Note :
சாதி = எய்ட்ஸ் (part-1) படிக்காதவர்கள் , முதலில் அதை படித்துவிட்டு ( part -2 ) தொடரவும் . சாதி = எய்ட்ஸ் (part-1) படிக்க இங்கே சொடுக்கவும் (click on)
http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html
சரி இப்போ எதுக்கு இவ்வளவு கோவம்? இப்போ இந்த 21 வது நூற்றாண்டுல அப்படி என்ன சாதி கலவரம் நடக்குது ? எதுக்கு இந்த பதிவு ன்னு கேக்குறிங்களா?
அவங்களுக்க்காகதான் இந்த தலைப்பும் , அந்த தலைப்புக்கான விளக்கமும்.
காட்சி - 1
ஒரு மெத்த படித்த குடும்பம் , பெற்றோர்கள் நல்ல உயர்ந்த பணியில் இருப்பவர்கள் . அவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் . மகனுக்கு ஒரு உயிர் நண்பன் . சிறு வயதில் இருந்தே அவர்கள் வீட்டுக்கு வந்து போகிறவன் .நண்பனுக்கு எதிர் பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டு, சிகிச்சை அளிக்கும் போது தவறுதலாக HIV எய்ட்ஸ் பரவி விடுகிறது . இதை அறியும் அந்த குடும்பத்தினர் , நன்கு படித்தவராகைனாலும் , மருத்துவத்தில் விழிப்புணர்வு கொண்டவராகைனாலும் , HIV எய்ட்ஸ் பற்றி தெரிந்ததனால் . அந்த மகனின் நண்பனிடத்தில் எந்த வித ஒதுக்குதல் இல்லாமல் சகஜமாகவும் , அக்கறையுடனும் பழகுகிறார்கள். மகனின் நண்பன் வழக்கம் போல் வீட்டுக்கு வருகிறான் , அவர்களோட பழகுகிறான் , தொடுகிறான் , விளையாடுகிறான் , ஒன்றாக உட்கார்ந்து உணவு கொள்கிறார்கள் , ஒரே தட்டில் உணவு உட்கொள்கிறார்கள் . இது போல் வாழ் நாள் முழுவதும் இருக்க அந்த குடும்பத்தினருக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை . ஏனென்றால் இதன் மூலம் HIV எய்ட்ஸ் பரவாது . அது அவர்களுக்கு தெரியும் . ஆனால் அந்த நண்பன் அந்த வீட்டு பெண்ணின் மேல் காதல் கொள்கிறான் , அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். அந்த குடும்பத்திடம் போய் , நான் உங்க பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் அப்படின்னு பொண்ணு கேட்டா , அங்க என்ன நடக்கும்? பெரிய பூகம்பமே வெடிக்கும் . " ஏன்டா நாய்யே போன போகுதுன்னு மனிதாபிமானத்தோட இரக்க பட்டு வீட்டுக்குள்ள சேர்த்தா , சாப்பாடு போட்ட , நீ உண்ட வீட்டுக்கே பாதகம் நினைக்கிறியா ? நன்றிகெட்ட நாயே " . அப்படின்பாங்க . இல்ல தெரியாமதான் கேக்குறேன் எந்த பெற்றோர்கள் சார் ஒத்துக்குவாங்க? ஒரு HIV எய்ட்ஸ் உள்ள ஒருவனுக்கு தங்களோட பெண்ணை கல்யாணம் பண்ணி குடுக்க?அந்த மாதிரிதான் சார் இப்போ சாதிய நினைக்குறாங்க . என்ன ஒரு வேதனையான விஷயம் .
இப்போ இங்க எய்ட்ஸ் இருக்க இடத்தில எல்லாம் , வேற சாதியோ இல்ல , கீழ் சாதியோ போட்டுகங்க .
காட்சி - 2
ஒரு குடும்பம் . நல்ல பெற்றோர்கள் .அவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் . மகனுக்கு ஒரு உயிர் நண்பன் . சிறு வயதில் இருந்தே அவர்கள் வீட்டுக்கு வந்து போகிறவன் . ஆனால் நண்பன் அவர்கள் சாதி கிடையாது . வேறு சாதியோ , இல்லை கீழ் சாதியையோ சேர்ந்தவன் . இதை அறியும் அந்த குடும்பத்தினர் , அந்த மகனின் நண்பனிடத்தில் எந்த வித ஒதுக்குதல் இல்லாமல் சகஜமாகவும் , அக்கறையுடனும் பழகுகிறார்கள். மகனின் நண்பன் வழக்கம் போல் வீட்டுக்கு வருகிறான் , அவர்களோட பழகுகிறான் , தொடுகிறான் , விளையாடுகிறான் , ஒன்றாக உட்கார்ந்து உணவு கொள்கிறார்கள் , ஒரே தட்டில் உணவு உட்கொள்கிறார்கள் . இது போல் வாழ் நாள் முழுவதும் இருக்க அந்த குடும்பத்தினருக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை . ஏனென்றால் இதன் மூலம் இதுதான் சார் இன்றைய நிலைமை. நீ என்ன சாதியா வேண்டுமானாலும் இருந்துக்கோ , வேற சாதியோ , கீழ் சாதியோ, மேல் சாதியோ . பிரச்னை இல்லை . வீட்டுக்கு வா போ , சாப்பிடு , தங்கு , வீட்டு விஷசங்களில் கலந்துக்கோ . ஒரு கவலையும் இல்லை . வீட்டுல கல்யாணம்ன்ன பாசத்தோட கூப்பிடுவாங்க , " தம்பி இது நம்ப வீட்டு கல்யாணம் , மத்தவங்க மாதிரி கல்யாணத்தன்னைக்கு வந்தோமா , gift குடுத்தோம , சாப்பிட்டோம போனமனு இருந்த உன்ன கொன்னுடுவேன் , கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலையே வந்து இருந்து நீதான் கல்யாண வேலையெல்லாம் பாக்கணும் . அப்படின்பாங்க . அதே மாதிரி நம்ப வீட்டு கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலையே வந்து இருந்து எல்ல வேலையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு போவாங்க , பாசக்கார பயலுங்க . ஆனா அதே நீ பொண்ண கட்டிகுடு , பையன கல்யாணம் பண்ணிகுடுனு மட்டும் அந்த குடும்பத்துல கேட்டுட அவ்வுளவுதான் . ஒரு ருத்ரதாண்டவமே நடக்கும் .
வசூல் ராஜா MBBS ல கமல்ஹாசன் சொல்லுற மாதிரி , என்னோட பொருள் எல்லாம் நீ use பண்ணிக்கலாம் , உன்னோடத எல்லாம் நான் use பண்ணிக்குவேன் ஆனா " உன்னோட ஜட்டிய நான் தொட மாட்டேன் , அதே மாதிரி என்னோட ஜட்டிய நீ தொட கூடாது " ஜென்டில்மேன் அக்ரீமென்ட் . என்ன கொடுமை இதெல்லாம்? அப்போ சாதி என்ன ஜட்டி மாதிரியா? . சாதியே இல்லைங்கிறேன் அப்புறம் என்ன?
இப்போ புரியுதா சார் , இந்த 21 ஆம் நூற்றாண்டுல சாதி ஒரு உயிர் கொல்லி நோய் போலதான் இருக்கு . வெளிய தெரியாது ஆன உள்ளே தீயா இன்னும் எரிஞ்சுக்கிட்டு தான் இருக்கு .
இதுதான் சார் இந்த போஸ்ட் தலைப்புக்கு காரணம் : சாதி = எய்ட்ஸ்
இன்றைய நிலைமைல பார்த்த உடனே யாரும் நீ என்ன சாதின்னு கேக்குறது இல்ல . ஆனா கொஞ்சம் பழகினதுக்கு அப்புறம் , பேச்சு வாக்கில் , லைட் டா " அப்புறம் நீங்கே எல்லாம் என்னவங்க?" அப்படின்னு , அதுக்கு நாம்ப ஒரு மாதிரி பார்த்த , " இல்ல எங்க இதுல எல்லாம் இப்படி பண்ணுவாங்க நாங்க இந்த ஆளுங்க , அதான் உங்க இதுல எப்படி பண்ணுவிங்கன்னு தெரிஞ்சுகத்தானன்னு " பொடி வைப்பார்கள் ஆனா அது பொடி இல்ல வெடி . ஆதனால எதாவது ஒரு தருணத்தில் கொஞ்சம் பேர் கேக்கத்தான் செய்கிறோர்கள் .அதுவும் இந்த தலை முறையினரே கேக்குறாங்க சார் . அதுதான் ஆச்சிரியமாவும் வெக்கமாவும் இருக்கு .
வெளிநாட்டு பிச்சைக்காரர் ...... |
பிச்சைகாரனுக்கு லட்டரில 1 கோடி பரிசு விழுந்தாலும் வெளிநாட்டுல போய் தங்க தட்டுல பிச்சை எடுக்கன்னும்ன்னு ஆசைப்படுவானம் . அந்த மாதிரி, என்னதான் டெக்னாலஜி வளர்ந்து கம்ப்யூட்டர் , இன்டர்நெட் , ஈமெயில் , blogspot எல்லாம் வந்தாலும் . கம்ப்யூட்டர்ல ஜாதகம் பார்க்குற மாதிரி . இங்க ப்ளாக் ளையும் வந்து தன்னோட சாதி பற்றி புகழ்தோ , இல்ல மற்ற சாதி பற்றி இக்ழல்ந்தோ ப்ளாக் , பின்னோட்டம் எழுதுறவங்கள , சண்டை போடுறவங்க பார்க்கும் போது மனசு ரொம்ப வேதனைய இருக்கு . என்ன சாதி சண்டைய நியூ டெக்னாலஜில போடுறிங்களா? இதுக்குதான் டெக்னாலஜி வளர்ச்சியா? வெக்கமா இல்ல ? நீங்க எல்லாம் படிச்சவங்க ன்னு சொல்லிக்க ? என்னத்தையா அப்படி படிச்சிங்க?
சரி சொல்லுங்க சார் , சாதி பெருசா ? மதம் பெருசா?
சாதிதான் சார் பெருசு .
என்னையா இது? மதம்தான் எத்தனையோ சாதிகளை உள்ளடக்கியது , எத்தனை பெரிய அமைப்பு அது ,அத விட்டுட்டு சாதிதான் பெருசுன்னு சொல்லுறேன்னு கேக்குறிங்களா? சரி நான் உங்ககிட்ட ஒண்ணு கேக்குறேன் , இப்போ நினைச்ச உங்களால மதம் மாற முடியும். அதை மாறிய மதம் ஏற்றுக்கொள்ளும் , மக்கள் ஏற்றுகொள்வார்கள், அரசாங்கமும் ஏற்றுகொள்ளும் . மதம் மாறி, மாறிய மதத்துக்கான சான்றிதழும் நீங்கள் வாங்கலாம் அரசாங்கத்திடம் இருந்து . முழுவதும் அங்கீகரிக்க படும் .
ஆனால் செத்தா கூட சாதி மாற முடியாது அப்பு . எந்த சாதிக்காரனும் ஒத்துக்கமாட்டான், சாதி மாறினேன்னு சொன்னே அரசாங்கம் ஜெயில்ல புடிச்சு போட்டுடும் . அதிகபட்சம் லஞ்சம் குடுத்து போலி சாதி சான்றிதல் வேண்டுமென்றால் வாங்கலாம் . அவ்வளவே , அதுக்கு மேல ஒரு ஹேர்ரையும் புடுங்க முடியாது . இப்போ சொல்லுங்க சாதிதானே பெருசு ? ? ?
எனது கனவு ? அடுத்த பதிவில். . . .
Note : சாதி = எய்ட்ஸ் (part-1) படிக்க இங்கே சொடுக்கவும் (click on)
http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html
வேதனைகளுடன் ,
ராக்ஸ் . . . .
18 comments:
// இன்றைய நிலைமைல பார்த்த உடனே யாரும் நீ என்ன சாதின்னு கேக்குறது இல்ல . ஆனா கொஞ்சம் பழகினதுக்கு அப்புறம் , பேச்சு வாக்கில் , லைட் டா " அப்புறம் நீங்கே எல்லாம் என்னவங்க?// இப்படி மறைமுகமா கேட்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க, அது மட்டுமில்லாம சில பழக்க வழக்கம், சம்பிரதாயங்களை பார்த்தும் நீங்க அதுவாங்குற மாதிரியும் கேட்கிறாங்க!
நிறைய பேர் உண்மையான சாதி சொன்னா ஏதாவது நினைப்பாங்கன்னு அக்கம்பக்கத்தில் பொய்யான சாதி சொல்றதும் நடக்குது!
@ எஸ். கே
நீங்க சொல்லுறது வாசதவம்தான் எஸ் . கே . ஆனா நான் என்ன சொல்லுறேன்னா எதுக்கு சாதிய சொல்லணும்? , எதுக்கு கேக்கணும்? சொல்ல போன சாதிய சொல்லவேண்டிய அவசியமே இல்ல . எவனும் சாதி என்னான்னு கேக்கதான் வெக்கபடன்னும்.
குரங்கில் இருந்து பிறந்த மனிதனுக்கு குரங்கு போல வால் இல்ல , ஆனா குரங்குக்கு இன்னும் வால் இருக்கு . ஏனா குரங்குக்கு வால் தேவைப்படுது மரத்துல தொங்குரதுக்கு , ஆனா மனிதனுக்கு வாலின் அவசியம் இல்ல அதனால வால் இல்ல , அந்த மாதிரித்தான் சாதியையும் தேவை இல்லைன்குறேன் நான் .
kalakal machi. nach post
awwwwwwww thank u ramesh . . .
சாதி தேவையில்லை என்பது அவசியமான கருத்துதான்! ஆனால் அது அவ்வளவு சீக்கிரத்தில் நடக்குமென்று தோன்றவில்லை! ஏனெனில் இந்த சாதி பார்க்கும் நிலை பல ஆண்டுகளாக அல்லவா வந்துள்ளது! அது மறையவும் நாளாகும் என நினைக்கிறேன்.
இளைஞர்களாக,நண்பர்களாக இருக்கும்போது சாதி பார்க்காதவர்கள், ஒரு கால கட்டத்தில் தனக்கென்று குடும்பம் வந்தவுடன் சாதி பார்ப்பது வேதனைக்குரியதாக இருக்கிறது.
பார்ப்போம்! காலம் சாதியில்லா நிலை என்ற நம் விருப்பங்களை நிறைவேற்றுகிறதா என்று!
நல்லா யோசிக்கிறிங்க, சூப்பர் பாய்ன்ட்ஸ்! ஆமா ஜட்டி போடலாமா வேணாமா?
///rockzsrajesh said...
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லா யோசிக்கிறிங்க, சூப்பர் பாய்ன்ட்ஸ்! ஆமா ஜட்டி போடலாமா வேணாமா?////
பன்னி குட்டி சார் நமக்கு எதுக்கு அந்த கவலை எல்லாம்? நாம்ப என்னைக்கு அந்த கருமத்தையெல்லாம் use பண்ணி இருக்கோம்? ////
நல்ல வேள நானும் போடனுமோன்னு நெனச்சி பயந்ததுட்டேன்!
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லா யோசிக்கிறிங்க, சூப்பர் பாய்ன்ட்ஸ்! ஆமா ஜட்டி போடலாமா வேணாமா?////
பன்னி குட்டி சார் நமக்கு எதுக்கு அந்த கவலை எல்லாம்? நாம்ப என்னைக்கு அந்த கருமத்தையெல்லாம் use பண்ணி இருக்கோம்?
freeயா விடு free யா விடு மாமு
ப்ரீயாத்தான் விட்டிருக்கேன்....ஹி...ஹி...!
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...
ப்ரீயாத்தான் விட்டிருக்கேன்....ஹி...ஹி...!////////
பார்த்து பன்னி சார் ரொம்ப ப்ரீயா விட்டு , ப்ரீயா விட்டு control இல்லாம போய்ட போகுது ஹி ஹி ஹி ஹி
சீரியஸ் போஸ்ட் போட்டாலும் இங்க வந்து கும்மிதான்யா அடிக்குரங்க ஐயோ ஐயோ . . .
இதை கேக்க யாருமே இல்லையா? யோவ் பட்டா , மங்குனி , வெளியூரு , Terror எல்லாம் என்கைய போய்டிங்க?
நன்றாக எழுதியுள்ளீர்கள்.
Thank so much for coming கும்மி . . .
உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா...
///@philosophy prabhakaran said...
உங்களுக்கு பிடித்த பத்து கமல் படங்கள் என்ற தொடர்பதிவை எழுத உங்களை அழைக்க நினைக்கிறேன்... எழுதுகிறீர்களா... ///
என்னை ஏன் எழுத சொன்னிங்கன்னு தெரியல . பரவ இல்ல . உங்கள் அன்புக்கும், நம்பிக்கைகுமாவது எழுதுறேன் . ஆனா என்னோட அடுத்த பதிவு :
சாதி = எய்ட்ஸ் (part-3 ) முடிச்சுட்டு எழுதுறேனே ? ஏன்னென்றால் அது ரொம்ப சூட போய்கிட்டு இருக்கு . அதை பாதியில் நிறுத்த முடியாது , மன்னிக்கவும் . அதனால அதற்க்கு அடுத்த பதிவு உங்கள் விருப்பத்தின் பெயரில் " என்னக்கு பிடித்த பத்து கமல் படங்கள் " பதிவுதான் . நேர அவகாசம் வேண்டும் நண்பா ....
நன்றி .
சாதி = எய்ட்ஸ்
இதுல்ல எதாவுது உள்குத்து இருக்கா
உங்களை தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன்...
http://philosophyprabhakaran.blogspot.com/2010/11/blog-post_26.html
Post a Comment