முடியல ..............
கண்ணா கட்டுது ....
ஏன் இப்படி ?
நானெல்லாம் பதிவு படிக்குறதே பெரிய விஷயம் ( படிக்க தெரிஞ்சாதானே. . )
அதுலயும் படிச்சுட்டு பதிவு புரியுறது அதை விட பெரிய கஷ்டம் ( எல்லாம் புரியுறத இருந்த எலாங் கிளாஸ் maths எ எப்பவோ பாஸ் பண்ணி முன்னுக்கு வந்து இருப்பேன் ..)
இதுல நல்ல பதிவு கண்ணுல பட்டு , அதை படிக்குறதுக்கு நேரம் கிடைச்சு ,
அதையும் படிச்சுட்டு , அட நல்ல இருக்கே , சூப்பர்ஆ எழுதி இருக்காங்களே அப்படின்னு நினைச்சு ஆபீஸ்ல இருக்குற தேவை இல்லாத ஆணிய புடுங்குற வேலையே எல்லாம் விட்டுட்டு , அவசரத்துல ஆசையா கமெண்ட் போஸ்ட் பண்ணிட்டு, நம்ப கமெண்ட் எ பாக்கலாம்ன்னு ஆசையா பார்த்த ... அங்க நம்ப கமெண்டும் வராது ஒரு மண்ணும் வராது ...
கொய்யா ....
அப்போ Author அதாங்க அந்த பதிவர்கிட்ட இருந்து ஒரு செய்தி வரும் பாருங்க
அட அட அட ....
ஆறு மாசாம இருக்கிற அத்தன வேலை வெட்டியும் வுட்டுபுட்டு, ஒரு புள்ள பின்னாடியே சுத்தி, காஞ்சு, தேஞ்சு, கருவாட ( already நாம அப்படிதான் இருப்போம் . இருந்தாலும் வெயில்ல சுத்துனதுல கலர் கொஞ்சம் கூடி போய் இருக்கு , என்ன கலர் கூடி போய்டும ? கருப்பு கலர் தான் வேற என்ன ஹி ஹி ... ) போய் , கடைசியா அந்த புள்ளைகிட்ட ஒத்தை ரோசாவா தூக்கிட்டு போய்
ஐ லவ் ஊஊஊ ..... ( அட ச்சா இந்த கரும்மம் மட்டும் நமக்கு கரெக்ட் ஆ சொல்ல வரமாட்டிங்குது .... For Reference click on : http://rockzsrajesh.blogspot.com/2011/02/blog-post.html )
சொன்னா ..
ரோசாவாயும் வாங்கி வச்சுக்கிட்டு அந்த புள்ள கூல் ஆ , " நீ போயிட்டு அடுத்த வருஷமா வா ன்னு" சொன்னா எப்புடி இருக்கும் ?
ஒன்னு ஓகே நா , ஓகே ன்னு சொல்லு ,
இல்லனா. . .
" செல்லாது செல்லாது , உன் மூஞ்சிக்கு என்னை மாதிரி லோக்கல் பிகர் எல்லாம் செட் ஆகாது நீ வேற எதாவது இன்டர்நேஷனல் பிகர் ட்ரை பண்ணுன்னு சொல்லன்னும் , அதை விட்டுபுட்டு , அது என்ன அடுத்த வருஷம் வர சொல்லுறது ? சின்ன புள்ள தனமா ?
அடுத்த வருஷம் எல்லாம் நாங்க ரொம்ப பிஸி தெரியுமில்ல ?
கமெண்ட் போடுறது அவ்வுளவு பெரிய குத்தமா ? கமெண்ட் போடுறது என்ன பிகர் கிட்ட ஐ லவ் யு சொல்லுற மாதிரி விஷியமா ?
நாங்க என்ன உங்க சொத்தைய எழுதி கேக்க போறோம் ?
இல்ல நாங்க உங்களுக்கு குடுத்த 50 ரூபாய் யா திருப்பி கேட்டு புப்ளிகுட்டி பண்ணிட போறோம ?
just உங்க பதிவ படிச்சுட்டு ஏதோ எங்க கருத பின்னூட்டமா போடா போறோம் .
அதுக்கு எதுக்கு கமெண்ட் moderation ?
ஏதோ சென்சிடிவான பதிவு போட்டு இருக்கீங்க மத்தாவங்க மனசு புண் படிதிடாம இருக்க கமெண்ட்ஸ் moderation வைக்குறதுல ஒரு அர்த்தம் இருக்கு அதை விட்டுபுட்டு சாதாரண பதிவுக்கு எல்லாம் எதுக்கைய Moderation ?
i ) நாம போடுற பின்னோட்டம் அவங்க எப்போ படிப்பாங்கன்னு தெரியாது ,
ii ) எப்போ approve பண்ணுவாங்கன்னு தெரியாது ,
iii ) எப்போ publish ஆகும்ன்னும் தெரியாது . எல்லாம் ஆண்டவனுக்கும் , Author குமே வெளிச்சம் ..
Moderation வைக்க தெரிஞ்ச அவங்க , approve பண்ணி publish ஆனதுக்கு அப்புறம் , மதிப்பிற்குரிய நண்பரே (வேலை வெட்டி விட்டுட்டு என்னக்கு கமெண்ட் போட்ட fool ) , உங்க பின்னூட்டத்துக்கு நான் அனுமதி வழங்கி விட்டேன் , உங்க பின்னோட்டம் வெளியாகிவிட்டது , அப்படின்னு , கண்டிப்பா நம்பள வெற்றிலை பாக்கு வச்சு அழைக்க போறது இல்ல ..
கொய்யா .. போங்கைய இனிமே கமெண்ட் moderation இருக்க ப்ளாக் க்கு நான் கமெண்ட்ஸ் போடுரதுல்லன்னு சபதம் எடுக்குறேன் ....
டிஸ்க்கி :
Comments Moderation வைத்து இருக்கும் பதிவர்களின் மனப்பான்மை (அதுவும் பெருமையுடன் ) :1 ) தேவை இல்ல நீ கமெண்ட் போட்டுதான் நான் பிரபல பதிவர் ஆகணும்ன்னு இல்ல
2 ) நீ கமெண்ட்ஸ் போட்டுதான் என்னோட வீட்டுல அரிசி உலை கொதிகன்னும்ன்னு இல்ல ..
3 ) வேண்னும்னா நீயும் கமெண்ட் Moderation வச்சுக்கோ , யாரு வேண்டாம் னா ?
ரைட்டு இல்லன்னு யாரும் சொல்லல , ஆனா நான் கேக்குறது ஒன்னே ஒண்ணுதான் , நட்புடன் பின்னோட்டம் போடும் போது அது உடனே பின்னூட்டத்துல வெளியாகலேன்னா , பின்னோட்டம் போடுறவங்க கண்டிப்பா எமாற்றம் அடைவாங்க , மத்தவங்க அடைவாங்களோ இல்லையோ , நான் அடைகிறேன் ....
ஏமாற்றங்களுடன் ,
ராக்ஸ் ...
For fun chat, blog, forum, videos, games, live FM kindly visit our website:


