Followers

Thursday, June 2, 2011

                          
                               காலைல குளிக்கும் போது , அதுவும் அவசரமா ஆபீஸ்க்கு கிளம்புறதுகாக குளிக்கும் போது இருக்கிற  மிக பெரிய பிரச்சனைகள்ள ஒன்று , சோப்பு கை நழுவிபோய்டுறது , அதுவும் அவசர அவசரமா சோப்பு போடும் போதுதான் இந்த சோப்பு நம்ப கிட்ட சடு குடு விளையாடும் . எவ்வளவுதான் இறுக்கி புடிச்சு , கவனமா குளிச்சாலும் , நாம ஏரியா ஏரியாவா உடம்புல சோப்பு போடும் போது சோப்பு , நாம பிக் அப் பண்ண நினைக்குற பிகர் நழுவி போற மாதிரி லபக்குன்னு நழுறது சகஜம் தான்  . இருந்தாலும்  மனம் தளராம ,  நாம்பளும் உடனே சோப்பு தரைல விழாம புடிக்க, இந்தியன் கிரிக்கெட் டீம் பில்டர் கணக்கா குட்டிகரணம் அடிச்சு லாவகம புடிக்க பார்த்தாலும் , சோப்பு எப்படியும் பெண்டரி தொட்டு சோப்பு முனை மழுங்காம விடாது . அதுக்கு அப்புறம் அரை மனசோட அந்த சோப்புபை ஒரு பேருக்கு  தண்ணில  காட்டிட்டு வழக்கம் போல சோப்பு போடா ஆரம்பிபோம் . இருந்தாலும் மனசு கஷ்டமா இருக்கும் கீழ விழுந்த சோப்பை போடுரமேன்னு ( சுத்தத்தை  பத்தி கவலை பாடுரவனுக்கு கண்டிப்பா கஷ்டமா இருக்கு. இருக்குமில்ல? .... என்னது இல்லையா? சரி  விடுங்க அப்போ நீங்க ... ரைட்டு ரைட்டு அது எதுக்கு இப்போ )
   
                ஆனா பாருங்க , நாம உடம்புக்கு சோப்பு போடும் போது நழுவுனா கூட பரவா இல்ல , இந்த அழகான முகத்தை மேலும் அழகு படுத்த கண்ணை மூடிகிட்டு சோப்பு போடும்போது கை நழுவி போகும் பாருங்க , அப்போ வரும் கோவம் , அப்படியே பாத் ரூம் சுவர அடிச்சு உடைசுடலாமன்னு தோணும் , ஆனா பாருங்க அதுல ஒரு சிக்கல் இருக்கு , அப்படி அடிச்சா , உடையுறது பாத் ரூம் சுவரா இருக்காது , நம்ப கையாதான் இருக்கும் . அதனால மனச தேத்திக்கிட்டு சோப்பு தேட ஆரம்பிப்போம் .
       
             முதல் முயற்சியா கண்ணா மூடிகிட்டே அப்படியே கீழ குனிஞ்சு தரைய தடவ ஆரம்பிப்போம் ஆனா கண்டிப்பா சோப்பு கிடைக்காது , அது எப்படி கிடைக்கும்? பகல்லயே நமக்கு பசு மாடு தெரியாது , இதுல இருட்டுல எங்க எருமை மாடு தெரிய போகுது ? . கண்ண திறந்துகிட்டு வண்டி ஓட்டுனாலே கீழ வாரி விழுறவாங்க நாம . இதுல எங்க கண்ணா மூடிகிட்டு சோப்பை கண்டு புடிக்குறது?  தரைக்கு சாணி போட்டு மொளுக்குற மாதிரி , தடவுனதுதான் மிச்சம்.

                 இப்போ ரெண்டாவது முயற்சியாக ,லைட்டா கண்ண திறந்தா , திறந்தவுடனே எப்படிதான் தெரியல , சோப்பு நுரை கண்ணுக்குள்ள கபால்ன்னு  போய் அங்க கண்ணீர்,  டேம் கட்டி நிக்கும் . அப்புறம் ஓர கண்ணால கண்ணு எரிச்சலோடையே சோப்பு தேடி மீதி ஏரியாவை போட்டு முடிப்போம் . அட அட அட என்னையா இது? குளிக்குறது சர்கஸ் பண்ணுறதை விட கஷ்டமா இருக்கு . இருந்தாலும் இந்த கூத்து எல்லாம் பாத் ரூம் குள்ள நடக்குரதுனால நாம தப்பிச்சோம் . ஆனா இதையெல்லாம் மத்தவங்க கண்ணு கொண்டு பார்த்தாங்க அவ்வுளவுதான் நாம பண்ணுற காமெடில மானம் மானாவாரிய போகும் .

     ஆனா  இந்த உலக மகா சோப்பு நழுவுற பிரச்சனைய நம்ப பிரபல பதிவர்கள் எப்படி சமாளிகிறாங்க? இல்ல அவங்களும் சோப்பு நழுவ விடுறான்களான்னு BBC (Tamil) REPORTER ஸ்பெஷல் இன்டர்வியூ எடுத்து இருக்காரு , அவங்க என சொல்லுரங்கன்னு பாக்கலாம் .

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : நான் குளிகுறேன்னு யாரு சொன்ன உங்க கிட்ட? எனக்கு ஊர் ஊரா சுத்துறதுக்கும் , அத நான் சேலம் போன்னேன் , சிங்கப்பூர் போன்னேன் , கொடைகானல் போன்னேன்னு போட்டோ புடிச்சு ப்ளாக்குக்கிர
 பேர்ல போடுரதுக்குமே டைம் இல்ல இதுல எங்க குளிக்குறது?

BBC REPORTER : அப்போ சார் எந்த ஊருக்கு போனாலும் குளிக்குறது இல்ல?

சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : யோவ் அறிவு இருக்கா  உனக்கு? நான் அங்க போன்னேன் , இங்க போன்னேன் , ஹோட்டல்க்கு சாப்பிட போன்னேன் அப்படின்னு போட்டோ புடிச்சு போடுறேன்ன இல்லையா என்னோட ப்ளாக்ல?

BBC REPORTER :
ஆமா சார் அத தான்  பார்த்துட்டு ஊரு சிரிப்பா சிரிக்குதே . . .


சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : அப்போ நான் குளிச்சு இருந்த அதையும் போட்டோ புடிச்சு போட்டு இருக்க மாட்டேன்? , இதெல்லாம் நீ யோசிக்க மாட்ட? வந்துட்டான் தூக்கிகிட்டு , மைக்க, கேள்வி கேக்குறதுக்கு , போயா போ நான் உன்னையும் கூட்டிட்டு போய் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கி குடுக்க சொல்லுறதுக்கு முன்னாடி போய்டு , இல்ல அப்புறம் நீதான் பில் குடுக்க வேண்டி வரும் .சொல்லிட்டேன் ஆமா .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

பட்டா பட்டி : நான் பட்டா பட்டி ட்ரவுசர் போடா ஆரம்பிச்ச காலத்துல இருந்தே குளிக்குறது இல்ல சார் அப்புறம் எங்க சோப்பு எல்லாம் போட்டுக்கிட்டு ஹி ஹி ஹி 

BBC REPORTER : சார் நீங்க எப்போ இருந்து பட்டா பட்டி ட்ரவுசர் போட ஆரம்பிசுங்க?

பட்டா பட்டி : நான பிறந்ததுல இருந்தே பட்டா பட்டி ட்ரவுசர் தான் போடுறேன்


BBC REPORTER : அட பாவி அப்போ நீ பொறந்ததுல இருந்தே குளிக்குறது இல்லன்கிரததான் அப்படி சொன்னியா ?

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

மங்குனி அமைச்சர் : யோவ் எனக்கு ஆடு வெட்டதான் தெரியும் , இந்த  சோப்பு போடுறத பத்தி எல்லாம் தெரியாது .நான் எனக்கும் சோப்பு போட்டதும் கிடையாது , வேற யாருக்கும் சோப்பு போட்டதும் கிடையாது .

BBC REPORTER : அப்போ சோப்பு போடாமதான் குளிக்குகிறின்களா நீங்க ?

மங்குனி அமைச்சர் : யோவ் நான் குளிக்குறேன்னு சொன்னேன உன்கிட்ட? எப்பவாவது மழை பெய்யும் போது நனையுறதொட சரி . குளிச்ச எனக்கு ஜல்ப்பு புடிசுக்கும் .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

கோகுலத்தில் சூரியன் வெங்கட் : சாரி சார்  , இந்த கேள்வி MODERATION க்கு போயிட்டு வந்தாதான் என்னால பத்தி சொல்ல முடியும் .

BBC REPORTER :  சார் இதுக்கெல்லாமா MODERATION ? என்ன கொடுமை இது ? 


வெங்கட் :  சார் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எல்லாமே MODERATION ல தான் போகுது சார்


BBC REPORTER :  எல்லாமேனா?


வெங்கட் :  எல்லாமேனா எல்லாமேதான் அதுக்கு மேல சொல்ல முடியாது ( அப்புறம் யாரு வீட்டுக்கு போய் அடிவாங்குறது அவ்வ்வ்வ்வ்வ்வ் ) 

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?


சி.பி.செந்தில்குமார் : ஹி ஹி ஹி , சார் குளிக்குறது புடிக்கும் ஆனா குளிக்குறது நானா இருக்க கூடாது 

 BBC REPORTER : அப்படினா ? என்ன சார் சொல்லவரிங்க?

சி.பி.செந்தில்குமார் : ஹி ஹி ஹி எனக்கு தியேட்டர்ல நடிகைகள் சினிமால குளிக்கிறதை  கலை கண்ணோட பார்க்குறதுக்குதான் புடிக்கும் , மத்தபடி எனக்கு குளிக்கிறதுன்னா அலர்ஜி சார் ஹி ஹி ஹி . . .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

விக்கிஉலகம் (விக்கி) : சார் இங்க வியட்நாம்ல யாரும் குளிக்கிறது இல்ல தெரியமா உங்களுக்கு? குளிக்கிறது எல்லாம் வேஸ்ட் ஆப் டைம் சார்  

BBC REPORTER : குளிக்கிறது வேஸ்ட் ஆப் டைம் னா வேற என்ன பண்ணுவிங்கா? 

விக்கிஉலகம் (விக்கி) : குளிச்சு டைம் வேஸ்ட் பண்ணுறத விட , அந்த நேரத்துல நாலு ப்ளாக் போஸ்ட் பண்ணலாம் இல்ல? நானெல்லாம் ஒரு லட்சிய பாதைல போய்கிட்டு இருக்கேன் தெரியுமா உங்களுக்கு?  


-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி                  சமாளிக்குரிங்க?

பன்னிகுட்டி  :  அடங்கொன்னியா குளிக்குறதுக்கு சோப்பு எல்லாம் போடணுமா? 

BBC REPORTER : ஆமா சார் , அப்போ இது தெரியாத உங்களுக்கு? அப்போ குளிக்குரதுக்கு நீங்க என்னத்த use பண்ணுரிங்கா?

பன்னிகுட்டி  :  i use only  செங்கல் . அப்புறம் குளம் குட்டைய பக்குறபோ அப்படியே ஜாலியா குப்புற படுக்குரதொட சரி


-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


BBC REPORTER : மேடம்  இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி             சமாளிக்குரிங்க?

இந்திரா  :  ( போச்சுட ஏற்கனவே நாம சொந்தமா வாங்குற பல்பு பத்தாதுன்னு இப்போ BBC ல இருந்து வேற வந்துட்டாங்களா ? ) சார் உங்களுக்கு ஒன்னு தெரியுமா? குளிக்குரதுல பல விதம இருக்கு , அதுல நான் குளிக்குற விதத்துல சோப்பு நழுவுரதுக்கு வாய்ப்பே இல்ல .


BBC REPORTER : என்னது குளிக்குரதுல பல விதம் இருக்கா ? அது என்ன என்ன விதம் மேடம் ?

இந்திரா  :  அப்படி கேளுங்க சொல்லுறேன் ,  அருவி குளியல் , காக்கா குளியல் , முலிகை குளியல் , சூரிய குளியல் , பம்பு செட் குளியல் , ஆடம்பர குளியல் , அவசர குளியல் , MODERN குளியல்  இப்படி நிறைய இருக்கு . .
 
BBC REPORTER : ஓ இதுல இவ்வளவு இருக்க ? அப்போ நீங்க எந்த விதமான குளியல் மேடம் பின்பற்றுறிங்கா ? 


இந்திரா  :   என்னோட சாய்ஸ்  எப்பவுமே MODERN குளியல்தான் .


BBC REPORTER : கேக்குறேனேன்னு தப்ப நினைச்சுகாதிங்க மேடம் , அது என்ன MODERN குளியல் ? 

இந்திரா  :  அட என்ன சார் BBC ல இருந்து வந்து இருக்கேன்னு சொல்லுரிங்க MODERN குளியல் தெரியாதுன்னு சொல்லுரிங்க ? 
அது  ஒன்னும் இல்ல சார் ரொம்ப சிம்பிள் , ஆபீஸ்கோ , இல்ல வெளியவோ கிளம்புறதுக்கு  முன்னாடி , left ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ்  , right ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ்ஸ் அவ்வுளவுதான் . 


BBC REPORTER : புஷ்ஷ்ஷ்சா ? அப்படினா ?

இந்திரா  :  என்ன சார் நீங்க சுத்த வெவரம் கிட்ட ஆள இருக்கீங்க , அப்படின வெளிய கிளம்புறதுக்கு முன்னாடி , perfume  bottle , இல்ல சென்ட்  பாட்டில் எடுத்து  left  ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ்ஸ் , right  ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ் . . . . அவ்வுளவுதான் குளியல் முடிஞ்சது . . .

BBC REPORTER : இதுதான் உங்க புஷ்ஷ்ஷ்சா ? சரியா போச்சு . . .
ஆள விடுங்காடா டேய் . . . .

-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

ஆகா சோப்பு நழுவாம இருக்க ஒரே தீர்வு : குளிக்காம இருக்குரதுதானா ? 


இது தெரியாம இந்த ராக்ஸ் பலவருசமா, பல சோப்பு தவற விட்டுடானே . . . அட ச்சா


என்னடா குளிக்குறத பத்தி பதிவு போட்டுட்டு குளிக்குற மாதிரி படம் ஏதும் போடலைஎன்னு வருதப்படுறவங்களுகாக கீழே பார்க்கவும் . . .
ஆனந்த குளியல் . . . .

Always , 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com46 comments:

sruthi said...

nice comedy blog rajesh. i laughed more i cant. super rajesh. u make other to laugh by ths blog. u knw its very difficult to make others laugh. keep going all d best

Lakshmi said...

இந்தப்பதிவை நீ சிரிக்காம எழுதினியோ? பாத்ரூமுக்குள்ள போயி
சோப்பைப் பாத்தாலே இப்படி சிரிக்க வச்சுட்டியே.என்பசங்கல்லாம் அம்மாவுக்கு என்னமோ ஆச்சு பாத்ரூம்ல
தனியே சிரிச்சுகிட்டு இருக்காங்கன்னு பேசுர அளவுக்கு போச்சுப்பா.

# கவிதை வீதி # சௌந்தர் said...

எப்படி இப்படியெல்லாம்... (இந்த கண்டுபிடிப்புக்கு ஸ்பீடு மாஸ்டர் கிட்ட சொல்லி ஒரு அவார்டு கொடுக்க சொல்லனும்..)

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@sruthi said...

nice comedy blog rajesh. i laughed more i cant. super rajesh. u make other to laugh by ths blog. u knw its very difficult to make others laugh. keep going all d best
////

thank you sruthi . சந்தோசம சிரிச்ச சரி . எப்பவும் ஜாலி சிரிச்சுகிட்டே இருக்க வேண்டியதுதான் . . உங்க எல்லாருடைய ஆதரவும், ஊக்கமும் இருந்த இந்த மாதிரி தொடர்ந்து எழுதிகிட்டே இருப்பேன்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Lakshmi said...

இந்தப்பதிவை நீ சிரிக்காம எழுதினியோ? பாத்ரூமுக்குள்ள போயி
சோப்பைப் பாத்தாலே இப்படி சிரிக்க வச்சுட்டியே.என்பசங்கல்லாம் அம்மாவுக்கு என்னமோ ஆச்சு பாத்ரூம்ல
தனியே சிரிச்சுகிட்டு இருக்காங்கன்னு பேசுர அளவுக்கு போச்சுப்பா.///
ஹி ஹி ஹி அம்மா .

நல்ல வேலை சிரிக்காம எழுதுனியான்னு கேட்டிங்க , குளிக்காம எழுதுனியான்னு கேக்காம விட்டின்களே . . .
இனிமே பாத் ரூம் க்கு போய் சோப்பு எடுத்தாலே இந்த நியாபகம்தான் வரணும் .
எல்லாம் சொந்த அனுபவம் தான் , இன்னைக்கு காலைல கூட சோப்பை நழுவ விட்டுட்டு தரைய தடவிகிட்டு இருந்தேன் அரை மணி நேரமா , இதெல்லாம் பெருமிய வெளியவா சொல்லிக்கிட்டு இருக்க முடியும்? ஹி ஹி ஹி
( ஐயையோ நான்தான் உளறிடேனா? )

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ # கவிதை வீதி # சௌந்தர் said...

எப்படி இப்படியெல்லாம்... (இந்த கண்டுபிடிப்புக்கு ஸ்பீடு மாஸ்டர் கிட்ட சொல்லி ஒரு அவார்டு கொடுக்க சொல்லனும்..)////

வாங்க வாங்க சௌந்தர் , வருகைக்கு நன்றி .
அப்புறம் அந்த அவார்டு எதுக்குங்க நமக்கு? , நான் ஏதோ மக்கள் பணில இருக்கேன் . நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா நான் குளிக்காம கூட இருப்பேன் . சரி அத விடுங்க
எப்படி இருக்கீங்க? குளிச்சின்களா?
சோப்பு போட்டிங்களா ? சொல்லிப்புட்டு போங்க சௌந்தர் . . .

Anonymous said...

subha here
i have an idea yepadi soap ah thavara vidama kulikirathu nu
Bathroom full ah ellam wall iyum soap kati ye ella idathilum oti vechidanum
so kulikum both ellam, wall ah poi thechikita pothum
soap killa velura perachanai illa
epadi my idea?? :D :P

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லவேளை. நான் குளிச்ச மாதிரி பதிவு போட்டு என் மானத்தை வாங்கலை.

குளிப்பது ஒரு தீண்டத்தகாத செயல்..
குளிப்பது ஒரு பெரும்குற்றம்

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லவேளை. நான் குளிச்ச மாதிரி பதிவு போட்டு என் மானத்தை வாங்கலை.

குளிப்பது ஒரு தீண்டத்தகாத செயல்..
குளிப்பது ஒரு பெரும்குற்றம் ////

வாயா சிரிப்பு போலீஸ் , எங்க இதனை நாளா ஆளையே காணாம்?
அப்புறம் நீ குளிக்காத மேட்டர் இப்படி பப்ளிகுட்டி பண்ணதுல மன வருத்தம் இல்லையே ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா...... இருடி வர்ரேன்....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடங்கொன்னியா...... இருடி வர்ரேன்....
////

ஹி ஹி ஹி ஹி பன்னிகுட்டி எப்படி அட்ரஸ் தெரிஞ்சது?
உண்மையெல்லாம் சொல்லிபுட்டேன்
ஹி ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

யோவ் பன்னிகுட்டி ,உன்ன்கிட்ட ஜிமெயில் id வாங்குனதொட சரி , எங்கைய ஆளையே காணாம்? நீ ஆன்லைன வரவே மாட்டியா? எப்பவும் offline வே இருக்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் கொஞ்சநா பிசியா இருந்தேன்யா அதுக்குள்ள வேற எதையாவது கெளப்பி விட்ராதே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் : ஹி ஹி ஹி எனக்கு தியேட்டர்ல நடிகைகள் சினிமால குளிக்கிறதை கலை கண்ணோட பார்க்குறதுக்குதான் புடிக்கும் , மத்தபடி எனக்கு குளிக்கிறதுன்னா அலர்ஜி சார் ஹி ஹி ஹி . . .///////

ஓ இதுதான் கலைக்கண்ணா... ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////விக்கிஉலகம் (விக்கி) : குளிச்சு டைம் வேஸ்ட் பண்ணுறத விட , அந்த நேரத்துல நாலு ப்ளாக் போஸ்ட் பண்ணலாம் இல்ல? நானெல்லாம் ஒரு லட்சிய பாதைல போய்கிட்டு இருக்கேன் தெரியுமா உங்களுக்கு? ///////

தக்காளி அப்படிப் போடு அருவாள.......

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் கொஞ்சநா பிசியா இருந்தேன்யா அதுக்குள்ள வேற எதையாவது கெளப்பி விட்ராதே....
////

ஓ அப்படியா ? ரைட்டு ரைட்டு , விடு இத வச்சு நான் வேற பிட்டு போட்டுகிறேன் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெங்கட் : சார் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எல்லாமே MODERATION ல தான் போகுது சார் ///////

யோவ் அந்த மனுசன் பாவம்யா... விடுங்கய்யா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பன்னிகுட்டி : அடங்கொன்னியா குளிக்குறதுக்கு சோப்பு எல்லாம் போடணுமா? /////////

அதானே குளிக்கிறதுக்கு தண்ணிதானே வேணும்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பன்னிகுட்டி : i use only செங்கல் . அப்புறம் குளம் குட்டைய பக்குறபோ அப்படியே ஜாலியா குப்புற படுக்குரதொட சரி ///////

ஆமா ஆமா நாம எப்பவும் ஒன்லி நேச்சுரல் தான்...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் : ஹி ஹி ஹி எனக்கு தியேட்டர்ல நடிகைகள் சினிமால குளிக்கிறதை கலை கண்ணோட பார்க்குறதுக்குதான் புடிக்கும் , மத்தபடி எனக்கு குளிக்கிறதுன்னா அலர்ஜி சார் ஹி ஹி ஹி . . .///////

ஓ இதுதான் கலைக்கண்ணா... ?
////

இல்லையா பின்ன? எத்தன நல்ல படத்துக்கு விமர்சனம் எழுதி இருப்பாரு . எவ்வளவு இளைஜர்கள் ஏமாந்து போக கூடாதுன்னு எச்சரிக்கை செய்து இருக்காரு . அவர் ஒரு மகான் பன்னிகுட்டி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் கொஞ்சநா பிசியா இருந்தேன்யா அதுக்குள்ள வேற எதையாவது கெளப்பி விட்ராதே....
////

ஓ அப்படியா ? ரைட்டு ரைட்டு , விடு இத வச்சு நான் வேற பிட்டு போட்டுகிறேன் .////////

யோவ் போடுறது போடுற நல்ல கிளுகிளுப்பான் பிட்டா பாத்து போடு....

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெங்கட் : சார் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எல்லாமே MODERATION ல தான் போகுது சார் ///////

யோவ் அந்த மனுசன் பாவம்யா... விடுங்கய்யா...////

முடியாது , முடியாது , முடியாது . .
ஆமா நீ என்ன திடீர்ன்னு அவருக்கு சப்போர்ட் பண்ணுற?
ஏன் உனக்கும் MODERATION வர போகுதா?
i mean கல்யாணம் ஆகா போகுதா? இல்ல எந்த பிகர் கிட்டயாவது சிக்கிட்டிய?
உண்மைய சொல்லிபுடு பன்னிகுட்டி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பன்னிகுட்டி : அடங்கொன்னியா குளிக்குறதுக்கு சோப்பு எல்லாம் போடணுமா? /////////

அதானே குளிக்கிறதுக்கு தண்ணிதானே வேணும்...?///

ஐயோ இல்லையா பின்ன?
குளிக்கும் போது சோப்பு போடணும் , குளிச்சதுக்கு அப்புறம் ஜெட்டி போடணும்கிறது வரைக்கும் உனக்கு தெரியாதே .
என்ன பண்ண? பச்ச புள்ளை பாரு . . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////வெங்கட் : சார் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எல்லாமே MODERATION ல தான் போகுது சார் ///////

யோவ் அந்த மனுசன் பாவம்யா... விடுங்கய்யா...////

முடியாது , முடியாது , முடியாது . .
ஆமா நீ என்ன திடீர்ன்னு அவருக்கு சப்போர்ட் பண்ணுற?
ஏன் உனக்கும் MODERATION வர போகுதா?
i mean கல்யாணம் ஆகா போகுதா? இல்ல எந்த பிகர் கிட்டயாவது சிக்கிட்டிய?
உண்மைய சொல்லிபுடு பன்னிகுட்டி//////

விட்டா மேம்பாலமே கட்டிருவானுங்க போல...... யோவ் எத்தனை பிகர்கள் குறுக்க வந்தாலும் ஏமார மாட்டான் இந்த பன்னிக்குட்டி.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////♔ℜockzs ℜajesℌ♔™ said...
///@ பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பன்னிகுட்டி : அடங்கொன்னியா குளிக்குறதுக்கு சோப்பு எல்லாம் போடணுமா? /////////

அதானே குளிக்கிறதுக்கு தண்ணிதானே வேணும்...?///

ஐயோ இல்லையா பின்ன?
குளிக்கும் போது சோப்பு போடணும் , குளிச்சதுக்கு அப்புறம் ஜெட்டி போடணும்கிறது வரைக்கும் உனக்கு தெரியாதே .
என்ன பண்ண? பச்ச புள்ளை பாரு . . .///////

குளிச்சதுக்கப்புறம் ஜட்டி போடாம குளிக்கும்போதா ஜட்டி போடுவாங்க ராக்சு..........?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...ஓ அப்படியா ? ரைட்டு ரைட்டு , விடு இத வச்சு நான் வேற பிட்டு போட்டுகிறேன் .////////

யோவ் போடுறது போடுற நல்ல கிளுகிளுப்பான் பிட்டா பாத்து போடு.... ////

ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல . உனக்கு கிளு கிளுப்ப பிட்டு போடணும்னா நீ கடைசிய மெரினா பீச் க்கு போன அப்போ குழந்தைங்க விளையாடுற கிளு கிளுப்பை வாங்கி குடுக்கனும்ன்னு அடம் புடிச்ச மேட்டர் தான் போடணும் . ஐயோ ஐயோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் வரட்டா ராக்சு.. .பாத்து இருந்துக்க... ஊர்ல காத்து கருப்பு அதிகமா திரியுது... அடிச்சிடாதே.....!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

விட்டா மேம்பாலமே கட்டிருவானுங்க போல...... யோவ் எத்தனை பிகர்கள் குறுக்க வந்தாலும் ஏமார மாட்டான் இந்த பன்னிக்குட்டி.........////

அப்போ இன்னும் எந்த பிகரும் உன்கிட்ட ஏமாறலக்கிரத்தை நீ இப்படி மாத்தி சொல்லுற இல்லையா?
நாங்க எல்லாம் யாரு . கரெக்டா கண்டு புடிபோம் பன்னிகுட்டி . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்புறம் வரட்டா ராக்சு.. .பாத்து இருந்துக்க... ஊர்ல காத்து கருப்பு அதிகமா திரியுது... அடிச்சிடாதே.....!///

ஓகே பன்னிகுட்டி செல்லம் , இனிமே எங்க காத்து கருப்பு அடிக்குறது? அதான் உன்ன வச்சு கும்மி அடிச்சஆச்சே அப்புறம் என்ன? சரி போய் குப்புற படுத்து துங்கு
டாட்டா . . .

ராஜ நடராஜன் said...

Too good buddy:)

எனக்கெல்லாம் இந்த தொந்தரவே கிடையாது.ஏன்னா சோப்பு போடறதேயில்லை.புஷ்...புஷ்தான்.(ஆனால் நீங்க சொல்ற புஷ் இல்ல:)

அப்புறம் தண்ணியக் கொட்டிகிட வேண்டியதுதான்.

வெங்கட் said...

// BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது
சோப்பு நழுவுறதை எப்படி சமாளிக்குரிங்க? //

அதுக்கு தான் சோப்பு ஸ்டேண்டுன்னு
ஒன்னு இருக்கு. அதை வாங்கி சுவத்துல
மாட்டி., சோப்பை அதுல வெச்சிட்டு.,

நீங்க பாட்டுக்கு ஜாலியா குளிக்கலாம்..

சத்தியமா சோப்பு ஒரு இன்ச் கூட
நழுவாது சார்..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ராஜ நடராஜன் said...

Too good buddy:)

எனக்கெல்லாம் இந்த தொந்தரவே கிடையாது.ஏன்னா சோப்பு போடறதேயில்லை.புஷ்...புஷ்தான்.(ஆனால் நீங்க சொல்ற புஷ் இல்ல:)

அப்புறம் தண்ணியக் கொட்டிகிட வேண்டியதுதான்.
///
வாழ்த்துக்கள் , தொடர்ந்து அப்படியே குளிங்க சார் . . வாழ்க்கைல ரொம்ப நல்ல முன்னுக்கு வருவிங்க . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@வெங்கட் said...

// BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது
சோப்பு நழுவுறதை எப்படி சமாளிக்குரிங்க? //

அதுக்கு தான் சோப்பு ஸ்டேண்டுன்னு
ஒன்னு இருக்கு. அதை வாங்கி சுவத்துல
மாட்டி., சோப்பை அதுல வெச்சிட்டு.,

நீங்க பாட்டுக்கு ஜாலியா குளிக்கலாம்..

சத்தியமா சோப்பு ஒரு இன்ச் கூட
நழுவாது சார்..
////

மச்சி முடியல , இப்பதான் தெரியுது உன்னோட பொழப்பு இப்படி தான் ஓடுதுன்னு . எல்லாம் ஸ்டாண்ட் வச்ச மேனிக்கே இருக்கு . சரி விடு விதி யார விட்டது?
வெங்கட் பாவம் ப நீ . . .

விக்கி உலகம் said...

உனக்காகத்தான் ஒரு பதிவு போட்டு இருக்கேன் வாடி செல்லம் ஹிஹி!

http://vikkiulagam.blogspot.com/2011/06/blog-post_2204.html

Speed Master said...

வெயில்காலத்திற்கு ஏற்ற பயனுள்ள பதிவு

வாழ்த்துக்கள்


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html

jessi said...

super ah iruku . yepadi yellam think panringa great he he he nice one

Anonymous said...

நம்ம புகழ் BBC வரைக்கும் பரவிடுச்சா???

Anonymous said...

எல்லா பதிலுமே கலக்கல் தான்.

//கோகுலத்தில் சூரியன் வெங்கட் : சாரி சார் , இந்த கேள்வி MODERATION க்கு போயிட்டு வந்தாதான் என்னால பத்தி சொல்ல முடியும் .//

ஹா ஹா ஹா செம காமெடி..

Anonymous said...

//ஆகா சோப்பு நழுவாம இருக்க ஒரே தீர்வு : குளிக்காம இருக்குரதுதானா ?
//


என்னவோ இப்பதான் இந்த உண்மை தெரியுற மாதிரி ரொம்ப ஃபீல் பண்றீங்களே...
அதெல்லாம் குளிக்கிற எண்ணம் இருக்குறவங்க கவலை பாஸ்...
நமக்கெதுக்கு? விடுங்க விடுங்க...

Sathish Kumar said...

அப்படியே.....வாயை திறக்காம எப்படி சாப்பிடறதுன்னு சொன்னீங்கன்னா...ஹீ.....ஹீ....!

Lakshmi said...

ராஜேஷ், வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது வந்து
பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

Anonymous said...

பாடிம்மா, வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதாலேயே உங்க பக்கம் வந்தேன். செம சிரிப்பு. ஆனாலும் நீங்க நம்ம சிரிப்பு போலீஸை இப்படி எல்லாம் கலாய்க்க கூடாது. அவரோட பக்கம் நான் கொமன்ட் போலலேன்னாலும் திருட்டு வோட்டு போடற முதல் ஆள் நான் தேன். அப்புறம் வெங்கட் சாரோடது செம. பன்னிக்குட்டியோட செங்கல் ஐடியா, இந்திராவோட பெர்பீயும் எல்லாம் செம காமடி. வயிறு வலிக்குது.

Anonymous said...

இதை பிரிண்ட் பண்ணி நண்பர்களுக்கு கொடுத்தேன். சில வேளைகளில் பேப்பரில் படிக்கும் போது ஒரு வகை எஞ்சோய்மென்ட் கிடைக்கும். பேப்பரை வைத்துக் கொண்டு எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். எக்சாம் டைம். திங்கள் தான் ஒரு பேப்பர் எழுதி முடிச்சிருக்கேன். வெள்ளி ஒரு பேப்பர் இருக்கு. முடிய எல்லாவற்றையும் உக்காந்து படிக்கறேன். இப்படி நிறைய எழுதுங்க.

தக்குடு said...

:)) ha ha antha bush! bush! idea try panni pakkalam inemey..:P

Raazi said...

சூப்பருங்கோ..very funny,,

சீனுவாசன்.கு said...

நல்லா போடுறீரு சோப்பு!

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters