Followers

Monday, May 23, 2011

உன் விழிகள் பேசும் வார்த்தைகள் புரிந்த எனக்கு ,
உன் இதழ்கள் பேசும் வார்த்தைகள் புரியவில்லை அன்பே ,
தக்காளி.......... இங்கிலீஷ்லையே பேசிக்கொல்லுறாயா . . . .

இன்றைய கால கட்டத்துல நல்ல பிகர் மட்டும் இல்ல , எல்லா பொண்ணுங்களும் இங்கிலீஷ்ல தான் பேசுதுங்க . . .
அதனால இதுல இருந்து என்ன தெரியுதுன்ன ஒரு பிகர் கரெக்ட் பண்ணனும்னா  கூட இங்கிலீஷ் அத்தியாவசியபடுது.
இது ஒரு நகைசுவைக்காக எழுதுனது என்றாலும், இதில் உள்ள வலி என்னவோ உண்மைதான் .
தற்போது இந்தியாவில் அரசு பள்ளிகளின் ஆங்கிலம் கற்பிக்கும் முறையும் , நிலைமையும் , இங்கு கீழே இருக்கும் வீடியோவை பார்த்தால் புரியும் . . .









ஓர் அளவுக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல என்ன நடக்குது. தமிழ் வழியில் படித்துவிட்டு வந்த மாணவர்களின் நிலைமை என்ன என்பதை ஓர் அளவுக்கு எடுத்து சொல்லி இருக்குது சமீபத்துல விஜய் டி.வீ ல ஒளிபரபாகுற கனா காணும் காலங்கள் ( ஒரு கல்லூரியின் கதை ) இங்கு கீழே இருக்க வீடியோவை பாருங்கள் . .
அதில் அந்த பேராசிரியர் சொல்லுவது அத்தனையும் உண்மை . இன்ன்றைய கால கட்டத்துல உயர் கல்வி பெரும்பாலும் ஆங்கிலதிலையே இருபதினால் ஆங்கிலம் அறிவு எனபது அவசியம் ஆகிறது .









இந்த ஆங்கில மொழி பிரச்னை எனபது தமிழ் வழி கல்வி கற்றவகளுக்கு மட்டும் அல்ல , மலையாள வழி கல்வி , தெலுங்கு வழி கல்வி என்று அவர் அவர் மாநில மொழிகளில் படித்த அனைவருக்கும் இருக்கிற பிரச்சனைதான். 
சரி இதுக்கு எல்லாம் என்னதான் தீர்வு? 
முதல்ல உலகத்துல இருக்க எல்லாரையும் தமிழ் படிக்க வைக்கலாம் , அமெரிக்க அதிபர் முதல் ஆப்பரிக்க அண்ணாச்சி வரை எல்லாரும் தமிழ் தான் .அப்புறம் உயர் கல்வி அனைத்தையும் தமிழ்வழி(Tamil Medium ) கல்வியா மாத்திடலாம். அப்போ இனிமே  உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் எல்லாரும் தமிழில் தான் பேச வேண்டும் , உலகத்தில் உள்ள எல்ல பல்கலைக்கழகங்களும் , கல்லூரிகளிலும் எல்ல பாடமும் தமிழில் கற்பிக்க வேண்டும்  . உலகத்தில் உள்ள எல்ல புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் கம்ப்யூட்டர் முதல் இன்டர்நெட் வரை அனைத்தும் தமிழில் . முக்கியமான ஒன்று எல்லா பிகர்சும் இனிமே தமிழில் தான் கதைக்க வேண்டும் .

எப்புடிஈஈஈ  ? ? ? 

இப்படி ஓவர் நைட் ல எல்லாம் மாறிடுச்சுனா , நம்ப தமிழ் வழி கல்வியில் படிச்சுட்டு வர்ற மாணவர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது .  
கொய்யால இதெல்லாம் நடக்குற காரியமா ?
நமது அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக மேடையில் செந்தமிழில் உணர்ச்சி பொங்க  பேசிவிட்டு தங்கள் வீட்டு பிள்ளைகளை மட்டும் விவராமாக ஆங்கில வழி , மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்க வைத்து பின்னாளில் பன்னாட்டு வணிகமும் , தொழிலும் செய்யும் திறமைசாலிகளாக மாற்றட்டும் , நம் அப்பாவி மக்கள் மட்டும் தமிழ் வழி கல்வி கற்று நொந்தது நூலாகட்டும் . 
நகைசுவைக்கு எல்லாம் அப்பாற்பட்டு நான் என்ன சொல்ல வரேன் என்றால் .
அரசாங்கமும் வழக்கமான கல்வி முறைய மாற்ற வேண்டும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டு வர வேண்டும் ,
தமிழகத்தில் எல்லாருக்கும் ஆங்கில அறிவு முறையாக வரவேண்டும் , எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்
அதுக்காக யாரையும் தமிழ் படிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை , மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் , தமிழனாய் பிறந்த அனைவரும் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் முறையாக தமிழை கற்றால் தமிழ் தானாக வளரும் , தமிழ் அழிந்து விடும் என்ற அச்சம் கொஞ்சம் கூட வேண்டாம் . 
அன்றே திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழன் . பல நாடுகளில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்கிய அதிசியங்களும் உண்டு  . உதாரணத்துக்கு சிங்கபூரில் தமிழ் மொழி ஒரு ஆட்சி மொழி .
தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தும் பெற்றாகி விட்டது .
தமிழ் என்றும் அழியாது , அதை தமிழன் அழியவும் விட மாட்டன் .
அதனால் குழந்தைகளை ஆங்கிலம் படிக்க வையுங்க , ஆங்கில வழியில் படிக்க வையுங்கள் . வேண்டுமென்றால் ஒரு தமிழ் பாடம் மட்டும் அல்லாது மேலும் ஒரு தமிழ் பாடத்தை அதிகமாக பாடத்திட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள். மற்ற எல்லாத்தியும் ஆங்கிலத்தில் படிக்க வையுங்கள் . 
ஆங்கிலம் மட்டும் அல்ல , நமது தேசிய மொழியான ஹிந்தியையும் படிக்க வையுங்கள் . இந்தியன் , இந்தியன் என்று மார் தட்டி கொள்ளும் நமக்கு எத்தனை பேருக்கு ஹிந்தி சரளமாக பேசவும் , எழுதவும் தெரியும்?
ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அதிகமா தேவைப்படும் மொழி ஹிந்தி , இந்தியன் ஆகிய நாம் ஹிந்தி கற்று கொள்வது ஒன்றும் கொலை குற்றம் அல்ல .
நான் ஹிந்தி கற்று கொள்ளாமல் போய் விட்டேனே என்று இன்று வரை வருத்தபடுகிறேன் . 
இங்கு அரபு நாட்டில் , அவசரத்துக்கு டாக்ஸி பிடித்தேன் அது ஒரு பாகிஸ்தானி டிரைவர் . ஓர் இடத்துக்கு போக எனக்கு தெரிஞ்ச தாதாக்க புதக்க ஹிந்தில நான் சொல்லி எவ்வளவு என்று கேட்ட அவன் “ பந்த்ரா  ரியால் என்கிறான் , நான் சொல்கிறேன் “ நஹி நஹி , பச்சீஸ் ரியால் என்று , அவன் “முஷ்கில் நஹி பாய் , பந்த்ரா ரியால் பஸ்  அப்படிகிறான் . நான் முடியவே முடியாது என்கிறேன் . என்ன கொடுமை அந்த டிரைவர் தலைல அடிச்சுகிட்டு ஏற சொன்னான் .
அதன் தமிழ் அர்த்தம இதுதான் . அவன் 15  ரியாலுக்கு போலாம் என்கிறான் , நான் இல்ல இல்ல , 25 ரியால் என்றால்தான் வருவேன் என்கிறேன் . என்ன ஒரு அதிபுத்திசாளிதனம் , என்ன கொடுமை இதெல்லாம்? நமக்கு தெரிந்த ஹிந்தி அவ்வுளவுதான் .  
அந்த பாகிஸ்தானி டிரைவர் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி , 
“ இந்தியன் உனக்கு உன் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி தெரியாதா? “  
நாக்கை புடிங்கிகிலாம் போல் இருந்தது . . .
நான் தமிழன் , ஹிந்தி எதிர்ப்பு , அதெல்லாம் உள்ளூர் அரசியல் ஆனால் மத்த நாட்டுக்காரனுக்கு நான் ஒரு இந்தியன் எனக்கு ஹிந்தி தெரியவில்லை . எவ்வளவு பெரிய அவமானம்?
நிறைய மொழிகளை நாம் படிபதினால் நாம் ஒன்றும் தாழ்ந்து போய் விட போவதில்லை 

“ கண்டதை தின்பவன் குண்டன் ஆவான் “

என்று ஒரு பழமொழி கேள்வி பட்டு இருப்பீர்கள் . ஆனால் அதன் சரியான பழமொழி ஏன் தமிழ் ஆசிரியர் சொல்லி இருக்கிறார் .

“ கண்டதை படிப்பவன் பண்டிதன் ஆவான் “ 

சாபிடுரதுலையே எப்பவும் நமது சிந்தனை இருக்கு அதனால்தான் பழமொழி கூட அப்படி மருவி விட்டது .
அதனால் சின்ன குழந்தையிலையே முடிந்த வரை எல்லாத்தியும் படிக்க வையுங்கள் ,
குழந்தை மனதும் , மூளையும் எந்த கவலையும் இல்லாமல் அதிக புத்துணர்ச்சியோடு காலியாக இருக்கும் அதில் அப்பவே நல்ல விஷியங்களையும் , மொழிகளையும் நிரபினால்தான் உண்டு , இல்லையென்றால் வளர்ந்த பின் எதையும் புதிதாக நிரப்ப முடியாது .
பசுமரத்தில்  ஆணி நன்றாக பதியும் . .

ஆதங்கங்களுடன் , 

ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com



16 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

ஆதங்கங்கள் தொடரட்டும்..

குறையொன்றுமில்லை. said...

உண்மைதான், நாலு பாஷை தெரிந்திருந்தால் எங்க போனாலும் பிழைச்சுக்கலாம்.இல்லைனா 15க்கும்
25க்கும் வித்யாசம் தெரியாமத்தான் போகும்.கண்டிப்பா சின்னவயது முதலே
குழந்தைகளுக்கு தாய் மொழியுடன் கூடவே நாலு மொழிகளும் கற்றுக்கொடுப்பது நல்லது.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ முனைவர்.இரா.குணசீலன் said...

ஆதங்கங்கள் தொடரட்டும்..///

வருகைக்கு நன்றி குணசீலன் . . .

ஆதங்கமாகவே முடியாமல் , இதற்க்கு ஏதாவது ஆதாயமும் பிறந்தால் நன்றாக இருக்கும் எனபது எனது ஆசை . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Lakshmi said...

உண்மைதான், நாலு பாஷை தெரிந்திருந்தால் எங்க போனாலும் பிழைச்சுக்கலாம்.இல்லைனா 15க்கும்
25க்கும் வித்யாசம் தெரியாமத்தான் போகும்.கண்டிப்பா சின்னவயது முதலே
குழந்தைகளுக்கு தாய் மொழியுடன் கூடவே நாலு மொழிகளும் கற்றுக்கொடுப்பது நல்லது. ////

கண்டிப்பா அம்மா , அதுக்குதான் நீங்க சரியான முன் உதாரணம் . பாருங்க உங்களுக்கு எவ்வளவு பாஷை தெரியுது , நீங்க கலக்குறிங்க . . .

நன்றி அம்மா . . .

ராஜகோபால் said...

// இந்தியன் உனக்கு உன் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி தெரியாதா?//

இதற்க்கு காரணம் எங்கள் பாசத்தலைவன் முன்னால் முதல்வர் கருணாநிதி ஒருவரே காரணம்.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ராஜகோபால் said...

// இந்தியன் உனக்கு உன் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி தெரியாதா?//

இதற்க்கு காரணம் எங்கள் பாசத்தலைவன் முன்னால் முதல்வர் கருணாநிதி ஒருவரே காரணம். ///

ஹிந்தி எதிர்ப்பு என்று எடுக்கும் போது Just like that முந்தைய ஆட்சிய மட்டுமே எடுக்க முடியாது , அது ஒரு வரலாறு . அதை பற்றி விவாதிக்கணும் என்றால் விரிவாகதான் விவாதிகன்னும். அதில் நிறைய புரிதல் தவறு இருக்கிறது . . .

anyway வருகைக்கு நன்றி கோபால் . .

Unknown said...

உண்மைதான் பாஸ் தமிழ் நாட்டை விட்டுமற்ற தென்னக மாநிலங்களில் இந்தி தெரிந்தால் சமாளிக்க இயலும் அதை ஒரு திணிப்பாக பார்க்காமல் தொடர்புமொழி
என்ற அளவிலாவது மதித்து கற்கவேண்டும்.

Demon said...

nammudaya unarchikalai thelivagavum unarvu poorvamagaum velipadutha namathu thaai mozhi avasiyam. neenga soldra mari figure ha crt panna english vaenum thaan ana antha fid kooda oora suthalam anal kalyanam panna mudiyathu pengaludaya manathai kavaranum na nana unarvu poorvama thaan pesi yaganum, kandippa athu tamila mattum thaan theliva express panna mudium.. mothalla tamila mulusa padichavangalukku angila moogam nichayam irukathu...

for example english la elephant ku oru peru thaan ana tamil la 150 peru irukku. ithu ethana perukku theriun. intha 150 peru therinja yanaya pathi ellathaum nama therinju irukkum nu artham enna tamil la seyal padukalai vaithu thaan peyariduvargal. mean karanap peyar tamil ilakiyathula

Anonymous said...

அய்யா ! ஆங்கிலம் வழிக் கற்போருக்கும் மட்டும் என்ன ஆங்கிலம் தேனாகவும், பாலாகவும் ஓடுகின்றதா?

90 சதவீதம் ஆங்கில வழிக் கற்றோருக்கு ஆங்கிலமே சரியாகத் தெரியாது என்பது தான் உண்மையே !

மலேசியா போல அறிவியலையும், கணிதத்தையும் மட்டும் கூட ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கலாம். என்னைக் கேட்டால் அதுவும் வேண்டாம் என்பேன்.

தமிழ் வழியிலேயேக் கற்போம் .... ஒரு பாடமாக இருக்கும் ஆங்கிலத்தை நன்றாக கற்போம் என்பேன். ஆங்கில ஆசிரியர்களின் புலமையை உயர்த்தினாலே தமிழ் வழிப் படிப்போருக்கும் மிகவும் சரியான நேரத்தில் சரியான பார்வையில் ஒரு பதிவு.

தமிழகத்தின் இன்றைய தேவை

அனைவருக்கும் கல்வி,
இலவசக் கல்வி,
சமச்சீர்க் கல்வி,
அருகாமைப் பள்ளியிலேயே பயிலும் கல்வி,
ஒரு பாடமாவது அனைவருக்கும் தமிழ் பயிற்றுவிக்கப்படுதல் அல்லது தமிழ் வழிக்கல்வி,

டாஸ்மாக்கில் வரும் வருவாயையும், கூடுதல் வரியினை விதித்தால் கூட இலவசக் கல்வியைத் தாராளமாகக் கொடுக்கலாம் என்பது எனதுக் கருத்து. அரசே லாட்டரி சீட்டினைக் கூட அறிமுகம் செய்து வருவாய் ஈட்டி அதனைக் கல்வியிலும், உள்கட்டமைப்பினை உயர்த்தவும் பயன்படுத்தலாம் ....

பார்ப்பன பழசுகளின் கருத்தை பார்ப்பன இளைஞர்கள் கூடக்கேட்க மாட்டார்கள். பார்ப்பனர்களில் பணம் படைத்துக் கொழுத்தவர்கள் தான் புலம்பித் திரிகின்றார்கள். ஏழை பார்ப்பனர்கள் பலரும் படிக்க வசதி இல்லாமல் கூட இருக்கின்றார்கள். சமச்சீர் இலவசக் கல்வி அனைவருக்குமானது தானே ! ஆங்கிலம் சரளமாக வரும் என்பது எனது கணிப்பு ........... !!!

ஆங்கில வழிப் படித்தவுடன் அனைவரும் வெளிநாட்டுக்கு வந்துவிடுவார்களா? வந்தாலும் வேலையைத் தூக்கிக் கொடுத்துவிடுவார்களா? இல்லை ஆங்கில வழிப் படித்தவர் என்பதாலேயே ஐ.டி கம்பெனியில் கூப்பிட்டு வேலைத் தரானுங்களா?

ஆங்கிலம் அவசியம் தான் ! ஆனால் அதற்கும் தமிழ் வழிக் கல்விக்கும் சம்பந்தமே இல்லை. தமிழ் படிக்கும் போது தமிழை ஒழுங்காப் படி, ஆங்கிலம் படிக்கும் ஆங்கிலத்தை சீராய் படி என்பது தான் உண்மை

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@கிச்சா said...

உண்மைதான் பாஸ் தமிழ் நாட்டை விட்டுமற்ற தென்னக மாநிலங்களில் இந்தி தெரிந்தால் சமாளிக்க இயலும் அதை ஒரு திணிப்பாக பார்க்காமல் தொடர்புமொழி
என்ற அளவிலாவது மதித்து கற்கவேண்டும்.///

கண்டிப்பாக கிச்ச . . . இந்த பிரச்சனையை நானும் பல முறை சந்தித்து இருக்கிறேன் . .
வருகைக்கு நன்றி . .

arasan said...

வணக்கம் நண்பரே ...
முக்கியமான விவாதத்தை எடுத்தி கூறி இருக்கின்றீர் ..
நமது நிலைக்கு நாமும் ஒரு வகையில் காரணம் ...
இந்நிலை மாற இனியாவது சிறு முயற்சி எடுக்க வேண்டும் ..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Demon said... ////

எஜமான் , நான் பிகர் கரெக்ட் பண்ணுறத பத்தி சொன்னது ஒரு நகைசுவைகாக . . . பதிவு ரொம்ப கருத்துக்கள் மட்டுமே போட்டு படிகிரவங்களை சோர்வடைய செய்ய வேண்டாம் என்று நகைச்சுவையும் கூட்டுவதர்காதான் , அந்த நகைச்சுவையும் ஒத்துக்கிற வகையில் தான் இணைத்தேன் . நீங்களும் ஒத்துகிடிங்க. அதுவே சொல்ல வந்த கருத்தின் வெற்றி . அதுவும் just like that ஒரு பிகர் கரெக்ட் பண்ண கூட ஆங்கிலம் தேவை படுது என்றுதான் சொல்லி இருக்கேன் .
நல்ல புரிஞ்சுக்கணும் பிகர் கரெக்ட் பண்ணதான் ,ஆனா ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க ஆங்கிலம் அவசியம் என்று நான் எங்கயும் சொல்ல வில்லை . ஓகே ?

மற்ற படி நான் கூறியது அனைத்தும் வாழ்வாதாரங்களுக்கு தேவை படகூடியவை தான் தவிர , ஆங்கில மோகத்தினால் அல்ல . .
ஆங்கில மோகம் எனபது வேறு , அவசியம் எனபது வேறு . .
புரிந்து கொள்ள வேண்டும் . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@அரசன் said...

வணக்கம் நண்பரே ...
முக்கியமான விவாதத்தை எடுத்தி கூறி இருக்கின்றீர் ..
நமது நிலைக்கு நாமும் ஒரு வகையில் காரணம் ...
இந்நிலை மாற இனியாவது சிறு முயற்சி எடுக்க வேண்டும் ..///

நன்றி அரசன் . .
ஏதோ என்னால முடிந்த முயற்சி , ஒரு விழிப்புணர்ச்சிகாக . .

வருகைக்கு நன்றி அரசன் . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Iqbal Selvan " இக்பால் செல்வன் '' said...

அய்யா ! ஆங்கிலம் வழிக் கற்போருக்கும் மட்டும் என்ன ஆங்கிலம் தேனாகவும், பாலாகவும் ஓடுகின்றதா?

90 சதவீதம் ஆங்கில வழிக் கற்றோருக்கு ஆங்கிலமே சரியாகத் தெரியாது என்பது தான் உண்மையே ! ////

நண்பர் இக்பால் செல்வன் அவர்களே , இதை எந்த ஆதாரத்தின் அடிப்படியில் சொல்லுரிங்கன்னு தெரியல . . .
பொதுவாக பார்த்தால் , ஒண்ணாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்து வருபவர்கள் கண்டிப்பாக ஆங்கில அறிவு நன்றாகத்தான் இருக்கும் .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Iqbal Selvan " இக்பால் செல்வன் '' said...
டாஸ்மாக்கில் வரும் வருவாயையும், கூடுதல் வரியினை விதித்தால் கூட இலவசக் கல்வியைத் தாராளமாகக் கொடுக்கலாம் என்பது எனதுக் கருத்து. அரசே லாட்டரி சீட்டினைக் கூட அறிமுகம் செய்து வருவாய் ஈட்டி அதனைக் கல்வியிலும், உள்கட்டமைப்பினை உயர்த்தவும் பயன்படுத்தலாம் ....///

இதற்க்கு என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை . நீங்கள் சொல்லி இருக்கும் கருத்தை பல கோணத்தில் நான் யோசித்து பார்த்தேன் . அதையெல்லாம் சொல்வதென்றால் தனியாக ஒரு பதிவுதான் போடணும் . இப்போதைக்கு இந்த கருத்துக்கு மத்தவங்க என்ன பதில் பின்னூட்டம் இடுகிறார்கள் என்று பொருத்து இருந்து பார்ப்போம் . . .

அமுதா கிருஷ்ணா said...

தூள் பதிவு..என் இரண்டு பசங்களையும் ஆங்கில வழி கல்வியில்,ஹிந்தியினை ஒரு பாடமாக கற்பிக்கும் கேந்திரிய வித்யாலாவில் சேர்த்தேன்.இரண்டும் அட்டகாசமாக ஹிந்தி பேசும்.தாயான நான் இரண்டு பேருக்கும் தமிழை வீட்டில் கற்று தந்தேன்.பெரியவன் நாவல் படிக்கும் அளவிற்கு தமிழ் தெரிந்தவன். சின்னதோ எழுத்து கூட்டி படிக்கும் அளவிற்கு சுமார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters