Followers

Friday, September 23, 2011

Sorry , கொஞ்சம் Busy ah இருந்துட்டேன்
         
             ப்ளாக் எழுதி சரியா இரண்டு மாதங்களுக்கு மேல ஆகிடுச்சு . கடைசியா ஜூலை 18 ம் தேதி ப்ளாக் எழுதியது. அதுக்கு அப்புறம் ப்ளாக் எதுவும் எழுதவும் இல்ல , வெளியிடவும் இல்ல . இதுனால உலகம் சுத்துறதோ , இல்ல சூரியன் உதிகிறதோ , இல்ல காக்கா கத்துறதோ எதுவும் நின்னுடல . எல்லாம் வழக்கம் போலதான் நடக்குது . ராக்ஸ் ப்ளாக் எழுதலைன்னு யாரும் வருத்தப்படவும் இல்லை , சந்தோஷ பாடவும் இல்லை .

                நான் ப்ளாக் எழுதாதற்கு ஏகப்பட்ட காரணங்கள் . அதுல முக்கியாமான காரணம் நான் இப்போ ரொம்ப ப்ரீயா இருக்குரதுதான் , ரொம்ப வேடிக்கையா இருக்குது இல்ல ? அதாவது இப்போ நான் இரண்டு வருட சவுதி பணிக்கு பின் விடுமுறையில் இந்தியா வந்து இருக்கேன் . அதாவது வேலைக்கு போகாம வெட்டியா இருக்கேன் அதனாலதான் ப்ளாக் எழுத முடியல , நேரமும் இல்ல . என்ன கொடுமை  இது?  நான் பிஸியா வேலைல இருந்த போது அப்போ அப்போ ப்ளாக் எழுதினேன் , ஆனா பாருங்க இப்போ வேலைல இல்லாம விடுமுறைல ரொம்ப ப்ரீயா வெட்டியா இருக்கேன் ஆனா இப்போ ப்ளாக் எழுத முடியல . இதுக்கு என்ன காரணம்னா , நான் சவுதில வேலைல இருக்கும் போது அப்போ எட்டு மணி நேர வேலைதான் , மத்த நேரம் எல்லாம் பக்கத்துல யாரும் இல்ல , வேற வேலை எதுவும் இல்ல . எப்பவும் இணைய தளம் தான் ஒரே  துணை . வேற வழி இல்ல அதனால எப்பவும் ஆன்லைன்ல இருக்க முடிஞ்சது , ப்ளாக் எழுத முடிஞ்சது . ஆனா இப்போ இந்தியா வந்த பிறகு நிலைமை அப்படி இல்ல , அப்பா , அம்மா , சொந்தங்கள் , பள்ளி , கல்லூரி நண்பர்கள் அப்படின்னு நிறைய பேர் சுத்தி இருக்காங்க. அதனால அவங்களோட நேரம் செலவிடவே நேரம் இல்ல . அப்புறம் சொந்த வேலைகள் , என்னுடைய கல்யாணத்துக்கான வேலைகள்ன்னு ரொம்பவே பிஸி . அதுவும் இல்லாம இரண்டு வருடங்கள் இந்தியால இல்லாததுனால நிறைய விட்டு போன சொந்த வேலைகள் செய்ய வேண்டி இருக்கு.  அதனால ஆன்லைன் வரதுக்கோ , ப்ளாக் எழுதுறதுக்கோ கண்டிப்பா நேரம் இல்ல. ஒரு நாளைக்கு ஆன்லைன் வரதுக்கு அதிகபட்சம் இரவு துங்க போற நேரதுக்கு முன்னாடி ஒரு அரை மணி நேரம் தான் கிடைக்குது . அதுலயும் மெயில் பார்க்கவும் மத்த விஷியங்களை பார்க்கவுமே நேரம் சரியா இருக்கு . அதனால இதுதான் என்னுடைய உண்மையான வாழ்க்கை முறை , சவுதில இருந்த போது இருந்தது போல எப்பவும் இணையதளத்துல இருக்க முடியாது.

                       ஆனா நான் சவுதில இருந்த போது இரண்டு வருடங்களில் அறிமுகமான இணையதள நண்பர்கள் ரொம்பவே கோவிச்சுகிறாங்க , வருத்த படுறாங்க . ராஜேஷ் முன்ன மாதிரி இல்ல , ரொம்ப மாறிட்டான் . ஆன்லைன் வர்றது  இல்ல , சாட் பண்ணுறது இல்ல , கண்டுக்கிறது இல்ல , ஏன் இந்தியா வந்து ஒரு போன் கூட பண்ணலன்னு . அவங்க எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே ஒன்னுதான் இந்த ராஜேஷ்  எப்பவும் மாற மாட்டன் எப்பவும் ஒரே மாதிரி தான் . ஆனா என் நண்பர்கள்ன்னு சொல்லிக்கிற நீங்கதான் நிலைமைய புரிஞ்சுக்கணும் .

               சரி இப்போ மேட்டர்க்கு வரேன் , நான் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ப்ளாக் எழுதிகிட்டு இருந்தவரை  ஹிட் கவுன்ட் கம்மியா இருந்தது , தமிழ்மணம் Traffic Rank 1050 க்கு மேல இருந்தது . ஆனா நான் எழுதாம இருந்த இந்த ரெண்டு மாதத்தில் என்னோட வலைப்பூவின் ஹிட் கவுன்ட் அதிகமாகிடுச்சு , தமிழ்மணம் Traffic Rank : 786 க்கு வந்துடுச்சு . தினமும் குறைஞ்சது ரெண்டு பேராவது வந்து என்னோடைய பதிவுகளை படிச்சுட்டு போறாங்க. என்ன இதெல்லாம்? தொடர்ந்தது எழுதும் போது அவ்வுலவா யாரும் வரல , ஆனா எழுதாத போது நிறைய பேரு வந்துட்டு போறாங்க , இந்த மனுசங்கள புரிஞ்சுக்கவே முடியலையே  கடவுலே . . .


            சரி  இவ்வளவு இடைவிடாது சொந்த அலுவல்களுக்கு இடையிலும் நான் நிறைய எழுத ஆசை படுகிறேன் , மனதில் நிறைய விஷியம் ஓடி கொண்டேதான் இருக்கிறது எழுதுறதுக்கு . ராக்ஸ் மறுபடியும்எழுத வந்துட்டான் , எல்லாரும் தொடர்ந்து படிங்க . என்ஜாய் பண்ணுங்க . கண்டிப்பா வயுறு வலிக்க  சிரிக்கவும் , சிந்திக்கவும் தயாராகுங்கள் . . .

நான் இனி எழுத இருக்கும் அதிரடி பதிவுகளின் தலைப்புக்கள்   பின் வருமாறு :

1. ரகசிய கேமராக்களும் , மனித  சுதந்திரமும்   . . .
2. என் நண்பன் விட்ட ரேஸ் . . .
3. கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்கள் . . .
4. மச்சான் பிரேக் புடிக்கல!!!!! . . .
5. நான் பாட்டு பாடவா ? . . .
6.  * நிபந்தன்னைக்குட்பட்டது (* conditions apply)
I Am Back . . 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

25 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய்ய்ய் நீ எழுதாம இருக்கும் போது நிறைய பேர் வர்ரானுங்கன்னா, நீ ஒருவேள எதுவும் எழுதிடுவியோன்னு பயந்துதான்........ வெளங்கிருச்சா?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய்ய்ய் நீ எழுதாம இருக்கும் போது நிறைய பேர் வர்ரானுங்கன்னா, நீ ஒருவேள எதுவும் எழுதிடுவியோன்னு பயந்துதான்........ வெளங்கிருச்சா?///

வெளங்குது , வெளங்குது நல்ல வெளங்குது . அதனாலதானே எதுவும் எழுதாம வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் . . . ஆமா பண்ணி செல்லம் நீ இன்னமா சவுதில இருக்க? கடவுளே எப்படி தான் அங்க எல்லாம் இருக்காங்களோ ? ? ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நான் இனி எழுத இருக்கும் அதிரடி பதிவுகள் பின் வருமாறு :

1. ரகசிய கேமராக்களும் , மனித சுதந்திரமும் . . .
2. என் நண்பன் விட்ட ரேஸ் . . .
3. கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்கள் . . .
4. மச்சான் பிரேக் புடிக்கல!!!!! . . .
5. நான் பாட்டு பாடவா ? . . .
6. * நிபந்தன்னைக்குட்ட்பட்டது (* conditions apply)
/////////

இதெல்லாம் தலைப்புகளா இல்ல இதுவே பதிவுகளா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய்ய்ய் நீ எழுதாம இருக்கும் போது நிறைய பேர் வர்ரானுங்கன்னா, நீ ஒருவேள எதுவும் எழுதிடுவியோன்னு பயந்துதான்........ வெளங்கிருச்சா?///

வெளங்குது , வெளங்குது நல்ல வெளங்குது . அதனாலதானே எதுவும் எழுதாம வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் . . . ஆமா பண்ணி செல்லம் நீ இன்னமா சவுதில இருக்க? கடவுளே எப்படி தான் அங்க எல்லாம் இருக்காங்களோ ? ? ?///////

வேற வழி....?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...
இதெல்லாம் தலைப்புகளா இல்ல இதுவே பதிவுகளா? ////

ஸ்கூல் படிக்கும் போதே இப்படி டீச்சர் கிட்ட டவுட் கேட்டு இருந்த நல்ல படிச்சு நல்ல நாட்டுக்கு வேலைக்கு போய் இருக்கலாம் இல்ல ? அப்போ எல்லாம் வாய்ல கொய்யாவ கொதபிட்டு இப்ப வந்து இங்க டவுட் கேளு . அதெல்லாம் பதிவோட தலைப்புதாயா புரிஞ்சதா?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

எலேய்ய்ய் நீ எழுதாம இருக்கும் போது நிறைய பேர் வர்ரானுங்கன்னா, நீ ஒருவேள எதுவும் எழுதிடுவியோன்னு பயந்துதான்........ வெளங்கிருச்சா?///

வெளங்குது , வெளங்குது நல்ல வெளங்குது . அதனாலதானே எதுவும் எழுதாம வேடிக்கை பார்த்துகிட்டு இருந்தேன் . . . ஆமா பண்ணி செல்லம் நீ இன்னமா சவுதில இருக்க? கடவுளே எப்படி தான் அங்க எல்லாம் இருக்காங்களோ ? ? ?///////

வேற வழி....? ////

உன்ன பார்த்தாலும் பரிதாமா தான் இருக்கு , சரி சரி சீக்கிரம் ஊருக்கு வந்து செர்ரா வழியா பாரு

விக்கியுலகம் said...

மாப்ள என்னய்யா இப்படி பிரான்க்கா பேசுற...உன் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு ஹிஹி!....இது மன்னிப்பு விடு தூதா ஹிஹி!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@விக்கியுலகம் said...

மாப்ள என்னய்யா இப்படி பிரான்க்கா பேசுற...உன் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு ஹிஹி!....இது மன்னிப்பு விடு தூதா ஹிஹி!///

ஹி ஹி என்ன பண்ண? பொறந்ததுல இருந்தே ரொம்ப ப்ரன்க்கா இருந்து பழகியாச்சு . . .

Lakshmi said...

ராஜா நானும் உன்ன ரொம்பவே மிஸ்பண்ணுரேன்பா. சௌதில இருந்தப்போ ஓன் லைன்ல நான் எப்ப இருந்தாலும் தேடி வந்து பேசுவே. இப்ப உன்னைப்பாக்கவேமுடியல்லே. சீக்கிரமா பதிவெழுத ஆரம்பிச்சுடு அது மூலமாகவாவது உன்னப்பாக்குரேன்.

Suji said...

ராக்ஸ் மறுபடியும்எழுத வந்துட்டான் , எல்லாரும் தொடர்ந்து படிங்க . என்ஜாய் பண்ணுங்க . கண்டிப்பா வயுறு வலிக்க சிரிக்கவும் , சிந்திக்கவும் தயாராகுங்கள் . . .


வயுறு வலிக்க சிரிக்க தெரியும் ராஜேஷ் .அது எப்படி
வயுறு வலிக்க சிந்திக்க???????? 1think

RAMVI said...

welcome back

//என்னுடைய கல்யாணத்துக்கான வேலைகள்ன்னு //

வாழ்த்துக்கள் ராஜேஷ்.

வெளங்காதவன் said...

இன்னைக்குத்தேன் உங்க கடைக்கு வாரேன்...

வந்திட்டுப் போனேன்னு சொல்லத்தான் இந்த கமெண்டு.....

#பாலோயர் விட்ஜ் வொர்க் ஆவலை...

ஹி ஹி ஹி...

Sahana said...

வாழ்த்துக்கள் ராஜேஷ். பதிவுகள் தொடரட்டும்.

எஸ்.கே said...

பேக் ஆனதுக்கு வாழ்த்துக்கள்!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Lakshmi said...

ராஜா நானும் உன்ன ரொம்பவே மிஸ்பண்ணுரேன்பா. சௌதில இருந்தப்போ ஓன் லைன்ல நான் எப்ப இருந்தாலும் தேடி வந்து பேசுவே. இப்ப உன்னைப்பாக்கவேமுடியல்லே. சீக்கிரமா பதிவெழுத ஆரம்பிச்சுடு அது மூலமாகவாவது உன்னப்பாக்குரேன்.///

கண்டிப்பா அம்மா , உங்க ஆசியுடன் தொடர்ந்தது எழுதுறேன் . .
உங்களையும் விரைவில் தொடர்புகொள்கிறேன் . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@எஸ்.கே said...

பேக் ஆனதுக்கு வாழ்த்துக்கள்! ////

வாவ் எஸ்.கே நன்றி நன்றி நன்றி . .
ரொம்ப நாள் ஆச்சு பார்த்து , எப்படி இருக்கீங்க நண்பா ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Suji said...

ராக்ஸ் மறுபடியும்எழுத வந்துட்டான் , எல்லாரும் தொடர்ந்து படிங்க . என்ஜாய் பண்ணுங்க . கண்டிப்பா வயுறு வலிக்க சிரிக்கவும் , சிந்திக்கவும் தயாராகுங்கள் . . .


வயுறு வலிக்க சிரிக்க தெரியும் ராஜேஷ் .அது எப்படி
வயுறு வலிக்க சிந்திக்க???????? 1think ////

என்ன ஒரு அறிவு உனக்கு சுஜி , உன்னுடைய அறிவை மெச்சுகிறேன் . ஆனா பாரு நீ இப்பவே சிந்திக்க ஆரம்பிச்சுட்ட ஹி ஹி ஹி . . . அதனால வயுறு வலிக்க சிந்திக்கிறது ஒன்னும் பெரிய விசியம் இல்ல

எஸ்.கே said...

நல்லா இருக்கேங்க. இப்பெல்லாம் நிறைய பேர் பிளாக் போக முடியறதில்ல. நேரம் கிடைக்கிறப்ப வரேன் கோச்சீகாதீங்க!:-)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ RAMVI said...

welcome back

//என்னுடைய கல்யாணத்துக்கான வேலைகள்ன்னு //

வாழ்த்துக்கள் ராஜேஷ்.///

வாவ் கரெக்டா பாயிண்டை புடிசுட்டிங்களே . ரொம்ப நன்றி ராம்வி மேடம் . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Sahana said...

வாழ்த்துக்கள் ராஜேஷ். பதிவுகள் தொடரட்டும். ///

அவ்வ்வ்வ் சஹானா உன் வாழ்த்து மழையில் நனைகிறேன் . .

நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை உனக்கு . . .

அப்பாவி தங்கமணி said...

ha ha ha... good one... I too have this doubt, why people visit my blog more when I'm not writing... :))

கோகுல் said...

இன்னைக்கு தான் உங்க அறிமுகம் கிடைச்சுது.அதிரடியா ஆரம்பிக்கப்போறிங்க!கலக்குங்க!

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hi Rajeshmthis is my first time here and enjoyed reading it.Thanks for writing interestingly.will come back.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@அப்பாவி தங்கமணி said... ,
@கோகுல் said...,
@MyKitchen Flavors-BonAppetit!. said... ,

//////

thanks for coming to my blog friends ,
keep coming and enjoy it .

மோகன் குமார் said...

இனியாவது அடிக்கடி எழுதுங்க. புது தலைப்புகள் சுவாரஸ்யமா இருக்கு

"காட்சியில் இல்லையென்றால் காணாமல் தான் போவோம். காணாமல் போனதற்கு கவலைப்பட யாருமில்லை" என ஒரு கவிதையில் வரிகள் வரும்.

Lost in sight; lost in memory என்பார்கள். எனவே அடிக்கடி எழுதுங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters