Followers

Thursday, September 29, 2011


         போன பதிவு "ரகசிய கேமராக்களும், மனித சுதந்திரமும்". . .(Part - 2) . -இல் நான் சொன்னது எல்லாம் கண்காணிப்பு கேமராகளை பற்றிதான் , ரகசிய கேமராகளுக்கான ஒரு முன்னுரையை மட்டும்தான் நான் குடுத்து இருந்தேன் . கண்காணிப்பு கேமராகளுக்கும் , ரகசிய கேமராகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு . கண்காணிப்பு கேமராக்கள் என்பது பாதுகாப்பு காரணங்களுக்காக அப்பட்டமாய் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி அதிகார பூர்வமாக பொது இடங்களில் வைக்கப்படுவது, அதற்க்கு பெயர் Security Camera  அல்லது  CCTV Camera (Closed Circuit Television Camera ). அதுவே தனிமனித சுதந்திரம் பறி போவதாக வருத்தப்பட்டு இருந்தேன் . ஆனால் ரகசிய கேமராக்கள் என்பது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஒளித்துதோ அல்லது மறைத்தோ வைக்கபடக்கூடிய சிறிய வகை கேமராக்கள் . இதன் நோக்கம் உளவு பார்ப்பதற்காகவோ அல்லது வேறு சில வக்கிர உள்நோக்கங்களுக்காகவோ வைக்கப்படுபவை.
இந்த ரகசிய கேமராகளுக்கு நிறைய பெயர்கள் உண்டு Spy Cam , Candid Cam , Hidden Cam , Secret Cam என்று பல பெயர்கள்.  சரி அப்படி இந்த கேமராக்களை வச்சுக்கிட்டு அப்படி என்னதான் பண்ணுறாங்க ? கேட்டிங்கனா ரொம்பவே அதிர்ச்சி ஆகிடுவிங்க .
         நான் கட்டுமான பொறியாளராக இருப்பதால் சமீபத்தில் ஒரு மிக பெரிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தேன் , அந்த கட்டிடம் ஒரு மிக முக்கியம் வாய்ந்த கட்டிடம் ஆகையாதால் அந்த கட்டிடத்துக்கு சில பல ரகசிய கேமராக்கள் பாதுகாப்பு காரணாங்களுக்காக  பொறுத்த வேண்டி இருந்தது அந்த கட்டிடத்தின் உரிமையாளர் குழுமம் கேட்டு கொண்டதுக்கு இணங்க . அப்போது அதற்க்கு தேவையான ரகசிய கேமராக்கள் வாங்க வேண்டிய பொறுப்பு நான் பணியாற்றும் கம்பெனிக்கு வந்தது. அப்போது கேமராக்கள் வாங்க வேண்டி அதற்கான தகவல்கள் திரட்டப்பட்டு சில கம்பெனிக்கள் விவரம் கிடைக்க, அந்த கேமரா கம்பெனிகளிடம் மேலும் தகவல்கள் , மாடல்  மற்றும் விலை விவரங்கள் கோரப்பட்டன . அதில் சில கம்பெனிகள் குடுத்த கேமரா மாடல் விவரங்கள் அடங்கிய புத்தகத்தை (Catalog)  பார்த்த போது நான் சற்று இல்ல நிறையவே அதிர்த்துதான் போனேன் . சொன்ன நம்ப மாட்டிங்க இதை பற்றிய விவரம் எவ்வளவு பேருக்கு இன்னும் தெரியும் என்று தெரியவில்லை , அந்த ரகசிய கேமராக்களின்  மாடல்கள் உண்மைலயே பேரதிர்ச்சியை உண்டாக்கின . கதவு கை புடி  , கடிகாரம்  , சுவிட்ச் , சுவிட்ச் போர்டு , பல வகை லைட்  வடிவத்தில் , அலங்கார விளக்குகள் , பொம்மைகள் , குளியல் அறையில் லைட் , ஷவர் , வாட்டர் ஹீட்டர்  என எல்லா வடிவங்களிலும் கேமரா மாடல்கள் இன்றைய உலக சந்தையில் சர்வ சாதாரணாம கிடைக்கிறது. ரொம்ப சிம்பிள் அதை வாங்கி அப்படியே பொறுத்த வேண்டியதுதான் அதில் உள்ள உபகரணமும் வேலை செய்யும் , கேமராவ்வும் வேலை செய்யும். யாராலையும் கண்டேபிடிக்க முடியாது . ஏன் பேனா வடிவில் கூட சிறிய கேமராக்கள் வந்து விட்டன,  “மங்காத்த” படத்தில் அஜித் பேனா வடிவ கேமராவை உபயோகித்து இருப்பார். 

உங்களுக்காக  சில ரகசிய கேமராக்களின் படங்கள் கீழே : 

        இந்த கேமராக்கள் எங்கு எல்லாம் எப்படி எப்படி எல்லாம் சமூக விரோத தனமாக , வக்கிர எண்ணங்களுடன் உபயோக படுத்தப்படுகிறது? எல்லாம் பெரும்பாலும் ஹோட்டல் ரூம்களில் , ஹோட்டல் பாத் ரூம்களில் , துணி கடைகளில் பெண்கள்  உடை மாற்றும் அறைகளில்தான். பெரும்பாலும் எல்ல ஹோட்டல்கள் , குறிப்பாக நட்சத்திர ஹோட்டல்களிலும் இந்த வேலை நடக்கிறது. இதை எல்லாம் யார் செய்கிறார்கள் என்பது வேறு கதை , யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் , அதை பின்னர் விவாதிப்போம் . 
        இப்போது எல்லாம் நான் வெளியூர்களுக்கு போனால் தாங்கும் ஹோட்டல்களில் நட்சத்திர ஹோட்டல்களே ஆனாலும் , குளிக்கும் போது கோவணம் கட்டி கொண்டுதான் குளிக்கிறேன் , ஏனென்றால் இது போல ஏதாவது ரகசிய கேமராக்கள் பொறுத்தப்பட்டு இருக்குமோ என்கிற பயம் தான். இல்லை என்றால் அப்புறம் என்னுடைய பிறந்த மேனியை நானே இணையதளத்தில் பார்க்க நேரிடலாம் . என்னதான் பெண்களை குறி வைத்து கேமராக்கள் பொறுத்த பட்டு இருந்தாலும் , குளிக்கிறது ஆணா ? பெண்ணா ? என்று கேமராவுக்கு எங்கு தெரிய போகிறது அப்படி என்னையும் குளியல் காட்சியில் படம் பிடித்துவிட்டால் ? அதனால் தான் இந்த கோவண குளியல் .
      இன்றைய இணையதளத்தில் இந்த ரகசிய கேமராக்களை பயன்படுத்தி ஏகப்பட்ட அந்தரங்க , உடலுறுவு  மற்றும் நிர்வாண கட்சிகள் படமாக்கப்படுகின்றன பல வக்கிர கும்பல்களினால் . அதை இணையதளத்தில் வெளியிட்டு பணம் பார்க்கின்றனர். பாவம் ஹோட்டலில் தங்குபவர்களுக்கு இதை பற்றி எந்த விவரமும் தெரியாது . கேமரா பொறுத்தப்பட்டதோ , அவர்களின் அந்தரங்கங்கள் படம் பிடிக்கப்பட்டதோ எதுவும் தெரியாது. 
பெரும்பாலும்  இந்த வக்கிர கும்பல்களின் குறி அழகிய பெண்கள் மற்றும் இளம் தம்பதிகள் . அதிலும் தேனிலவுக்கு போகும் புது மண தம்பதிகள் என்றால் இந்த வக்கிர கும்பகளுக்கு ஏக கொண்டாட்டம். பெரும்பாலும் தேனிலவுக்கு போகும் இடங்களான சுற்றுலா தளங்களின் உள்ள ஹோட்டல்களில் இந்த அபாயம் அதிகம் உள்ளது. ஜாக்கிரதை .

    
      த்ரிஷா போன்று பிரபலங்களின் நிர்வாண குளியல் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சை ஆனது எல்லாரும் அறிந்ததே , ஆனால் பிரபலங்கள் மட்டும் அல்லாது சாமானிய குடும்ப பெண்களின் , தம்பதிகளின் நிர்வாண , அந்தரங்க உடலுறவு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கொட்டிகிடகின்றன இன்றைய இணையதளத்தில் .எப்படி இதெல்லாம் சாத்தியம் ஆகிறது? எல்லாம் இந்த ரகசிய கேமராக்களின் உதவியால்தான். ஹோட்டல்களில் தாங்கும் போது கண்டே புடிக்க முடியாத சிறிய வகை ரகசிய கேமராகளை பற்றி இது வரை யாராவது யோசித்து பார்த்து இருக்கிர்களா? கவலைப்பட்டு  இருக்கீர்களா? 

இனி கண்டிப்பாக கவலைப்படணும் , கவனமாய் இருக்கணும். 


இனி ஹோட்டலில் தாங்கும் போது கவனிக்க வேண்டிய , செய்ய வேண்டிய விஷியங்கள் :
1) தம்பதிகள் உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள் . 
2) அப்படியே உடலுறவு கொள்ளும் அவசியம் இருந்தால் முடிந்தவரை ஹோட்டல் அறையை இருட்டாக்கிகொண்டு விளக்குகளை அணைத்து விட்டு , போர்வைக்குள் நடக்கட்டும் . கேமரா கண்களில் இருந்து தப்பிக்க வேற வழி இல்லை .
3) பெண்கள் முடிந்தவரை உடையை கலையாமல் இருக்கவும் அறையுனுள் இருக்கும் போது. உடை மாற்றும் போது கூட கணவர் மட்டும்தானே இருக்கார் என்று கவனக்குறைவாக இருக்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் சுவர்களுக்கு கூட (கேமரா)கண்கள் இருக்கலாம் .
4) அதே போல் பெண்கள் குளிக்கும் போது முடிந்தால் உடம்பை மறைக்க ஏதாவது துணி கட்டிக்கொண்டு குளிக்கவும்.

      இதையெல்லாம் செய்ய சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும் ஆனால்  ரகசிய கேமரா கண்களுக்கு இரை ஆகி ,
வக்கிர மனம் கொண்டவர்களின் கண்களுக்கு விருந்தாகாமல் நம்மை பாதுகாத்து கொள்ள வேற வழி இல்லை .

       சரி இது எல்லாம் நமக்கு தெரியாமல் ரகசிய கேமராகளால் நமக்கு வரும் பிரச்சனைகள் . ஆனால் சிலர் ஆர்வ கோளாறினாலும் , சில தம்பதிகள் அவர்கள் அந்தரங்களை அவர்கள் உபயோகத்திற்காக சொந்த கேமராவிலோ அல்லது மொபைல் கேமராவிலோ எடுக்கும் நிர்வாண புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் எப்படி வெளியுலகிற்கு , இணையதளத்திற்கு வருகிறது? அதை எப்படி எல்லாம் தடுக்கலாம் ? 

உங்கள் லேப்டாப் அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வெப்காம்களை மற்றவர்கள் உங்கள் அனுமதி இன்றி உங்களை எப்படி பார்க்க முடியும் ? அதை எப்படி தடுப்பது ? 

எல்லாம் அடுத்த பதிவில் . . .

டிஸ்கி : 
இந்த  பதிவு கண்டிப்பாக அனைவரும் படித்து தெரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டி எழுதியது அதனால் இதை படிபவர்கள் தயவு செய்து தங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும்  கொண்டு செல்லுங்கள் , முக்கியமாக பெண்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் . நன்றி.
 
அதிர்ச்சிகளுடன், 


ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com
21 comments:

♔ℜockzs ℜajesℌ♔™ said...

யாருமே கமெண்ட்ஸ் போட மாட்டிங்கிரான்களே . . .
என்னவா இருக்கும்? ஒரு வேலை வெக்க படுராங்கலோ? . . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப அதிர்ச்சியாத்தான் இருக்கு, இனி எந்த ஹோட்டல்லயும் குடும்பத்தோட தங்க முடியாது போல இருக்கே?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரொம்ப அதிர்ச்சியாத்தான் இருக்கு, இனி எந்த ஹோட்டல்லயும் குடும்பத்தோட தங்க முடியாது போல இருக்கே?///

அப்பாடி பன்னிகுட்டி நீயாவது வந்தியே . . என்னுடைய பதிவுகளுக்கு தவறாம கமெண்ட் மற்றும் வோட்டு போடுறது நீ ஒரு ஆள்தான்பா
ரொம்ப நன்றி பன்னிகுட்டி . .

Ramani said...

அதிர்சியளிக்கும் தகவலாக இருந்தாலும் அவசியம்
அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு
பயனுள்ள பதிவு பதிவிட்டமைக்கு மனமார்ந்த
நன்றி த.ம 3

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Ramani said...

அதிர்சியளிக்கும் தகவலாக இருந்தாலும் அவசியம்
அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு
பயனுள்ள பதிவு பதிவிட்டமைக்கு மனமார்ந்த
நன்றி த.ம 3 ////

அவசியம் அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷியம் .
வருகைக்கு நன்றி சார் . .

கோகுல் said...

அதிர்ச்சியான தகவல்கள்!
நாம தான் எச்சரிக்கையா இருக்கணும்.
தொடருங்கள் நண்பரே!
என்னால் முடிந்தவரை
நான் எனது facebook&twitter-ல் பகிர்ந்து கொள்கிறேன்.

யாழினி said...

அயோயோ இப்படி எல்லாம் நடக்குதா ? பெண்கள் ரொம்ப உஷாரா இருக்கணும் போல ~!

பகிர்விற்கு மிக்க நன்றி !

Philosophy Prabhakaran said...

தேனிலவு போகும் தம்பதிகளின் நிலை தான் மோசம்... போறதே அதுக்குத்தான்... யோவ் ஒரு மனுஷனை அது கூட நிம்மதியா பண்ண விடலைன்னா என்னய்யா அர்த்தம்... அது எவ்வளவு முக்கியம் தெரியுமா...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@கோகுல் said...

அதிர்ச்சியான தகவல்கள்!
நாம தான் எச்சரிக்கையா இருக்கணும்.
தொடருங்கள் நண்பரே!
என்னால் முடிந்தவரை
நான் எனது facebook&twitter-ல் பகிர்ந்து கொள்கிறேன்.///

மிக்க நன்றி கோகுல் . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@யாழினி said...

அயோயோ இப்படி எல்லாம் நடக்குதா ? பெண்கள் ரொம்ப உஷாரா இருக்கணும் போல ~!

பகிர்விற்கு மிக்க நன்றி !///
கண்டிப்பாக உஷார இருக்கணும் யாழினி . இந்த தகவல்களை கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரிய படுத்துங்கள் . அனைவருக்கும் வரட்டும் விழிப்புணர்வு

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@Philosophy Prabhakaran said...

தேனிலவு போகும் தம்பதிகளின் நிலை தான் மோசம்... போறதே அதுக்குத்தான்... யோவ் ஒரு மனுஷனை அது கூட நிம்மதியா பண்ண விடலைன்னா என்னய்யா அர்த்தம்... அது எவ்வளவு முக்கியம் தெரியுமா... ////
தேனிலவு தம்பதிகள் நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான் . முடிந்தவரை எல்லாவற்றையும் போர்வைக்குள் வைத்து கொள்ள வேடியதுதான் இல்லையென்றால் அவர்களின் முழு நீள வீடியோ இணையதளத்தில் ரிலீஸ் ஆகிவிடும் .
வருகைக்கு நன்றி பிரபா . .

RAMVI said...

அதிர்ச்சியாக இருக்கு ராஜேஷ்.இனி சினிமாதேட்டர், மால்கள் போன்ற போது இடங்களுக்கு போகும்போதுகூட கழிப்பிடங்களை உபயோகிப்பதை தவிக்க வேண்டும்.
நல்ல விழிப்புணர்வு பதிவு. தொடர்ந்து எல்லோரும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என எடுத்துக்கூறுங்கள்.

TERROR-PANDIYAN(VAS) said...

ராக்கு மச்சி நல்ல மேட்டர் எல்லாம் நீ கூட எழுதுவியா? :))

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@RAMVI said...

அதிர்ச்சியாக இருக்கு ராஜேஷ்.இனி சினிமாதேட்டர், மால்கள் போன்ற போது இடங்களுக்கு போகும்போதுகூட கழிப்பிடங்களை உபயோகிப்பதை தவிக்க வேண்டும்.
நல்ல விழிப்புணர்வு பதிவு. தொடர்ந்து எல்லோரும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என எடுத்துக்கூறுங்கள்.///

கண்டிப்பாக ராம்வி மேடம் . எங்கனாலும் எச்சர்க்கையாக இருப்பது நமக்கு நல்லது . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@TERROR-PANDIYAN(VAS) said...

ராக்கு மச்சி நல்ல மேட்டர் எல்லாம் நீ கூட எழுதுவியா? :)) ///

ஏதோ எனக்கு தெரிஞ்சது நாலு பேருக்கு சொல்லுறேன் மச்சி . . .
அப்புறம் என்ன ரொம்ப நாளா ஆளையே காணாம்? ரொம்ப பிஸியோ ?

Lakshmi said...

ராஜா சுறு சுறுப்பாகவும் , உபயோகமாகவும் பதிவு போட்டிருக்கே.
நிறையபேருக்கு உபயோகமா இருக்கும்.
இதுபோலவே சீக்கிரமா அடிக்கடி பதிவுகளைப்போட்டுண்டு இரு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முதல் முறையாய் ♔ℜockzs ℜajesℌ♔™ பதிவில் ஒரு உருப்படியான பதிவு . .

Mohamed Faaique said...

நல்லதொரு பதிவு நன்பா...
(அந்த வகை கேமரா`க்களுக்கு நீங்கள் பண்ணின மாதிரியும் ஆகிடுச்சு..- உங்கள் நோக்கம் நல்லது. பார்ப்பவர் எல்லோரும் அப்படி இருப்பதில்லை)

Anonymous said...

good post..I appreciate your social responsibility and please share if any device available in the market which can find these types of camera fixed in a place..

- SP

samhitha said...

OMG இந்த மாதிரி கேமரா இது வரை நான் பார்த்ததே இல்ல இனிமே எங்க போனாலும் இன்ச் பை இன்ச் செக் பண்ணனும் போல :(

இப்டி எல்லாம் கேமரா செட் பண்றவன் கண்ணுலேயே பேனாவால குத்தனும்னு தோணுது

கோகுல் said...

இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி மகிழ்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2012/01/blog-post_29.html

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters