காலைல குளிக்கும் போது , அதுவும் அவசரமா ஆபீஸ்க்கு கிளம்புறதுகாக குளிக்கும் போது இருக்கிற மிக பெரிய பிரச்சனைகள்ள ஒன்று , சோப்பு கை நழுவிபோய்டுறது , அதுவும் அவசர அவசரமா சோப்பு போடும் போதுதான் இந்த சோப்பு நம்ப கிட்ட சடு குடு விளையாடும் . எவ்வளவுதான் இறுக்கி புடிச்சு , கவனமா குளிச்சாலும் , நாம ஏரியா ஏரியாவா உடம்புல சோப்பு போடும் போது சோப்பு , நாம பிக் அப் பண்ண நினைக்குற பிகர் நழுவி போற மாதிரி லபக்குன்னு நழுறது சகஜம் தான் . இருந்தாலும் மனம் தளராம , நாம்பளும் உடனே சோப்பு தரைல விழாம புடிக்க, இந்தியன் கிரிக்கெட் டீம் பில்டர் கணக்கா குட்டிகரணம் அடிச்சு லாவகம புடிக்க பார்த்தாலும் , சோப்பு எப்படியும் பெண்டரி தொட்டு சோப்பு முனை மழுங்காம விடாது . அதுக்கு அப்புறம் அரை மனசோட அந்த சோப்புபை ஒரு பேருக்கு தண்ணில காட்டிட்டு வழக்கம் போல சோப்பு போடா ஆரம்பிபோம் . இருந்தாலும் மனசு கஷ்டமா இருக்கும் கீழ விழுந்த சோப்பை போடுரமேன்னு ( சுத்தத்தை பத்தி கவலை பாடுரவனுக்கு கண்டிப்பா கஷ்டமா இருக்கு. இருக்குமில்ல? .... என்னது இல்லையா? சரி விடுங்க அப்போ நீங்க ... ரைட்டு ரைட்டு அது எதுக்கு இப்போ )
ஆனா பாருங்க , நாம உடம்புக்கு சோப்பு போடும் போது நழுவுனா கூட பரவா இல்ல , இந்த அழகான முகத்தை மேலும் அழகு படுத்த கண்ணை மூடிகிட்டு சோப்பு போடும்போது கை நழுவி போகும் பாருங்க , அப்போ வரும் கோவம் , அப்படியே பாத் ரூம் சுவர அடிச்சு உடைசுடலாமன்னு தோணும் , ஆனா பாருங்க அதுல ஒரு சிக்கல் இருக்கு , அப்படி அடிச்சா , உடையுறது பாத் ரூம் சுவரா இருக்காது , நம்ப கையாதான் இருக்கும் . அதனால மனச தேத்திக்கிட்டு சோப்பு தேட ஆரம்பிப்போம் .
முதல் முயற்சியா கண்ணா மூடிகிட்டே அப்படியே கீழ குனிஞ்சு தரைய தடவ ஆரம்பிப்போம் ஆனா கண்டிப்பா சோப்பு கிடைக்காது , அது எப்படி கிடைக்கும்?
பகல்லயே நமக்கு பசு மாடு தெரியாது , இதுல இருட்டுல எங்க எருமை மாடு தெரிய போகுது ? . கண்ண திறந்துகிட்டு வண்டி ஓட்டுனாலே கீழ வாரி விழுறவாங்க நாம . இதுல எங்க கண்ணா மூடிகிட்டு சோப்பை கண்டு புடிக்குறது? தரைக்கு சாணி போட்டு மொளுக்குற மாதிரி , தடவுனதுதான் மிச்சம்.
இப்போ ரெண்டாவது முயற்சியாக ,லைட்டா கண்ண திறந்தா , திறந்தவுடனே எப்படிதான் தெரியல , சோப்பு நுரை கண்ணுக்குள்ள கபால்ன்னு போய் அங்க கண்ணீர், டேம் கட்டி நிக்கும் . அப்புறம் ஓர கண்ணால கண்ணு எரிச்சலோடையே சோப்பு தேடி மீதி ஏரியாவை போட்டு முடிப்போம் . அட அட அட என்னையா இது? குளிக்குறது சர்கஸ் பண்ணுறதை விட கஷ்டமா இருக்கு . இருந்தாலும் இந்த கூத்து எல்லாம் பாத் ரூம் குள்ள நடக்குரதுனால நாம தப்பிச்சோம் . ஆனா இதையெல்லாம் மத்தவங்க கண்ணு கொண்டு பார்த்தாங்க அவ்வுளவுதான் நாம பண்ணுற காமெடில மானம் மானாவாரிய போகும் .
ஆனா இந்த உலக மகா சோப்பு நழுவுற பிரச்சனைய நம்ப பிரபல பதிவர்கள் எப்படி சமாளிகிறாங்க? இல்ல அவங்களும் சோப்பு நழுவ விடுறான்களான்னு BBC (Tamil) REPORTER ஸ்பெஷல் இன்டர்வியூ எடுத்து இருக்காரு , அவங்க என சொல்லுரங்கன்னு பாக்கலாம் .
BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி சமாளிக்குரிங்க?
சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : நான் குளிகுறேன்னு யாரு சொன்ன உங்க கிட்ட? எனக்கு ஊர் ஊரா சுத்துறதுக்கும் , அத நான் சேலம் போன்னேன் , சிங்கப்பூர் போன்னேன் , கொடைகானல் போன்னேன்னு போட்டோ புடிச்சு ப்ளாக்குக்கிர
பேர்ல போடுரதுக்குமே டைம் இல்ல இதுல எங்க குளிக்குறது?
BBC REPORTER : அப்போ சார் எந்த ஊருக்கு போனாலும் குளிக்குறது இல்ல?
சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : யோவ் அறிவு இருக்கா உனக்கு? நான் அங்க போன்னேன் , இங்க போன்னேன் , ஹோட்டல்க்கு சாப்பிட போன்னேன் அப்படின்னு போட்டோ புடிச்சு போடுறேன்ன இல்லையா என்னோட ப்ளாக்ல?
BBC REPORTER : ஆமா சார் அத தான் பார்த்துட்டு ஊரு சிரிப்பா சிரிக்குதே . . .
சிரிப்பு போலீஸ் (ரமேஷ்) : அப்போ நான் குளிச்சு இருந்த அதையும் போட்டோ புடிச்சு போட்டு இருக்க மாட்டேன்? , இதெல்லாம் நீ யோசிக்க மாட்ட? வந்துட்டான் தூக்கிகிட்டு , மைக்க, கேள்வி கேக்குறதுக்கு , போயா போ நான் உன்னையும் கூட்டிட்டு போய் ஹோட்டல்ல சாப்பாடு வாங்கி குடுக்க சொல்லுறதுக்கு முன்னாடி போய்டு , இல்ல அப்புறம் நீதான் பில் குடுக்க வேண்டி வரும் .சொல்லிட்டேன் ஆமா .
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி சமாளிக்குரிங்க?
பட்டா பட்டி : நான் பட்டா பட்டி ட்ரவுசர் போடா ஆரம்பிச்ச காலத்துல இருந்தே குளிக்குறது இல்ல சார் அப்புறம் எங்க சோப்பு எல்லாம் போட்டுக்கிட்டு ஹி ஹி ஹி
BBC REPORTER : சார் நீங்க எப்போ இருந்து பட்டா பட்டி ட்ரவுசர் போட ஆரம்பிசுங்க?
பட்டா பட்டி : நான பிறந்ததுல இருந்தே பட்டா பட்டி ட்ரவுசர் தான் போடுறேன்
BBC REPORTER : அட பாவி அப்போ நீ பொறந்ததுல இருந்தே குளிக்குறது இல்லன்கிரததான் அப்படி சொன்னியா ?
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி சமாளிக்குரிங்க?
மங்குனி அமைச்சர் : யோவ் எனக்கு ஆடு வெட்டதான் தெரியும் , இந்த சோப்பு போடுறத பத்தி எல்லாம் தெரியாது .நான் எனக்கும் சோப்பு போட்டதும் கிடையாது , வேற யாருக்கும் சோப்பு போட்டதும் கிடையாது .
BBC REPORTER : அப்போ சோப்பு போடாமதான் குளிக்குகிறின்களா நீங்க ?
மங்குனி அமைச்சர் : யோவ் நான் குளிக்குறேன்னு சொன்னேன உன்கிட்ட? எப்பவாவது மழை பெய்யும் போது நனையுறதொட சரி . குளிச்ச எனக்கு ஜல்ப்பு புடிசுக்கும் .
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி சமாளிக்குரிங்க?
கோகுலத்தில் சூரியன் வெங்கட் : சாரி சார் , இந்த கேள்வி MODERATION க்கு போயிட்டு வந்தாதான் என்னால பத்தி சொல்ல முடியும் .
BBC REPORTER : சார் இதுக்கெல்லாமா MODERATION ? என்ன கொடுமை இது ?
வெங்கட் : சார் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எல்லாமே MODERATION ல தான் போகுது சார்
BBC REPORTER : எல்லாமேனா?
வெங்கட் : எல்லாமேனா எல்லாமேதான் அதுக்கு மேல சொல்ல முடியாது ( அப்புறம் யாரு வீட்டுக்கு போய் அடிவாங்குறது அவ்வ்வ்வ்வ்வ்வ் )
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி சமாளிக்குரிங்க?
சி.பி.செந்தில்குமார் : ஹி ஹி ஹி , சார் குளிக்குறது புடிக்கும் ஆனா குளிக்குறது நானா இருக்க கூடாது
BBC REPORTER : அப்படினா ? என்ன சார் சொல்லவரிங்க?
சி.பி.செந்தில்குமார் : ஹி ஹி ஹி எனக்கு தியேட்டர்ல நடிகைகள் சினிமால குளிக்கிறதை கலை கண்ணோட பார்க்குறதுக்குதான் புடிக்கும் , மத்தபடி எனக்கு குளிக்கிறதுன்னா அலர்ஜி சார் ஹி ஹி ஹி . . .
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி சமாளிக்குரிங்க?
விக்கிஉலகம் (விக்கி) : சார் இங்க வியட்நாம்ல யாரும் குளிக்கிறது இல்ல தெரியமா உங்களுக்கு? குளிக்கிறது எல்லாம் வேஸ்ட் ஆப் டைம் சார்
BBC REPORTER : குளிக்கிறது வேஸ்ட் ஆப் டைம் னா வேற என்ன பண்ணுவிங்கா?
விக்கிஉலகம் (விக்கி) : குளிச்சு டைம் வேஸ்ட் பண்ணுறத விட , அந்த நேரத்துல நாலு ப்ளாக் போஸ்ட் பண்ணலாம் இல்ல? நானெல்லாம் ஒரு லட்சிய பாதைல போய்கிட்டு இருக்கேன் தெரியுமா உங்களுக்கு?
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
BBC REPORTER : சார் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி சமாளிக்குரிங்க?
பன்னிகுட்டி : அடங்கொன்னியா குளிக்குறதுக்கு சோப்பு எல்லாம் போடணுமா?
BBC REPORTER : ஆமா சார் , அப்போ இது தெரியாத உங்களுக்கு? அப்போ குளிக்குரதுக்கு நீங்க என்னத்த use பண்ணுரிங்கா?
பன்னிகுட்டி : i use only செங்கல் . அப்புறம் குளம் குட்டைய பக்குறபோ அப்படியே ஜாலியா குப்புற படுக்குரதொட சரி
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
BBC REPORTER : மேடம் இந்த குளிக்குற போது சோப்பு நழுவுறதை எப்படி சமாளிக்குரிங்க?
இந்திரா : ( போச்சுட ஏற்கனவே நாம சொந்தமா வாங்குற பல்பு பத்தாதுன்னு இப்போ BBC ல இருந்து வேற வந்துட்டாங்களா ? ) சார் உங்களுக்கு ஒன்னு தெரியுமா? குளிக்குரதுல பல விதம இருக்கு , அதுல நான் குளிக்குற விதத்துல சோப்பு நழுவுரதுக்கு வாய்ப்பே இல்ல .
BBC REPORTER : என்னது குளிக்குரதுல பல விதம் இருக்கா ? அது என்ன என்ன விதம் மேடம் ?
இந்திரா : அப்படி கேளுங்க சொல்லுறேன் , அருவி குளியல் , காக்கா குளியல் , முலிகை குளியல் , சூரிய குளியல் , பம்பு செட் குளியல் , ஆடம்பர குளியல் , அவசர குளியல் , MODERN குளியல் இப்படி நிறைய இருக்கு . .
BBC REPORTER : ஓ இதுல இவ்வளவு இருக்க ? அப்போ நீங்க எந்த விதமான குளியல் மேடம் பின்பற்றுறிங்கா ?
இந்திரா : என்னோட சாய்ஸ் எப்பவுமே MODERN குளியல்தான் .
BBC REPORTER : கேக்குறேனேன்னு தப்ப நினைச்சுகாதிங்க மேடம் , அது என்ன MODERN குளியல் ?
இந்திரா : அட என்ன சார் BBC ல இருந்து வந்து இருக்கேன்னு சொல்லுரிங்க MODERN குளியல் தெரியாதுன்னு சொல்லுரிங்க ?
அது ஒன்னும் இல்ல சார் ரொம்ப சிம்பிள் , ஆபீஸ்கோ , இல்ல வெளியவோ கிளம்புறதுக்கு முன்னாடி , left ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ் , right ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ்ஸ் அவ்வுளவுதான் .
BBC REPORTER : புஷ்ஷ்ஷ்சா ? அப்படினா ?
இந்திரா : என்ன சார் நீங்க சுத்த வெவரம் கிட்ட ஆள இருக்கீங்க , அப்படின வெளிய கிளம்புறதுக்கு முன்னாடி , perfume bottle , இல்ல சென்ட் பாட்டில் எடுத்து
left ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ்ஸ் ,
right ல ஒரு புஷ்ஷ்ஷ்ஷ் . . . . அவ்வுளவுதான் குளியல் முடிஞ்சது . . .
BBC REPORTER : இதுதான் உங்க புஷ்ஷ்ஷ்சா ? சரியா போச்சு . . .
ஆள விடுங்காடா டேய் . . . .
-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*
ஆகா சோப்பு நழுவாம இருக்க ஒரே தீர்வு : குளிக்காம இருக்குரதுதானா ?
இது தெரியாம இந்த ராக்ஸ் பலவருசமா, பல சோப்பு தவற விட்டுடானே . . . அட ச்சா
என்னடா குளிக்குறத பத்தி பதிவு போட்டுட்டு குளிக்குற மாதிரி படம் ஏதும் போடலைஎன்னு வருதப்படுறவங்களுகாக கீழே பார்க்கவும் . . .
 |
ஆனந்த குளியல் . . . . |
|
Always ,
ராக்ஸ் ..........
For fun chat, blog, forum, videos, games, live FM kindly visit our website: www.tamilrockzs.com