Followers

Sunday, October 17, 2010

என்னையும் blog  எழுத வச்சுடிங்களே

எனது முதல் blog . . . .
வணக்கங்களுடன் ராஜேஷ் ,  வலைபூ தளத்துக்கு நான் புதுசு , அதுவும் எழுதுறது இதுதான் முதல் தடவை . நேரம் கிடைக்கும் போதும் , எப்பவாவது நெட் ல மேஞ்சுகிட்டு இருக்கும் போது கண்ணில் பட்ட வலைபூவை படிச்சு இருக்கேன். சில வலைபூ எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது , படிச்சமா போனமான்னு இருப்பேன் , சில வலைபூ படிக்கும் போதே எரிச்சல் வரும் அப்படியே அத மூடிட்டு புள்ள குட்டிங்கள படிக்க வைக்கலாமான்னு தோணும் ஆனா அடியனுக்கு இன்னம் கல்யாணமே  ஆகததுனால ( நான் சின்ன பையன்கோ )   வேற தளத்துக்கு போய்டுவேன் . ஆனா சில வலைபூவ  படிக்கும் போதுதான் மனசு என்னவோ பண்ணும் , சந்தோஷ படும் , வாய் விட்டு சிரிச்சு இருக்கேன் , அந்த மாதிரி வலைபூ படிக்கும் போதுதான் என்னாகும் இப்படி எதாவது எழுதனும்னு தோணும் . ஆனா எங்க நேரம் இருக்கு ? நேரம் இருந்தாலும் பொறுமை கிடையாது. தமிழ் ல வேற எழுதணும் அதுவும் கஷ்டம். ஆனா இப்போ ஏதோ என்ன உள்ள கொண்டு வந்து இருக்கு. பாக்கலாம் . எனக்கு தெரிஞ்சத , நான் ரசிச்ச , நான் அனுபவித்த விஷியங்கள உங்களோட பகிர்ந்து கொள்ள வந்து இருக்கேன் . முடிஞ்ச வரை யாரையும் புண் படுத்தமா , நல்ல  நகைச்சுவைகளை , அனுபவங்களை எழுத முயற்சிக்கிறேன் . என்ன்கிட இருந்து பெருசா எதையும் இலக்கியதுவமா எல்லாம் எதிர்பாக்கதிங்க . எதார்த்தத்தை எதிர் பாக்கலாம் . கண்டிப்பா டிசன்ட்டான எழுத்துகளை குடும்பத்தோட படிக்குற மாதிரியா இருக்கும்.
           சரி அதெல்லாம் இருக்கட்டும்,  என்னோட சீனியர்களே , வலைபூ ஜாம்பவான்களே,  இந்த முறை செய்யுறது , பின்னோடாட்டம் போட்டு உங்கபதிவுல நானும் ஆட்டத்துல இருக்கேன்னு அட்டேண்டன்சே போடுறது , வோட்டு போடுறது , அப்புறம் நம்ப பதிவ எப்படி விளம்பர படுத்துறது , என்ன பண்பாடு கலாச்சாரம் ன்னு கொஞ்சம் சொல்லி குடுங்கப்பா .நானும் ரவுடி ஆகணும் இல்ல .
                அதனால சகலமவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் , இப்போது  இருந்து இந்த ராக்ஸ் சோட கேம்  ஆரம்பிக்குது, அதனால  எல்லாரும் அலார்ட இருந்துகோங்க ( ஓவரா சவுண்ட் குடுக்குறோமோ? )


அன்புடன்,
ராக்ஸ். . .
For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our community website:  www.tamilrockzs.com

4 comments:

Vivek said...

neeyum one month ha idhe solre. innum unnum game arambikala he he. adu eanna game hehe cricket ha, foot ball ha hehe. idula unakku kalyanam agala nnu vera soli irukke. 1beat.
Maga janangala (oh public) carefulla irunga he he. valarga un thondu. he he.

(opening day la ippadi eallam poi solla vendi iruku. eanna koduma saravanan idu.)

Vivek said...

saraswathi pooja annikki ne blogs start panni iruke. nalla panna try pannu. sarawathi sabatham padam parthiya. andha sivaji mathi un nakkukla saraswathi pen vaitchu eluthu vanga. konjam un nakka neetu raja. he he.

congrets.
bye
Vivek

தமிழ்த்தோட்டம் said...

வாழ்த்துக்கள்

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

வாழ்த்துக்கள் நண்பரே . தொடர்ந்து எழுதுங்கள் .

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters