உன் விழிகள் பேசும் வார்த்தைகள் புரிந்த எனக்கு ,
உன் இதழ்கள் பேசும் வார்த்தைகள் புரியவில்லை அன்பே ,
❤
❤
❤
❤
❤
❤
❤
தக்காளி.......... இங்கிலீஷ்லையே பேசிக்கொல்லுறாயா . . . .
இன்றைய கால கட்டத்துல நல்ல பிகர் மட்டும் இல்ல , எல்லா பொண்ணுங்களும் இங்கிலீஷ்ல தான் பேசுதுங்க . . .
அதனால இதுல இருந்து என்ன தெரியுதுன்ன ஒரு பிகர் கரெக்ட் பண்ணனும்னா கூட இங்கிலீஷ் அத்தியாவசியபடுது.
இது ஒரு நகைசுவைக்காக எழுதுனது என்றாலும், இதில் உள்ள வலி என்னவோ உண்மைதான் .
தற்போது இந்தியாவில் அரசு பள்ளிகளின் ஆங்கிலம் கற்பிக்கும் முறையும் , நிலைமையும் , இங்கு கீழே இருக்கும் வீடியோவை பார்த்தால் புரியும் . . .
ஓர் அளவுக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல என்ன நடக்குது. தமிழ் வழியில் படித்துவிட்டு வந்த மாணவர்களின் நிலைமை என்ன என்பதை ஓர் அளவுக்கு எடுத்து சொல்லி இருக்குது சமீபத்துல விஜய் டி.வீ ல ஒளிபரபாகுற கனா காணும் காலங்கள் ( ஒரு கல்லூரியின் கதை ) இங்கு கீழே இருக்க வீடியோவை பாருங்கள் . .
அதில் அந்த பேராசிரியர் சொல்லுவது அத்தனையும் உண்மை . இன்ன்றைய கால கட்டத்துல உயர் கல்வி பெரும்பாலும் ஆங்கிலதிலையே இருபதினால் ஆங்கிலம் அறிவு எனபது அவசியம் ஆகிறது .
இந்த ஆங்கில மொழி பிரச்னை எனபது தமிழ் வழி கல்வி கற்றவகளுக்கு மட்டும் அல்ல , மலையாள வழி கல்வி , தெலுங்கு வழி கல்வி என்று அவர் அவர் மாநில மொழிகளில் படித்த அனைவருக்கும் இருக்கிற பிரச்சனைதான்.
சரி இதுக்கு எல்லாம் என்னதான் தீர்வு?
முதல்ல உலகத்துல இருக்க எல்லாரையும் தமிழ் படிக்க வைக்கலாம் , அமெரிக்க அதிபர் முதல் ஆப்பரிக்க அண்ணாச்சி வரை எல்லாரும் தமிழ் தான் .அப்புறம் உயர் கல்வி அனைத்தையும் தமிழ்வழி(Tamil Medium ) கல்வியா மாத்திடலாம். அப்போ இனிமே உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் எல்லாரும் தமிழில் தான் பேச வேண்டும் , உலகத்தில் உள்ள எல்ல பல்கலைக்கழகங்களும் , கல்லூரிகளிலும் எல்ல பாடமும் தமிழில் கற்பிக்க வேண்டும் . உலகத்தில் உள்ள எல்ல புத்தகங்களும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் கம்ப்யூட்டர் முதல் இன்டர்நெட் வரை அனைத்தும் தமிழில் . முக்கியமான ஒன்று எல்லா பிகர்சும் இனிமே தமிழில் தான் கதைக்க வேண்டும் .
எப்புடிஈஈஈ ? ? ?
இப்படி ஓவர் நைட் ல எல்லாம் மாறிடுச்சுனா , நம்ப தமிழ் வழி கல்வியில் படிச்சுட்டு வர்ற மாணவர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது .
கொய்யால இதெல்லாம் நடக்குற காரியமா ?
நமது அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக மேடையில் செந்தமிழில் உணர்ச்சி பொங்க பேசிவிட்டு தங்கள் வீட்டு பிள்ளைகளை மட்டும் விவராமாக ஆங்கில வழி , மெட்ரிக்குலேசன் பள்ளியில் படிக்க வைத்து பின்னாளில் பன்னாட்டு வணிகமும் , தொழிலும் செய்யும் திறமைசாலிகளாக மாற்றட்டும் , நம் அப்பாவி மக்கள் மட்டும் தமிழ் வழி கல்வி கற்று நொந்தது நூலாகட்டும் .
நகைசுவைக்கு எல்லாம் அப்பாற்பட்டு நான் என்ன சொல்ல வரேன் என்றால் .
அரசாங்கமும் வழக்கமான கல்வி முறைய மாற்ற வேண்டும் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டு வர வேண்டும் ,
தமிழகத்தில் எல்லாருக்கும் ஆங்கில அறிவு முறையாக வரவேண்டும் , எல்லா பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும்
அதுக்காக யாரையும் தமிழ் படிக்க வேண்டாம் என்று சொல்ல வில்லை , மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் , தமிழனாய் பிறந்த அனைவரும் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் முறையாக தமிழை கற்றால் தமிழ் தானாக வளரும் , தமிழ் அழிந்து விடும் என்ற அச்சம் கொஞ்சம் கூட வேண்டாம் .
அன்றே திரைகடல் ஓடி திரவியம் தேடிய தமிழன் . பல நாடுகளில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்கிய அதிசியங்களும் உண்டு . உதாரணத்துக்கு சிங்கபூரில் தமிழ் மொழி ஒரு ஆட்சி மொழி .
தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்தும் பெற்றாகி விட்டது .
தமிழ் என்றும் அழியாது , அதை தமிழன் அழியவும் விட மாட்டன் .
அதனால் குழந்தைகளை ஆங்கிலம் படிக்க வையுங்க , ஆங்கில வழியில் படிக்க வையுங்கள் . வேண்டுமென்றால் ஒரு தமிழ் பாடம் மட்டும் அல்லாது மேலும் ஒரு தமிழ் பாடத்தை அதிகமாக பாடத்திட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள். மற்ற எல்லாத்தியும் ஆங்கிலத்தில் படிக்க வையுங்கள் .
ஆங்கிலம் மட்டும் அல்ல , நமது தேசிய மொழியான ஹிந்தியையும் படிக்க வையுங்கள் . இந்தியன் , இந்தியன் என்று மார் தட்டி கொள்ளும் நமக்கு எத்தனை பேருக்கு ஹிந்தி சரளமாக பேசவும் , எழுதவும் தெரியும்?
ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அதிகமா தேவைப்படும் மொழி ஹிந்தி , இந்தியன் ஆகிய நாம் ஹிந்தி கற்று கொள்வது ஒன்றும் கொலை குற்றம் அல்ல .
நான் ஹிந்தி கற்று கொள்ளாமல் போய் விட்டேனே என்று இன்று வரை வருத்தபடுகிறேன் .
இங்கு அரபு நாட்டில் , அவசரத்துக்கு டாக்ஸி பிடித்தேன் அது ஒரு பாகிஸ்தானி டிரைவர் . ஓர் இடத்துக்கு போக எனக்கு தெரிஞ்ச தாதாக்க புதக்க ஹிந்தில நான் சொல்லி எவ்வளவு என்று கேட்ட அவன் “ பந்த்ரா ரியால்” என்கிறான் , நான் சொல்கிறேன் “ நஹி நஹி , பச்சீஸ் ரியால்” என்று , அவன் “முஷ்கில் நஹி பாய் , பந்த்ரா ரியால் பஸ்” அப்படிகிறான் . நான் முடியவே முடியாது என்கிறேன் . என்ன கொடுமை அந்த டிரைவர் தலைல அடிச்சுகிட்டு ஏற சொன்னான் .
அதன் தமிழ் அர்த்தம இதுதான் . அவன் 15 ரியாலுக்கு போலாம் என்கிறான் , நான் இல்ல இல்ல , 25 ரியால் என்றால்தான் வருவேன் என்கிறேன் . என்ன ஒரு அதிபுத்திசாளிதனம் , என்ன கொடுமை இதெல்லாம்? நமக்கு தெரிந்த ஹிந்தி அவ்வுளவுதான் .
அந்த பாகிஸ்தானி டிரைவர் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி ,
“ இந்தியன் உனக்கு உன் நாட்டின் தேசிய மொழி ஹிந்தி தெரியாதா? “
நாக்கை புடிங்கிகிலாம் போல் இருந்தது . . .
நான் தமிழன் , ஹிந்தி எதிர்ப்பு , அதெல்லாம் உள்ளூர் அரசியல் ஆனால் மத்த நாட்டுக்காரனுக்கு நான் ஒரு இந்தியன் எனக்கு ஹிந்தி தெரியவில்லை . எவ்வளவு பெரிய அவமானம்?
நிறைய மொழிகளை நாம் படிபதினால் நாம் ஒன்றும் தாழ்ந்து போய் விட போவதில்லை
“ கண்டதை தின்பவன் குண்டன் ஆவான் “
என்று ஒரு பழமொழி கேள்வி பட்டு இருப்பீர்கள் . ஆனால் அதன் சரியான பழமொழி ஏன் தமிழ் ஆசிரியர் சொல்லி இருக்கிறார் .
“ கண்டதை படிப்பவன் பண்டிதன் ஆவான் “
சாபிடுரதுலையே எப்பவும் நமது சிந்தனை இருக்கு அதனால்தான் பழமொழி கூட அப்படி மருவி விட்டது .
அதனால் சின்ன குழந்தையிலையே முடிந்த வரை எல்லாத்தியும் படிக்க வையுங்கள் ,
குழந்தை மனதும் , மூளையும் எந்த கவலையும் இல்லாமல் அதிக புத்துணர்ச்சியோடு காலியாக இருக்கும் அதில் அப்பவே நல்ல விஷியங்களையும் , மொழிகளையும் நிரபினால்தான் உண்டு , இல்லையென்றால் வளர்ந்த பின் எதையும் புதிதாக நிரப்ப முடியாது .
பசுமரத்தில் ஆணி நன்றாக பதியும் . .
ஆதங்கங்களுடன் ,
ராக்ஸ் ..........
For fun chat, blog, forum, videos, games, live FM kindly visit our website: www.tamilrockzs.com