Followers

Tuesday, October 18, 2011 48 comments


            சரியா இன்று ( 18-Oct-2011)  பதிவுலகில் வெற்றிகரமாக ( !! ??? )இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து  வைக்கிறேன் .  போன வருடம் இதே நாள்  ஏதோ விளையாட்டாய் ஆரம்பித்தது இன்றோடு ஒரு வருடம் முடிந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் அப்படி ஒன்றும் பெரிசா எழுதி சாதிக்கவில்லை என்றுதான் நினைக்கிறன் . ஆனால் நான் என்னுடைய முதல் பதிவில் சொன்னது போல யாருடைய மனதையும் புண்ப்படுத்தாமல் இதுவரை எழுதி வந்து இருக்கிறேன் என்று நினைக்கிறேன் , இனிமேலும் அப்படியே. என்னை அறியாமல் அப்படி யாரையேனும் புண்படுத்தி இருந்தால் கனிவாக மன்னித்து விடுங்கள். என்னை இது வரை ஆதரிதவர்களுக்கும் , அங்கிகரித்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

               இந்த இனிமையான தருணத்தில் , என்னை முதல் முதலாய் என்னை அங்கிகரித்தவர்களைம் , ஆதரித்தவர்களையும்  நினைவு கூறவும் , நன்றி சொல்லவும் கடமைப்பட்டு இருக்கிறேன் . ஏனென்றால் எப்பவுமே முதலில் கிடைப்பதற்கு ஒரு தனி சிறப்பு உண்டு , முதல் காதல் , மழலையின் முதல்  பேச்சு , முதல் முத்தம் போன்று .

1) என்னையும் ஒரு ஆளாய்  மதித்து இவனும் ஏதாவது எழுதுவான், எதுக்கும் follow பண்ணுவோம் என்று join செய்த முதல் follower நண்பர்  சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கு நன்றி .

2) மிக பிரபல பதிவர் ஆனாலும் எந்த வித தாக்கமும் இல்லாமல் , அக்கறையுடன் எனது முதல் பதிவுக்கு மதிப்பளித்து பின்னூட்டம் இட்டு வாழ்த்திய நல்ல உள்ளங்கள்   பனித்துளி சங்கர் அவர்களுக்கும் , தமிழ்த்தோட்டம் அவர்களுக்கும் நன்றிகள் .

3) நான் பதிவு எழுத ஆரம்பித்த இரண்டாவது மாதத்திலையே அட இவனும் என்னமோ எழுதுறான் எல்லாரும் கொஞ்சம் வந்து பாருங்க என்று என்னை முதல் முதலில் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய அருமை நண்பர் அருண் பிரசாத் அவர்களுக்கு நன்றி

4) நான் புதிய பதிவர் ஆனாலும் என் மேல் நம்பிக்கை வைத்து என்னையும் முதல் தொடர்ப்பதிவு ❅கமல்ஹாசன் கோல்டன் ஹிட்ஸ் - 10❅
எழுத அழைத்த நண்பர் Philosophy பிரபாகரன்  க்கு நன்றி


           அது  மட்டும் அல்லாது என்னை இரண்டாவது முறை வலைச்சரத்தில் ஆறுமுகப்படுத்தி,  பெருமைப்படுத்திய லக்ஷ்மி அம்மா அவர்களுக்கும் எனது நன்றிகள் .
இந்த ஒரு வருடத்தில் மொத்தமே 33 பதிவுகள்தான் எழுதி இருக்கிறேன் . இது ஒரு பிரபல பதிவர் ஒரு மாதத்தில் எழுத்தும் எண்ணிக்கை. என்னவோ என்னால் அவ்வுளவுதான் எழுத முடிந்தது . என்னை பொருத்தவரை எண்ணிக்கையை விட நல்ல தரமான பதிவுகளை இடுவதுலையே உடன்பாடு. ஒவ்வொரு பதிவு எழுத்தும் போதும் கண்டிப்பாக இந்த பதிவு கண்டிப்பாக சிரிக்க வைக்க வேண்டும் அல்லது சிந்திக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பேன் . இந்த வருடத்தில் ஏதோ கொஞ்சம் சிந்திக்க வைக்கும் விழிப்புணர்வு பதிவுகளை எழுதி இருக்கிறேன் . நண்பர்களை நிறைய சிரிக்கவும் வைத்திருக்கிறேன் என்று நம்புகிறேன் . 

             நான் எழுதிய பதிவுகளிலையே குளிக்கும் போது சோப்பு நழுவாம குளிப்பது எப்படி ?  என்கிற பதிவுதான் இதுவரை அதிக அளவில் பெரும்பாலானவர்களால் படித்து வயுறு வலிக்க சிரிக்க வைத்த பதிவு . செம ஹிட் . நானே எதிர் பார்க்கவில்லை. இந்த பதிவு என் இவ்வளவு ஹிட் ஆகியது என்று நான் யோசித்து பார்த்த போது எனக்கு காரணம் கிடைத்தது அது ஒண்ணும் இல்லைங்க நான் பதிவு எழுத சரியான கருவும் யோசனைகளும் எங்கு கிடைக்கும் என்று கேட்டால் சிரிப்பீர்கள் . நிஜமாவே நான் தினமும் ஷவரில் குளிக்கும் போது தான் பதிவுக்கான யோசனையும் , கருவும் கிடைக்கிறது . ஹி ஹி . .

              இதே போல் நல்ல தரமான சிரிக்கவும் , சிந்திக்கவும் வைக்கும் பதிவுகளை தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். அதற்க்கு நண்பர்களாகிய உங்களின் ஆதரவும் , உக்கமும் கண்டிப்பாக தேவை. கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையுடன் . நன்றி நன்றி நன்றி

இந்த பதிவை என்னை அங்கிகரித்த , ஆதரிக்கும் நல்ல உள்ளங்களுக்கு சமர்பிக்கிறேன் .

மனமார்ந்த நன்றிகளுடன் ,

ராக்ஸ்

12 comments

நண்பர்களுக்காக . . .


Good Bye தமிழ்மணம் . . .

மச்சி ஓபன் தி பாட்டில்!!!!!!! . . . .
ராக்ஸ் . . .


Thursday, October 13, 2011 17 comments


                   படம் முடிய ராத்திரி 9:30 மணி ஆகிடுச்சு . தியேட்டரை விட்டு வெளிய வந்த நாங்க நாலு பேரும் இங்கயே எங்கையாவது சாப்பிட்டு போய்டுறது முடிவு பண்ணினோம் ஏன்னென்றால் இனிமே ஹாஸ்டல் மெஸ்க்கு போனா ஒன்னும் கிடைக்காது தெரியும். சரி எங்கே சாப்பிடுறதுன்னு டிஸ்கசன் வந்த போது ஒரு குறிப்பிட்ட புரோட்டா கடைல புரோட்டா சாப்பிடலாம்ன்னு இருந்த நாலு பேருல ரெண்டு பேரு அவுங்கலாவே ஏக மனதா முடிவு பண்ணி கூட்டிட்டு போய்ட்டானுங்க. புரோட்டா கடைக்கு போனதுக்கு அப்புறம்தான் எனக்கு தெரிஞ்சது அது சுத்தம், சுகாதாரத்துல ISO 9001 , ISI  சர்டிபிகேட் எல்லாம் வாங்கின கடைன்னு. கடையை பார்த்த உடனே எனக்கு லைட்டா கண்ணா கட்டுச்சு , அதுலயும் அங்க புரோட்டா மாஸ்டரையும் , சப்ளையரையும் பார்த்த உடனே இருந்த கொஞ்சம் நஞ்சம நம்பிக்கையும் அடியோட குழி தோண்டி புதைக்க வேண்டியதா போச்சு. டேய் மாமு இந்த கடைலதான் புரோட்டா சாப்பிடனுமா? வேற கடைக்கு போலாம்டா அப்படின்னு சொன்னதுக்கு , அதெல்லாம் முடியாது இதே கடைலதான் புரோட்டா சாப்பிடணும் என்னோட பிரிண்ட்ஸ் ரெண்டு பேரும் ரெண்டு கால்ல நிக்குரானுங்க ( ரெண்டு பேரும் ஒத்த கால்ல நிக்குரானுங்க, ஒவ்வொருத்தரும் ஒரு ஒரு கால், மொத்தம் ரெண்டு கால்). டேய் மாப்ளே இந்த கடை கொஞ்சம் நல்ல இல்லடா அப்படின்னதுக்கு , ஏன்டா நீயெல்லாம் 5 ஸ்டார் ஹோட்டலதான் சாப்பிடுவியோ அப்படின்னு சோஷலிசம் பேச ஆரம்பிசுடானுங்க. இதுல கூட இருந்த இன்னொரு நண்பன் வேற " மச்சான் இந்த ஹோட்டல் புரோட்டா சாப்பிட்டா  லிவர்க்கு நல்லதுடா" அப்படினான் . "போச்சுடா இது வேறையா ?" அப்புறம்?  அப்படினேன் , " டேய் மாமு அது மட்டும் இல்லடா இந்த ஹோட்டல் புரோட்டவுக்கு தனி டேஸ்ட் இருக்குடா" அப்படினான் . அப்படி என்னடா தனி டேஸ்ட்டுன்னு கேட்டதுக்கு "இந்த கடை புரோட்டா மாஸ்டர் சும்மா சாதாரணமா புரோட்டா பிசைய மாட்டருடா , சும்மா புரோட்டா மாவை வேர்வை சிந்தி பிசைவாறு பாரு,  அப்படி ஒரு டேஸ்ட் , அப்படி ஒரு Soft  . வாய்ல போட்ட உடனே கரைந்திடும் " அப்படினான் . அப்பவே எனக்கு குமட்டிகிட்டு வந்துடுச்சு. இருந்தாலும் இனிமே சொன்ன இவனுங்க கேக்கவா போறானுங்க ? விதி விட்ட வழி அப்படின்னு உள்ள போயாச்சு.
                மதியமே ஹாஸ்டல இருந்து கிளம்பியாதாலும் , சாயங்காலம் எதுவும் சாப்பிடாதளையும் பயங்கர பசி. வேற என்ன பண்ண? அந்த கடை ISI புரோட்டாவையே ரெண்டுக்கு , நாலா சாப்பிட வேண்டியதா போச்சு. சாப்பிட்டு எல்லாம் முடிச்சுட்டு பைக் எடுத்துகிட்டு ஹாஸ்டல் வந்து சேர ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சு . புரோட்டா சாப்பிட்டு ஒரு மணி நேரத்துக்கு மேல ஆனதால புரோட்டா தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுச்சு. என்னடா அதான் ஏற்கனவே புரோட்டா மாஸ்டர் புரோட்டாவை வேர்வை சிந்தி பிசைஞ்சுடானே அப்புறம் எதுக்கு வயுறு தனிய பிசையுதுன்னு யோசிச்சுகிட்டே ரூம்ல படுத்து தூங்கியாச்சு.
                     மறுநாள் காலைல எழுந்துரிச்சா சும்மா வயுறு கடமுட கடமுடன்னு கலக்குது. உடனே அடிச்சு புடிச்சு பக்கெட்டை எடுத்துகிட்டு டாய்லெட்டுக்கு ஓடினா , எனக்கு முன்னாடி என் நண்பன் ஓடிகிட்டு இருக்கான், டேய் எங்கேடா ஓடுற அப்படின்னு பின்னாடியே நானும் ஓடி அவன் பக்கத்து டாய்லெட்க்குள்ள புகுந்தா , கொஞ்ச நேரத்துல பக்கத்து டாய்லெட்க்கு உள்ள இருந்து ஒரு சத்தம் , " மச்சான் டேய் பிரேக் புடிக்கலடா !!!!!!!!. . . பேதி ஆகுதுடா "  அப்படின்னு.  "டேய் ஆமாடா மாமு இங்கயும் பிரேக் புடிக்கலடா"  - இது நான். நாங்க ரெண்டு பேரும் பேசுறத கேட்ட பக்கத்துல டாய்லெட்டுல இருந்த இன்னொருத்தன் "டேய் இது என்ன கிரிக்கெட் மேட்ச்சாடா ? ரன்னிங் கமெண்ட்ரி குடுக்குரிங்கா ? பேசாம இருங்கடா " அப்படினான். அதுக்கு என்ன நண்பன் "ஆமா உனக்கு நார்மல் டெலிவரிகிற தலகனத்துல பேசாதடா , மவனே நீயும் நேத்து எங்க கூட ISO 9001 புரோட்டா சாப்பிட்டு இருக்குன்னும்டீ அப்போ தெரிஞ்சு இருக்கும் " அப்படினான். இப்படி ஒரு முறை ரெண்டு முறை அல்ல நாலு அஞ்சு முறை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி , சில முறை ஒன்னாவே கூட பாக்கெட்டை தூக்கிட்டு ஓட வேண்டியதா போச்சு. அப்புறம் எங்க ஓட? நடக்க கூட முடியாம ரெண்டு பேரும் " பப்பறப்பேன்னு "ரூம்க்குள்ள மல்லாக்க படுத்து கிடக்க , இவ்வளவு சீரியஸ் கலாட்ட நடந்துகிட்டு இருக்கு அப்பத்தான் ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு சாவகாசமா மத்த ரெண்டு பேரும் அதான் முதல்நாள் ராத்திரி இதே புரோட்டா கடைலதான் புரோட்டா சாப்பிடுனும்ன்னு ஒத்த காலுல நின்னு எங்களை பாழுங்கிணற்றில் தள்ளின படுபாவிங்க வந்தானுங்க. " என்னடா மாப்ளே என்ன ஆச்சு "  அப்படின்னு அக்கறைய விசாரிச்சானுங்க, " என்ன நோன்னுங்கடா? நான் அப்பவே சொன்னேன் இல்ல அந்த ஹோட்டல் வேண்டாம்டான்னு , இப்ப பாரு எங்க ரெண்டு போரையும் , பெருகுடல் , சிறுகுடல் , கல்லீரல் , கணையம் வரைக்கும் வெளிய வந்துடுச்சு பேதி ஆகி " அப்படினேன் கடுப்பாகி . நான் கடுப்புல இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டு அவனுங்க இன்னொருதன்கிட்ட போய் " என்ன மச்சான் அவ்வுளவு மோசமாவா பேதி ஆகுது? " ன்னு கேக்க . " போங்கடா டேய் போங்க, டாய்லெட்டுல எனக்கு பேதி ஆகுற ஸ்பீடுல" PSLV" ராக்கெட் மாதிரி நான் நாலு அடி மேல போறேனா பாத்துகோங்க அந்த அளவுக்கு மோசமா போகுதுடா டேய்"  அப்படினான் பாருங்க , அவ்வுளவு வேதனையுளையும் எனக்கு சிரிப்பு முட்டிக்கிட்டு வந்துடுச்சு ஹி ஹி ஹி . . .

          ஆனா அவனுங்க என்ன சொன்னனுங்க தெரியுமா? , " மச்சான் கண்டிப்பா இந்த பேதி நேத்து ராத்திரி சாப்பிட புரோட்டாவால இருக்காதுடா , நேத்து பார்த்த படத்தாலதான்னு  இருக்கும்டான்னு அடிச்சு சொன்னனுங்க, என்னென்றால் நாங்க பார்த்த படம்  ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் T. ராஜேந்தரின் , மோனிஷா என் மொனோலிச" , அப்படின்னு சீரியஸ் டிஸ்கஸ்சன்னு வேற. "என்ன கொடுமை சார் இதெல்லாம்? ". .

            ஆனா இதை எல்லாம் கேட்ட அவங்க ரெண்டு பேரும் சும்மா இல்ல , " Don't Worry மச்சி . . இதுக்கு எங்க கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு கவலை படாதிங்கடா, நான் சொல்லுற மாதிரி செய்யுங்க பேதி டக்குன்னு நின்னுடும்" ன்னு சொல்லிட்டு . "டேய் ஏதாவது சிவப்பு துணி இருக்காடா?" அப்படின்னு கேட்டான் . " அங்க பாருடா ஒரு பழைய சிவப்பு துண்டு இருக்கும்" ன்னு சொன்னேன். உடனே ஓடி போய் அதை எடுத்து ரெண்டா கிழிச்சு என் கைல ஒண்ணும் , என் பிரெண்ட் கைல ஒண்ணும் குடுத்தான்.  "இதை வச்சுக்கிட்டு என்னடா பண்ணுறது" அப்படின்னு நாங்க ரெண்டு பேரும் கேட்டோம் . "மச்சான் நெக்ஸ்ட் டைம்  டாய்லெட்க்கு இந்த சிவப்பு துணிய எடுத்துட்டு போங்க ,  பேதி ஆகும் போது கரெக்டா இந்த சிவப்பு துணிய ஆட்டி காட்டுங்கடா உடனே பேதி டக்குன்னு நின்னுடும்"  அப்படினான். நாங்க ரெண்டு பேரும் நிஜமாவே குழம்பி போயிட்டோம். " டேய் என்னாடா சொல்லுற? ஒண்ணுமே புரியல?????? "அப்படின்னு கேட்டதுக்கு அவுனுங்க ரெண்டு பேரும் சொல்லுரான்னுங்க " டேய் மாப்ளே என்னடா இது கூடவா புரியல உங்களுக்கு ? , ரொம்ப சிம்பிள்டா , சிவப்பு கொடிய காட்டின அவ்வளவு நீள ட்ரெயின்யே நிக்குது!!! , இந்த சுண்டக்கா பேதி நிக்காதா ????? ஹி ஹி ஹி ஹி . . " அப்படின்னுனானுங்க


        உடனே எனக்கு வந்தது பாருங்க கோவம், மறுபடியும் பேதியோட சேர்த்து  , அதுக்கு மேல அவனுங்க கிட்ட ஒரு வார்த்தை , ஒரு வார்த்தை பேசலையே நான் , பாக்கெட்டை எடுத்துகிட்டு கோவமா கிளம்பிட்டேன் அடுத்த ரவுண்டுக்கு . . . .


அன்புடன் ,
ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Thursday, October 6, 2011 24 comments

இதுவும் போன பதிவு ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும். . .(Part - 2).  வின் தொடர் பதிவுதான் . 
           இந்த ரகசிய கேமராக்கள் பெரும்பாலும் முகம் பார்க்கும் கண்ணாடி பின்னாடி கூட மறைத்து வைக்கப்படுகிறது  ஏனென்றால் அந்த இடம் தான் யாருக்கும் அவ்வுளவு சீக்கிரமாக சந்தேகம் வராத இடம் . இது எங்கு எல்லாம் நடக்கிறது என்று பார்த்தால் முன்பு சொன்னது போல பெரிய ஷொப்பிங் மால்களில் உள்ள பாத் ரூம்களில் , முக்கியமாக பெரிய துணிக்கடைகளில் பெண்கள் உடை மாற்றி சரி பார்க்கும் அறைகள் ( Trail Rooms ), பெரிய ஹோட்டல் ரூம்களில் உள்ள கண்ணாடிகள் மற்றும் ஹோட்டல் ரூம்களில் உள்ள குளியல் அறைகளில் உள்ள பெரிய கண்ணாடிகளின் பின்னால் வைக்க சாத்தியங்கள் அதிகம் . அதனால் பெண்கள் இனிமே கண்ணாடி முன்பு நின்று கொண்டு அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். முடிந்த வரை நிர்வாணம் ஆகாமல் தவிர்க்கவும். 
          இது போன்று ஹோட்டல் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகளை நீங்கள் சினிமாக்களில்  கூட பார்த்து இருக்கலாம் . "பில்லா 2007" படம் அனைவரும் பார்த்து இருக்கலாம் அதில் ஒரு காட்சி வரும் பில்லா அஜித்தை கைது செய்து மலேசியா போலீஸ்சார், விசாரிக்க ஒரு தனி அறையில் உட்கார வைத்து இருப்பார்கள் அப்போது அந்த அறைக்குள் இரண்டு போலீஸ் ஆபீஸ் மட்டும் இருப்பார்கள் அந்த அறையின் ஒரு சுவற்றில் ஒரு பெரிய கண்ணாடி இருக்கும் , அந்த கண்ணாடி அறைக்குள் இருந்து பார்க்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கும் ஆனால் அந்த கண்ணாடிக்கு பின்னால் இருந்து ஒரு குழு விசாரணையை கவனித்து கொண்டும், பதிவு செய்தது கொண்டும் இருக்கும். இந்த வகை கண்ணாடிகள்தான் இந்த ரகசிய கேமராக்கள் வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். இப்போது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் . நீங்க எந்த கவலையும் இல்லாமல் ஹோட்டல் பாத் ரூமில் ஒய்யாரமாக நிர்வாணமாக குளித்து கொண்டு இருக்கும் போது அந்த பாத் ரூமில் உள்ள பெரிய கண்ணாடிக்கு பின்னால் யாராவது சாவகாசமாக நாற்காலி போட்டு உட்கார்ந்தது ரசித்து கொண்டு கூட இருக்கலாம், கேமராவில் வீடியோவாக பதிவு செய்தது கொண்டு இருக்கலாம் ஜாக்கிரதை. 
         இந்த வகை கண்ணாடிகளுக்கு பொதுவான பெயர் Reflecting Glasses இதில் double reflecting , strong reflecting அப்படியென்று நிறைய வகை உண்டு. அதனால் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் Mirror க்கும் , Reflecting Glasses க்கும் உள்ள வித்தியாசத்தை. 
சரி இந்த வகை தில்லாலங்கடி கண்ணாடிகளை எப்படி கண்டு பிடிப்பது? 

 Reflecting Glass -சை  கண்டுபிடிக்க எளிய வழி முறைகள் :


1. ஹோட்டல் அறைகளில் அல்லது உடை மாற்றும் அறைகளில் உள்ள கண்ணாடி மேல் உங்கள் ஆள் காட்டி விரலை வையுங்க இப்போது உங்க ஆள்காட்டி விரலின் நுனிக்கும் , கண்ணாடியில் தெரியும் பிம்பம் ஆள்காட்டி விரலின் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்கும் நுண்ணிப்பாக கவனிக்கவும் கண்டிப்பாக இடைவெளி சிறிய அளவில் இருக்கும் . அப்படி இருந்தால் அது முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடி . உங்களுக்கு சந்தேகம் என்றால் உங்க வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்து பாருங்கள். ஆனால் இந்த Reflecting Glass வகை கண்ணாடிகளில் உங்கள் ஆள் காட்டி விரலை வைத்தால்  இது போன்று உங்கள் ஆள் காட்டி விரலுக்கும் , பிம்பமாக தெரியும் ஆள்காட்டி விரலுக்கும் இடைவெளி இருக்காது. 
அதனால் இது போன்று சூழ்நிலைகளில் உங்கள் கை பையில் எப்பவும் ஒரு சிறிய முகம் பார்க்கும் வைத்து கொள்ளவும் . உங்கள் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியையும் , உங்கள் ஹோட்டல் அறைகளில் இருக்கும் கண்ணாடி இரண்டையும் இது போல் ஆள் காட்டி விரல் வைத்து சோதித்து பாருங்கள் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியும்.  

2. உங்கள் கைப்பையில் எப்பவும் ஒரு சிறிய டார்ச் லைட் வைத்து கொள்ளுங்கள் இது போன்று கண்ணாடிகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தல் அதில் ஒளி ஊடுருவுகிறதா என்று பாருங்க. ஒளி ஊடுருவினால் அது Reflecting Glass , இல்லை என்றால் அது  முகம் பார்க்கும் கண்ணாடி. 

3. இது ரொம்ப எளிய முறை , இது ரொம்ப சிம்பிள்  உங்கள் முகத்தில் இரண்டு பக்கமும் குதிரைக்கு கடிவாளம் போல உங்கள் கைகளை வைத்து கொண்டு நீங்கள் சந்தேகம்ப்படும் கண்ணாடியில் முகத்தை வைத்து பார்த்தால்  கண்ணாடிக்கு பின்னால் ஏதும் தெரிகிறதா என்று பாருங்கள். சூரிய ஒளியை குறைக்க கார் கண்ணாடிகளில் கருப்பு கண்ணாடிகள் பொருத்தி இருப்போம் இல்லையா அதில் நாம் சில நேரம் முகத்தை மிக அருகில் வைத்து பார்ப்போம் இல்லையா கார்க்குள் என்ன இருக்கிறதென்று அது போல கை வைத்து பாருங்கள். கண்டிப்பாக வித்தியாசத்தை பார்க்கலாம்.

       சரி இது வரை பார்த்தது எல்லாம் மற்றவர்கள் நம்மை ரகசியமா படம் பிடிப்பதை பற்றி . ஆனால் இன்றைய நிலைமையில் இணையதளத்தில் பார்த்தீர்கள் என்றால் சிலர் அவர்களே சொந்தமாக எடுத்த அந்தரங்க புகைப்படமோ , வீடியோவோ அப்பட்டமாக வெளியிடப்படுகிறது. அதற்க்கு பெயர் Scandal videos அப்படின்னு நிறைய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் உலாவருது இணையதளத்துல. 

    சில தம்பதிகள் தேனிலவுக்கு போகும் போதோ அல்லது இளம் காதல் ஜோடிகள் தனிமையில் சந்திக்கும் போதோ ஏதோ ஒரு ஆர்வத்தில் ,மன கிளர்ச்சிகாக வேண்டி  அவர்களின் சொந்த மொபைல் போன் கேமராவிலோ அல்லது டிஜிட்டல் கேமராவிலோ படம்  எடுக்கிறார்கள்.அப்படி படம் பிடிப்பது சரியா தவறா என்ற விவாதத்திற்கு நாம் போக  வேண்டாம். அதெல்லாம் அவர்கள் சொந்த விருப்பங்கள் அதில் நான் தலை இட விரும்ப வில்லை . 
          ஆனால் சொந்த கேமராவில் எடுக்கப்படும் அந்தரங்க நிர்வாண படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது? கண்டிப்பாக அதில் சம்பந்த பட்டவர்கள் வெளியிட்டு இருக்க மாட்டார்கள் . யாரும் அவருடைய அல்லது அவர் மனைவியுடைய அல்லது காதலியின்  நிர்வாணத்தை மற்றவர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் , அவ்வுளவு ஏன் அப்படி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கையில் இது எப்படி சாத்தியம் ஆகிறது ? 
மேட்டர் ரொம்ப சிம்பிள் , முன்பெல்லாம்  புகைப்படங்கள் பிலிம் ரோலிலும் , வீடியோக்கள் கேசட்களிலும் பதிவு செய்யப்பட்டன ஆனா இன்று நிலைமையே வேறு , எல்லாம் டிஜிட்டல் மாயம் . அதனால் நீங்க எடுக்கும் புகைபட்மோ , வீடியோவோ எல்லாம் மொபைலில் அல்லது டிஜிட்டல் கேமராவிலோ உள்ள மெமரி கார்டில் (memory card) தான் பதிவாகிறது . இந்த மெமரி கார்டு தான் நமக்கு நேரடி வில்லன். 

           எதார்த்தமாக , தனிமையில் பின்னர் Delete பண்ணிவிடாலம் என்று  தம்பதிகள் எடுக்கும் படங்கள் அனைத்தும் இந்த மெமரி கார்டில் தான் பதிவாகிறது. என்னதான் தம்பதிகள் கவனமாக பின்னர் தங்கள் அந்தரங்க படங்களை delete செய்தாலும் அது முழுமையாக அழிவது இல்லை . உதாரணத்துக்கு உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் delete செய்யும் File உடனே Recycle Bin யில் போய் உட்கார்ந்து கொள்ளும் அது மாதிரி இந்த மெமரி கார்டுளையும் நீங்கள் delete செய்த படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு இருக்கும் . நீங்கள் எல்லாம் முழுமையாக delete செய்து விட்டதாக நினைத்து கொண்டு மற்ற புகைப்படங்களை பிரிண்ட் போட போட்டோ ஸ்டுடியோ வுக்கு குடுக்கும் போது அங்கே சிலர் இந்த மெமரி கார்டுயில் ஒளிந்து கொண்டு இருக்கும் படங்களை வெளியே எடுக்கிறார்கள். அதற்க்கு என்று பிரதேகமாக சாப்ட்வேர் இருக்கிறது. அதற்க்கு Recovery Software. இந்த சாப்ட்வேர் Delete ஆனா file களை திரும்ப வரவைக்கும். இது நமது கம்ப்யூட்டர் இருகின்ற மெமரியில் delete ஆனா file களை கூட திரும்ப பெற உதவும் சாப்ட்வேர் . இந்த மெமரி கார்டு யார் கையில் கிடைத்தாலும் பிரச்னை தான் . அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் நெருக்கின நண்பராக கூட இருக்கலாம் .இப்படிதான் தங்களுடைய கேமராவில் தங்கள் கைப்பட எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்தான் எடுத்தவர்களுக்கே தெரியாமல் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
சரி இதை எப்படி தவிர்க்கிறது? 

டிஜிட்டல் கேமரா மற்றும் மொபில் கேமரா -கவனத்தில் கொள்ள வேண்டிய விஷியங்கள் :

1. முதலில் தங்களுடைய டிஜிட்டல் கேமராவிலோ அல்லது மொபைல் போன் கேமராவிலோ தங்களுடைய நிர்வாண படங்களை எடுப்பதை தவிர்த்து விடுங்கள் முக்கியமாக தேனிலவு தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2. ஒரு வேலை அப்படி தங்களுடைய அந்தரங்கங்களை படம் எடுக்கும் பட்சத்தில் அந்த மெமரி கார்டை கண்டிப்பாக யாரிடத்திலும் குடுக்க வேண்டாம். குறிப்பாக போட்டோ ஸ்டுடியோவுக்கு அதில் உள்ள வேற சாதாரண போட்டோவை பிரிண்ட் போட குடுக்க வேண்டாம்.  

3. அந்த மெமரி கார்டில் உள்ள உங்கள் அந்தரங்க போட்டோக்களை Delete செய்தால் மட்டும் போதாது . கண்டிப்பாக மெமரி கார்டை Format செய்ய வேண்டும் அப்போதான் முழுமையாக எல்லாம் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது.
                                                       உங்க WEBCAM ஜாக்கிரதை . . .


          சரி இப்போது நான் இந்த பதிவின் தலைப்புக்கு வருகிறேன் . உங்கள் கம்ப்யூட்டர்லியோ அல்லது லேப்டாப்லியோ வெப்காம் இருக்குமாயின் அதை உங்கள் அனுமதி இல்லமால் யாரேனும் ஆன் செய்தது உங்களை பார்க்க முடியுமா? முடியும் என்கிறது Technology . ஆம் நீங்கள் Gtalk லியோ அல்லது Yahoo Messenger லியோ ஆன்லைனில் இருந்தால் உங்கள் Friends லிஸ்ட்யில்  இருபவர்களால் உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் வெப்காமை ஆன் செய்ய முடியும். அதற்க்கு ஆதார வீடியோ கூட இருக்கிறது ஆனால் அந்த வீடியோவை நான் இங்கு இணைக்க வில்லை ஏனென்றால் அந்த வீடியோவில் எப்படி மற்றவர்கள் வெப்காமை அவர்கள் அனுமதி இல்லாமல் ஆன் செய்வது அதற்க்கு என்ன சாப்ட்வேர் டவுன்லோட் செய்ய வேண்டும் எல்லாம் இருக்கிறது . அப்புறம்  தெரியாத ஒரு தப்பான விஷியத்தை நானே சொல்லி குடுத்தார் போல் ஆகிவிடும். அதனால் விஷியத்தை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் .

இதில் இருந்து தப்பிக்க : 

1. நீங்கள் கம்ப்யூட்டரில் தனியாக வெப்காம் வைத்திருப்பார்களானால் , நீங்கள் வெப்காமை உபயோகிக்காத போது கம்ப்யூட்டரில் இருந்து வெப்காம் இணைப்பை துண்டித்து விட்டு தனியாக வைக்கவும் . அவசியம் இருக்கும் போது மட்டும் கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் . 
 
2. நீங்கள் லேப்டாப் உபயோகிப்பவரானால் அதில் வெப்காம் ஸ்க்ரீன் உடன் இணைக்க பட்டு இருக்கும் அதை தனியாக கழட்டி வைக்க முடியாது ஆனால் வெப்காம் லென்ஸ்சை மூடி வைக்கலாம் இல்லையா? ஆமா லேப்டாப் வெப்காம்மில் உள்ள லென்ஸ் மேல் ஒரு ஸ்டிக்கராய்அல்லது ஸ்டிக்கர் பொட்டை ஒட்டி வையுங்கள் . உங்கள் அனுமதி இல்லாமல் வெப்காம் ஆன் செய்தாலும் எதுவும் பார்க்க முடியாது .டிஸ்கி : 
இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.

      இந்த பதிவுகள் அனைத்தும் விழிப்புணர்வுகளுக்காக மட்டுமே எழுதப்பட்டது  அதனால் தயவு செய்தது இதில் உள்ள நல்ல விஷியங்களை மட்டும் எடுத்து கொள்ளவும் . தேவை இல்லாத விஷியங்களை தவிர்த்து விடவும் . ஆகவே இதை படித்த அனைவரும் கவனமாகவும் , ஜாக்கிதையாகவும் நிம்மதியாகவும் வாழ்வோமாக என்று வாழ்த்தி ...அன்புடன் ,
ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Thursday, September 29, 2011 21 comments


         போன பதிவு "ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும்". . .(Part - 2) . -இல் நான் சொன்னது எல்லாம் கண்காணிப்பு கேமராகளை பற்றிதான் , ரகசிய கேமராகளுக்கான ஒரு முன்னுரையை மட்டும்தான் நான் குடுத்து இருந்தேன் . கண்காணிப்பு கேமராகளுக்கும் , ரகசிய கேமராகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு . கண்காணிப்பு கேமராக்கள் என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பட்டமாய் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி அதிகார பூர்வமாக பொது இடங்களில் வைக்கப்படுவது, அதற்க்கு பெயர் Security Camera  அல்லது  CCTV Camera (Closed Circuit Television Camera ). அதுவே தனிமனித சுதந்திரம் பறி போவதாக வருத்தப்பட்டு இருந்தேன் . ஆனால் ரகசிய கேமராக்கள் என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒளித்துதோ அல்லது மறைத்தோ வைக்கபடக்கூடிய சிறிய வகை கேமராக்கள் . இதன் நோக்கம் உளவு பார்ப்பதற்காகவோ அல்லது வேறு சில வக்கிர உள்நோக்கங்களுக்காகவோ வைக்கப்படுபவை.
இந்த ரகசிய கேமராகளுக்கு நிறைய பெயர்கள் உண்டு Spy Cam , Candid Cam , Hidden Cam , Secret Cam என்று பல பெயர்கள்.  சரி அப்படி இந்த கேமராக்களை வச்சுக்கிட்டு அப்படி என்னதான் பண்ணுறாங்க ? கேட்டிங்கனா ரொம்பவே அதிர்ச்சி ஆகிடுவிங்க .
         நான் கட்டுமான பொறியாளராக இருப்பதால் சமீபத்தில் ஒரு மிக பெரிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தேன் , அந்த கட்டிடம் ஒரு மிக முக்கியம் வாய்ந்த கட்டிடம் ஆகையாதால் அந்த கட்டிடத்துக்கு சில பல ரகசிய கேமராக்கள் பாதுகாப்பு காரணாங்களுக்காக  பொறுத்த வேண்டி இருந்தது அந்த கட்டிடத்தின் உரிமையாளர் குழுமம் கேட்டு கொண்டதுக்கு இணங்க . அப்போது அதற்க்கு தேவையான ரகசிய கேமராக்கள் வாங்க வேண்டிய பொறுப்பு நான் பணியாற்றும் கம்பெனிக்கு வந்தது. அப்போது கேமராக்கள் வாங்க வேண்டி அதற்கான தகவல்கள் திரட்டப்பட்டு சில கம்பெனிக்கள் விவரம் கிடைக்க, அந்த கேமரா கம்பெனிகளிடம் மேலும் தகவல்கள் , மாடல்  மற்றும் விலை விவரங்கள் கோரப்பட்டன . அதில் சில கம்பெனிகள் குடுத்த கேமரா மாடல் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை (Catalog)  பார்த்த போது நான் சற்று இல்ல நிறையவே அதிர்த்துதான் போனேன் . சொன்ன நம்ப மாட்டிங்க இதை பற்றிய விவரம் எவ்வளவு பேருக்கு இன்னும் தெரியும் என்று தெரியவில்லை , அந்த ரகசிய கேமராக்களின்  மாடல்கள் உண்மைலயே பேரதிர்ச்சியை உண்டாக்கின . கதவு கை புடி  , கடிகாரம்  , சுவிட்ச் , சுவிட்ச் போர்டு , பல வகை லைட்  வடிவத்தில் , அலங்கார விளக்குகள் , பொம்மைகள் , குளியல் அறையில் லைட் , ஷவர் , வாட்டர் ஹீட்டர்  என எல்லா வடிவங்களிலும் கேமரா மாடல்கள் இன்றைய உலக சந்தையில் சர்வ சாதாரணாம கிடைக்கிறது. ரொம்ப சிம்பிள் அதை வாங்கி அப்படியே பொறுத்த வேண்டியதுதான் அதில் உள்ள உபகரணமும் வேலை செய்யும் , கேமராவ்வும் வேலை செய்யும். யாராலையும் கண்டேபிடிக்க முடியாது . ஏன் பேனா வடிவில் கூட சிறிய கேமராக்கள் வந்து விட்டன,  “மங்காத்த” படத்தில் அஜித் பேனா வடிவ கேமராவை உபயோகித்து இருப்பார். 

உங்களுக்காக  சில ரகசிய கேமராக்களின் படங்கள் கீழே : 

        இந்த கேமராக்கள் எங்கு எல்லாம் எப்படி எப்படி எல்லாம் சமூக விரோத தனமாக , வக்கிர எண்ணங்களுடன் உபயோக படுத்தப்படுகிறது? எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல் ரூம்களில் , ஹோட்டல் பாத் ரூம்களில் , துணி கடைகளில் பெண்கள்  உடை மாற்றும் அறைகளில்தான். பெரும்பாலும் எல்ல ஹோட்டல்கள் , குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்களிலும் இந்த வேலை நடக்கிறது. இதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்பது வேறு கதை , யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் , அதை பின்னர் விவாதிப்போம் . 
        இப்போது எல்லாம் நான் வெளியூர்களுக்கு போனால் தாங்கும் ஹோட்டல்களில் நட்சத்திர ஹோட்டல்களே ஆனாலும் , குளிக்கும் போது கோவணம் கட்டி கொண்டுதான் குளிக்கிறேன் , ஏனென்றால் இது போல ஏதாவது ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டு இருக்குமோ என்கிற பயம் தான். இல்லை என்றால் அப்புறம் என்னுடைய பிறந்த மேனியை நானே இணையதளத்தில் பார்க்க நேரிடலாம் . என்னதான் பெண்களை குறி வைத்து கேமராக்கள் பொறுத்த பட்டு இருந்தாலும் , குளிக்கிறது ஆணா ? பெண்ணா ? என்று கேமராவுக்கு எங்கு தெரிய போகிறது அப்படி என்னையும் குளியல் காட்சியில் படம் பிடித்துவிட்டால் ? அதனால் தான் இந்த கோவண குளியல் .
      இன்றைய இணையதளத்தில் இந்த ரகசிய கேமராக்களை பயன்படுத்தி ஏகப்பட்ட அந்தரங்க , உடலுறுவு  மற்றும் நிர்வாண கட்சிகள் படமாக்கப்படுகின்றன பல வக்கிர கும்பல்களினால் . அதை இணையதளத்தில் வெளியிட்டு பணம் பார்க்கின்றனர். பாவம் ஹோட்டலில் தங்குபவர்களுக்கு இதை பற்றி எந்த விவரமும் தெரியாது . கேமரா பொறுத்தப்பட்டதோ , அவர்களின் அந்தரங்கங்கள் படம் பிடிக்கப்பட்டதோ எதுவும் தெரியாது. 
பெரும்பாலும்  இந்த வக்கிர கும்பல்களின் குறி அழகிய பெண்கள் மற்றும் இளம் தம்பதிகள் . அதிலும் தேனிலவுக்கு போகும் புது மண தம்பதிகள் என்றால் இந்த வக்கிர கும்பகளுக்கு ஏக கொண்டாட்டம். பெரும்பாலும் தேனிலவுக்கு போகும் இடங்களான சுற்றுலா தளங்களின் உள்ள ஹோட்டல்களில் இந்த அபாயம் அதிகம் உள்ளது. ஜாக்கிரதை .

    
      த்ரிஷா போன்று பிரபலங்களின் நிர்வாண குளியல் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஆனது எல்லாரும் அறிந்ததே , ஆனால் பிரபலங்கள் மட்டும் அல்லாது சாமானிய குடும்ப பெண்களின் , தம்பதிகளின் நிர்வாண , அந்தரங்க உடலுறவு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கொட்டிகிடகின்றன இன்றைய இணையதளத்தில் .எப்படி இதெல்லாம் சாத்தியம் ஆகிறது? எல்லாம் இந்த ரகசிய கேமராக்களின் உதவியால்தான். ஹோட்டல்களில் தாங்கும் போது கண்டே புடிக்க முடியாத சிறிய வகை ரகசிய கேமராகளை பற்றி இது வரை யாராவது யோசித்து பார்த்து இருக்கிர்களா? கவலைப்பட்டு  இருக்கீர்களா? 

இனி கண்டிப்பாக கவலைப்படணும் , கவனமாய் இருக்கணும். 


இனி ஹோட்டலில் தாங்கும் போது கவனிக்க வேண்டிய , செய்ய வேண்டிய விஷியங்கள் :
1) தம்பதிகள் உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள் . 
2) அப்படியே உடலுறவு கொள்ளும் அவசியம் இருந்தால் முடிந்தவரை ஹோட்டல் அறையை இருட்டாக்கிகொண்டு விளக்குகளை அணைத்து விட்டு , போர்வைக்குள் நடக்கட்டும் . கேமரா கண்களில் இருந்து தப்பிக்க வேற வழி இல்லை .
3) பெண்கள் முடிந்தவரை உடையை கலையாமல் இருக்கவும் அறையுனுள் இருக்கும் போது. உடை மாற்றும் போது கூட கணவர் மட்டும்தானே இருக்கார் என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் சுவர்களுக்கு கூட (கேமரா)கண்கள் இருக்கலாம் .
4) அதே போல் பெண்கள் குளிக்கும் போது முடிந்தால் உடம்பை மறைக்க ஏதாவது துணி கட்டிக்கொண்டு குளிக்கவும்.

      இதையெல்லாம் செய்ய சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் ஆனால்  ரகசிய கேமரா கண்களுக்கு இரை ஆகி ,
வக்கிர மனம் கொண்டவர்களின் கண்களுக்கு விருந்தாகாமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேற வழி இல்லை .

       சரி இது எல்லாம் நமக்கு தெரியாமல் ரகசிய கேமராகளால் நமக்கு வரும் பிரச்சனைகள் . ஆனால் சிலர் ஆர்வ கோளாறினாலும் , சில தம்பதிகள் அவர்கள் அந்தரங்களை அவர்கள் உபயோகத்திற்காக சொந்த கேமராவிலோ அல்லது மொபைல் கேமராவிலோ எடுக்கும் நிர்வாண புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எப்படி வெளியுலகிற்கு , இணையதளத்திற்கு வருகிறது? அதை எப்படி எல்லாம் தடுக்கலாம் ? 

உங்கள் லேப்டாப் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்காம்களை மற்றவர்கள் உங்கள் அனுமதி இன்றி உங்களை எப்படி பார்க்க முடியும் ? அதை எப்படி தடுப்பது ? 

எல்லாம் அடுத்த பதிவில் . . .

டிஸ்கி : 
இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.
 
அதிர்ச்சிகளுடன், 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com
Monday, September 26, 2011 11 comments
Note :  இது ஒரு ஆய்வு பதிவு மட்டும் இல்ல , இது ஒரு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதிவும் கூட அதனால நான் வார்த்தைகளை எந்த கட்டுப்பாடும்  இல்லாம எழுதி இருக்கேன். அதுக்காக பெண்கள் இதை படிக்காம போய்ட வேண்டாம் என்னென்றால் இது முக்கியமா பெண்கள்தான் அவசியம் படிக்கவேண்டும் .

           இந்த பதிவ படிக்குற உங்களுக்கு ஒரு சிம்பிள் கேள்வி , நீங்க ரோடுல நடந்து போய்கிட்டு இருக்கீங்க அப்போ உங்களை  ஒரு நாலு பேரு குறுகுறுன்னு கண்ணு கொட்டாம பார்கிறாங்கன்னு வச்சுக்குவோம் அப்போ உங்களால சரியா நடக்க முடியுமா? உடனே கால்கள் பின்ன ஆரம்பிச்சுடாது? சரியா நடக்க முடியாது இல்லையா . அதுலயும் நடக்குறது ஒரு வயசு பையனா இருந்து குறுகுறுன்னு பார்க்குறது நாலு பெண்களா இருந்தா சொல்லவே வேண்டாம் அது வரைக்கும் நல்ல நடந்துகிட்டு இருந்த அந்த பையன் அவங்க பாக்குராங்கன்னு தெரிஞ்சதும் ததக்கா புதக்கான்னு  நடக்க ஆரம்பிசுடுவான். இதே மாதிரி நிலைமைதான் ஒரு பெண் நடக்கும் போது நாலு ஆண்கள் பார்க்கும் போதும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.  இதெல்லாம் மனிதனின் இயல்பு , அடிப்படை உணர்ச்சிகள்.
          ஆனால் இந்த உணர்ச்சிகள் எல்லாம் நமக்கு நம்மையே அறியாமல் மக்கி போக ஆரம்பிச்சு இருக்குகிறது. எப்படின்னு கேட்டிங்கன நாம ரோட்ல நடக்கும் போது , கடைகளில் இருக்கும் போது, ஹாஸ்பிட்டல்களில் இருக்கும் போது, ரயில்வே ஸ்டேஷன் , ஏர்போர்ட் , பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் , ஷொப்பிங் மால், டிராபிக் சிக்னல் அப்படின்னு இன்னைக்கு கண்காணிப்பு கேமரா இல்லாத இடமே இல்ல .
என்னுடைய கல்லூர் நண்பன் இப்போ லண்டன்ல வேலைல இருக்கான் அவன் சொன்ன ஒரு புள்ளி விவரம் , அவன் ஒரு நாள் காலையில் ஆபீஸ்க்கு போயிட்டு இரவு வீடு திரும்புவதற்குள் அவனை இந்த கண்காணிப்பு கேமராக்கள் குறைந்தபச்சம் இருநூறு முறையாவது புகைப்படம் எடுகின்றனவாம். எதுக்குங்க லண்டன்க்கு எல்லாம் போய்கிட்டு? , இங்க நம்ப ஊருலயே இருக்கே, ஆயிரதெட்டு கண்காணிப்பு கேமராக்கள். தினம் தினம் நம்மை கண்காணித்துகொண்டே இருக்கின்றன . எதற்கு இதெல்லாம்? ஏன் இந்த கண்காணிப்பு ?
      இதற்க்கெல்லாம் பதில் , குற்றங்களை தடுப்பதற்காக , பாதுகாப்பு காரணங்களுக்காக , தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்காக. இந்த காரணங்கள் எல்லாம் 100% சரியாகவே இருந்தாலும் . என்னுடைய கேள்வி எல்லாம், எங்கே போயிற்று தனிமனித சுதந்திரம்? இன்றைய நிலைமையில் நம்மால் எந்த ஒரு கண்காணிப்பு இல்லாமல் தனிமனித சுதந்திரத்துடன் வெளியே போயிட்டு வர முடியுமா? சும்மா நாலு பேரு நாம நடக்கும் போது வெறிக்க பார்த்தாலே நமக்கு என்னவோ போல இருக்கு, ஆனா கண்காணிப்பு கேமரா என்கிற பெயரால் நம்மை கேமரா கண்கள் எப்போதும் கண்காணித்து கொண்டே இருப்பது எப்படி இருக்கும் ? எதற்காக எந்த குற்றமும் செய்யாத நம்மை கண்காணிக்க வேண்டும்? ஆகா மொத்தத்தில் தனிமனித சுதந்திரம் ( privacy )  பறிபோய்விட்டதாகவே  நான் உணர்கிறேன் . 
         சரி அதற்காக கண்காணிப்பு கேமராவை எல்லாம் நீக்கி விடலாம் , எங்கயும் வைக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை . ஆனால் கண்காணிப்பு கேமரா வைப்பது மட்டுமே குற்றங்கள் தடுத்து விடாது , குறைத்து விடாது . எடுத்துகாட்டாக திருடவோ , கொள்ளை அடிக்கவோ வருபவர்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வேலை செய்ய வேண்டி இருக்கும் அது என்ன என்றால் , அவர்கள் போகின்ற இடத்தில உள்ள கண்காணிப்பு காமெராவை முதலில் செயல் இழக்க செய்ய வேண்டி இருக்கும் அல்லது கேமரா கண்காணிப்பில் சிக்காமல் வேலையை செய்ய வேண்டி இருக்கும் . தீவிரவாதிகளுக்கு இந்த கண்காணிப்பு கேமரா பற்றிய கவலை எல்லாம் கிடையாது . மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்த போதே நான் நேரடியாக பார்த்தோம் . தீவிரவாதிகளுக்கு அவர்கள் உயிர் மேலயே கவலை இல்ல அப்புறம் எங்க கண்காணிப்பு காமெராவை பற்றி எல்லாம் கவலை பட போகிறார்கள் ? வந்த வேலையை செவ்வனே செய்தது முடிப்பார்கள் .
       சரி இப்போ கண்காணிப்பு கேமராவுக்கே இத்தனை கஷ்டமா இருக்கு என்றால் உங்களுக்கு மற்றும் ஒரு கேள்வி , பெண்கள் வெளி இடங்களுக்கு போகும் போது ஆண்கள் யாரவது தவறான கண்ணோட்டத்தில் பெண்களில் அங்கங்களை அதாவது , பெண்களின் மார்பையோ , பின்புரத்தையோ அல்லது இடுப்பையோ பார்த்தால் அந்த பெண்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கும்? எதன்னை தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ?
            சும்மா வெறுமனே வெளி இடங்களில் இந்த மாதிரி பார்வைக்கே எத்தனை தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது , அதுவே அந்த பெண்களில் உடம்பை "நிர்வாணமாய்" யாராவது பார்த்தால் என்னவாகும் ? அதை புகைபடமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்தால் எப்படி இருக்கும் ? அதற்கும் ஒரு படி மேல போய் பதிவு செய்த புகைப்படம் , வீடியோகளை இணையதளத்தில் வெளியிட்டால் என்னவாகும் ?
              இது எல்லாமே நடக்கிறது இன்றைய கலியுகத்தில் . இது எல்லாம் விஞ்ஜான கண்டுபுடிப்புகளின் பக்கவிளைவுகள். இது மட்டும் அல்ல , இன்னும் இளம் தம்பதிகளின் உடலுறவு காட்சிகள் , அந்தரங்கங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகின்றன . எப்படி இதெல்லம் நடக்கிறது? என்ன காரணங்கள் ? நம்மை அறியாமல் எப்படி நம்புடைய அந்தரங்கங்கள் படம் பிடிக்க படிகின்றன ? கூடுமானவரை அதில் இருந்து எப்படி எல்லாம் தப்பிக்கலாம் ? 

எல்லா அதிர்ச்சியான,  நம்ப முடியாத, தகவல்களும்  விவரங்களும் அடுத்த பதிவில் . .டிஸ்கி : 

இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.
 
அதிர்ச்சிகளுடன், 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.comFriday, September 23, 2011 25 comments

Sorry , கொஞ்சம் Busy ah இருந்துட்டேன்
         
             ப்ளாக் எழுதி சரியா இரண்டு மாதங்களுக்கு மேல ஆகிடுச்சு . கடைசியா ஜூலை 18 ம் தேதி ப்ளாக் எழுதியது. அதுக்கு அப்புறம் ப்ளாக் எதுவும் எழுதவும் இல்ல , வெளியிடவும் இல்ல . இதுனால உலகம் சுத்துறதோ , இல்ல சூரியன் உதிகிறதோ , இல்ல காக்கா கத்துறதோ எதுவும் நின்னுடல . எல்லாம் வழக்கம் போலதான் நடக்குது . ராக்ஸ் ப்ளாக் எழுதலைன்னு யாரும் வருத்தப்படவும் இல்லை , சந்தோஷ பாடவும் இல்லை .

                நான் ப்ளாக் எழுதாதற்கு ஏகப்பட்ட காரணங்கள் . அதுல முக்கியாமான காரணம் நான் இப்போ ரொம்ப ப்ரீயா இருக்குரதுதான் , ரொம்ப வேடிக்கையா இருக்குது இல்ல ? அதாவது இப்போ நான் இரண்டு வருட சவுதி பணிக்கு பின் விடுமுறையில் இந்தியா வந்து இருக்கேன் . அதாவது வேலைக்கு போகாம வெட்டியா இருக்கேன் அதனாலதான் ப்ளாக் எழுத முடியல , நேரமும் இல்ல . என்ன கொடுமை  இது?  நான் பிஸியா வேலைல இருந்த போது அப்போ அப்போ ப்ளாக் எழுதினேன் , ஆனா பாருங்க இப்போ வேலைல இல்லாம விடுமுறைல ரொம்ப ப்ரீயா வெட்டியா இருக்கேன் ஆனா இப்போ ப்ளாக் எழுத முடியல . இதுக்கு என்ன காரணம்னா , நான் சவுதில வேலைல இருக்கும் போது அப்போ எட்டு மணி நேர வேலைதான் , மத்த நேரம் எல்லாம் பக்கத்துல யாரும் இல்ல , வேற வேலை எதுவும் இல்ல . எப்பவும் இணைய தளம் தான் ஒரே  துணை . வேற வழி இல்ல அதனால எப்பவும் ஆன்லைன்ல இருக்க முடிஞ்சது , ப்ளாக் எழுத முடிஞ்சது . ஆனா இப்போ இந்தியா வந்த பிறகு நிலைமை அப்படி இல்ல , அப்பா , அம்மா , சொந்தங்கள் , பள்ளி , கல்லூரி நண்பர்கள் அப்படின்னு நிறைய பேர் சுத்தி இருக்காங்க. அதனால அவங்களோட நேரம் செலவிடவே நேரம் இல்ல . அப்புறம் சொந்த வேலைகள் , என்னுடைய கல்யாணத்துக்கான வேலைகள்ன்னு ரொம்பவே பிஸி . அதுவும் இல்லாம இரண்டு வருடங்கள் இந்தியால இல்லாததுனால நிறைய விட்டு போன சொந்த வேலைகள் செய்ய வேண்டி இருக்கு.  அதனால ஆன்லைன் வரதுக்கோ , ப்ளாக் எழுதுறதுக்கோ கண்டிப்பா நேரம் இல்ல. ஒரு நாளைக்கு ஆன்லைன் வரதுக்கு அதிகபட்சம் இரவு துங்க போற நேரதுக்கு முன்னாடி ஒரு அரை மணி நேரம் தான் கிடைக்குது . அதுலயும் மெயில் பார்க்கவும் மத்த விஷியங்களை பார்க்கவுமே நேரம் சரியா இருக்கு . அதனால இதுதான் என்னுடைய உண்மையான வாழ்க்கை முறை , சவுதில இருந்த போது இருந்தது போல எப்பவும் இணையதளத்துல இருக்க முடியாது.

                       ஆனா நான் சவுதில இருந்த போது இரண்டு வருடங்களில் அறிமுகமான இணையதள நண்பர்கள் ரொம்பவே கோவிச்சுகிறாங்க , வருத்த படுறாங்க . ராஜேஷ் முன்ன மாதிரி இல்ல , ரொம்ப மாறிட்டான் . ஆன்லைன் வர்றது  இல்ல , சாட் பண்ணுறது இல்ல , கண்டுக்கிறது இல்ல , ஏன் இந்தியா வந்து ஒரு போன் கூட பண்ணலன்னு . அவங்க எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே ஒன்னுதான் இந்த ராஜேஷ்  எப்பவும் மாற மாட்டன் எப்பவும் ஒரே மாதிரி தான் . ஆனா என் நண்பர்கள்ன்னு சொல்லிக்கிற நீங்கதான் நிலைமைய புரிஞ்சுக்கணும் .

               சரி இப்போ மேட்டர்க்கு வரேன் , நான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ப்ளாக் எழுதிகிட்டு இருந்தவரை  ஹிட் கவுன்ட் கம்மியா இருந்தது , தமிழ்மணம் Traffic Rank 1050 க்கு மேல இருந்தது . ஆனா நான் எழுதாம இருந்த இந்த ரெண்டு மாதத்தில் என்னோட வலைப்பூவின் ஹிட் கவுன்ட் அதிகமாகிடுச்சு , தமிழ்மணம் Traffic Rank : 786 க்கு வந்துடுச்சு . தினமும் குறைஞ்சது ரெண்டு பேராவது வந்து என்னோடைய பதிவுகளை படிச்சுட்டு போறாங்க. என்ன இதெல்லாம்? தொடர்ந்தது எழுதும் போது அவ்வுலவா யாரும் வரல , ஆனா எழுதாத போது நிறைய பேரு வந்துட்டு போறாங்க , இந்த மனுசங்கள புரிஞ்சுக்கவே முடியலையே  கடவுலே . . .


            சரி  இவ்வளவு இடைவிடாது சொந்த அலுவல்களுக்கு இடையிலும் நான் நிறைய எழுத ஆசை படுகிறேன் , மனதில் நிறைய விஷியம் ஓடி கொண்டேதான் இருக்கிறது எழுதுறதுக்கு . ராக்ஸ் மறுபடியும்எழுத வந்துட்டான் , எல்லாரும் தொடர்ந்து படிங்க . என்ஜாய் பண்ணுங்க . கண்டிப்பா வயுறு வலிக்க  சிரிக்கவும் , சிந்திக்கவும் தயாராகுங்கள் . . .

நான் இனி எழுத இருக்கும் அதிரடி பதிவுகளின் தலைப்புக்கள்   பின் வருமாறு :

1. ரகசிய கேமராக்களும் , மனித  சுதந்திரமும்   . . .
2. என் நண்பன் விட்ட ரேஸ் . . .
3. கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்கள் . . .
4. மச்சான் பிரேக் புடிக்கல!!!!! . . .
5. நான் பாட்டு பாடவா ? . . .
6.  * நிபந்தன்னைக்குட்பட்டது (* conditions apply)
I Am Back . . 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Monday, July 18, 2011 3 comments


சமச்சீர் கல்வி தொடர்பான தமிழக அரசின் சட்ட திருத்தம் ரத்து
- உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு (18-07-2011)
           
             ஒன்று  முதல் பத்தாம் வகுப்புவரையானா அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் பாட திட்டத்தையே நடத்த வேண்டும் . வரும் 22 ம் தேதிக்குள்  சமச்சீர் பாட நூல்களை விநியோகம் செய்யவேண்டும் . சமச்சீர் கல்வியை இந்த நடப்பு கல்வி ஆண்டே நடை முறை படுத்த வேண்டும் என்று உயர் நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளது . 

        கடந்த ஆட்சியில் சமச்சீர்கான கல்வியாளர்கள் குழு அமைக்க பட்டு ஆய்வு செய்தது , அவர்களின் ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் சமச்சீர் கல்வி திட்டம் கொண்டுவர பட்டது , அதற்கான சமச்சீர் பாட நூல்களும் அச்சடிக்க பட்டன. ஆனால் ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் .
மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் அறிதிபெரும்பான்மை வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வந்த எங்கள் புரட்சி தலைவி அம்மா அவர்கள்  வந்த உடன் செய்த முதல் காரியங்க மக்கள் நலன் கருதி பல நல்ல திட்டங்களையும் , மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளையும் கையில் எடுத்து . . . மன்னிக்கவும் ஒரு flowல எழுதிட்டேன் .  கடந்த ஆட்சியில் வந்த  நல்லதோ கெட்டதோ,  எல்ல திட்டங்களையும் ரத்து செய்ய முடிவு செய்தது களத்தில் தொபுக்கடி என்று குதித்து பட்டைய கிளப்பினார் . .
அதில் ஒன்று தான் இந்த சமச்சீர் கல்வி . இதை ரத்து செய்தது சட்ட மசோத ஏற்றி , இனி  பள்ளிகளுக்கு பழைய பாட திட்ட முறையே பின்பட்டற படும் என்று அறிவித்தார் .
          அனால் இதை எதிர்த்து போடப்பட்ட பொது நல வழக்கில்தான் இந்த பரபரப்பான தீர்ப்பு . . .

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய போவதாக தமிழக அரசு வக்கீல் தெரிவித்துள்ளார் . ( மறுபடியுமா ? பசங்க படிச்சா மாதிரி தான் . . .)
ஆனா ஒன்னு சொல்லிக்கிறேன் மக்க , இந்த தீர்ப்பை பார்த்து எல்லாம் எங்க புரட்சி தலைவி மனம் தளர்ந்து பாட மாட்டங்க . ஒரு ஆப்பு உடைஞ்சு போச்ச? அடுத்த ஆப்பு ரெடி பண்ணு மாஸ்டர் அப்படின்னு நெக்ஸ்ட் ஆப்புக்கு ஆர்டர் குடுத்துட்டு போய்கிட்டே இருப்பாங்க . நாங்க எல்லாம் யாரு . . .


சும்மா ஒரு தீர்ப்பு வந்துடுச்சுன்னு சும்மா ஆட்டம் போட வேண்டாம் . அதை பத்தி பீல் பண்ணுரா கேரக்டரே கிடையாது எங்கள் அம்மா . . . எத்தன வழக்கை பார்த்து இருப்போம் , எத்தன தீர்ப்பை பார்த்து இருப்போம் .

உனக்கும் பெப்பே , உங்க அப்பனுக்கும் பெப்பே தான் 

ஆனா எனக்கு ஒரே ஒரு வருத்தம்தான் சார் , இந்த மாதிரி எல்லாம் ஏன் நான் ஸ்கூல் படிக்கும் போது நடக்கல ?

அப்போ ஏன் இப்படி யாரும்  யோசிக்கலா ? சட்டம் கொண்டு வரல புக்ஸ் நிறுத்தி வைக்கலா , என்னை என்ஜாய் பண்ண விடல ?

ஜூன் முதல் வாரமே பள்ளிக்கூடம் திறந்து உசுர வாங்குவாங்க , ஆனா இப்ப பாருங்க ஜூலை மாதம் முடிய போகுது இன்னும் பசங்க பாட புத்தகத்தையே கைல தொடாம என்ஜாய் பண்ணுறாங்க அத நினைச்சாத்தான் எனக்கு காண்டாகுது . . .

எனக்கு மட்டும் என் சார் இப்படி எல்லாம் நடக்குது

Always , 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com


Friday, July 15, 2011 6 comments

                வழக்கமா தமிழ் பாடல்கள் , படங்கள பத்தி பதிவு போட்டு படிச்சு ரொம்ப போர் அடிக்குது . அதனால ஒரு மாற்றத்துக்கு எனக்கு புடிச்ச ஆங்கில பாடல்கள் இங்கே .

             எப்பவுமே நம்ப வாழ்க்கைல தெரிஞ்சோ தெரியாமையோ ஆங்கில பாடல்களை நாம கடந்து செல்ல வேண்டி இருக்கும் . ஆனா ஆங்கில பாடல்கள் நம்மை  எந்த அளவுக்கு கவர்கிறது அப்படிகிரதுதான் விஷியம். பெரும்பாலும் ஆங்கில பாடல்கள்ல இருக்க ஒரே பிரச்னை புரியுறது இல்லை  அப்படிகிறதுதான். எனக்கும் அப்படிதான் . ஆனா கொஞ்சம் கூர்ந்தது கவனிச்சா  கண்டிப்பா புரியும் , ஆங்கிலம் முழுமைய தெரிஞ்சு இருக்கணும்கிறது கூட அவசியம் இல்ல . அதனோட கருவும் , என்ன சொல்ல வராங்க அப்படின்னு காட்சிகளை கவனிச்சாலே போதும்.
              ஆனா இந்த ஆங்கில பாடல்கள் பல வகையில் இருக்கு . என்னோட நண்பனோட ரூம்ல போய் பார்த்தா அவனோட அலமாரி முழுவதும் ஆங்கில பாடல் கேசட் ,  CDs  இருக்கும் . IRON MONKEY , RICKY MARTIN , BON JOVI , BRITNEY SPEARS , AQUA அப்படின்னு ஏகப்பட்ட பாடல்கள் இருக்கும் , எனக்கு  பார்க்கவே பிரமிப்பா இருக்கும் .   எப்பவும் WALKMAN ல(அப்போ எல்லாம் WALKMAN தான் )  பாட்டு கிட்டுகிட்டே இருப்பான்.
             இதுல இந்த ஆங்கில பாடல்களை கேக்குறவங்க பேசுறதும் , விவாதிக்கிறதும் அட அட அட ,  நாம மட்டும் அங்க இருந்தோம்ன கண்டிப்பா ஒரு ஈர வெங்கையமும் புரியாது .  POP , RAP , HI PITCH , BASE ,  அது, இதுபானுங்க  . ஒரு நாள் நான்  என் நண்பன்கிட்ட மச்சி நிஜமாவே எனக்கு நீங்க கேக்குற ஆங்கில பாடல்கள் எல்லாம் ஒண்ணுமே புரிய மாட்டின்குது , நீ கொஞ்சம் விளக்கமா சொல்லேன் அப்படினேன் . சரிடா நான் உனக்கு புரியுற மாதிரி சொல்லுறேன் , இப்போ ஆங்கில பாடல்கள்ல பல வகை இருக்கு ,
முதல்ல  ROCK MUSIC , செமையா கத்துவாங்க ஆனா ஒண்ணுமே புரியாது அதுதான் ROCK MUSIC .  ரெண்டாவது  HEAVY ROCK , இதுல என்னவோ பேதி ஆகுற மாதிரி கத்துவாங்க காதுல உடுக்கை அடிக்கிற மாதிரி இருக்கும் .
மூணாவது METAL ROCK இந்த பாட்டை கேட்டே உனக்கு பைத்தியமே புடிச்சுடும் அப்படி உசுரு போறா மாதிரி கத்துவானுங்க.
ஆனா கடைசிய இருக்கு பாரு அதுதான் ACID ROCK அப்படினான் ,
என்னடா அதை கேட்ட நிஜமாவே உசுரு போயிடுமா அப்படின்னு கேட்டேன் .
அப்படியே காதுல ஈயத்தை காச்சி  ஊத்துன மாதிரி இருக்கும் அதுதான் ACID ROCK அப்படினான் . அடேங் அப்பாடி போதும் டா சாமி உன் விளக்கம் ஆள விடுன்னு வந்துட்டேன் .
இருந்தாலும் எனக்கும் ஆங்கில பாடல்கள் பிடிக்கும். 


சரி இப்போ எனக்கு புடிச்ச பாடல்களை பார்க்கலாம். 
 1. மைக்கல் ஜாக்சன்  ( Micheal Jackson - Invisible)
முதல் பாடல் , வேற யாரு King of Pop தல ஜாக்சன் தான் .இந்த ALBUM தான் நாம்ப தல கடைசிய பண்ணதுன்னு நினைக்குறேன் . சும்மா சூப்பர் அஹ இருக்கும் , இதுல என்ன விசேஷம் என்றால் ஜாக்சன் சண்டையெல்லாம் போட்டு இருப்பாரு .

மைக்கல் ஜாக்சன் அப்படினாவே பச்சை குழந்தை முதல் , பல்லு போன கிழவி வரைக்கும் ஆட்டம் போடா வைப்பாரு. இந்த பாட்டை பாருங்க கண்டிப்பா புடிக்கும் .


 2. ஷாகிரா  ( Shakira - FIFA 2010 Theme Song )

         ஷகிரா வோட முந்தைய பாடல்கள் கேட்டு இருக்கேன் பார்த்தும் இருக்கேன் ஆனா பாருங்க இதுவரைக்கும் இவ்வளவு அழகான , புத்துணர்ச்சியான ஷாகிரவை இதுலதான் பாக்குறேன் . அசோ கொள்ளை அழகு அதுவும் அந்த கைய சுழட்டி வணக்கம் வைக்குறது அவ்வ்வ்வ்வ்வ் . அவ்வுளவு அழகு . . .

 3 . FIFA 2010 Theme Song : 


                இதுவும் உலக கோப்பைகாக எடுத்த பாட்டு தான் , பாட்டு ஆரம்பிக்கும் போதே நம்ப இளைய தளபதி பாட்டு போல சும்மா பட்டைய கிளப்பும்,  தார தப்பட்டைகள்  கிழிஞ்சு தொங்க வேண்டாமாகிற மாதிரி ஆரம்பமே அமர்களமா  நம்மை ஆட்டம் போடா வைக்கும் . இந்த பாட்டை கேட்டுட்டு உங்களுக்கு ஆட தோணலனா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது . . .

 4 . FIFA 2010 Theme Song :


 5. The Climb


 6 . I''ll be back , after 2 pm


 7 . Nickelback - Someday 8. Nickelback - Never gonna be alone


 9 . Bond - Shine


 10 . Mask of Zorro : Dance
 11 . Mask of Zorro : Love Songடிஸ்கி : 

       
இந்த பாடல்கள் அனைத்தையும் Headset  போட்டுக்கிட்டு புல் சவுண்ட் வச்சு ரூம்ல தனிய இருக்கும் போது குறைஞ்ச வெளிச்சத்துல கேளுங்க பாட்டை நல்ல என்ஜாய் பண்ண முடியும் . அப்பத்தான் ஒவ்வொரு மியூசிக்கின் நுணுக்கமும் முழுவதும் நமக்கும் கேக்கும் . என்ஜாய் . . . .


Always , 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Tuesday, June 14, 2011 15 comments

தம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . .

            சுமார் 13 வருடங்களுக்கு முன்னாள் ஒரு அழகிய சனிகிழமை காலை வேளையில் ஒரு மனிதருள் மாணிக்கம் ரொம்பவும் பீல்ல்ல் ( feeeeel ) பண்ணி சொன்ன வார்த்தைகள் தான் இது , தம்பி, என் 20 வருஷம் அனுபவத்துல . . .  இந்த வார்த்தைகளின் வீரியத்தையும் , தொடர்ச்சியையும் கண்டிப்பாக படிக்க போறீங்க ஆனா இப்போ இல்ல , தொடர்ந்து மனம் தளராம படிங்க அப்புறம  தெரியும் உங்களுக்குஏன் இதை என் தஞ்சாவூர் கல்வெட்டுல வெட்டி வைக்க வேண்டிய வார்த்தைகள் என்று . 

சரி இப்போ அந்த தஞ்சாவூர் கல் வெட்டுல பதிச்சு வைக்க வேண்டிய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை பாப்போம் .

               அப்போ நான் இன்ஜினியரிங் காலேஜ் 2 வது வருடத்தில் அடி எடுத்து வைத்தேன் . இரண்டாவது வருடத்தின் முதல் நாள் கல்லூரி வகுப்பு . அப்போதான் நாங்க உண்மையிலையே எங்கள் துறை குள்ள போறோம் . அதுக்கு முன்னாடி முதல் வருடம் இன்ஜினியரிங் என்பது பொதுவான பொறியியல் பாடங்களை கொண்ட வருடம் , எல்லா  துறை மாணவர்களுக்கும் ஒரே விதமான பாடங்கள் தான் அதுவும் அடிப்படையான பொறியியல் பாடங்களும் , கணிதம் , இயற்பியல் , வேதியியல் மாதிரியான பாடங்கள் தான் , கிட்டத்தட்ட 12ம் கிளாஸ் மாதிரி தான் வச்சுக்குங்களேன் . அதனால பாட புத்தகங்களும் ஒரே மாதிரிதான் , அதனால காலேஜ் சேரும் போதே எல்லாருக்கும் பிரிண்ட் அடிச்சு வச்சு இருக்க புக்ஸ்சை  கைல கொடுத்துடுவாங்க  , நாம அதுல இருக்குறத சமத்தா  பரீட்சைக்கு தேவையானதை கட் பண்ணி பிட்டு ரெடி பண்ணி , பரீட்சைக்கு தயாராக வேண்டியதுதான்.  அட ச்ச  உண்மைய உளறிட்டேனே.  படிச்சு பரிட்சைக்கு தயாராக வேண்டியதுதான் . ஹி ஹி

            ஆனா பாருங்க இரண்டாவது வருஷத்துல இருந்து இந்த பப்பு எல்லாம் வேகாது . அல்வா மாதிரி  புத்தகமா எல்லாம் அச்சு அடிச்சு குடுக்க மாட்டங்க . அங்கதான் ஆண்டவன் வைக்குறான் ஆப்பு . இன்ஜினியரிங் ஜாயின் பன்னுரோம்ன்னு பெருமையா பணத்த கட்டி ஆர்டர் பண்ண ஆப்பு எல்லாம் அப்போ இருந்துதான் ஒவ்வொன்ன டெலிவரி ஆகும் . அதுல முதல் ஆப்பு என்னன்னா பாட புத்தகம் எல்லாம் குடுக்க மாட்டாங்களாம் , சிலபஸ் அதாங்க பாட திட்டம் என்னகிரத்தை மட்டும் கையுல குடுதுடவாங்க அத வச்சுக்கிட்டு நாமளாதான் புத்தங்கள தேடி பிடிச்சு பாடத்தையும் , தலைப்பையும் கண்டு புடிச்சு படிசுக்கணும் . இது எல்லாம் நடக்குற கதையா ? பரிட்சைல புக்ஸ்சை கைல குடுத்து எழுத சொன்னாலும் " இன்னைக்கு என்ன எக்ஸாம் டா  மாமு " ன்னு அப்பாவிய கேக்குற ஆளுங்க நாங்க .  நிற்க


                   இரண்டாவது வருடம் முதல்  நாள் காலேஜ் . கிளாஸ் ல அறிமுக படலம் எல்லாம் ஆரம்பிசுச்சு . யாரு யாரு என்ன பாடம் எடுக்க போறாங்க, அவங்க பேரு என்ன , அப்புறம் எங்க ஒவ்வொருத்தர் பேருன்னு   ஒவ்வொரு ப்ரொபசரா வந்து மொக்கை போட ஆரம்பிச்சாங்க. காலைல ஆரம்பிச்ச இந்த மொக்கை மதியம் உணவு இடைவேளை முடிஞ்சும் வெற்றிகரமா போய்கிட்டு இருந்துச்சு . அடேங்கப்பா   சாமி !!!!!! ஆள விடுங்கபா முடியல அப்பிடிங்கரவரைக்கும் தெளிய வச்சு தெளிய வச்சு அடிச்சுகிட்டு இருந்தாங்க .
ஒரு வழியா கடைசி  பீரியட் வந்துடுச்சு . அப்போதான் ஒரு ப்ரொபசர் கிளாஸ் குள்ள வந்தாரு , நாங்க எல்லாம் மனசளவுல அப்பாடி  ஒரு வழிய கடைசி பீரியட் ஆகிடுச்சு இது முடிந்தா கிளம்பிடலாம் , இன்னைக்கு ஹாஸ்டல் மெஸ்ல டீ கூட பஜ்ஜி குடுபாங்களா இல்ல சமோசா குடுபாங்களான்னு கடுமையான யோசனைல உக்காந்து இருக்கோம் . அவர் என்னடானா வந்ததும் என்னபா பாடத்தை ஆரம்பிக்கிலாமா அப்படினாறு, ஐயோ அம்மாடி அப்படின்னு எங்களுக்கு தூக்கி வாரி போட்டுச்சு , கடைசி பீரியட் மணி 4:10  க்கு வந்து பாடத்தை ஆரம்பிகிலாமன்னு முதல் நாளே கேக்குராறேன்னு,  "சார்ர்ர்ர் " அப்படின்னு இழுக்க , " ஹ ஹ ஹ ன்னு அவர் சிரிச்சுட்டு புரியுதுபா புரியுது என்னடா வந்த முதல் நாளே பாடம் எடுக்குறேன்னு சொல்லுறேன்னு பயந்துடீன்களா ? சரி சரி வேண்டாம் , இன்னைக்கு அறிமுகத்தோட நிறுத்திகலாம்"  அப்படினாறு,  அப்பத்தான் எங்களுக்கு உசுரே வந்துச்சு . ஒரு வழியா அறிமுக படலம் எல்லாம் முடிஞ்சு , அவர் சொன்னாரு , " நான் உங்களுக்கு இந்த செமஸ்டர்  Engineering Surveying  , subject எடுக்கபோறேன் . அதுக்கு என்ன புக்ஸ் வாங்கணும் , எந்த ஆர்தர் ( Author ) வாங்கனும்ன்னு சொல்லுறேன் நோட் பண்ணிகோங்கனாரு" , அதை போர்டுளையும் எழுதி போட்டாரு , சரி நானும் இவரு ரொம்ப நல்லவரா இருகாறேன்னு எதுக்கும் நோட் பண்ணிக்குவோம்ன்னு பெரிய மனசு பண்ணி நோட் எடுத்து நோட் பண்ணிகிட்டேன் ,                 ஆனா பாருங்க , கடைசி பீரியட்கிரதுனாளையும் , ஹாஸ்டல் மெஸ்ல போய் பஜ்ஜி சாப்பிடுற அவசரதளையும் இருந்ததுனால ஆர்தர் பெயர நோட் பண்ணும போது ஒரு சின்ன தப்பு நடந்து போச்சுங்க . சார் சொன்ன ஆர்தர் பெயர்  Punmia , நான் நோட் பண்ணது  Punima . ரொம்ப சின்ன தப்புதான் m க்கு அப்புறம் போடா வேண்டிய  i யை , m க்கு முன்னாடி போட்டுட்டேன் .
இது ஒரு தப்பாங்கா ? 

சரி  அத விடுங்க , நான் அடுத்த நாளே வீட்டுக்கு போன் போட்டு அப்பா நான் இன்ஜினியரிங் புக்ஸ் வாங்கணும் ஒரு ஐயாயிரம் ருபாய் அனுப்புங்கன்னு  சொல்லிட்டேன் .ஏன்னா? நான் எதுலயும் கரெக்ட்டா இருக்க ஆளு . பணம் வந்தாதானே செலவு பண்ண முடியும் , நம்ப வேலை நமக்கு முக்கியம் இல்லையா ? வீட்டுல பணம் வாங்குரதுக்கு இது ஒரு சாக்கு . சரின்னு அப்பாவும் பையன் கேக்குரானேன்னு உடனே பணத்த அனுப்பிட்டாரு , அப்புறம் என்ன? ஒரே கொண்டாட்டம் தான் அந்த வாரம் புக்ஸ் வாங்குறதுக்கு வந்த பணத்த வச்சு  பட்டையா கிளப்பியாச்சு. கடைசில கைல மிஞ்சினது 500 ரூபாய் தான் , சரி மிஞ்சுன பணதுளையும் புக்ஸ் வாங்கலைன்ன மனசாட்சி ஒத்துக்காது , நாங்கெல்லாம் மனசாட்சி படி வாழுறவங்கா  ஹி ஹி ஹி . அதனால புக்ஸ் வாங்க முடிவு பண்ணியாச்சு . ஆனா எங்க வாங்குறது? எந்த கடைல இன்ஜினியரிங் புக்ஸ் கிடைக்கும்? எதுவும் தெரியாது . ஆனா முதல் வருஷம் முழுசும் நம்பள வச்சு ராக்கிங்கிற பேருல கும்மி அடிச்சா சீனியர்ஸ் எதுக்கு இருக்காங்க . அவங்ககிட்ட போய் கேட்டேன் " அண்ணே இன்ஜினியரிங் புக்ஸ் எங்கே கிடைக்கும் ? "  
"டேய் நேரா பஸ் புடிச்சு கோயம்புத்தூர் போ , அங்க சேரன் புக் ஸ்டோர்ன்னு ஒன்னு இருக்கும் அங்க போய் கேளு. நீ என்ன புக் , என்ன ஆர்தர் கேட்டாலும் கிடைக்கும் அங்க கிடைக்காத இன்ஜினியரிங் புக்ஸ்யே இல்ல , அவ்வுளவு பெரிய புக் ஸ்டோர் டா " அப்படினாங்க . ஓகே ரைட்டு , சீனியர்ஸ் கோடு போட்ட நாங்க ரோடு போட்டுடுவோம் இல்ல . 
சரின்னு அந்த சனி கிழமை காலைல குளிச்சுட்டு (நம்புங்க) பஸ் புடிச்சு கிளம்பிட்டேன் புக் வாங்க . கூட நான் கிளாஸ் ல நோட் பண்ணி வச்சு இருந்த ஆர்தர் பேரு இருக்க பேப்பர் கைல எடுத்துகிட்டாச்சு . நேரா புக் ஸ்டோர் க்கு போயாச்சு , கூட்டம் அம்முது . இருந்தாலும் நாம்ப விடுவோமா? உள்ள போய் அங்க இருந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட ரொம்ப ஸ்டைல் ஆ (அது ஏன்னு தெரியல பொண்ணுங்களை பார்த்தாலே நமக்கு ஸ்டைல் தன்னால வந்துடுது . . ) " surveying புக் வேண்டும் " அப்படினேன்
"என்ன ஆர்தர் சார் " இது அந்த பொண்ணு , உடனே கைல இருந்த பேப்பர் எடுத்து பார்த்தேன் அதுல நான் தெளிவ நோட் பண்ணி வச்சு இருந்தேன் ஆர்தர் பேரு : Punima . இதை எப்படி படிபிங்கா?  " புனிமா " ஆமா அப்படிதான் . இருக்கிற கூட்டத்துல , நானும் சத்தம சொன்னேன் , " புனிமா " அப்படின்னு , அந்த பொண்ணு ஒரு மாதிரி பார்த்துட்டு உள்ள போச்சு . போயிட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு வந்து " சார் அந்த ஆர்தர் இல்ல , வேனும்ன surveying  வேற ஆர்தர் இருக்கு தரவான்னு கேட்டது . நான் உடனே அதெல்லாம் முடியாது எங்க ப்ரொபசர் அந்த ஆர்தர் தான் சொல்லி இருக்காரு , நீ போய் இன்னொரு முறை நல்ல பார்த்து எடுத்துட்டு வாமா ன்னு சொன்னேன் , அந்த பொண்ணு முறைசுக்கிட்டே மறுபடியும் உள்ள போச்சு . கொஞ்சம் நேரம் கழிச்சு திரும்ப வந்து " சார் இல்ல சார் " அப்படின்னுச்சு . எனக்கு வந்தது பாருங்க கோவம் , என்ன மா நீ கடைக்கு புதுசா?  ? கோயம்புத்தூர்லையே இதுதான் பெரிய புக் ஸ்டோர் அப்படின்னு சொன்னாங்க , இங்க கிடைக்காத இன்ஜினியரிங் புக்கே கிடையாதுன்னு சொன்னாங்க , நீ என்னடான ஒரு surveying புக் இல்லன்னு சொல்லுறேன்னு சத்தம் போட்டேன் (இன்ஜினியரிங் படிக்குரேணாம்) . இதெல்லாம் கொஞ்சம் நேரம் கவனிசுகிட்டு இருந்த கடை ஓனர் அந்த பொன்னை கூப்பிட்டு " என்ன மா என்ன பிரச்னை ன்னு கேட்டு இருக்காரு , அந்த  பொண்ணும் விஷியத்தை சொல்லி இருக்கு  . உடனே அந்த கடை ஓனர் என்னை கூப்பிட்டாரு . கூப்பிட்டு சொன்னாரு, 
" தம்பி , நான் இந்த புக்ஸ் ஸ்டோர் கடந்த இருபது வருசமா நடத்திகிட்டு இருக்கேன் .ஆனா தம்பி , " என் 20 வருஷம் அனுபவத்துல முனியம்மான்னு ஒரு ஆர்தர் கேள்வி பட்டதே இல்ல தம்பி " அப்படினாறு ( நான் புனிமா ன்னு சொன்னது அந்த பொண்ணு காதுல முனிமான்னு கேட்டு இருக்கு , அத அந்த பொண்ணு ஓனர் கிட்ட சொல்லும் போது அது இன்னும் மாறி முனியம்மா ஆகிடுச்சு , ஐயோ ஐயோ இதெல்லாம் எங்க போய் சொல்ல ? " ) 
ஆத்தாடி , என்னது முனியம்மா வா ? "  ஆஹா எங்கயோ தப்பு நடந்து போச்சுட கை புள்ளை ஓடு டா ஓடு , பின்னங்கால் புடனில அடிக்க ஓடிடு ன்னு , மனசு குல்லையே நினைச்சுகிட்டு ,ஆனா முகத்துல எந்த கெத்தும் குறையாம , சரி சார் நான் அப்புறம் வரேன்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம ஒரே நடையும்  ஓட்டமும் தான் . அவமான பட்டாண்ட ஆட்டோகாரன்ன்னு எஸ்கேப் ஆகி , நேரா ஹாஸ்டல்க்கு போய் நம்ப பிரிண்ட்ஸ் கேட்டேன் ஒண்ணுமே தெரியாத மாதிரி " மச்சி நம்ப ப்ரொபசர் சொன்னாரே surveying க்கு ஒரு ஆர்தர் , அது என்ன பேரு ? " அப்படின்னு கேட்டேன் " அது புன்மியா ( Punmia ) டா மச்சி , அப்படினானுங்க . "spelling  என்னடா ?"  இது நானு , P u n m i a  டா " இது அவன் . 
" ஆஹா நாம்பதான் தப்பா  எழுதிட்டோமா? "   ரைட்டு மேட்டரய் அப்படியே அம்முகிடுவோம் இல்லனா இந்த பசங்க இதை தெரிஞ்சுகிட்ட நோட்டீஸ் போர்டுல அடிச்சு ஒட்டாம விடாமாட்டன்னுங்க , அப்புறம் மீதி இருக்க மூணு வருசமும் நம்பள முனியம்மா ன்னு பட்ட பேரு வச்சு கூப்பிட்டாலும் கூப்பிடுவானுங்கன்னு ,  அப்படியே கம்பெனி ரகசியத்தை அம்முகிட்டேன் . எப்பூடிஈஈஈஈ . .  நாங்க எல்லாம் எவ்வளவு பெரிய ராஜா தந்திரி !!!.
சரி இந்த வரலாற்று சிரிப்பு மிக்க நிகழ்வை இதுவரைக்கும் யாருகிட்டயும் சொல்லாம பாதுகாத்துட்டு  வரேன் , நீங்களும் யாருகிட்டயும் சொல்லிடாதிங்கா  ப்ளீஸ்ஸ் ஸ் ஸ் ஸ் . . . . . ஓகே வா ? 


Always , 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

Thursday, June 2, 2011 46 comments

                          
                               காலைல குளிக்கும் போது , அதுவும் அவசரமா ஆபீஸ்க்கு கிளம்புறதுகாக குளிக்கும் போது இருக்கிற  மிக பெரிய பிரச்சனைகள்ள ஒன்று , சோப்பு கை நழுவிபோய்டுறது , அதுவும் அவசர அவசரமா சோப்பு போடும் போதுதான் இந்த சோப்பு நம்ப கிட்ட சடு குடு விளையாடும் . எவ்வளவுதான் இறுக்கி புடிச்சு , கவனமா குளிச்சாலும் , நாம ஏரியா ஏரியாவா உடம்புல சோப்பு போடும் போது சோப்பு , நாம பிக் அப் பண்ண நினைக்குற பிகர் நழுவி போற மாதிரி லபக்குன்னு நழுறது சகஜம் தான்  . இருந்தாலும்  மனம் தளராம ,  நாம்பளும் உடனே சோப்பு தரைல விழாம புடிக்க, இந்தியன் கிரிக்கெட் டீம் பில்டர் கணக்கா குட்டிகரணம் அடிச்சு லாவகம புடிக்க பார்த்தாலும் , சோப்பு எப்படியும் பெண்டரி தொட்டு சோப்பு முனை மழுங்காம விடாது . அதுக்கு அப்புறம் அரை மனசோட அந்த சோப்புபை ஒரு பேருக்கு  தண்ணில  காட்டிட்டு வழக்கம் போல சோப்பு போடா ஆரம்பிபோம் . இருந்தாலும் மனசு கஷ்டமா இருக்கும் கீழ விழுந்த சோப்பை போடுரமேன்னு ( சுத்தத்தை  பத்தி கவலை பாடுரவனுக்கு கண்டிப்பா கஷ்டமா இருக்கு. இருக்குமில்ல? .... என்னது இல்லையா? சரி  விடுங்க அப்போ நீங்க ... ரைட்டு ரைட்டு அது எதுக்கு இப்போ )
   
                ஆனா பாருங்க , நாம உடம்புக்கு சோப்பு போடும் போது நழுவுனா கூட பரவா இல்ல , இந்த அழகான முகத்தை மேலும் அழகு படுத்த கண்ணை மூடிகிட்டு சோப்பு போடும்போது கை நழுவி போகும் பாருங்க , அப்போ வரும் கோவம் , அப்படியே பாத் ரூம் சுவர அடிச்சு உடைசுடலாமன்னு தோணும் , ஆனா பாருங்க அதுல ஒரு சிக்கல் இருக்கு , அப்படி அடிச்சா , உடையுறது பாத் ரூம் சுவரா இருக்காது , நம்ப கையாதான் இருக்கும் . அதனால மனச தேத்திக்கிட்டு சோப்பு தேட ஆரம்பிப்போம் .
       
             முதல் முயற்சியா கண்ணா மூடிகிட்டே அப்படியே கீழ குனிஞ்சு தரைய தடவ ஆரம்பிப்போம் ஆனா கண்டிப்பா சோப்பு கிடைக்காது , அது எப்படி கிடைக்கும்? பகல்லயே நமக்கு பசு மாடு தெரியாது , இதுல இருட்டுல எங்க எருமை மாடு தெரிய போகுது ? . கண்ண திறந்துகிட்டு வண்டி ஓட்டுனாலே கீழ வாரி விழுறவாங்க நாம . இதுல எங்க கண்ணா மூடிகிட்டு சோப்பை கண்டு புடிக்குறது?  தரைக்கு சாணி போட்டு மொளுக்குற மாதிரி , தடவுனதுதான் மிச்சம்.

                 இப்போ ரெண்டாவது முயற்சியாக ,லைட்டா கண்ண திறந்தா , திறந்தவுடனே எப்படிதான் தெரியல , சோப்பு நுரை கண்ணுக்குள்ள கபால்ன்னு  போய் அங்க கண்ணீர்,  டேம் கட்டி நிக்கும் . அப்புறம் ஓர கண்ணால கண்ணு எரிச்சலோடையே சோப்பு தேடி மீதி ஏரியாவை போட்டு முடிப்போம் . அட அட அட என்னையா இது? குளிக்குறது சர்கஸ் பண்ணுறதை விட கஷ்டமா இருக்கு . இருந்தாலும் இந்த கூத்து எல்லாம் பாத் ரூம் குள்ள நடக்குரதுனால நாம தப்பிச்சோம் . ஆனா இதையெல்லாம் மத்தவங்க கண்ணு கொண்டு பார்த்தாங்க அவ்வுளவுதான் நாம பண்ணுற காமெடில மானம் மானாவாரிய போகும் .

     ஆனா  இந்த உலக மகா சோப்பு நழுவுற பிரச்சனைய நம்ப பிரபல பதிவர்கள் எப்படி சமாளிகிறாங்க? இல்ல அவங்களும் சோப்பு நழுவ விடுறான்களான்னு BBC (Tamil) REPORTER ஸ்பெஷல் இன்டர்வியூ எடுத்து இருக்காரு , அவங்க என சொல்லுரங்கன்னு பாக்கலாம் .

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : நான் குளிகுறேன்னு யாரு சொன்ன உங்க கிட்ட? எனக்கு ஊர் ஊரா சுத்துறதுக்கும் , அத நான் சேலம் போன்னேன் , சிங்கப்பூர் போன்னேன் , கொடைகானல் போன்னேன்னு போட்டோ புடிச்சு ப்ளாக்குக்கிர
 பேர்ல போடுரதுக்குமே டைம் இல்ல இதுல எங்க குளிக்குறது?

BBC REPORTER : அப்போ சார் எந்த ஊருக்கு போனாலும் குளிக்குறது இல்ல?

சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : யோவ் அறிவு இருக்கா  உனக்கு? நான் அங்க போன்னேன் , இங்க போன்னேன் , ஹோட்டல்க்கு சாப்பிட போன்னேன் அப்படின்னு போட்டோ புடிச்சு போடுறேன்ன இல்லையா என்னோட ப்ளாக்ல?

BBC REPORTER :
ஆமா சார் அத தான்  பார்த்துட்டு ஊரு சிரிப்பா சிரிக்குதே . . .


சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : அப்போ நான் குளிச்சு இருந்த அதையும் போட்டோ புடிச்சு போட்டு இருக்க மாட்டேன்? , இதெல்லாம் நீ யோசிக்க மாட்ட? வந்துட்டான் தூக்கிகிட்டு , மைக்க, கேள்வி கேக்குறதுக்கு , போயா போ நான் உன்னையும் கூட்டிட்டு போய் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கி குடுக்க சொல்லுறதுக்கு முன்னாடி போய்டு , இல்ல அப்புறம் நீதான் பில் குடுக்க வேண்டி வரும் .சொல்லிட்டேன் ஆமா .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

பட்டா பட்டி : நான் பட்டா பட்டி ட்ரவுசர் போடா ஆரம்பிச்ச காலத்துல இருந்தே குளிக்குறது இல்ல சார் அப்புறம் எங்க சோப்பு எல்லாம் போட்டுக்கிட்டு ஹி ஹி ஹி 

BBC REPORTER : சார் நீங்க எப்போ இருந்து பட்டா பட்டி ட்ரவுசர் போட ஆரம்பிசுங்க?

பட்டா பட்டி : நான பிறந்ததுல இருந்தே பட்டா பட்டி ட்ரவுசர் தான் போடுறேன்


BBC REPORTER : அட பாவி அப்போ நீ பொறந்ததுல இருந்தே குளிக்குறது இல்லன்கிரததான் அப்படி சொன்னியா ?

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

மங்குனி அமைச்சர் : யோவ் எனக்கு ஆடு வெட்டதான் தெரியும் , இந்த  சோப்பு போடுறத பத்தி எல்லாம் தெரியாது .நான் எனக்கும் சோப்பு போட்டதும் கிடையாது , வேற யாருக்கும் சோப்பு போட்டதும் கிடையாது .

BBC REPORTER : அப்போ சோப்பு போடாமதான் குளிக்குகிறின்களா நீங்க ?

மங்குனி அமைச்சர் : யோவ் நான் குளிக்குறேன்னு சொன்னேன உன்கிட்ட? எப்பவாவது மழை பெய்யும் போது நனையுறதொட சரி . குளிச்ச எனக்கு ஜல்ப்பு புடிசுக்கும் .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

கோகுலத்தில் சூரியன் வெங்கட் : சாரி சார்  , இந்த கேள்வி MODERATION க்கு போயிட்டு வந்தாதான் என்னால பத்தி சொல்ல முடியும் .

BBC REPORTER :  சார் இதுக்கெல்லாமா MODERATION ? என்ன கொடுமை இது ? 


வெங்கட் :  சார் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எல்லாமே MODERATION ல தான் போகுது சார்


BBC REPORTER :  எல்லாமேனா?


வெங்கட் :  எல்லாமேனா எல்லாமேதான் அதுக்கு மேல சொல்ல முடியாது ( அப்புறம் யாரு வீட்டுக்கு போய் அடிவாங்குறது அவ்வ்வ்வ்வ்வ்வ் ) 

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?


சி.பி.செந்தில்குமார் : ஹி ஹி ஹி , சார் குளிக்குறது புடிக்கும் ஆனா குளிக்குறது நானா இருக்க கூடாது 

 BBC REPORTER : அப்படினா ? என்ன சார் சொல்லவரிங்க?

சி.பி.செந்தில்குமார் : ஹி ஹி ஹி எனக்கு தியேட்டர்ல நடிகைகள் சினிமால குளிக்கிறதை  கலை கண்ணோட பார்க்குறதுக்குதான் புடிக்கும் , மத்தபடி எனக்கு குளிக்கிறதுன்னா அலர்ஜி சார் ஹி ஹி ஹி . . .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

விக்கிஉலகம் (விக்கி) : சார் இங்க வியட்நாம்ல யாரும் குளிக்கிறது இல்ல தெரியமா உங்களுக்கு? குளிக்கிறது எல்லாம் வேஸ்ட் ஆப் டைம் சார்  

BBC REPORTER : குளிக்கிறது வேஸ்ட் ஆப் டைம் னா வேற என்ன பண்ணுவிங்கா? 

விக்கிஉலகம் (விக்கி) : குளிச்சு டைம் வேஸ்ட் பண்ணுறத விட , அந்த நேரத்துல நாலு ப்ளாக் போஸ்ட் பண்ணலாம் இல்ல? நானெல்லாம் ஒரு லட்சிய பாதைல போய்கிட்டு இருக்கேன் தெரியுமா உங்களுக்கு?  


-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

பன்னிகுட்டி  :  அடங்கொன்னியா குளிக்குறதுக்கு சோப்பு எல்லாம் போடணுமா? 

BBC REPORTER : ஆமா சார் , அப்போ இது தெரியாத உங்களுக்கு? அப்போ குளிக்குரதுக்கு நீங்க என்னத்த use பண்ணுரிங்கா?

பன்னிகுட்டி  :  i use only  செங்கல் . அப்புறம் குளம் குட்டைய பக்குறபோ அப்படியே ஜாலியா குப்புற படுக்குரதொட சரி


-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


BBC REPORTER : மேடம்  இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி             சமாளிக்குரிங்க?

இந்திரா  :  ( போச்சுட ஏற்கனவே நாம சொந்தமா வாங்குற பல்பு பத்தாதுன்னு இப்போ BBC ல இருந்து வேற வந்துட்டாங்களா ? ) சார் உங்களுக்கு ஒன்னு தெரியுமா? குளிக்குரதுல பல விதம இருக்கு , அதுல நான் குளிக்குற விதத்துல சோப்பு நழுவுரதுக்கு வாய்ப்பே இல்ல .


BBC REPORTER : என்னது குளிக்குரதுல பல விதம் இருக்கா ? அது என்ன என்ன விதம் மேடம் ?

இந்திரா  :  அப்படி கேளுங்க சொல்லுறேன் ,  அருவி குளியல் , காக்கா குளியல் , முலிகை குளியல் , சூரிய குளியல் , பம்பு செட் குளியல் , ஆடம்பர குளியல் , அவசர குளியல் , MODERN குளியல்  இப்படி நிறைய இருக்கு . .
 
BBC REPORTER : ஓ இதுல இவ்வளவு இருக்க ? அப்போ நீங்க எந்த விதமான குளியல் மேடம் பின்பற்றுறிங்கா ? 


இந்திரா  :   என்னோட சாய்ஸ்  எப்பவுமே MODERN குளியல்தான் .


BBC REPORTER : கேக்குறேனேன்னு தப்ப நினைச்சுகாதிங்க மேடம் , அது என்ன MODERN குளியல் ? 

இந்திரா  :  அட என்ன சார் BBC ல இருந்து வந்து இருக்கேன்னு சொல்லுரிங்க MODERN குளியல் தெரியாதுன்னு சொல்லுரிங்க ? 
அது  ஒன்னும் இல்ல சார் ரொம்ப சிம்பிள் , ஆபீஸ்கோ , இல்ல வெளியவோ கிளம்புறதுக்கு  முன்னாடி , left ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ்  , right ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ்ஸ் அவ்வுளவுதான் . 


BBC REPORTER : புஷ்ஷ்ஷ்சா ? அப்படினா ?

இந்திரா  :  என்ன சார் நீங்க சுத்த வெவரம் கிட்ட ஆள இருக்கீங்க , அப்படின வெளிய கிளம்புறதுக்கு முன்னாடி , perfume  bottle , இல்ல சென்ட்  பாட்டில் எடுத்து  left  ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ்ஸ் , right  ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ் . . . . அவ்வுளவுதான் குளியல் முடிஞ்சது . . .

BBC REPORTER : இதுதான் உங்க புஷ்ஷ்ஷ்சா ? சரியா போச்சு . . .
ஆள விடுங்காடா டேய் . . . .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

ஆகா சோப்பு நழுவாம இருக்க ஒரே தீர்வு : குளிக்காம இருக்குரதுதானா ? 


இது தெரியாம இந்த ராக்ஸ் பலவருசமா, பல சோப்பு தவற விட்டுடானே . . . அட ச்சா


என்னடா குளிக்குறத பத்தி பதிவு போட்டுட்டு குளிக்குற மாதிரி படம் ஏதும் போடலைஎன்னு வருதப்படுறவங்களுகாக கீழே பார்க்கவும் . . .
ஆனந்த குளியல் . . . .

Always , 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.comRelated Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters