Followers

Sunday, October 17, 2010

மூன்று படங்கள் ஒரு கதை. . . .


1 ) விண்ணைத்தாண்டி வருவாயா , சும்மா சொல்ல கூடாது உண்மைளையே நம்மை விண்ணுக்கு கூட்டிகிட்டு போன காதல் கவிதை இந்த படம் . படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு காதல் நம்மையும் போட்டு தாக்காதனு ஏங்க வைத்த படம். சிம்பு , த்ரிஷா வின் அட்டகாசமான நடிப்பும் , A . R . ரஹ்மான் இன் மனதை கொள்ளை கொள்ளும் இசை மற்றும் பாடல்கள் . கௌதம் வாசுதேவ மேனோனின் சிறப்பான திரைகதை & இயக்கம்.
சிம்புக்கு இது கண்டிப்பாக ஒரு நல்ல படமாக இருக்கும் அவரோட பட வரிசையில் . த்ரிஷாவ இவ்வளவு அழகாக இதுக்கு முன்னாடி திரையில் பார்த்த நினைவு இல்லை , ஒளிபதிவளருக்கு ஒரு சபாஷ் . படத்தின் முடிவு அழகான வலியுடனான ஒரு கவிதை .

2 ) பாண காத்தாடி , மறைந்த நடிகர் முரளி அவர்களின் மகன் ஆதவாவை கதாநாயகன் ஆக்கி வெள்ளித்திரைக்கு அறிமுக படுத்திய படம் . தலைப்பு எத்த மாதிரி காத்தாடிய பறக்குது கதை . பாடல்கள் வழக்கம் போல் யுவன்னின் சிறப்பான இசை நம்மை தாலாட்டுகிறது . இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் வித்தியாசமாக முயற்சி செய்து இருக்கிறார். திரைகதை நம்மை நிமிர்ந்து உக்கார வைக்குறது . பிரசன்னா கொஞ்ச நேரம் வந்தாலும் மனதில் நிற்கிறார். படம் பார்க்கலாம் . கிளைமாக்ஸ் மனதை கனக்கிறது .

3 ) காதல் சொல்ல வந்தேன். இயக்குனர் பூபதி பாண்டியன் என்ன சொல்ல வராருனுதான் தெரியல . கதாநாயகன் ஸ்கூல் பையன் மதுரித்தான் இருக்காரு. கதாநாயகி அழகா இருகாங்க . குடுத்த வேலைய செய்து இருகாங்க . பாவம் சரியான வேலைதான் குடுக்கல இயக்குனர் . பாடல்கள் அவ்வுளவா மனசுல நிக்கவில்லை .
டைரக்டர் சார் அது எப்படி சார் ஹீரோ காலேஜ் சேர்ந்த 1st நாள்ல இருந்து ஒரு தரவ கூட கிளாஸ் ரூம் குள்ள போகவே இல்ல . எப்ப பார்த்தாலும் கிளாஸ்க்கு வெளியவே சுத்தி கிட்டு இருக்காரு?
காலேஜ் ல சீனியர் இவ்வளவு மொக்கையவா இருபங்க? அந்த சீனியருங்க 15  நாள் ரூம் போட்டு வெளிய வராம உக்காந்து இருக்குறது எல்லாம் ரொம்ப ஓவர் . முடியல
சில ஜோக்ஸ் எல்லாம் கொஞ்சம் முகம் சுளிக்க செய்கிறது . வழக்கம் போல சோகமான கிளைமாக்ஸ் .
..............................................................................................................................................................
மேல பார்த்த மூணு படங்களும் ஒரே கதை . கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தெரியும் .
கதை இதுதான் . கதாநாயகன் , கதாநாயகிய விட வயது சிறியவன் . 1st கதாநாயகனுக்குதான் காதல் வருது மூணு படத்துலயும் . 1st அத ஏற்க மறுக்குறாங்க கதாநாயகி . ரெண்டு பெரும் நண்பர்களா இருக்க முடிவு செய்கிறார்கள் . ஆனா கதாநாயகன் திடீர்னு இல்ல நான் பிரெண்ட் ஆகா இருக்க முடியாது நான் உன்ன காதலிக்குறேன்னு சொல்லுறாரு . ஷாக் ஆனாலும்  கதாநாயகியும் ஒரு தருணத்தில் ஒத்துக்குறாங்க. ஆனா எதிர் பார்க்காத திருப்பதால் காதலர்கள் ஒண்ணு சேர்வது இல்லை முடிவில் . மூன்று படங்களும் காதல் தோல்விய சொல்லுது சோகமான முடிவு ஆனா வேற வேற காட்சி அமைப்புகளால், அவ்வுளவுதான் . அதனால் கதை ஒன்றுதான் படத்தின் பேரு , நடிகர்கள் இயக்குர்கள்தான் வேற வேற .
என்ன ஆச்சு நம்ப தமிழ் இயக்குனர்களுக்கு?
எல்லாரும் ஒரே நேரத்துல ஒரே இங்கிலீஷ் பட DVD பார்த்துடாங்கள?
அன்புடன்,
ராக்ஸ்.....
For fun chat, blog, forum, videos, games, live FM  kindly visit our website:  www.tamilrockzs.com

4 comments:

Vivek said...

ne niyarya kumutham, ananda vikadan padipiya. adu mathiri irukku un vimarsanam. inum try pannu rajesh.
kadal solla vanden heroine "cut panni potta apple mathiri nutchunnu irkku" appadinnu comment pannanum ok.

Vivek said...

vimarsanan style very different. you try best rajesh

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பாடா..நீர் சொன்ன மூணு படத்தையும் பார்க்கலே.. ஹி..ஹி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

///பட்டாபட்டி.. said...

அப்பாடா..நீர் சொன்ன மூணு படத்தையும் பார்க்கலே.. ஹி..ஹி ///
ஆரம்பிச்சா ? . . . வரலாற்று முக்கியத்துவம் வாங்கிய இந்த மூணு படத்தையும் பாக்கிறதா விட்டுட்டு அப்படியென்ன உனக்கு டிரவுசர்ல நாட கோக்குற வேலை பட்டா ? . . .

Related Posts Plugin for WordPress, Blogger...

My Blog List

My Promoters