Followers

Monday, January 31, 2011

தாயகம் (இந்தியா ) திருப்பினேன் .......

     என் அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு  வாழ்த்துக்கள். பலத்த போராட்டத்துக்கு அப்புறம் அப்படி இப்படின்னு இந்த 2010 டிசம்பர் மாசம் எனக்கு லீவ் கிடைச்சதுனால நான் தயாகம் திருபின்னேன் . இரண்டு வருடங்களுக்கு அப்புறமா இந்தியாவுக்கு போறது என்னவோ புதுசா பொறந்த மாதிரி இருந்துச்சு . இரண்டு வருடங்களுக்கும் மேலான தனிமைக்கு அப்புறமா என்னோட பெற்றோர்  , நண்பர்களை , உறவினர்களை , ஏன் மனிதர்களை பார்த்தேன்னு சொல்லலாம் .  இனிமயான அனுபவம் . அதனால இந்த பக்கம் அதிகமா வர முடியல . யாரோட பதிவுக்கும் போய் கும்மியும் அடிக்க முடியல . அதனால என்ன இப்போ புத்துணர்ச்சியோட வந்துட்டேன் (ஹலோ என்ன எஸ்கேப் ஆகா பாக்குறிங்க ?...வெயிட் இனிமேதான் கச்சேரியே)
           என்னுடைய இந்தியா பயண அனுபவம்தான் இந்த பதிவு . . . . .
பொதுவாவே வெளிநாட்டுல வேலை செய்யுறவங்களுக்கு என்னதான் வெளிநாட்டுல இருந்தாலும் எப்படா நம்ப நாட்டுக்கு போவோம் , அம்மா கையாள சாப்பிடுவோம், நிமதிய படுத்து தூங்குவோம் . நண்பர்களோட ஊரு சுத்துவோம் , நம்ப மொழிய கேப்போம்ன்னு  ஏக்கம் அடி மனசுல இருந்துகிட்டே இருக்கும் . அதுலயும் USA , UK , ஆஸ்திரேலியா போன்ற நாடுகள்ல இருக்கவங்க நிலைமை பரவாயில்லை , இந்த வளைகுடா (Gulf) நாடுகளில் வேலை செய்பவர்கள் நிலைமைதான் பரிதாபத்துக்குரியது , அதுலயும் சவுதி அரேபியால வேலை செய்பவர்கள் நிலைமை சொன்னால் புரியாது . அதுவும் குடும்பமா இல்லாம தனியா இருக்கிறவங்க நிலைமை இன்னும் மோசம் . அந்த மாதிரி படு மோசமான நிலைமைதான் அடியேனுடையது .    ஆனா லீவ் மட்டும் கிடைச்சது தக்காளி மனசுக்குள்ள ஒரு திருவிழா கொண்டாட்டமே நடக்கும் . ஆபீஸ்ல வேலை ஓடாது , யார பார்த்தாலும் ஒரு ஒட்டுதல் இருக்காது . என்னவோ அப்பவே விமானம் ஏறி அப்பவே நாட்டுக்கு போய் சேர்ர மாதிரி மனசு பறக்க ஆரம்பிச்சுடும் . அந்த நாள்ல இருந்து பாபா ரஜினி மாதிரி countdown  தான் .

ஒரு வழியா எல்லா சம்பிரதைங்களும் முடிஞ்சு தாயகம் கிளம்ப ரெடி ஆகியாச்சு .ரெண்டு வருசத்துக்கு அப்புறம் ஊருக்கு போறோம் இல்ல அதனால கடைல கிடைக்குறது எல்லாம் வாங்கி போட்டுக்கிட்டு (ஒண்ணும் வாங்காம போன ஊருல ஒரு பையன் மதிக்க மாட்டன் ...மிதிப்பான் ) , அப்படியே நானும் கிளாமர போய் இறங்கனும் இல்ல அதனால புது சட்டை பேண்ட் எல்லாம் வாங்கி போட்டுக்கிட்டு, ஸ்டைல்க்கு கண்ணுல கூலிங் கிளாஸ் வேற(என்னோட  Flight நடுராத்திரி 12:30 மணிக்கு ..) 
தொடரும் .....
அன்புடன்,
ராக்ஸ் ..........


For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com
|







2 comments:

Anonymous said...

என்னபா? ஆவலுடன் உன் ப்ளாக் படிக்க வந்தா (என்னோட Flight நடுராத்திரி 12:30 மணிக்கு ..) ன்னு முடிச்சிட்டே?????? உன் ரசிகர்கள இப்படிதான் காக்க வைபியா???? கவலையுடன் உன் ரசிகை .....

Philosophy Prabhakaran said...

உங்களுடைய மீள் வருகைக்கு எனது வாழ்த்துக்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters