போ என்று சொன்னால் ,போவதற்கு
நான் பூவை சுற்றி வரும் தேனீ இல்லை ,
தேன் எடுத்தவுடன் போவதற்கு ,
நான் பூ கொண்ட வாசம் ,
வாசம் போனால் பூ வாடி விடும் ,
பூ வாடினால் வாசம் போய் விடும் ,
நீ இருக்கும் வரை நான் . . .
உன் அருகில் . .
என்றென்றும் உன் நினைவில் ,
பூ கொண்ட வாசமாய் . . .
என்றென்றும் காதலுடன் . . .
ராக்ஸ் . . .








11 comments:
நல்லா இருக்குய்யா....
மாப்ள பாத்தியா கடைசில கவித போட்டு தமிழ்மணத்துல இனஞ்சிட்ட ஹிஹி!
///@விக்கி உலகம் said...
நல்லா இருக்குய்யா....
மாப்ள பாத்தியா கடைசில கவித போட்டு தமிழ்மணத்துல இனஞ்சிட்ட ஹிஹி!////
அட பாவி , மாப்ள நீ ஒன்னு , தமிழ்மணத்துல இணைக்க நான் எவ்வளவு கஷ்ட்ட பட்டேன்ன்னு எனக்குதான் தெரியும் . ஏதோ அவங்கள பெரிய மனசு பண்ணி , போனாபோகுதுன்னு இணைசுட்டாங்க ஹி ஹி ஹிஹி ஹி ஹி
ஆழமான சிந்தனை அருமை
எல்லோரும் கவிதையில் பயன்படுத்தும் பூவையும்
வாசத்தையும் பயன்படுத்தினாலும்
உங்கள் சிந்தனை புதிது
அற்புதமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
ராஜேஷ் கவிதையிலும் பின்னுரே. உனக்குத்தெரியாத விஷயமே கிடையாதா? நால்லா இருக்கு.
கவிதையில மணம் கமழுது ... வாழ்த்துக்கள்
///@ Ramani said...
ஆழமான சிந்தனை அருமை
எல்லோரும் கவிதையில் பயன்படுத்தும் பூவையும்
வாசத்தையும் பயன்படுத்தினாலும்
உங்கள் சிந்தனை புதிது
அற்புதமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள் ////
வருகைக்கு நன்றி ஐயா ..
தொடர்ந்து முயற்சிக்கிறேன் . .
தங்கள் ஆதரவுடன் . .
///@Lakshmi said...
ராஜேஷ் கவிதையிலும் பின்னுரே. உனக்குத்தெரியாத விஷயமே கிடையாதா? நால்லா இருக்கு.///
ஹி ஹி ஹி அம்மா . . .
எனக்கு தெரிஞ்ச எதையோ எழுதி வச்சு இருக்கேன் . .
வார்த்தைய ஒன்னுக்கு கீழ ஒன்ன எழுதுன அது கவிதை ஆகிடும? ஹி ஹி ஹி
நீங்க வேற சும்மா கிண்டல் பண்ணாதிங்க , பெரிய பெரிய கவிதை ஜாம்பவான்கள் இருக்கும் பதிவுலகில் . .
எப்படியோ மக்களுக்கு புடிச்சு இருந்தா சரி
நன்றி அம்மா . . .
///@ அரசன் said...
கவிதையில மணம் கமழுது ... வாழ்த்துக்கள் ///
லைட்டா சென்ட் அடிசுதான் பதிவ வெளியிட்டு இருக்கேன் அரசன் , அதான் மணம் கமழுது . . .
ஹி ஹி ஹி . . .
nice one rajesh. simply superb.
வாசம் மிகுந்த பதிவு தான்.
நல்லா இருக்கு நண்பரே..
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
சகோதரரே!.....
Post a Comment