Followers

Sunday, October 17, 2010


நானும் இன்டர்நெட்டும் ...........
அது ஒரு கனா காலம் , ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் join பண்ணுற சமயம் , ஸ்கூல் ல நான் 1st குரூப் , அதாங்க maths , physics , chemistry & biology இருக்குமே . இந்த அறிவாளி பசங்க எல்லாம் படிபங்கலே அந்த குரூப் . அதுக்காக நான் அறிவாளியனு நீங்க அறிவாளிதனாமா கேள்வி கேக்கபடாது . சரி விஷியத்துக்கு வருவோம் 1st குரூப்னாலே கம்ப்யூட்டர் அறிவெல்லாம் அவ்வுளவா கிடையாது . அதாவது கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்குற ஸ்கூல் பசங்களுக்குத்தான் அதெல்லாம் தெரியும் . அதுவும் அப்போ black &white monitor வேற , MS dos ல தான் ப்ரோக்ராம் எல்லாம் பண்ணுவாங்க அந்த பக்கம் போனாலே ஒண்ணும் புரியாது. கம்ப்யூட்டர்ல சன் டிவி தெரியாதன்னு அப்பாவியா கேட்ட காலம் அது . எப்படியோ ஸ்கூல் முடிஞ்சு இன்ஜினியரிங் join பண்ண போறேன் . இன்ஜினியரிங் ல கண்டிப்பா கம்ப்யூட்டர் படிச்சு சாகனும் அடடா இல்ல இல்ல படிச்சாகணும்ன்னு தெரிஞ்சு போச்சு . அப்போதான் கம்ப்யூட்டர் பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன் . அப்போதான் இன்டர்நெட் அப்படிங்குற ஒன்னு இந்தியாக்கு அறிமுகம் ஆகுற சமயம் . எனக்கு ஒரே ஆர்வம் இன்டர்நெட் பத்தி தெரிஞ்சுக்க . காலேஜ் join பண்ணினேன் 1st இயர்ல. நான் படிச்சா கோயம்புத்தூர்ல இன்டர்நெட் ப்ரொவ்சிங் சென்டர் எல்லாம் வர ஆரம்பிச்ச சமயம் அது . அட அட அட என்ன ஒரு அழகு போங்க . செமைய இருக்கும் . ஒரு புது அனுபவம் அது . அது வரைக்கும் நமக்கு தெரிஞ்சது எல்லாம் சினிமா தியேட்டர் , பார்க் , கோவில் , பீச் , ஹோட்டல் எல்லாம் தான் . இந்த ப்ரொவ்சிங் சென்டரும் , இண்டர்நெட்டும் ஏதோ ஒரு புது உலகத்துக்கு போற மாதுரி இருந்துச்சு . அப்போ என்னோட ப்ரிண்ட்ஸ் கூட discuss பண்ணதுல கொஞ்ச விஷயம் கிடைச்சது . இன்டர்நெட் ல என்ன பண்ணலாம்னு . ஏதோ ஈமெயில் அனுபலாம்ன்னு சொன்னங்க . சரின்னு நானும் போனேன் இன்டர்நெட் ப்ரொவ்சிங் செண்டர்க்கு . போன cabin cabin ஆ இருக்கு . அங்க ப்ரொவ்சிங் சென்டர் owner நம்ப சிரிச்ச முகத்தோட வரவேர்த்தார் . இன்டர்நெட் பாக்கணும்ன்னு சொன்னேன் . 1hr க்கு Rs 100 அப்படிநாரு . என்னக்கு தூக்கி வாரி போட்டுச்சு அன்னைக்குனு பாத்து என்ன பாக்கெட் ல இருந்தது வெறும் 60 ரூபாய் தான் , ஐயயோ இன்டர்நெட் பாத்து முடிச்சுட்டு பணம் பத்துலேன்னா , ஹோட்டல் ல சாப்பிட்டு காசு குடுக்கலேன்னா மாவட்ட சொல்லுற மாதிரி இங்கயும் எதாவது சிஸ்டம் வச்சு இருப்பங்களோ ன்னு என்னக்கு பயம் வேற . உள்ள வரைக்கும் வந்தாச்சு இன்னிமே திரும்பி போன அது நம்ப பரம்பரைக்கு வேற அவமான போய்டும் . என்ன பண்ண ? சரி அப்போ அரை மணி நேரம் தருவிங்களன்னு கேட்டேன் , மருதா முருகன் புண்ணியத்துல அவரும் தருவோம்ன்னு சொன்னாரு , அப்பாடி trouser தப்புச்சதுடன்னு நானும் உள்ள போய் உக்காந்ததும் தான் என்னக்கு தெரிஞ்சது , அங்க என்ன பண்ணுறதுன்னு என்னக்கு தெரியலன்னு . சரி கூச்ச படமா அவர கூபிட்டு கேட்டேன் இன்டர்நெட் எப்படி பாக்குறதுன்னு அவரு என்னமோ பிறக்கும் போதே கைல லேப்டாப் ப்பும் , laptop with 2mps broadband wireless connection  னோட பொறந்த மாதிரி என்ன ஒரு லுக் விட்டுட்டு இன்டர்நெட்க்கு புதுசான்னு கேட்டாரு , நானும் நாலு cabin குள்ள நடக்குற விஷயம் வெளிய நாலு பேருக்கு தெரியாதுங்கிற தும்பிக்கைல அட ச்சா நம்பிக்கைல ஆமானு உண்மைய ஒத்துகிட்டேன். அவரும் பெரிய மனசு பண்ணி என்ன பண்ணனும்ன்னு சொல்லி குடுத்தாரு . அப்போ எல்லாம் hotmail தான் . அவரும் எது ஏதோ details கேட்டாரு நானும் வெக்கபடாம சொன்னேன் , கடைசில எனக்கு ஈமெயில் id ஒன்னு create பண்ணாத சொல்லி ஒரு ஈமெயில் id யும் password டும் குடுத்தாரு அதுக்குள்ள அரை மணி நேரத்துக்கு மேல ஆகிடுச்சுன்னு சொல்லி ஏதோ பெரிய மனசு பண்ணி 50 ரூபாய் மட்டும் போதும்ன்னு சொல்லிடாரு. password எல்லாம் நமக்கு மட்டுமே தெரிஞ்சு இருக்கணும் கூட தெரியல அப்போ . இதுதான் எனது முதல் முதல் ஈமெயில் உருவான வரலாறு ...... [ இப்போ அந்த ஈமெயில் id நினைவு இல்ல :-( ...... ]
இன்னும் இன்டர்நெட் அனுபவங்கள் தொடரும் ............
அன்புடன்,
ராக்ஸ் ....
For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

1 comments:

Vivek said...

Enge irukku andha browsing centre. hehe
sonna nanum poi browse pannuven he he.

(ipo kelvi patten browsing centre ne epo vandu poniya appove close pannitangalam he he)

Pavam Marutha murugan unakku help panna alavukku browsing center owner kku help pannala poliruuku ha ha

Related Posts Plugin for WordPress, Blogger...

Follow by Email

My Blog List

My Promoters