ஆதி மனிதன் உடம்பெல்லாம் முடியோடு பிறந்தான் , ஆனால் இன்றைய மனிதனுக்கு பிறக்கும் போது உடம்பில் முடி இல்லை ஆனால் சாதி இருக்கிறது .முடித்தான் சாதியாக மாறி விட்டதோ? சாதி முடிக்கே சமாணம் . இன்றைய மனிதன் தனியாக பிறப்பதில்லை , சாதியோடுதான் பிறக்கிறான். எப்போது இருந்து இப்படி ? தெரியல . டிரஸ் போட ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் இப்படின்னு நினைக்குறேன். அதுக்கு முன்னாடி மனிதன் மனதனாக இருந்தான்.
அப்போது எல்லாம் மனிதன் மிருகங்களிடத்தில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவே நேரம் சரியாய் இருந்தது. மிருகங்கள் மனிதன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த போது ( அதாவது மிருகங்கள் அழிய ஆரம்பித்த போது ... ) மனிதனுக்குள் இருந்த மிருகம் கண் விழிக்க ஆரம்பித்து இருக்கும் என்று நினைக்குறேன்.
சாதி, எப்படி இது வந்து இருக்கும்?
இது என்னோட சொந்த அனுமானம் , நான் படித்ததில் இருந்து , கேள்வி பட்டதில் இருந்து சொல்ல்கிறேன் .
பண்டைய காலத்தில் மனிதன் நாகரிக வளர்ச்சி அடைய ஆரம்பித்த காலத்தில் , அவன் அவன், அவன் அவனுக்கு முடிந்த , தெரிந்த வேலையை ( தொழில் ) செய்ய ஆரம்பித்தார்கள். விவசாயம், நெசவு , திருப்பணி , துணிகளை வெளுப்பவர்கள் , பாத்திரம் செய்வது , வியாபாரம், கட்டிட வேலை இப்படி ஏகப்பட்ட வேலை . அப்போது அவர்களை அடையாள படுத்துவதற்காக அவர்கள் செய்யும் தொழில் பெயரை சொல்லி அழைக்க , அடையாள படுத்த ஆரம்பித்தார்கள் என்று நினைக்குறேன் . அதுவே சாதியாக மாறிவிட்டது , அதுவே குல தொழில் ஆனது.
உதாரணத்துக்கு நான் சின்ன வயசா இருக்கும் போது என்னோட பக்கத்துக்கு வீட்டுல மிட்டாய் செய்யும் குடுப்பம் குடி இருந்தார்கள் . வீட்ல மிட்டாய் செய்து கடைகளுக்கு விநியோகிப்பார்கள். அவர்கள் வீட்டுக்கு போனால் எப்போதும் மிட்டாய் வாசம் அடிக்கும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, தொண்டை இனிக்கிறது . எப்போ போனாலும் பாசத்தோட மிட்டாய் குடுப்பார்கள். அவர்கள் வீட்டு பையனோடதான் நான் பெரும்பாலும் விளையாடுவேன். அதனால என்னோட வீட்டுல எங்கடா போன அப்படின்னு கேட்டா மிட்டாய்காரங்க வீட்டுல விளையாண்டுக்கிட்டு இருந்தேன் அப்படின்னு சொல்லுவேன் . வீட்டுலயும் அப்படிதான் , என்னை எங்கன்னு கேட்டா மிட்டைகரங்க வீட்டுல விளையாண்டுகிட்டு இருப்பான் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த தெருவில் எல்லாரும் அப்படிதான் சொல்லுவாங்க மிட்டாய்காரங்க வீடுன்னு . அது அவர்கள் செய்யும் தொழில் , அது ஒரு அடையலாம் அவர்களுக்கு அவ்வளவே.
அப்படிதான் மற்ற தொழில் செய்பவர்களுக்கும் ஆதி காலத்தில் அவர்கள் செய்யும் தொழிலை பொருத்து அடையாள படுத்த பட்டார்கள். ஒரு தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த ஒருவன் அவனுக்கு பிடித்த , முடிந்த தொழில் செய்யும் போது அவன் அந்த தொழில் செய்பவன் ஆகிறான், ஆனால், உதரணத்துக்கு விவசாயம் செய்யும் ஒருவன் குடும்பத்தில் பிறந்த ஒருவன் , துணி நெய்தாலோ , இல்லை வேற தொழில் செய்தலோ அவன் அந்த தொழிலை சார்ந்தவன் ஆகிறான். அது அவன் சொந்த விருப்பம் , ஆனால் அவன் ஒரு தொழில் செய்யும் குடுபத்தில் பிறந்து , அவன் அவனுடைய குல தொழில் செய்யாமல் வேற தொழில் செய்தால் அவன் அந்த தொழில் சார்ந்த சாதி என்று இந்த சமுதாயம் ஒத்துக்கொள்ளுமா? அவன் அந்த தொழிலை செய்பவன் , அந்த சாதி என்று ஒத்துக்கொள்ளுமா? . இல்லை
உதாரணத்துக்கு இன்றைக்கு பெரிய காலணி செய்யும் நிறுவனத்தின் உரிமையளர் அந்த சாதி சேர்த்தவர் என்று சொல்ல முடியுமா? இல்லை இன்று வியாபாரம் செய்யும் எல்லாரும் அந்த அந்த சாதியை சேர்ந்தவர்கள்தான?
சரி அப்போ ஒருவன் பிறந்த குடும்பத்தின் குல தொழில் தான் சாதி என்றால் , ஏதோ ஒரு தலை முறைலதான் அவங்க அந்த தொழிலை ஆரம்பிச்சு இருப்பாங்க . அதனால இப்போ அதே வழிக்கு வரேன் , இப்போ ஒருத்தர் டாகடர் , அவருக்கும் அவர் மனைவிக்கும் ஒரு குழந்தை பொறக்குது , இப்போ அந்த டாக்டர் அவரோட குழந்தைய கொண்டு போய் தாசில்தார் ஆபீஸ்ளையும் , university ளையும் போய் தன்னோட குழந்தையும் டாக்டர் அப்படின்னு பதிவு செய்ய முடியுமா? அதை இந்த சமுதாயம் ஏற்குமா? இந்த அரசாங்க அதை ஒத்துக்கொண்டு அந்த குழந்தையும் டாக்டர் தான் அப்படின்னு சர்டிபிகேட் குடுக்குமா?
என்னையா இது முட்டாள் தனமா இருக்கு நீ டாக்டர் என்கிறதுக்காக உனக்கு பொறந்த குழந்தையும் டாக்டர் ஆகுமா ? அப்படியென்று கேட்க மாட்டாங்க , அவரை ஏளனம் செய்ய மாட்டாங்க ?
இதே மாதிரி engineer குழந்தை engineer என்று சொல்ல முடியுமா?
வக்கீல் குழந்தை , வக்கீல் என்று சர்டிபிகேட் வாங்க முடியுமா?
அதற்கான கல்வியை முறையாக படித்து பட்டம் வாங்கினால் மட்டுமே அந்த குழந்தை டாக்டர் ஆகவோ , engineer ஆகவோ , வக்கீல் ஆகவோ இல்ல இன்னும் மற்ற துறையை சார்ந்த நிபுணர் ஆகவோ அங்கீகரிக்க படுக்கிறது , இந்த சமுதாயத்தாலும் , மக்களாலும் ஏற்று கொள்ள படுகிறது , இல்லையென்றால் அவன் போலி ஆகிறான் . போலி டாக்டர் , போலி வக்கீல் போல , இல்லையா?
பெயர்க்கு பின்னால் போட்டுக்கொள்ள, இல்ல சொல்லி கொள்ள , சாதி என்ன படித்து வாங்கின பட்டமா?
அப்போறம் எப்படியா ஒருவனுக்கு பொறந்த குழந்தை ஒன்னுமே பண்ணாம அந்த அப்பனுடைய சாதிய சேர்ந்தது ன்னு சொல்லுரிங்க?
அந்த குழந்தை அந்த அப்பனுக்கு பொறந்தது என்பதற்காக மட்டுமே ?
பைத்தியகார தனமா இல்ல?
எங்கே இருந்து ஆரம்பிச்சு இருந்தா சாதி , சாதி வெறி ? தெரியல எங்கையோ , எப்போவோ , ஏதோ ஒரு சுயநலம் படைத்த கூட்டம் இதை ஆரம்பித்து இருக்க வேண்டும் . அவர்களின் சொந்த லாபத்திற்காக ஆரம்பித்த சதி வேலை இது . உயர்ந்த சாதி , தாழ்ந்த சாதி , நடு சாதி அப்படின்னு . சரி சாதியே இல்லைக்குறேன் அப்புறம் என்ன உயர்ந்த , தாழ்ந்த , எல்லாம்?
இன்னும் விரிவாக மற்றும் தலைப்பின் காரணத்தையும் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
எனது கனவு ? அடுத்த பதிவில் :
சாதி = எய்ட்ஸ் (part-2) படிக்க இங்கே சொடுக்கவும் (click on)
http://rockzsrajesh.blogspot.com/2010/11/1.html
வேதனைகளுடன் ,
ராக்ஸ் . . . .
26 comments:
வேதனைகளுடன் me too
thank you ramesh
வேதனைகளுடன் me too rajesh
ஏதோ ஒரு சுயநலம் படைத்த கூட்டம் இதை ஆரம்பித்து இருக்க வேண்டும் . அவர்களின் சொந்த லாபத்திற்காக ஆரம்பித்த சதி வேலை இது///
மிகச்சரி..
எனது கனவு ? அடுத்த பதிவில் //
எதிர்பார்க்கிறேன்..
நல்லதொரு ஆராய்ச்சி பதிவு... தெளிவான கருத்துக்கள்...
// நான் இதுவரை என்னோடைய எந்த பதிவையும் வந்து படியுங்கள் என்று யாரையும் அழைத்தது இல்லை . ஆனால் என்னுடைய , சாதி = எய்ட்ஸ் (part- 1) பதிவை படிக்க தாழ்மையுடன் அழைக்கிறேன் . நேரம் இருந்தால் வாருங்கள் நண்பரே //
வேறொரு நண்பரின் பதிவில் இந்த வார்த்தைகளை பார்த்தேன்... நல்லது... என்னையெல்லாம் இதுபோல அழைக்க வேண்டிய அவசியமில்லை... நல்ல பதிவாக இருந்தால் நிச்சயம் வந்து படித்துவிடுவேன்...
முதல் முறையாக சமூகப் பதிவு எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்... இனி தொடர்ந்து பன்முகத் திறனை வெளிப்படுத்துங்கள்... வாழ்த்துக்கள்...
ஒரு ஆராய்ச்சி பதிவு... தொடருங்கள் உங்கள் எழுத்து பயணத்தை... வாழ்த்துக்கள்...
நண்பா! மிக நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! எல்லாம் சுய நலநோக்கோடு செய்துக்கொண்ட ஒப்பந்தங்களே! கூட்டுக் குடும்பங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கொடிக்கட்டிப் பறந்தன. ஆனால் இன்று அது தள்ளாட்டத்தில் உள்ளது. ஏன் என்று தெரியுமா?
எல்லாம் குழு மனப்பான்மை தான் காரணம். தன் குடும்பம், தன் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் ஒன்றாக இருந்தால் விவசாய தொழில், நெசவுத் தொழில் மண்பாண்டம் செய்யும் தொழில் எல்லாம் செய்ய பல கைகள் தேவையாக இருந்தன. அதனால் அந்த தொழில்களை நடத்த ஆட்கள் தேவையாக இருந்தன. அதனால் கூட்டுக் குடும்பங்கள் செழித்திருந்தன. ஆனால் இன்று கைகளுக்கு பதிலாக மிஷின்கள்! அதனால் கூட்டுக் குடும்பங்கள் வழக்கொழிந்துக்கொண்டிருக்கின்றன.
தலைப்பே மிகத்தெளிவாக விசயத்தை
உணர்த்துகிறது! தொடருங்கள் ராஜேஷ்.
ம்.ஆரம்பமே களை கட்டுது தொடருங்கள்..!! :-)
அதேப்போலத்தான் ஜாதியும்! குழு மனப்பான்மை மனிதனிடம் இருக்கும் மிகப்பெரியக் குறை! அவன் தன் குழுவினை சேர்ந்தவர்கள் என்றால் மிகவும் எளிதாக நம்பிக்கை வைக்கின்றான். இன்றைய காலம் வரை ஜாதி ஒழியாமல் இருப்பதற்கு அதுவே காரணம். பள்ளிகள் எல்லாம் தங்கிப் படிக்கும் பள்ளிகளாக, மாறி எல்லா ஜாதி மதத்தினரும் எந்த ஒரு பேதம் இல்லாமல் ஒன்றாக சேர்ந்து படிக்கும் நிலை வந்தால் தான் இந்த குழு மனப்பான்மை அடிப்படும். அது வரை ஜாதி தொடரவே செய்யும்.
தொழில் அடிப்படையினாலேயே இந்த சாதி உருவானதாக நானும் கேள்விப்பட்டுள்ளேன்! நல்ல பதிவு!
தொடரட்டும்!
//என்னையெல்லாம் இதுபோல அழைக்க வேண்டிய அவசியமில்லை... நல்ல பதிவாக இருந்தால் நிச்சயம் வந்து படித்துவிடுவேன்...//
//பாரத்... பாரதி... said...
//என்னையெல்லாம் இதுபோல அழைக்க வேண்டிய அவசியமில்லை... நல்ல பதிவாக இருந்தால் நிச்சயம் வந்து படித்துவிடுவேன்...////
அதே அதே ......
கருத்தாழமிக்க எழுத்து..... தொடருங்கள் படிக்க காத்திருக்கிறேன்.
ராஜேஷ் இது போன்ற கட்டுரைகள் தான் இப்போது தேவை. ஏனென்றால் தேர்தல் வரப்போகிறது. மீண்டும் சாதிக்கட்சிகள் தங்களுடைய கூட்டதைக்காட்டி சீட்டு வாங்கப் போகின்றன.
தொடருங்கள் அருமையான பதிவுகள்
இவ்வளவு விஷயம் தெரிஞ்சி வெச்சி இருக்கீங்க
வாழ்த்துக்கள்
This serves as an eye opener... great job keep going ... awaiting for more ...
நல்ல விரிவான சமூகவியல் பார்வை ... தொடர்ந்து எழுதுங்கள் ...
நானும் நானில்லை நடைபோடும் பாதையிலே விடை தேடும் பட்சி
அழுகாச்சி?...
ஜாதியில்லா ஜகம் காண ஆசை தான்..!!
ஆரம்பிச்சுட்டீங்க.......!
///@Ananthi said...
ஜாதியில்லா ஜகம் காண ஆசை தான்..!!///
///@பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆரம்பிச்சுட்டீங்க.......!////
Thanks Ramasamy & Ananthi . . .
let it be a starting point
let us destroy the caste system . .
no more caste in this world . .
only human can live in this world , no more caste animals
thanks for coming. . .
நல்ல கட்டுரை நண்பரே! தொடர்ந்து எழுதுங்கள்.
ஊருக்குள்ள எல்லாரும் அம்மனமா சுத்தும் போது நாம மட்டும் கொமனந்தா கட்டின கோமாளி ஆயரோன்னு !
Post a Comment