிதான் ரா
ஜிங்குன்னு ஜோரா
நீயும் தட்டிடு ஜால்ரா
ஜிங்குன்னு ஜோரா
நீயும் தட்டிடு ஜால்ரா

வா முனிம்மா வா வா முனிம்மா வா

அய்யோ யம்மா காலு
அங்க கொட்டிடுச்சான் தேளு
கை கொடுத்த ஆளு
நம்ம கழுத்தறுத்தான் பாரு

சும்மா நின்ன சங்கு
இதை ஊதிப்புட்ட இங்கு
எங்கே எங்க பங்கு
இல்ல எடுத்திடுவோம் நொங்கு

ராவைய்யரா ரா ராத்திரிதான் ரா
ஜிங்குன்னு ஜோரா நீயும் தட்டிடு ஜால்ரா
வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா
வா முனிம்மா வா முனிம்மா வா முனிம்மா வா

அடி நீயும் நானும் ஜோடி
சும்மா பீச் பக்கம் வாடி

வா முனிம்மா வா வா முனிம்மா வா

குறையொன்றுமில்லை. said...

நான் சொல்லவந்தது என்னன்னா
கடைக்காரப்பெண்ணை முனி
யம்மா முழி முழிக்கவச்சுட்டியேன்னுதான்

அமுதா கிருஷ்ணா said...

அடப்பாவமே முனிம்மா எழுதின புத்தகத்திற்கு அவ்வளவு பணமா???

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///அமுதா கிருஷ்ணா said...

அடப்பாவமே முனிம்மா எழுதின புத்தகத்திற்கு அவ்வளவு பணமா???///

உங்களுக்கு அந்த புக் கிடைச்சுடுச்ச அமுதா ?
முடிஞ்சா எனக்கு ஒரு ஜெராக்ஸ் போட்டு ஒரு காபி அனுப்புங்களேன் ஹி ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வா முனிம்மா வா முனிம்மா வா
முனிம்மா வா ஹாய் வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா வா
/////

சிரிப்பு போலீஸ்கார் , why calling முனியம்மா ?
any prob?
talk me , i solve prob ,
dont worry , be happy (எல்லாம் வடிவேலு குரல்ல படிக்கணும் )

sruthi said...

rajesh he he he he. antha payan ne thana silent. yaar kittayum solla mattan

சமுத்ரா said...

ha ha good :)

Unknown said...

அப்ப இனிமே உங்கள முனியம்மா புகழ் ராஜேஷ் னு கூப்பிடலாமா

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம் ராஜேஷ், என் பதிவிர்க்கு வந்து கருத்திடதற்க்கு நன்றி.

இன்றுதான் உங்கள் பதிவிர்க்கு வருகிறேன். சிரித்து சிரித்து வயத்தை வலிக்கறது. மீதி பதிவுகளை படிப்பதற்க்குள் நான் ஒரு வழியாகிவிடுவேன் என்று நினைக்கிறேன்...

Sathish Kumar said...

//அப்புறம் மீதி இருக்க மூணு வருசமும் நம்பள முனியம்மா ன்னு பட்ட பேரு வச்சு கூப்பிட்டாலும் கூப்பிடுவானுங்கன்னு , அப்படியே கம்பெனி ரகசியத்தை அம்முகிட்டேன்//

Nanbaa....Soooppparrr...! :-)

Anonymous said...

ha ha ha ha.... all credit goes to minima rajesh

தனிமரம் said...

யார்கிட்டையும் சொல்லமாட்டன் ரகசியத்தை போடாங்!சும்மா!

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters