Followers

Monday, May 2, 2011


     
        தமிழ் நமது தாய் மொழி . . . இனிமையான மொழிகளில் தமிழ் முதல் இடத்தை பிடிக்கிறது நம்மை பொருத்தவரை . நமது கல்வி முறையில் தமிழின் பங்கு என்ன? நாம் அனைவரும் தமிழை முறையாக கற்கிறோம? தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் முறையான தமிழை கண்டிப்பாக கற்க வேண்டிய கடமை  உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்று . தமிழை ஒரு தமிழன் கற்க வில்லை என்றால் வேறு யாரு கற்பார்கள்? பிறகு எப்படி மொழி வளரும்? தமிழை முறையாக கற்க வில்லையென்றால் பிறகு எப்படி தமிழை முறையாக பேசுவது ? எப்படி தமிழை வாசிப்பது? எப்படி எழுதுவது ? அதனால் தமிழனாய் பிறந்த எவரும் குறைந்தது தொடக்க கல்வியில் இருந்து , 12 ஆம் வகுப்பு வரையும் கண்டிப்பாக தமிழை ஒரு பாடமாக கற்க வேண்டும் , தமிழ் மொழில் உள்ள பொக்கிஷங்களான திருக்குறள் , ஆத்திசூடி , புறநானூறு , அகநானூறு , சிலப்பதிகாரம் , செய்யுள்கள் , இன்னும் பலவற்றை  படித்தால்தான் வாழ்கை நெறிமுறைகளை கொஞ்சமாவது கற்றுகொள்ள முடியும் . 
        நான் 12 ஆம் வகுப்புவரை தெரிந்தோ தெரியாமலோ தமிழை ஒரு பாடமாகவும் , மற்றதை பாடங்களை ஆங்கில வழி முறையிலும்  படிததினால்தான் என்னால் தமிழ் பேச முடிகிறது , படிக்க முடிகிறது , எழுத முடிகிறது என்பதை விட , என்னால் வாழ்கையில் முடிந்த வரை ஒழுக்கங்களையும் ,வாழ்க்கை நெறி முறைகளுடன் , அஞ்சுவதற்கு ( தவறு செய்வதற்கு )  அஞ்சி , எனக்கு வரும் அநியாயங்களுக்கு நெஞ்சு நிமிர்த்தி வீரமுடன் எதிர் கொண்டு வெற்றி பெற,  தமிழும் , தமிழ் பாடங்களும் , தமிழ் இலக்கியங்கலுதான்  கற்று கொடுத்தன என்று சொன்னால் அது மிகை ஆகாது . . .  

ஆனால் . . . . 
நிற்க.

       நான் இரண்டாம் ஆண்டு பொறியியல் கல்லூரி படிக்கும் போது . .  ஒரு இனிய சனிக்கிழமை வார  விடுமுறை அன்று என் நண்பன் கல்லூரி விடுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள கோவைக்கு சென்று, நாள் முழுவதும் சினிமா , ஹோட்டல்ன்னு தன்னுடைய ஒரு வார  விடுதி என்னும் சிறை வாழ்கையை  புதுபித்து கொள்ள வந்த பெயில் நாள்தான் அந்த  சனிகிழமை. தன்னுடைய நோக்கங்கள் அனைத்தையும் வெற்றியுடன் முடித்துவிட்டு , மாலை வெற்றி களிப்புடன் பேருந்து ஏற பேருந்து நிலையத்துக்கு வந்து, வாழ்கையில் முன்னுக்கு வரும் அதே உத்வேகத்தோடு இருந்த அதனை கூட்டத்தையும் பின்னுக்கு தள்ளி (ஏனென்றால் அத்தனை  கூட்டம் அம்மும்,  இரண்டு அல்லது மூன்று மணிக்கொரு பேருந்துதான் கல்லூரிக்கு ),  முன்னேறி தன்னுடைய திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி ஜன்னல் ஓர இருக்கை பிடித்து அமர்ந்து விட்டு , தன்னை ஆசுவாச படுத்திவிட்டு பார்த்தால் , பக்கத்தில் இருக்கையில் இவனோடு எங்கள் வகுப்புக்கு பாடம் எடுக்க வரும் எங்கள் துறை பேராசிரியர். இவனுக்கு ஆச்சரியம் + சந்தோசம் . 

   அவரை பார்த்து நண்பன் வணங்க , பதிலுக்கு அவர் “ என்னப்பா இந்த பக்கம் ? எதுவும் முக்கியமான வேலையையாய் வந்தியா? “ அப்படின்னு இவர் கேட்டு இருக்காரு, இவன் மதியம்  அஜ்மீர் பிரியாணி கடைல செஞ்ச பிரியாணி எல்லாம் தீர்ந்தது போக,  குஷ்க்கா வரைக்கும் விட்டு குடுக்காம முக்கு முக்குன்னு  முக்கிய அந்த முக்கியாமான விஷியத்தையா  சொல்ல முடியும்?  “ இல்ல சார் , மாமா வீட்டுக்கு அவசர வேலையா  போயிட்டு இப்பதான் வரேன் அப்படினான் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு. 
இப்போ இவன் பங்குக்கு பேராசிரியர் கிட்ட “ நீங்க எங்க சார் இந்த பக்கம் ன்னு கேட்க்க . 
பேராசிரியர்  “ நான் யுனிவர்சிட்டில எக்ஸாம் பேப்பர் திருத்த போய் இருந்தேன்பா “ என்றார்  . 
நண்பனுக்கோ ஆர்வம் தாங்க முடியல , ஒரு வேலை நாம எழுதுன பரீட்சை பேப்பர் தான் திருத்தி இருபாரோன்னு ஒரு ஆர்வத்துல, “ எந்த சுப்ஜெச்ட் (subject) பேப்பர் சார் திருதுனிங்க?” என்றான் . 
அதற்க்கு அவர் “ அது  confidential    தம்பி “ ன்னு சொல்லி இருக்காரு . அதற்க்கு நம்ப நண்பர் இன்னும் ஆர்வத்தோட “ அது எந்த செமஸ்டர் பேப்பர் சார் “ அப்படின்னு கேட்டான் பாருங்க , பேராசிரியர் முகம் போன போக்க பாக்கணுமே . மனுஷன் அதுக்கு அப்புறம் பேசணுமே .
        நம்ப பையன் அதே ஆர்வத்தோட விடுதிக்கு வந்து சேர்ந்ததுக்கு அப்புறம் நேரா நாங்க குழுமி இருந்த  அறைக்கு வந்து “ மச்சான் , மச்சான் , நான் நம்ப சார்ர பேருந்துல பார்தேன்டா , நம்ப யுனிவர்சிட்டில பரீட்சை பேப்பர் திருத்திட்டு திரும்ப என்கூடதான் பேருந்துல வரும் போது பார்தேன்டா , என்ன சுப்ஜெச்ட் பேப்பர் சார் திருத்துனிங்கன்னு  கேட்டேன் , அதுக்கு அவரு , அது confidential ன்னு சொன்னாருடா . ஆமா அது எந்த செமஸ்டர் பேப்பர்  மச்சி “ ன்னு கேட்டான் பாருங்க எங்களுக்கு வந்தது பாருங்க சிரிப்பு , எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம் .
அப்புறம்தான் நாங்க அதோட அர்த்தம என்னன்னு , “confidential  அப்படின்னா சொல்ல கூடாத விஷியம் , ரகசியம் அப்படின்னு அர்த்தம டான்னு சொன்னோம் . அதுக்கு அவன் “ ஓ அப்படியா ? அதான் சார் அதுக்கு அப்புறம் சார் என் பக்கம் திரும்பவே இல்லையா?  இறங்குரவரைக்கும்? “ அப்படினான் . பாவம் அந்த சார் ,  இவன்தான் அவர கலாய்கிரான்னு நினைச்சு டென்ஷன் ஆகிட்டாரு போல .

     இது போலதான் இன்னொரு முறை இதே நண்பன் மினி ப்ராஜெக்ட் விஷயமாக கோவையில் இருந்து சென்னை போக வேண்டி ,  ரயில் டிக்கெட் புக் செய்த கலாட்டா . .  

        மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும் போது அதே நண்பன் மினி ப்ராஜெக்ட் செய்ய வேண்டி ஒரு சென்னை கம்பெனி க்கு சொல்ல வேண்டி நேர்ந்ததால் , தலைவர் புகைவண்டி முன் பதிவு செய்ய கோவை புகைவண்டி நிலையத்திற்கு சென்று முன்பதிவு செய்து வந்தார் ,
வந்ததோடு இல்லாமல் விடுதியில் எங்களிடம் தம்ப்பட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டான் (வடிவேலு நானும் ஜெயில் க்கு போறேன் , நானும் ஜெயில் க்கு போறேன்கிற கணக்கா ) நான் மெட்ராஸ் போறேன் , நான் மெட்ராஸ் போறேன் , அதுவும் ட்ரெயின் டிக்கெட் ரிசர்வ் செஞ்சு போறேன்னு.. தாங்க முடியல , என்னாடா , என்ன விஷியம் னா ? ரிசர்வ் பண்ண டிக்கெட்டை முகத்துக்கு முன்னாடி ஆட்டி காமிச்சு , ஐயா மெட்ராஸ் போறோம் இல்ல ன்னு எருமை வயசுல பெருமை வேற . கொண்டாட டிக்கெட்டை வாங்கி பார்த்த , கோவையில் இருந்து வெள்ளிகிழமை இரவு சென்னை போகிற சேரன் எக்ஸ்பிரஸ் புக் பண்ணுறதுக்கு பதிலா , அதே வெள்ளி இரவு சென்னையில் இருந்து கோவை வர இருந்த சேரன் எக்ஸ்பிரஸ் ட்ரெயின்னை புக் பண்ணிட்டு வந்துட்டு இவ்வளவு ஆர்பாட்டம் .
தப்பு எங்க நடந்ததுன்ன , முன் பதிவு சீட்டுல , என்னதான் தமிழ் இருந்தாலும் , இங்கிலீஷ் இருக்க முன் பதிவு சீட்ட எடுத்து தலைவர் ஸ்டைலா பூர்த்தி செஞ்சு குடுத்து இருக்காரு , அதுல from போடுற இடத்துல To வ்வும் , To  போட வேண்டிய இடத்துல  From ம்மும் போட்டுட்டாரு .
 From : Coimbatore  , To : Chennai  இப்படி போடுறதுக்கு பதில்  From : Chennai , To : Coimbatore  அப்படின்னு போட்டுட்டாரு .  டிக்கெட் பதிவு செய்கின்றவரும் , இவர் ட்ரெயின் நம்பர்தான் தப்ப போட்டுடாருன்னு அதை திருத்தி டிக்கெட் புக் பண்ணி குடுத்துடாறு . அடுத்த நாள் அடிச்சு புடிச்சு காலையே ஓடி போய் அந்த டிக்கெட்டை ரத்து செய்துட்டு , வேற டிக்கெட் புக் பண்ணிட்டு வந்தது தனி கதை .
     அடுத்த பதிவில் , நான் இங்கு அரபு நாட்டில் பாகிஸ்தானி டாக்ஸி டிரைவரரோடு ஹிந்தியில் டாக்ஸி வாடகைக்கு நடந்த வாக்குவாதம்மும் , நான் வாங்கிய பல்பும் . . . .
அடுத்த பதிவில் . . . .

தொடரும் . . .
தமிழனாய் பெருமையுடன் , 

ராஜேஷ் . . .
 

26 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
சும்மா லு லு லாயக்கு ....///////

ங்கொய்யால உனக்கு இருக்குடி ஒருநா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த செமஸ்டர் பார்ட்டி நீதானே? ஒழுங்கா உண்மைய சொல்லிடு, இல்லே சிரிப்பு போலீசு தலையில அடிச்சு சத்தியம் பண்ண சொல்லிடுவேன் ஆமா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுல ட்ரெயினு வேறயா?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

யோவ் பன்னிகுட்டி அது நான் இல்லை யா யோவ் , அது நிஜமாவே என்னோட உயிர் நண்பன் , ஆனா நான் இன்ஜினியரிங் புக் கடைக்கு போய் புக் வாங்குன கதை இருக்கு
ஹி ஹி ஹி ஹி
அது ஒரு தனி பதிவ போடுறேன் , ஆனா என்ன மானம் கப்பல் இல்ல , பிளைட் ஏறி போகும் , இருந்தாலும் பரவ இல்ல ஹி ஹி ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/// @பன்னிக்குட்டி ராம்சாமி said...//////Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
சும்மா லு லு லாயக்கு ....///////

ங்கொய்யால உனக்கு இருக்குடி ஒருநா......! ////


எப்புடி ? ஆப்பு வச்சோம் இல்ல . . .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////♔ℜockzs ℜajesℌ♔™ said...
யோவ் பன்னிகுட்டி அது நான் இல்லை யா யோவ் , அது நிஜமாவே என்னோட உயிர் நண்பன் , ஆனா நான் இன்ஜினியரிங் புக் கடைக்கு போய் புக் வாங்குன கதை இருக்கு
ஹி ஹி ஹி ஹி
அது ஒரு தனி பதிவ போடுறேன் , ஆனா என்ன மானம் கப்பல் இல்ல , பிளைட் ஏறி போகும் , இருந்தாலும் பரவ இல்ல ஹி ஹி ஹி////////

பிளைட் ஏறி போற அளவுக்கு இன்னும் மானம் மருவாதிலாம் இருக்கா? தப்பாச்சே...... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
/// @பன்னிக்குட்டி ராம்சாமி said...//////Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
சும்மா லு லு லாயக்கு ....///////

ங்கொய்யால உனக்கு இருக்குடி ஒருநா......! ////


எப்புடி ? ஆப்பு வச்சோம் இல்ல . . .//////

எனக்கே அல்வாவா............?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

//@பன்னிக்குட்டி ராம்சாமி said...
பிளைட் ஏறி போற அளவுக்கு இன்னும் மானம் மருவாதிலாம் இருக்கா? தப்பாச்சே...... !///

ஒரு காலத்துல இருந்துச்சு , ஆனா அதுக்கு அப்புறம் நெறைய தரவ பிளைட்டு ஏறி போய்டுச்சு . .
சரி அத விடு உன்ன்கிட்ட ஏதான இருக்கு ? இப்படி குதிக்கிற?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ♔ℜockzs ℜajesℌ♔™ said...
/// @பன்னிக்குட்டி ராம்சாமி said...//////Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
சும்மா லு லு லாயக்கு ....///////

ங்கொய்யால உனக்கு இருக்குடி ஒருநா......! ////


எப்புடி ? ஆப்பு வச்சோம் இல்ல . . .//////

எனக்கே அல்வாவா............? / / /


ஹி ஹி ஹி ஹி ஏமாந்திய , ஏமாந்திய ,
பன்னிகுட்டி, ராக்ஸ் இடம் ஏமாந்தார் ன்னு வரலாறுல இடம் பிடிக்கட்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் நமக்கு புதுசா..... தூக்கி போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கனும்....!

♔ℜockzs ℜajesℌ♔™ said...

/////@பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதெல்லாம் நமக்கு புதுசா..... தூக்கி போட்டுட்டு போய்க்கிட்டே இருக்கனும்....!//////////

பன்னிகுட்டி என்ன வார்த்தை சொல்லிபுட்ட? .............................................................................................................................

சொல்லுரதொட நிறுத்தாம சீக்கிரம் செய் . . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

நீ ஒருத்தன் தான் வந்து கமெண்ட்ஸ் போடுற . . . நன்றி நன்றி நன்றி . .
பன்னிகுட்டி உன்னோட மெயில் id குடு . . . நான் gtalk add பண்ணுறேன் (விருப்பம் இருந்த குடு )

♔ℜockzs ℜajesℌ♔™ said...

இல்லான என்னோட id add பண்ணு ..

rockzsrajesh@gmail.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

pannikkuttir@gmail.com

Unknown said...

நான் ஒரு comment போடுறேன்.ஆனா அது confidential..

♔ℜockzs ℜajesℌ♔™ said...

////@கிச்சா said...

நான் ஒரு comment போடுறேன்.ஆனா அது confidential.. ///

oops kicha , i think u r my friend . .

Unknown said...

சும்மா லு லு லாயக்கு

செல்வா said...

இரண்டு விசயமுமே செம காமெடியா இருக்கு :-) ஆனா நிறைய யோசிக்கவும் செய்யனும்! தமிழையும் நல்லா தெரிஞ்சிக்கணும் கூடவே ஆங்கிலமும் முக்கியம் :-)

பனித்துளி சங்கர் said...

சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் வகையில் நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் அருமை நண்பரே . தமிழ் கல்விப் பற்றிய முதல் தொடக்கம் ஆர்வத்தை ஏற்படுத்தியது சில வரிகளுக்குப் பின் ஏதோ வழி மாறிய உணர்வை ஏற்ப்படுத்தி விட்டது பதிவு . பகிர்ந்தமைக்கு நன்றி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///@ கோமாளி செல்வா said...

இரண்டு விசயமுமே செம காமெடியா இருக்கு :-) ஆனா நிறைய யோசிக்கவும் செய்யனும்! தமிழையும் நல்லா தெரிஞ்சிக்கணும் கூடவே ஆங்கிலமும் முக்கியம் :-)////

செல்வா என்ன ரொம்ப நாலா ஆளை காணாம்? மீண்டும் வருகைக்கு நன்றி .
தமிழின் முக்கியத்துவம் , அதே அளவுக்கு மற்ற மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்குக்கு தான் இந்த பதிவு . . . பகுதி -2 பதிவையும் படியுங்கள் மேலும் தெளிவு படுத்த முயற்சிக்கிறேன் . .

குறையொன்றுமில்லை. said...

ராஜேஷ், பதிவு, யோசிக்க வைக்குது.
உண்மையிலேயே நண்பரின் அனுபவம்தானே??????/

Anonymous said...

//தமிழனாய் பிறந்த எவரும் குறைந்தது தொடக்க கல்வியில் இருந்து , 12 ஆம் வகுப்பு வரையும் கண்டிப்பாக தமிழை ஒரு பாடமாக கற்க வேண்டும் , தமிழ் மொழில் உள்ள பொக்கிஷங்களான திருக்குறள் , ஆத்திசூடி , புறநானூறு , அகநானூறு , சிலப்பதிகாரம் , செய்யுள்கள் , இன்னும் பலவற்றை படித்தால்தான் வாழ்கை நெறிமுறைகளை கொஞ்சமாவது கற்றுகொள்ள முடியும் . //


தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்குவது அவசியம் தான். ஆனால் அந்தப் பாடத்திட்டத்தில் கொஞ்சம் மாறுதல் தேவை..
நீங்கள் குறி்ப்பிட்டுள்ள “திருக்குறள் , ஆத்திசூடி , புறநானூறு , அகநானூறு , சிலப்பதிகாரம் , செய்யுள்கள் “ இவற்றை உதட்டளவில் மொட்டை மனப்பாடம் செய்து படிப்பவர்கள் தான் அதிகம். பொருள் தெரிந்து மனதில் பதிந்து கற்பவர்கள் இன்றளவில் இல்லையே... சொல்லப்போனால் எதற்காக இவற்றைப் படிக்கிறோம் என்பதே தெரிவதில்லை. பரிட்சையில் பாஸ் பண்ணுவதற்கான ஒரு படிப்பாக மட்டுமே பார்க்கின்றனர்.

இந்த நிலையில் வாழ்க்கைக்கான ஒழுக்கமும் நெறியும் இவ்வாறு பெயரளவில் மனப்பாடம் செய்யப்படும் செய்யுள்களில் கற்கப்படுவதில்லையே..

Anonymous said...

உங்கள் நண்பரின் அனுபவமா???
நம்பமுடியலையே..

Anonymous said...

// From : Coimbatore , To : Chennai இப்படி போடுறதுக்கு பதில் From : Chennai , To : Coimbatore அப்படின்னு போட்டுட்டாரு//


இது பெரும்பாலும் நிறைய பேர் செய்யும் தவறு..
நானும் தான்.

Unknown said...

எலேய் மாப்ள நக்கலு!.....தலைப்ப பாத்த உடனே என்னமோ உயர்த்தி சொல்லப்போறேன்னு பாத்தா தமிழன் பல்ப்பு வாங்குனத மட்டுமே சொல்லி இருக்க!

இதுக்கு இவரு முன்னுரை வேற எழுதுறாரு ஹிஹி!

சமுத்ரா said...

ok.

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters