Followers

Sunday, March 27, 2011 30 comments
 தேர்தல் 2011 ,  ஓட்டு அள்ளும் பதிவர்கள் ...  ( கொய்யா   காண்டாவுது ... ) 


               உஸ்ஸ்சாப்ப்பா  தேர்தல் வந்தாலும் வந்தது காசு வாங்குற வாக்களர்களுக்கு எவ்வளவு சந்தோசமோ, அத விட சந்தோசம் நம்ப பதிவர்களுக்கு ,    சும்மா அவங்க ஊழல் பண்ணாங்க , இவங்க ஊழல் பண்ணாங்க , அவன் அத பண்ணான்  , இவன் இத பண்ணான்  ன்னு சும்மா கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து கும்மி அடிக்க ஆரம்பிச்சுடுறாங்க .

                    ஒரு வாரம் ஆனாலும்,  என்ன பதிவு போடலாம் ன்னு  தெரியாம  மண்டைய பிச்சுகிட்டு   சுத்திகிட்டு இருந்தவங்களுக்கு எல்லாம் தேர்தல் ஒரு வர பிரசாதம் அமைச்சுடுச்சு. ஹி ஹி . . . ( எனக்கு எல்லாம் ஒரு மாசம் ஆனாலும் , மண்டைய பிச்சுகிட்டு என்ன , மண்டைய தனிய கலட்டி வச்சு ஒரு அரை மணி நேரம் லூக்கு விட்டாலும் கூட ஒரு ரோசனையும் வர மாட்டிங்குது , அடுத்து என்ன பதிவு போடலாம் ன்னு . . . மண்டைக்குள்ள ஏதாவது இருந்தாதானே .... ) 

            சும்மா ஆடு அறுக்குறோம் , கோழி அறுக்குறோம் , கெடா வெட்டறோம் பொங்க வைக்குறோம் ன்னு இவங்க பண்ணுற அழிச்சாட்டியம் தாங்க முடிய ( இது பட்டாபட்டி யையோ    இல்ல  ,  மங்குனி அமைச்சர் ரியோ  குறிப்பதாக  நினைத்தால் அதற்க்கு கம்பெனி பருப்பு வேகாது , அட ச்சா , கம்பெனி பருப்பாகாது , அட ச்சா ........கம்பெனி  பொறுப்பாகாது ..... )  ( அப்பாடி ரெண்டு போரையும் வம்புக்கு இழுத்தாச்சு  ஹி ஹி . . . )


இப்போ ஒரு சின்ன தமாசு : 

திருடன் 1 : அண்ணே , வாங்கன்னே நாம எவ்வளவு திருடி இருக்கோம்ன்னு விடியறதுக்குள்ள  எண்ணி பார்த்துடலாம் 

திருடன் 2 : அட போடா வெண்ணை,  அதான்  காலைல நியூஸ் பேப்பர் ல போடுவாங்க இல்ல,  இத்தன  லட்சம் கொள்ளைன்னு அத்தன லட்சம் கொள்ளைன்னு ,  அப்போ பார்த்து தெரிஞ்சுக்கலாம் , பேசாம நிமதிய படுத்து தூங்குடா .


                         அந்த மாதிரி இந்த அரசியல்வாதிகள் எவ்வளவு ஊழல் செஞ்சு இருக்காங்கன்னு,  அந்த அரசியல்வாதிகளே ,  நம்ப பதிவர்கள் இடுற பதிவ பார்த்துதான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.  தக்காளி , அந்த அளவுக்கு பின்னி பெடல் எடுக்குறாங்க  எனக்கு என்னவோ அரசியல்வாதிகள் எல்லாம் நம்ப பதிவர்கள்  கிட்ட சொல்லிபுட்டுதான் ஊழலே செய்யுறாங்கன்னு நினைக்குறேன் . . ஹி ஹி . அந்த அளவுக்கு துல்லியம எழுதுறாங்க ... . 

               என்னடா தி. மு .க வ தாக்கி எழுதி இருக்காங்களே ஒரு வேலை இந்த பதிவர் அந்த சைடு ஒ ன்னு நினைச்சா ,  அடுத்த பதிவு  அ . தி. மு .க வை தாக்கி இருக்கும் , சரி ஒரு வேலை இவங்க மூணாவது அணியையோ இல்ல மட்டற்ற கட்சியையோ  ஆதரிபவர்களா இருப்பாங்களோ ன்னு நினைச்ச , அவங்களையும் கும்மு கும்முன்னு கும்மி அடிச்சு வச்சு இருப்பாங்க .. அப்பா மஹாராசா, தங்கம் , அப்பு   நீங்க யாரு பக்கம் பா ? கொஞ்சம் சொல்ல வராத தெளிவா சொல்லுங்களேன் ....  
( அரசியல் பதிவர்கள் பதில் : " நாங்க மக்கள் பக்கம் , நியாத்து பக்கம், அநீதியின் மறுபக்கம் , அந்த பக்கம் , இந்த பக்கம் , கோடாம்பாக்கம்" . . .. . ஐயா சாமி முடியலையா .. .. . ஒரே இரத்தம் ரத்தமா வருது ...... )  

                            ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிகிறேன் , தேர்தல்ல அரசியல்வாதிகள் ஓட்டு வாங்குறாங்களோ இல்லையோ , இப்படி பர பரப்ப  பதிவு போட்டு பதிவர்களே நீங்க ஓட்டு பட்டைய கிளப்புரிங்க போங்க . . . ஹி ஹி ஹி 

                      ஆனா மக்க ரெண்டே ரெண்டு மட்டும் சொல்லிக்குறேன் , நீங்க என்னதான் பர பரப்ப பதிவு போட்டு கும்மி அடிச்சாலும் , குட்டிகரன்னம் அடிச்சாலும்  நம்ப தமிழ் நாட்டு மக்கள் ரொம்ப ஷார்ப் ... ஓட்டு போடுற மக்கள்  நாளே நாலு பிரிவுதான்


1 .) தி. மு .க வுக்கு ஓட்டு போடுறவங்க ( யாரு பேச்சையும் கேக்க மாட்டங்க கண்டிப்பா தி. மு .க வுக்குதான் )


2 .) அ . தி. மு .க  வுக்கு ஓட்டு போடுறவங்க ( வேற என்ன ? எல்லாம் அந்த புண்ணியவான் எம் .ஜி .ஆர் காகத்தான் ,  ரெட்ட இலைய  கண்ட தக்காளி, ஒரே குத்துதான் ஓட்டு சீட்டுல . எம் .ஜி .ஆர் செத்து போயிட்டாருன்னு  மட்டும்  சொன்னிங்க உங்க கொண்டேபுடுவாங்க .... ஹி ஹி . . . )

3 .) மத்த கட்சிகளுக்கு ஓட்டு போடுறவங்க ( ஏன்னு யாருக்கு தெரியும் ? அது அவங்களுக்கே தெரியாது  ஹி ஹி ஹி . . .  )

4 .) ஒன் டைம் தி. மு .க வுக்கு , ஒன் டைம் அ . தி. மு .க  வுக்கு  ( ஊழல் நடந்தாலும் சரி , நல்லது செஞ்சாலும் சரி ஒரு முறை தி. மு .க வுக்கு ஓட்டு போட்ட அடுத்த தேர்தல்ல கண்டிப்பா அ . தி. மு .க  வுக்கு ஓட்டு  ஹி ஹி ஹி ... எல்லாம் ஒரு மாறுதலுக்கு தான் ஹி ஹி . . . . ) ( இவங்க போடுற ஓட்டுலதான் வெற்றி தோல்வியே  நிர்னைக்கப்படுது   ... ) 

              அதனால நான் என்ன சொல்ல வரேன்ன இந்த முறை கண்டிப்பா புரட்சி தலைவி  அம்மா ஜெய்க்குறாங்க , தி. மு .க வ விட அதிகமா ஊழல் செஞ்சு உலக சாதனை செய்ய போறாங்க .... 

புரட்சி தலைவி  அம்மா  வாழ்க .....

புரட்சி தலைவி  அம்மா  வாழ்க .....

புரட்சி தலைவி  அம்மா  வாழ்க .....


ஹி ஹி ....

ஜனநாயகம் வாழ்க ,

ராக்ஸ் .......

For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com
Monday, March 14, 2011 54 comments


முடியல ...........

முடியல ..............

கண்ணா கட்டுது ....

ஏன் இப்படி ?

நானெல்லாம் பதிவு படிக்குறதே பெரிய விஷயம் ( படிக்க தெரிஞ்சாதானே. .  )
அதுலயும் படிச்சுட்டு பதிவு புரியுறது அதை விட பெரிய கஷ்டம் ( எல்லாம் புரியுறத இருந்த எலாங் கிளாஸ் maths  எ எப்பவோ பாஸ் பண்ணி முன்னுக்கு வந்து இருப்பேன் ..)

இதுல நல்ல பதிவு கண்ணுல பட்டு , அதை படிக்குறதுக்கு நேரம் கிடைச்சு ,
அதையும் படிச்சுட்டு , அட நல்ல இருக்கே , சூப்பர்ஆ  எழுதி இருக்காங்களே அப்படின்னு நினைச்சு ஆபீஸ்ல இருக்குற தேவை இல்லாத ஆணிய  புடுங்குற வேலையே எல்லாம் விட்டுட்டு ,  அவசரத்துல ஆசையா கமெண்ட் போஸ்ட் பண்ணிட்டு,  நம்ப கமெண்ட் எ பாக்கலாம்ன்னு ஆசையா பார்த்த ... அங்க நம்ப கமெண்டும் வராது ஒரு மண்ணும் வராது ...

கொய்யா ....

அப்போ Author  அதாங்க அந்த பதிவர்கிட்ட இருந்து ஒரு செய்தி வரும் பாருங்க   Your comment will be visible after approval. அப்போ மனசுக்குள்ள வரும் பாருங்க ஒரு இனம் புரியாத சந்தோசம் ....


அட அட அட ....

ஆறு மாசாம இருக்கிற  அத்தன வேலை வெட்டியும் வுட்டுபுட்டு,  ஒரு  புள்ள பின்னாடியே சுத்தி,  காஞ்சு,  தேஞ்சு,  கருவாட ( already  நாம அப்படிதான் இருப்போம் . இருந்தாலும் வெயில்ல சுத்துனதுல கலர் கொஞ்சம் கூடி போய் இருக்கு , என்ன கலர் கூடி போய்டும ? கருப்பு கலர் தான் வேற என்ன ஹி ஹி ... ) போய் ,     கடைசியா அந்த புள்ளைகிட்ட ஒத்தை ரோசாவா தூக்கிட்டு போய்
ஐ  லவ் ஊஊஊ ..... ( அட ச்சா இந்த கரும்மம் மட்டும் நமக்கு கரெக்ட் ஆ சொல்ல வரமாட்டிங்குது ....  For  Reference click on  : http://rockzsrajesh.blogspot.com/2011/02/blog-post.html  )

சொன்னா ..
ரோசாவாயும்  வாங்கி வச்சுக்கிட்டு அந்த புள்ள கூல் ஆ , " நீ போயிட்டு அடுத்த வருஷமா வா ன்னு"  சொன்னா எப்புடி இருக்கும் ?

ஒன்னு ஓகே நா , ஓகே ன்னு சொல்லு ,

இல்லனா. . .

" செல்லாது செல்லாது , உன் மூஞ்சிக்கு என்னை  மாதிரி லோக்கல் பிகர் எல்லாம் செட் ஆகாது நீ வேற எதாவது இன்டர்நேஷனல் பிகர் ட்ரை பண்ணுன்னு சொல்லன்னும் , அதை விட்டுபுட்டு , அது என்ன அடுத்த வருஷம் வர சொல்லுறது ? சின்ன புள்ள தனமா ?
அடுத்த வருஷம் எல்லாம் நாங்க ரொம்ப பிஸி தெரியுமில்ல ?

கமெண்ட் போடுறது அவ்வுளவு  பெரிய குத்தமா ? கமெண்ட் போடுறது என்ன பிகர் கிட்ட  ஐ லவ் யு  சொல்லுற மாதிரி விஷியமா ?
நாங்க என்ன உங்க சொத்தைய எழுதி கேக்க போறோம் ?
இல்ல நாங்க உங்களுக்கு குடுத்த 50  ரூபாய் யா திருப்பி கேட்டு புப்ளிகுட்டி பண்ணிட போறோம ?
just  உங்க பதிவ படிச்சுட்டு ஏதோ எங்க கருத பின்னூட்டமா போடா போறோம் .
அதுக்கு எதுக்கு கமெண்ட் moderation ?

ஏதோ சென்சிடிவான பதிவு போட்டு இருக்கீங்க மத்தாவங்க  மனசு புண் படிதிடாம இருக்க கமெண்ட்ஸ் moderation  வைக்குறதுல ஒரு அர்த்தம் இருக்கு அதை விட்டுபுட்டு சாதாரண பதிவுக்கு எல்லாம் எதுக்கைய Moderation ? 
i ) நாம  போடுற  பின்னோட்டம் அவங்க எப்போ படிப்பாங்கன்னு தெரியாது ,
ii ) எப்போ approve  பண்ணுவாங்கன்னு தெரியாது ,
iii )  எப்போ publish  ஆகும்ன்னும் தெரியாது . எல்லாம் ஆண்டவனுக்கும் , Author குமே வெளிச்சம் ..

Moderation  வைக்க தெரிஞ்ச அவங்க , approve  பண்ணி publish  ஆனதுக்கு அப்புறம் , மதிப்பிற்குரிய நண்பரே (வேலை வெட்டி விட்டுட்டு என்னக்கு கமெண்ட் போட்ட fool ) , உங்க பின்னூட்டத்துக்கு நான் அனுமதி வழங்கி விட்டேன் , உங்க பின்னோட்டம் வெளியாகிவிட்டது , அப்படின்னு , கண்டிப்பா நம்பள வெற்றிலை பாக்கு  வச்சு அழைக்க போறது இல்ல ..


கொய்யா .. போங்கைய இனிமே கமெண்ட் moderation  இருக்க ப்ளாக் க்கு நான் கமெண்ட்ஸ் போடுரதுல்லன்னு சபதம் எடுக்குறேன் ....

டிஸ்க்கி :
Comments  Moderation  வைத்து இருக்கும் பதிவர்களின் மனப்பான்மை (அதுவும் பெருமையுடன் ) :
1 )  தேவை இல்ல நீ கமெண்ட் போட்டுதான் நான் பிரபல பதிவர் ஆகணும்ன்னு இல்ல
2 ) நீ கமெண்ட்ஸ் போட்டுதான் என்னோட வீட்டுல அரிசி உலை கொதிகன்னும்ன்னு இல்ல ..
3 ) வேண்னும்னா நீயும் கமெண்ட் Moderation  வச்சுக்கோ , யாரு வேண்டாம் னா ?

ரைட்டு இல்லன்னு யாரும் சொல்லல , ஆனா நான் கேக்குறது ஒன்னே ஒண்ணுதான் , நட்புடன் பின்னோட்டம் போடும் போது அது உடனே பின்னூட்டத்துல வெளியாகலேன்னா , பின்னோட்டம் போடுறவங்க கண்டிப்பா எமாற்றம் அடைவாங்க , மத்தவங்க அடைவாங்களோ  இல்லையோ , நான் அடைகிறேன்  ....

ஏமாற்றங்களுடன் ,
ராக்ஸ் ...

For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.comRelated Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters