Followers

Monday, September 26, 2011




Note :  இது ஒரு ஆய்வு பதிவு மட்டும் இல்ல , இது ஒரு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பதிவும் கூட அதனால நான் வார்த்தைகளை எந்த கட்டுப்பாடும்  இல்லாம எழுதி இருக்கேன். அதுக்காக பெண்கள் இதை படிக்காம போய்ட வேண்டாம் என்னென்றால் இது முக்கியமா பெண்கள்தான் அவசியம் படிக்கவேண்டும் .

           இந்த பதிவ படிக்குற உங்களுக்கு ஒரு சிம்பிள் கேள்வி , நீங்க ரோடுல நடந்து போய்கிட்டு இருக்கீங்க அப்போ உங்களை  ஒரு நாலு பேரு குறுகுறுன்னு கண்ணு கொட்டாம பார்கிறாங்கன்னு வச்சுக்குவோம் அப்போ உங்களால சரியா நடக்க முடியுமா? உடனே கால்கள் பின்ன ஆரம்பிச்சுடாது? சரியா நடக்க முடியாது இல்லையா . அதுலயும் நடக்குறது ஒரு வயசு பையனா இருந்து குறுகுறுன்னு பார்க்குறது நாலு பெண்களா இருந்தா சொல்லவே வேண்டாம் அது வரைக்கும் நல்ல நடந்துகிட்டு இருந்த அந்த பையன் அவங்க பாக்குராங்கன்னு தெரிஞ்சதும் ததக்கா புதக்கான்னு  நடக்க ஆரம்பிசுடுவான். இதே மாதிரி நிலைமைதான் ஒரு பெண் நடக்கும் போது நாலு ஆண்கள் பார்க்கும் போதும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.  இதெல்லாம் மனிதனின் இயல்பு , அடிப்படை உணர்ச்சிகள்.
          ஆனால் இந்த உணர்ச்சிகள் எல்லாம் நமக்கு நம்மையே அறியாமல் மக்கி போக ஆரம்பிச்சு இருக்குகிறது. எப்படின்னு கேட்டிங்கன நாம ரோட்ல நடக்கும் போது , கடைகளில் இருக்கும் போது, ஹாஸ்பிட்டல்களில் இருக்கும் போது, ரயில்வே ஸ்டேஷன் , ஏர்போர்ட் , பஸ் ஸ்டாண்ட், தியேட்டர் , ஷொப்பிங் மால், டிராபிக் சிக்னல் அப்படின்னு இன்னைக்கு கண்காணிப்பு கேமரா இல்லாத இடமே இல்ல .
என்னுடைய கல்லூர் நண்பன் இப்போ லண்டன்ல வேலைல இருக்கான் அவன் சொன்ன ஒரு புள்ளி விவரம் , அவன் ஒரு நாள் காலையில் ஆபீஸ்க்கு போயிட்டு இரவு வீடு திரும்புவதற்குள் அவனை இந்த கண்காணிப்பு கேமராக்கள் குறைந்தபச்சம் இருநூறு முறையாவது புகைப்படம் எடுகின்றனவாம். எதுக்குங்க லண்டன்க்கு எல்லாம் போய்கிட்டு? , இங்க நம்ப ஊருலயே இருக்கே, ஆயிரதெட்டு கண்காணிப்பு கேமராக்கள். தினம் தினம் நம்மை கண்காணித்துகொண்டே இருக்கின்றன . எதற்கு இதெல்லாம்? ஏன் இந்த கண்காணிப்பு ?
      இதற்க்கெல்லாம் பதில் , குற்றங்களை தடுப்பதற்காக , பாதுகாப்பு காரணங்களுக்காக , தீவிரவாத தாக்குதலை தடுப்பதற்காக. இந்த காரணங்கள் எல்லாம் 100% சரியாகவே இருந்தாலும் . என்னுடைய கேள்வி எல்லாம், எங்கே போயிற்று தனிமனித சுதந்திரம்? இன்றைய நிலைமையில் நம்மால் எந்த ஒரு கண்காணிப்பு இல்லாமல் தனிமனித சுதந்திரத்துடன் வெளியே போயிட்டு வர முடியுமா? சும்மா நாலு பேரு நாம நடக்கும் போது வெறிக்க பார்த்தாலே நமக்கு என்னவோ போல இருக்கு, ஆனா கண்காணிப்பு கேமரா என்கிற பெயரால் நம்மை கேமரா கண்கள் எப்போதும் கண்காணித்து கொண்டே இருப்பது எப்படி இருக்கும் ? எதற்காக எந்த குற்றமும் செய்யாத நம்மை கண்காணிக்க வேண்டும்? ஆகா மொத்தத்தில் தனிமனித சுதந்திரம் ( privacy )  பறிபோய்விட்டதாகவே  நான் உணர்கிறேன் . 
         சரி அதற்காக கண்காணிப்பு கேமராவை எல்லாம் நீக்கி விடலாம் , எங்கயும் வைக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை . ஆனால் கண்காணிப்பு கேமரா வைப்பது மட்டுமே குற்றங்கள் தடுத்து விடாது , குறைத்து விடாது . எடுத்துகாட்டாக திருடவோ , கொள்ளை அடிக்கவோ வருபவர்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வேலை செய்ய வேண்டி இருக்கும் அது என்ன என்றால் , அவர்கள் போகின்ற இடத்தில உள்ள கண்காணிப்பு காமெராவை முதலில் செயல் இழக்க செய்ய வேண்டி இருக்கும் அல்லது கேமரா கண்காணிப்பில் சிக்காமல் வேலையை செய்ய வேண்டி இருக்கும் . தீவிரவாதிகளுக்கு இந்த கண்காணிப்பு கேமரா பற்றிய கவலை எல்லாம் கிடையாது . மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் நடந்த போதே நான் நேரடியாக பார்த்தோம் . தீவிரவாதிகளுக்கு அவர்கள் உயிர் மேலயே கவலை இல்ல அப்புறம் எங்க கண்காணிப்பு காமெராவை பற்றி எல்லாம் கவலை பட போகிறார்கள் ? வந்த வேலையை செவ்வனே செய்தது முடிப்பார்கள் .
       சரி இப்போ கண்காணிப்பு கேமராவுக்கே இத்தனை கஷ்டமா இருக்கு என்றால் உங்களுக்கு மற்றும் ஒரு கேள்வி , பெண்கள் வெளி இடங்களுக்கு போகும் போது ஆண்கள் யாரவது தவறான கண்ணோட்டத்தில் பெண்களில் அங்கங்களை அதாவது , பெண்களின் மார்பையோ , பின்புரத்தையோ அல்லது இடுப்பையோ பார்த்தால் அந்த பெண்களின் உள்ளுணர்வு எப்படி இருக்கும்? எதன்னை தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் ?
            சும்மா வெறுமனே வெளி இடங்களில் இந்த மாதிரி பார்வைக்கே எத்தனை தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது , அதுவே அந்த பெண்களில் உடம்பை "நிர்வாணமாய்" யாராவது பார்த்தால் என்னவாகும் ? அதை புகைபடமாகவோ அல்லது வீடியோவாகவோ பதிவு செய்தால் எப்படி இருக்கும் ? அதற்கும் ஒரு படி மேல போய் பதிவு செய்த புகைப்படம் , வீடியோகளை இணையதளத்தில் வெளியிட்டால் என்னவாகும் ?
              இது எல்லாமே நடக்கிறது இன்றைய கலியுகத்தில் . இது எல்லாம் விஞ்ஜான கண்டுபுடிப்புகளின் பக்கவிளைவுகள். இது மட்டும் அல்ல , இன்னும் இளம் தம்பதிகளின் உடலுறவு காட்சிகள் , அந்தரங்கங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகின்றன . எப்படி இதெல்லம் நடக்கிறது? என்ன காரணங்கள் ? நம்மை அறியாமல் எப்படி நம்புடைய அந்தரங்கங்கள் படம் பிடிக்க படிகின்றன ? கூடுமானவரை அதில் இருந்து எப்படி எல்லாம் தப்பிக்கலாம் ? 

எல்லா அதிர்ச்சியான,  நம்ப முடியாத, தகவல்களும்  விவரங்களும் அடுத்த பதிவில் . .



டிஸ்கி : 

இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.
 
அதிர்ச்சிகளுடன், 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com



11 comments:

♔ℜockzs ℜajesℌ♔™ said...

today's hot news :
http://ta.indli.com/
பராமரிப்பு காரணங்களுக்காக இன்ட்லி தளம் தற்காலிகமாக முடக்கப்பட்டு உள்ளது.

குறையொன்றுமில்லை. said...

ராஜா மிகவும் நல்ல பதிவு. கண்டிப்பா எல்லாரும் படிச்சு தெரிஞ்சுக்கனும். விழிப்புணர்வுபதிவுதான். சீக்கிரமே பதிவு போட்டுட்டே. குட் இப்படி அடிக்கடி எழ்து.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Lakshmi said...

ராஜா மிகவும் நல்ல பதிவு. கண்டிப்பா எல்லாரும் படிச்சு தெரிஞ்சுக்கனும். விழிப்புணர்வுபதிவுதான். சீக்கிரமே பதிவு போட்டுட்டே. குட் இப்படி அடிக்கடி எழ்து.////

நன்றி அம்மா , கண்டிப்பா தொடர்ந்து எழுதுறேன் . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல தலைப்புத்தான். மொபைல் போன் கேமராக்கள் வந்ததும் தான் இது ரொம்ப அதிகமாகிடுச்சுன்னு நினைக்கிறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தக்காலத்துல வீட்ட விட்டு வெளிய வந்துட்டாலே எல்லாரும் அதிகபட்ச எச்சரிக்கையோடதான் இருக்கனும்.... வேற என்ன சொல்றது.....!

RAMA RAVI (RAMVI) said...

ஆரம்பமே பயமா இருக்கு. இன்னும் என்னென்ன வர போகிறதோ?

Yaathoramani.blogspot.com said...

நல்ல விழிப்புணர்வைத் தந்து போகும் பதிவு
பதிவிட்டமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

கோகுல் said...

நல்ல விழிப்புணர்வை உண்டாக்கும் பதிவு. உங்கள் கேள்விகளும் நியாமானதே.
தூங்கா நகரம் என்ற படத்தில் நீங்கள் சொன்ன அவலங்களை தோலுரித்து காட்டி இருந்தார்கள்!

நிச்சயம் பதிவை மற்றவர்களுக்கு கொண்டு செல்கிறோம்!

Unknown said...

மாப்ள விழிப்புணர்வு பதிவு போட்டதுக்கு நன்றிங்கோ....நெருடல் இருந்து கொண்டே இருக்கும் என்னத்த பண்றது!

Hariharan Valady said...

Very relevant. Recently I read a story in Indian Express that secret cameras had been installed in the ladies toilet in an IB office and a Lt colonel watching the same.

குடிமகன் said...

விழித்திடுங்கள்! மஹா ஜனங்களே விழித்திடுங்கள்!!

பதிவுக்கு நன்றி நண்பா!!

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters