Followers

Friday, July 15, 2011

                வழக்கமா தமிழ் பாடல்கள் , படங்கள பத்தி பதிவு போட்டு படிச்சு ரொம்ப போர் அடிக்குது . அதனால ஒரு மாற்றத்துக்கு எனக்கு புடிச்ச ஆங்கில பாடல்கள் இங்கே .

             எப்பவுமே நம்ப வாழ்க்கைல தெரிஞ்சோ தெரியாமையோ ஆங்கில பாடல்களை நாம கடந்து செல்ல வேண்டி இருக்கும் . ஆனா ஆங்கில பாடல்கள் நம்மை  எந்த அளவுக்கு கவர்கிறது அப்படிகிரதுதான் விஷியம். பெரும்பாலும் ஆங்கில பாடல்கள்ல இருக்க ஒரே பிரச்னை புரியுறது இல்லை  அப்படிகிறதுதான். எனக்கும் அப்படிதான் . ஆனா கொஞ்சம் கூர்ந்தது கவனிச்சா  கண்டிப்பா புரியும் , ஆங்கிலம் முழுமைய தெரிஞ்சு இருக்கணும்கிறது கூட அவசியம் இல்ல . அதனோட கருவும் , என்ன சொல்ல வராங்க அப்படின்னு காட்சிகளை கவனிச்சாலே போதும்.
              ஆனா இந்த ஆங்கில பாடல்கள் பல வகையில் இருக்கு . என்னோட நண்பனோட ரூம்ல போய் பார்த்தா அவனோட அலமாரி முழுவதும் ஆங்கில பாடல் கேசட் ,  CDs  இருக்கும் . IRON MONKEY , RICKY MARTIN , BON JOVI , BRITNEY SPEARS , AQUA அப்படின்னு ஏகப்பட்ட பாடல்கள் இருக்கும் , எனக்கு  பார்க்கவே பிரமிப்பா இருக்கும் .   எப்பவும் WALKMAN ல(அப்போ எல்லாம் WALKMAN தான் )  பாட்டு கிட்டுகிட்டே இருப்பான்.
             இதுல இந்த ஆங்கில பாடல்களை கேக்குறவங்க பேசுறதும் , விவாதிக்கிறதும் அட அட அட ,  நாம மட்டும் அங்க இருந்தோம்ன கண்டிப்பா ஒரு ஈர வெங்கையமும் புரியாது .  POP , RAP , HI PITCH , BASE ,  அது, இதுபானுங்க  . ஒரு நாள் நான்  என் நண்பன்கிட்ட மச்சி நிஜமாவே எனக்கு நீங்க கேக்குற ஆங்கில பாடல்கள் எல்லாம் ஒண்ணுமே புரிய மாட்டின்குது , நீ கொஞ்சம் விளக்கமா சொல்லேன் அப்படினேன் . சரிடா நான் உனக்கு புரியுற மாதிரி சொல்லுறேன் , இப்போ ஆங்கில பாடல்கள்ல பல வகை இருக்கு ,
முதல்ல  ROCK MUSIC , செமையா கத்துவாங்க ஆனா ஒண்ணுமே புரியாது அதுதான் ROCK MUSIC .  ரெண்டாவது  HEAVY ROCK , இதுல என்னவோ பேதி ஆகுற மாதிரி கத்துவாங்க காதுல உடுக்கை அடிக்கிற மாதிரி இருக்கும் .
மூணாவது METAL ROCK இந்த பாட்டை கேட்டே உனக்கு பைத்தியமே புடிச்சுடும் அப்படி உசுரு போறா மாதிரி கத்துவானுங்க.
ஆனா கடைசிய இருக்கு பாரு அதுதான் ACID ROCK அப்படினான் ,
என்னடா அதை கேட்ட நிஜமாவே உசுரு போயிடுமா அப்படின்னு கேட்டேன் .
அப்படியே காதுல ஈயத்தை காச்சி  ஊத்துன மாதிரி இருக்கும் அதுதான் ACID ROCK அப்படினான் . அடேங் அப்பாடி போதும் டா சாமி உன் விளக்கம் ஆள விடுன்னு வந்துட்டேன் .
இருந்தாலும் எனக்கும் ஆங்கில பாடல்கள் பிடிக்கும். 


சரி இப்போ எனக்கு புடிச்ச பாடல்களை பார்க்கலாம். 




 1. மைக்கல் ஜாக்சன்  ( Micheal Jackson - Invisible)








முதல் பாடல் , வேற யாரு King of Pop தல ஜாக்சன் தான் .இந்த ALBUM தான் நாம்ப தல கடைசிய பண்ணதுன்னு நினைக்குறேன் . சும்மா சூப்பர் அஹ இருக்கும் , இதுல என்ன விசேஷம் என்றால் ஜாக்சன் சண்டையெல்லாம் போட்டு இருப்பாரு .

மைக்கல் ஜாக்சன் அப்படினாவே பச்சை குழந்தை முதல் , பல்லு போன கிழவி வரைக்கும் ஆட்டம் போடா வைப்பாரு. இந்த பாட்டை பாருங்க கண்டிப்பா புடிக்கும் .


 2. ஷாகிரா  ( Shakira - FIFA 2010 Theme Song )









         ஷகிரா வோட முந்தைய பாடல்கள் கேட்டு இருக்கேன் பார்த்தும் இருக்கேன் ஆனா பாருங்க இதுவரைக்கும் இவ்வளவு அழகான , புத்துணர்ச்சியான ஷாகிரவை இதுலதான் பாக்குறேன் . அசோ கொள்ளை அழகு அதுவும் அந்த கைய சுழட்டி வணக்கம் வைக்குறது அவ்வ்வ்வ்வ்வ் . அவ்வுளவு அழகு . . .

 3 . FIFA 2010 Theme Song : 










                இதுவும் உலக கோப்பைகாக எடுத்த பாட்டு தான் , பாட்டு ஆரம்பிக்கும் போதே நம்ப இளைய தளபதி பாட்டு போல சும்மா பட்டைய கிளப்பும்,  தார தப்பட்டைகள்  கிழிஞ்சு தொங்க வேண்டாமாகிற மாதிரி ஆரம்பமே அமர்களமா  நம்மை ஆட்டம் போடா வைக்கும் . இந்த பாட்டை கேட்டுட்டு உங்களுக்கு ஆட தோணலனா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது . . .

 4 . FIFA 2010 Theme Song :










 5. The Climb










 6 . I''ll be back , after 2 pm










 7 . Nickelback - Someday











 8. Nickelback - Never gonna be alone










 9 . Bond - Shine










 10 . Mask of Zorro : Dance












 11 . Mask of Zorro : Love Song











டிஸ்கி : 

       
இந்த பாடல்கள் அனைத்தையும் Headset  போட்டுக்கிட்டு புல் சவுண்ட் வச்சு ரூம்ல தனிய இருக்கும் போது குறைஞ்ச வெளிச்சத்துல கேளுங்க பாட்டை நல்ல என்ஜாய் பண்ண முடியும் . அப்பத்தான் ஒவ்வொரு மியூசிக்கின் நுணுக்கமும் முழுவதும் நமக்கும் கேக்கும் . என்ஜாய் . . . .


Always , 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

6 comments:

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ஏதாவது வீடியோ PLAY ஆகலான சொல்லுங்கோ , லிங்க் குடுக்குறேன் நண்பர்களே . . .

சதீஸ் கண்ணன் said...

பாட்டுகள விட introduction பயங்கரம்.. ரசித்து படித்தேன்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@சதீஸ் கண்ணன் said...

பாட்டுகள விட introduction பயங்கரம்.. ரசித்து படித்தேன் ////

நன்றி சதிஸ் , இன்னும் ஒவ்வொரு பாட்டுக்கும் நான் என்ன ரசிச்சேன் அதுல என்ன ஸ்பெஷல் அப்படின்னு எழுதனும்ன்னு நினைச்சேன் ஆனா டைம் இல்ல . முடிஞ்சா அதையும் எளுதிடுறேன் . . வருகைக்கு நன்றி . . .

RAMA RAVI (RAMVI) said...

பிரமாதம் ராஜேஷ்.பாடல்கள் நல்ல தேர்வு,உஙகளுக்கு இதெல்லாம் பிடித்தால் கட்டாயம்,dream girls,music and lyrics,high school musical போன்ற படங்களின் பாடல்களும் பிடிக்கும்.. அவற்றையும் பாருங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல கலக்சன்பா.........

luthfi said...

Mudeeyalada saameeee

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters